Thursday, February 21, 2008

மரகதம் (கருங்குயில் குன்றத்துக் கொலை)

என்னடா இந்த பொண்ணு கொலை-ன்னு எல்லாம் போட்டிருக்கு. எதாவது த்ரில்லர் ஸ்டோரி எழுத ஆரம்பிச்சிடுச்சோனு நெனக்காதீங்க. நாமல்லாம் வந்தோமா மொக்கை போட்டோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு தேவையில்லாத வேலையெல்லாம் பண்ணக் கூடாதுன்றதுல நான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன். சோ அந்த மாதிரியெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

அப்போ என்னதான் இதுனு தலைல இருக்கற நாலு முடியையும் நீங்க பிச்சிக்கறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன். இது ஒரு படம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள்ல இதுக்கு ரொம்ப முக்கியமான இடம் இருக்கு. நான் குட்டிப் பொண்ணா இருந்தப்போ சன் டிவி-ல இது எம்.ஜி.ஆர் வாரம், நகைச்சுவை வாரம்னு, சாம்பார் வாரம், சட்னி வாரம்னு ஒரு வாரத்துக்கு ஒரு டாபிக் எடுத்து அது சம்பந்தமான படங்களை போடுவாங்க. அப்படி போட்ட சிவாஜி வாரத்துலதான் இந்தப் படத்தை மொதல்லப் பாத்தேன். மொதல்லப் பாத்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. தேடிப் பிடிச்சு CD வாங்கி வச்சிட்டேன். வீட்டுக்கு போறப்போ எல்லாம் அடிக்கடி இந்த படம் பாப்பேன்.

இந்த படம் பத்தி தெரிஞ்சவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான் இருப்பீங்கனு நினைக்கறேன். ஏனா இது ஒரு பக்கா கருப்பு வெள்ளை படம். ஆனா அந்த படத்துல வர ஒரு பாட்டைத் தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது. அதாங்க... நம்ம சந்திரபாபு சார் நடிச்ச "குங்குமப் பூவே கொஞ்சு புறாவே" பாட்டு. அதை தவிர வேற பாட்டு எல்லாம் வேற எங்கேயும் நானும் கேட்டதில்ல.

கதை ஆரம்பிக்கறதே இலங்கைல. சிவாஜியும் அவரோட ஃப்ரெண்ட்ஸும் குதிரைல போறப்போ கொள்ளைக்காரங்க வழிமறிச்சுக் கடத்திட்டுப் போறாங்க. ஏனா அவர் தமிழ்நாட்டுல ஒரு சிற்றரசோட ராஜா வீட்டுப் பிள்ளை. அந்த கொள்ளைக்காரனோட இடத்துக்கே பத்மினி அவரக் காப்பாத்த வராங்க. ஏற்கனவே பத்மினி செஞ்ச ஒரு உதவிக்காக என்ன கேட்டாலும் தரேனு சத்தியம் பண்ணிக் கொடுத்திருந்த கொள்ளைக்காரனும் அவங்களை விட்டுடறான். அப்புறம் உடம்பு சரியில்லாமப் போகிற சிவாஜிய அப்பாவோட மட்டும் வனாந்திரப் பகுதில வாழ்ந்துட்டிருக்கற பத்மினி வீட்டுல வச்சு பாத்துக்கும்போது அவங்க ரெண்டு பேருக்கும் வேறென்னங்க அந்தப் பாழாப் போன கருமம்தான் வந்து தொலைக்குது.

