Wednesday, February 27, 2008

நாதம் இல்லாத வீணை


அடடா! மணி ஐந்தரை ஆயிற்றே. ஐந்து மணிக்கே கிளம்ப வேண்டும் என்றல்லவா நினைத்திருந்தேன். ச்சே! மீட்டிங் மீட்டிங்னு வச்சு இப்படி சதி பண்ணிட்டாங்களே. என் செல்லக் குட்டி இந்நேரம் என்னைக் காணோம்னு ஏமாந்து போயிருப்பாளே!

என் செல்லக்குட்டியப் பாத்திருக்கீங்களா? நேத்து சாயந்திரம் ஒரு ஆறு மணிப் போல போத்திஸ் வந்திருந்தீங்கனா கண்டிப்பாப் பாத்திருப்பீங்க. நேத்து அவளைக் கூட்டிட்டு வந்திருந்தேன். எங்க கூட்டிட்டுப் போனாலும் எல்லாரும் அவளையேதான் வச்சக் கண்ணு வாங்காமப் பாக்கறாங்க. ஏனா அவ அவ்வளவு அழகு. என் தேவதை. அவ கையத் தொடறப்போ எல்லாம் என் பிறவிப் பயனே அடைஞ்சுட்டேனோனு தோணும். எதுக்காவது அவ கண்ணுல இருந்து தண்ணி வந்தா எனக்கு உயிரே போற மாதிரி இருக்கும்.

என்னைப் பாத்து பாத்து வளர்த்த என் அம்மா கேன்சர்ல இருந்தப்போ எனக்கு என் உயிரே போயிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. எல்லாம் முடிஞ்சுப் போயி அம்மா இல்லைனு நான் உலகமே இருண்டுப் போற மாதிரி இருந்தப்போதான் என் கவி எனக்கு கிடைச்சா. அவ எனக்கு கிடைக்கறதுக்காக ஏழு வருஷம் தவமா தவம் இருந்தேன். நான் தவம் இருந்துப் பெற்ற வரம் அவ. என்னை விட்டுப் போன என் அம்மாவ மறுபடியும் என் கவி உருவத்துலதான் பாத்தேன். மொத தடவையா அவளைப் பாத்தப்போ இவளுக்காகதான் பிறந்தேனோனுதான் தோணுச்சு. என் வாழ்க்கையே முழுமையடைஞ்சுதோன்னு.

அவ பேசப் பேச நான் கேட்டுட்டே இருக்கணும். நான் கவனிக்காம விட்டா அவளுக்கு கோபம் வந்துடும். என்னை உக்கார வச்சு கதை சொல்லுவா. சாப்பாடு ஊட்டுவா. கழுத்தக் கட்டிக்கிட்டு கொஞ்சுவா. என் நெத்தில முட்டி முட்டி அவ தேங்காமுட்டு விளையாடற சந்தோஷத்த விட இந்த உலகத்துல வேற சந்தோஷம் இருக்கறதா எனக்குத் தெரியலை.

இப்படி என் உலகமா இருக்கற என் செல்லக்குட்டிய என் காதுபடவே நிறைய பேரு குறை சொல்லிட்டாங்க. நான் உருகி உருகி காதலிச்சுக் கைப்பிடிச்ச என் ஆசை மனைவி ப்ரபா எனக்கு கொடுத்த காதல் பரிசுதான் என் கவி. கடவுள் உனக்கு எப்போதுமே நீ விரும்பற விஷயங்கள்ல ஒண்ணு மட்டும்தான் உனக்கு நிலைக்கும்னு நினைச்சாரோ என்னவோ. அவ மூணு மாசக் குழந்தையா இருந்தப்போ என் ப்ரபா ஒரு விபத்துல என் கண்ணு முன்னாடியே என்னை விட்டுட்டுப் போயிட்டா. இது நான் செஞ்ச பாவம்னு சொல்லியிருந்தாக் கூட பரவாயில்லைங்க. என் கவி பிறந்த நேரம்னு என் காதுபடவே பேசறாங்க. அதைதான் என்னால தாங்கிக்க முடியலை.