சிவாஜி நல்லாகி ஊருக்கு புறப்படும்போது அவங்க அப்பாட்ட பொண்ணு கேக்கறப்போ அவர் மறுத்துடறார். அதனால பத்மினி அழ அப்போதான் வருது ஃப்ளாஷ்பேக். கருங்குயில் சிற்றரசோட ராஜா கால் ஊனம்ன்ற காரணத்தால தான் கல்யாணம் பண்ணிக்காம தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கறார். தம்பியோட மனைவி வீட்டுக்கும் இவங்களுக்கும் பகை வந்துடுது. அதனால தம்பிய விவாகரத்துப் பண்ண சொல்றார். அவர் மறுக்கவும் வீட்டை விட்டு வெளியேப் போக இவர் சொல்ல அவர் முடியாது எனக்கு சொத்துல பங்கு இருக்குனு சொல்ல ஒரே பிரச்சினை. உன்னைக் கொன்னுடுவேனு அண்ணனைத் தம்பி மிரட்டிட்டுப் போயிடறார். அடுத்த நாள் பார்த்தா அண்ணன் இறந்துக் கிடக்கறார். சாட்சிகள் எல்லாம் இவருக்கு பாதகமா போக ஜெயில்ல போட்டுடறாங்க. அவர் தப்பி ஓடி வந்து அவரோட மூன்று வயது மகளைத் தூக்கிட்டு இலங்கை வந்துடறார். அவர்தான் இங்க அப்பா. அந்த மூணு வயசு பாப்பாதான் இப்போ 19 வயசு பத்ம்னி. அவரோட மனைவியோட தம்பிதான் நம்ம தலைவர் சிவாஜி.

இந்த கதையக் கேட்டுட்டு அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு சிவாஜியயும் மறக்க முடியாம இருக்கறப்போதான் அந்தக் கொள்ளைக்காரன் பிரச்சினை பண்றான். இவங்க படகுல ஏறி தப்பி ஓடும்போது நடக்கிற சண்டைல அப்பாவும் பொண்ணும் பிரிஞ்சிடறாங்க. கடற்கரைல மயங்கி கிடக்கிற பத்மினிய அவங்க அம்மாவே காப்பாத்தி செத்துப் போயிட்டதா அவங்க நினைச்சுட்டு இருக்கற அவங்களோட பொண்ணு போலவே இருக்கறதால பாசமாப் பாத்துக்கறாங்க. கடைசி வரைக்கும் தான் யார்னு சொல்லாம பத்மினியும், பாதில அவங்களை இன்னார்னு தெரிஞ்சிக்கற சிவாஜியும் உண்மையான கொலைகாரங்களைக் கண்டுபிடிக்கறதுதான் மிச்சக் கதை.

ரொம்ப அருமையான படம். கிடைச்சா பாருங்க. பாட்டு எல்லாம் நல்லா இருக்கும். பத்மினி அவங்க அம்மா எல்லாரும் கருங்குயில் குன்றம் போயிருக்கறப்போ வரவேற்புக்காக ரெண்டு பொண்ணு ஆடுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும். இந்தப் படத்துல என்ன ஒரு விசித்திரம்னா பதினாறு வருடம் கழிச்சு இலங்கைல இருந்து வர அப்பா பொண்ணுகிட்டதான் உருவ மாற்றம் தெரியும். மத்தவங்க எல்லாரும் பதினாறு வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாங்களோ அப்படியேதான் இருக்காங்க. ஒருவேளை அது நம்ம தமிழ் மண்ணோட மகிமையோ என்னவோ ;)))

50 comments:

Anonymous said...

ஆஹா, ரொம்ப நாலைக்கி பின்ன எழுதிய கதையா இது. நல்லா யிருக்கு அம்மனி. அதிலும் இந்த ஹீரோவின் வசனம் எல்லாமே அருமையோ அருமை.- இப்படிக்கு அபிஅப்பா

Anonymous said...

நல்ல எழுத்து நடை இம்சையே!! இது தொடர் கதையா, குருந்தொடரா???

இம்சை அரசி said...

// Anonymous Anonymous said...

ஆஹா, ரொம்ப நாலைக்கி பின்ன எழுதிய கதையா இது. நல்லா யிருக்கு அம்மனி. அதிலும் இந்த ஹீரோவின் வசனம் எல்லாமே அருமையோ அருமை.- இப்படிக்கு அபிஅப்பா
//

என்னை கொலைகாரியா ஆக்காதீங்க :@@@@@@@

பழைய கருப்பு வெள்ளை படம் பத்தி எழுதினா... பதிவ படிக்காம பின்னூட்டம் போட்டா என்ன நடக்கும்னே தெரியாது :@@@@

Anonymous said...

என்ன நடக்கும்??? வாத்து நடக்கும்:-))

Anonymous said...

இருப்பா தலைப்பையாவது படிச்சுட்டு வாரேன்:-))

அபிஅப்பா

Anonymous said...

நான் இன்னிக்கு ஃப்ரீ தான் வீக் எண்ட் இங்கே, அதனால இந்த பதிவை விட்டு போகாமல் கும்மியடிக்க போகிறேன்:-) - அபிஅப்பா

Anonymous said...

நான் இன்னிக்கு ஃப்ரீ தான் வீக் எண்ட் இங்கே, அதனால இந்த பதிவை விட்டு போகாமல் கும்மியடிக்க போகிறேன்:-) - அபிஅப்பா

Anonymous said...

சரி, ஹம்பி டூர் எந்த மட்டிலும் இருக்கு? - அபிஅப்பா

Anonymous said...

ராம் எப்படி இருக்கார்ப்பா?

Anonymous said...

ஜீவ்ஸ்ன் பொண்ணு நீங்க சாப்பிடும் போது என்ன பண்ணினா?

நிலா said...

எச்சூஸ்மீ இங்க அபிஅப்பா கும்மிஅடிக்கறார்ன்னு கேள்விப்பட்டேன். ஜாய்ன் பண்ணலாமா?

நிலா said...

டூர் பத்தி கேட்டிருக்கார் அப்போ அது அபிஅப்பாதான்

நிலா said...

ஐயயோ

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author//

இது இருக்கா இங்க. பாப்பா அப்பீட்டு

நிலா said...

அட உடனே கமெண்ட் வருதே

நிலா said...

ஆண்ட்டி அப்பா உங்ககிட்ட நேயர் விருப்பமா இன்னொரு பட விமர்சனம் கேக்கறார்.

படம் சாந்த சக்குபாய், சீக்கிரம் பாத்துட்டு சொல்லுங்க

நிலா said...

அபிஅப்பா எஸ்கேப்பா?

Anonymous said...

இன்னைக்கு வியாளகுழமை பாப்பா. அபிஅப்பா பிஸி

நிலா said...

ஆண்ட்டி நீங்க போட்ட பதிவையும் அததல அப்பா போட்ட கமெண்ட்டயும் அப்பா அம்மாகிட்ட காட்டி ஸ்கோர் பண்ணீட்டார்

நிலா said...

குட்டிபாப்பா ஸ்கோர் பண்ற மாதிரி எதுவும் ஒரு போஸ்ட் போடுங்களேன்

நிலா said...

டாக்டர் பட்டம் கொடுக்க முடியலன்ன்னாலும் "இம்சைஅரசி LKG"ன்னு பட்டம் கொடுத்துடரேன்

நிலா said...

ஆமா பேங்களூர்ல ஜெயஸ்ரீ அக்காவ குட்டீஸ்கார்னர்ல சேர சொல்லுங்க

நிலா said...

ஜெயஸ்ரீ அக்காதானே எனக்கு?

நிலா said...

அபிஅப்பா சாட்ல வரப்போலாம் டூர்பத்தியே பேசறார். குசூம்பன்மாமா என்னடான்ன அபிஅப்பா இப்படிதான் 100 பிளான் போடுவார், அப்புறம் ஒண்ணூம் பன்னமாட்டாருன்னு சொல்றாரு. அபிஅப்பா அப்படியா?

Anonymous said...

என்னைவெச்சு காமெடி பண்ணீட்டாங்கப்பா

நிலா said...

நான் மட்டும்தானா? போர். போர்.

மீ த எஸ்கேப்பு

நிலா said...

அடிச்சு ஆட இன்னொரு ஆள் வரங்களே

நிலா said...

கமெண்ட் உடனுக்குடன் அப்ரூவ் பண்ணூங்க

நிலா said...

இல்லைன்னா கமெண்ட் மாடரேசன இன்னைக்கு மட்டும் தூக்குங்க

நிலா said...