என் ப்ரபா என்னை விட்டு போனதும் நானும் அவளோடயே போயிடணும்னு நினைச்சேன். கவி அழுகுரல் கேக்கறப்போ எல்லாம் அட மடையா! உன் கைல எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திட்டுப் போயிருக்கேன். ஏன் இப்படியெல்லாம் நினைக்கறனு ப்ரபா மண்டைல ஓங்கி அடிச்சு சொன்ன மாதிரி இருந்துச்சு. ப்ரபாவுக்கு பொண்ண பரதநாட்டிய டான்ஸர் ஆக்கணும். செஸ்ல சாம்பியனாக்கணும். கராத்தே சொல்லித் தரணும். இப்படி பல ஆசைகள். அதையெல்லாம் நிறைவேத்தி என் ப்ரபா கனவுகள நிஜமாக்கறது ஒண்ணுதான் என்னோட வாழ்க்கை லட்சியம்.

நான் வேணா நாதம் இல்லாத வீணையா இருக்கலாம். ஆனா என்னால நல்லதோர் வீணை செய்ய முடியும்ன்ற நம்பிக்கைல இருக்கேன். கண்டிப்பா செய்ய முடியும் இல்லைங்களா? சரிங்க. வீட்டுக்கு வந்துட்டேன். சாரி. கவிக்கு ஸ்கூல் பஸ்ல இருந்து இறங்கும்போதே நான் வாசல்ல நிக்கணும். லேட்டா வந்ததுக்காக கோவிச்சிட்டு இருப்பா இந்நேரம். நான் போய் சமாதானப்படுத்தறேன். வரேங்க. பை.

பி.கு: இந்த தலைப்பு நாமக்கல் சிபி அண்ணா குடுத்து எழுத சொன்னார். சோ இந்த கதை அவருக்காக :)))

12 comments:

Dreamzz said...

nalla kadhainga :)

நாமக்கல் சிபி said...

Nice Narrating Imasai Arasi!

Thanks!

மங்களூர் சிவா said...

தலைப்பு குடுத்தது சிபி கதை எழுதி குடுத்தது யாரு??

சின்னப் பையன் said...

சமாதானப்படுத்திட்டீங்களா!!! நல்லா இருந்துச்சு!!!

கோபிநாத் said...

அருமை ;))

\\நான் வேணா நாதம் இல்லாத வீணையா இருக்கலாம். ஆனா என்னால நல்லதோர் வீணை செய்ய முடியும்ன்ற நம்பிக்கைல இருக்கேன்.\\

அழகாக இருக்கு இந்த வரிகள் ;)

நிஜமா நல்லவன் said...

நல்ல கதைங்க. அதைவிட உங்க எழுத்து நடையும் நல்லா இருக்குங்க.

நிவிஷா..... said...

kadhai is nice akka :)
urai nadai was nice..

natpodu
nivisha

Divya said...

Xlnt narration Imsai,

\\நான் வேணா நாதம் இல்லாத வீணையா இருக்கலாம். ஆனா என்னால நல்லதோர் வீணை செய்ய முடியும்ன்ற நம்பிக்கைல இருக்கேன். கண்டிப்பா செய்ய முடியும் இல்லைங்களா?\\

wow Imsai, very nicely written!!

பாச மலர் / Paasa Malar said...

நல்ல நடையில்..நல்ல கதை..வாழ்த்துகள் இம்சையரசி

இராம்/Raam said...

Good.... Nice Narration... :)

Anonymous said...

supera ezhudirkinga.. very nice narrative style..

நிவிஷா..... said...

நான் ஒரு பதிவு போட்டிருக்கேன்..
நேரம் கிடைக்கயில் வந்து பாருங்கக்கா!


நட்போடு
நிவிஷா