குட்டிப்பாப்பா நானே கமெண்ட் மாடுரேசன் போடல நீங்க போய் ....

நிலா said...

எங்க குசும்பன் மாமா கமெண்ட் வரவே கானோம்?

நிலா said...

எச்சூஸ்மீ ஆண்ட்டி கமெண்டெல்லாம் கொஞ்சம் அப்ரூவ் பண்றீங்களா?

நிலா said...

கமெண்ட் உடனுக்குடன் அப்ரூவ் பண்ணாததை கண்டித்து பாப்பா ஜூட்

CVR said...

எப்பயாச்சும் சந்தர்ப்பம் கெடைச்சா பாக்கனும்!! :-)

Yogi said...

படத்தோட பேரு என்னக்கா??? ;)

மரகதமா? கருங்குயில் குன்றத்துக் கொலையா??

Anonymous said...

அத்தேய்....

நிலா அக்கா என்னமோ சொல்றாங்க. நீங்க சொல்லுங்கத்த... நான் இந்த வயசுலயே கும்மி அடிக்கலாமா ? தப்பில்லையா ?


ஜெயஸ்ரீ- ஐயப்பன்

Dreamzz said...

naan onnum sollalaaaaa

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள்ல இதுக்கு ரொம்ப முக்கியமான இடம் இருக்கு. நான் குட்டிப் பொண்ணா இருந்தப்போ சன் டிவி-ல இது எம்.ஜி.ஆர் வாரம், நகைச்சுவை வாரம்னு, சாம்பார் வாரம், சட்னி வாரம்னு ஒரு வாரத்துக்கு ஒரு டாபிக் எடுத்து அது சம்பந்தமான படங்களை போடுவாங்க.


அப்பவுல இருந்து படம் பாக்குறதுதான் வேலையா?

தமிழன்-கறுப்பி... said...

"அந்தப் பாழாப் போன கருமம்தான் வந்து தொலைக்குது"


அது என்ன கருமம்?
வந்தது சரி எதை தொலைத்தது?

தமிழன்-கறுப்பி... said...

"ஒருவேளை அது நம்ம தமிழ் மண்ணோட மகிமையோ என்னவோ ;)))

அடங்குங்கப்பா...

மங்களூர் சிவா said...

//
Anonymous said...
இன்னைக்கு வியாளகுழமை பாப்பா. அபிஅப்பா பிஸி

//
Spelling கரெக்டா இருக்கு அபி அப்பாவேதான்!

மங்களூர் சிவா said...

//
இம்சை அரசி said...

என்னை கொலைகாரியா ஆக்காதீங்க :@@@@@@@

//
இந்த பட விமர்சனம் எழுதினதுக்கு கொலைகாரியா ஆயிருக்கலாம் :(

நிஜமா நல்லவன் said...

நிலா said...
அடிச்சு ஆட இன்னொரு ஆள் வரங்களே




நீங்க நல்லா ஆடுவீங்கன்னு படிச்சேன். இதுல அடிச்சுவேற ஆடனும்ன்னா யாரு தான் வருவாங்க?

இனியாள் said...

Vimarsanam nalla irukku, vaippu kidaichcha paakuren ungaloda intha post ku oru dedication a, padam peru neenga potrukka thalaippu thaana illa vera ethuvuma.
Pazhaiya padangala nybagama vimarsanam pannirukathuku ungalukku paarattukkal.

Iniyal.

Anonymous said...

மறக்காம சிவாஜியோட 'நிறைக்குடம்' பாருங்க.....

Anonymous said...

hi, can u tell from where i can download that song(your jan 9th post).

G.Ragavan said...

மரகதங்குற படத்தோட பேரு. கருங்குயில் குன்றத்துக் கொலைங்குறது இன்னொரு பெரு. சரிதானே.

குங்குமப் பூவே பாட்டு மட்டுமே அந்தப் படத்துல தெரியும். படம் நல்லாருக்கும்னு சொல்லீருக்கீங்க. கெடைச்சாப் பாக்குறேன்.

// இனியவள் புனிதா said...
மறக்காம சிவாஜியோட 'நிறைக்குடம்' பாருங்க..... //

ஆமா. இதுவும் நல்ல படந்தான். கொஞ்சம் வித்யாசமான கதையம்சம். அதே போல வசந்தத்தில் ஓர்நாள்னு ஒரு படம். படம் கொஞ்சம் கடிதான்னாலும் கதைக் கரு ரொம்பவே வித்யாசமானது. மக மலேசியாவுல விபச்சார விடுதியில் இருக்கா. அவளுக்கு அப்பான்னு தெரியாது. ஆனா சொன்னா அவளுக்குப் பிடிக்காது. ஏன்னா அம்மாவைத் தவிக்க விட்டுட்டுப் போனவரு அவரு. அவளை காசு குடுத்து அப்பாவே வாங்கி நல்ல வாழ்க்கை அமைக்கப் பாக்குறாரு. ஆனா பொண்ணு அடிக்கடி அந்த எடத்துக்கேப் போறா.. காசு குடுத்து வாங்கி ஏன் சும்மா வெச்சிருக்கன்னு காரணம் வேற... அப்ப சிவாஜி படுற கஷ்டம் நம்மளக் கலங்க வெச்சிரும். கடைசில உண்மை தெரிஞ்சி நல்லபடி முடிஞ்சிரும். கெடைச்சா பாருங்க. அதுல "வேண்டும் வேண்டும் உந்தன் உறவு வெண்பனித் தென்றல் உள்ள வரையில்"னு ஒரு பாட்டு ரொம்ப அருமையா இருக்கும்.

dondu(#11168674346665545885) said...

படத்தின் ஒரிஜினல் தலைப்பே “மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்து கொலை”. அகாலத்தில் எல்லாம் இம்மாதிரி இரட்டைத் தலைப்பாக வைப்பார்கள். நான் இப்படத்தை சமீபத்தில் 1959-ல் ப்ளாஸா சினிமா தியேட்டரில் பார்த்தேன்.

படத்தில் வேறு நல்ல பாடல்கள் “மாலை மயங்குகின்ற நேரம்”, “தடுக்காதே என்னைத் தடுக்காதே” (இரண்டாம் பாடல் பற்றி கொஞ்சம் சந்தேகமாக உள்ளது).

பத்மினியின் அப்பாவாக நடித்தவர் வீணை எஸ். பாலச்சந்தர், அம்மாவாக நடித்தவர் சந்தியா (ஜெயலலிதாவின் அம்மா).

அன்புடன்,
டோண்டு ராகவன்

இம்சை அரசி said...

மரகதம் படத்தோட பேரு. பக்கத்துலயே வர குட்டிப் பேருதான் "கருங்குயில் குன்றத்து கொலை"

@ iniyal

கண்டிப்பா பாருங்க. உங்களுக்குப் பிடிக்கும் :)))

@ இனியவள் புனிதா

பாத்துட்டேனா இல்லையானு தெரியலை. பாக்கறேன் கண்டிப்பா :)))

@ ஜி.ரா

அந்தப் படம் நான் பார்த்துட்டேன் ஜி.ரா. அதும் ஸ்ரீப்ரியா(மகள்) பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சிவாஜிகிட்ட(அப்பா) கேக்கும் போது நமக்கே கண்ணுல தண்ணி வந்துடும். உணர்ச்சிகள் நல்லா வெளிப்படுத்தியிருப்பாங்க.

@ டோண்டு

மிக்க நன்றி :)))

இம்சை அரசி said...

// Anonymous Anonymous said...

hi, can u tell from where i can download that song(your jan 9th post).

//

நீங்க esnipsல account create பண்ணினா download பண்ணிக்கலாம் :)))

ஜி said...

//நான் குட்டிப் பொண்ணா இருந்தப்போ சன் டிவி-ல இது எம்.ஜி.ஆர் வாரம், //

Ithellaam nemba overu.. sun TV aarambikkumpothu neenga paathi kelavi... kutti ponnunnu comedy panna koodaathu