கனவுகள் கூட சோகமே வடிவாய் போக மெத்தையில் குப்புறப் படுத்து தலையணையில் முகத்திற்கு கைகளை முட்டுக் கொடுத்து நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ச்சே! நேற்று இப்படி ஆகி விட்டதே. காதல் எல்லாம் சுத்த பேத்தல் என்று சொல்லிக் கொண்டிருந்ததால் இந்த பாழாய் போன காதல் என்னை பழி வாங்கி விட்டதோ??? சரி. போனது போகட்டும். நல்ல வேளை நன்கு பழகிப் பின் கடைசியில் சொல்லாமல் போனாளே... அவளுக்குத்தான் தெரியுமா என்ன இப்படி உள்ளுக்குள் நான் உடைந்துப் போய் உருகியது. இப்படியெல்லாம் என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ளதான் விரும்புகிறேன். இந்தப் பாழாய் போன மனம் என்னவோ ஒரு நாய்க் குட்டியைப் போல அவள் பின்னாலேயே ஓடுகிறதே.
"சரவணா! என்னடா இன்னும் தூங்கிட்டு இருக்கற? நேரமாச்சு கிளம்பு" என்றபடியே வருவது வேறு யார் என் ஆருயிர் நண்பன் மகேஷ்தான். இங்கே நாங்கள் ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறோம். அதில் ஒருவனான ரகுவின் தங்கைக்கு நாளை காலையில் திருமணம். அதற்காகத் தான் அடித்துப் பிடித்து ஓடி வந்து மனதை தொலைத்து விட்டு தொலைத்த மனதில் காயத்தையும் வாங்கிக் கொண்டு நிற்கிறேன்.
"இருடா! குளிச்சிட்டு வரேன்" என்று சுரத்தில்லாமல் சொன்னேன்.
"என்னடா நீ! எவ்வளவு வேலை இருக்கு. எல்லாரும் ஆளுக்கொரு பக்கமா அலைஞ்சிட்டு இருக்கோம். நீ பாட்டுக்கு மல்லாக்கப் படுத்துக்கிட்டு கனவு கண்டுக்கிட்டு இருக்க" என்று கடிந்துக் கொண்டான். வேறு சமயமாக இருந்திருந்தால் உள்ளுக்குள் உள்ள பாரத்தையெல்லாம் அவனிடம் இறக்கி வைத்திருப்பேன். என்ன செய்வது??? :(((
"இருடா. ஒரு பத்தே நிமிஷம். கிளம்பிடறேன்"
"எனக்கு மண்டபத்துல வேலை இருக்குடா. ரூம் எல்லாம் அரேஞ்ச் பண்ணினது வேறப் பாக்க போகணும். ரகு உடனே வர சொல்லி இருக்கான். நான் அங்க போறேன். உனக்குதான் ஒரு வேலை. சத்திரம் பஸ் ஸ்டாண்ட் போய் அருண பிக் அப் பண்ணிட்டு வரணும். அவன் வந்துட்டே இருக்கான். டோல்கேட் வந்ததும் கால் பண்ணுவான் உனக்கு" என்று கூறிக் கொண்டே கிளம்பி விட்டான்.
மெல்லக் குளித்துக் கிளம்பி பேருக்கு சாப்பிட்டு விட்டு அருணுடைய அழைப்பிற்காகக் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அவன் அழைக்க எனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஹ்ம்ம்ம். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தாயிற்று. இந்த அருண் பயலை இன்னும் காணோம். எரிச்சலாய் வந்தது. ஏன் இப்படி தேவையில்லாமல் எரிச்சல்படுகிறேன்? எல்லாக் கேள்விகளுக்கும் அவளே விடையாய் வந்து நின்றாள். சும்மா நின்றால் கூடப் பரவாயில்லை. என்னைப் பார்த்து கேலியாய் கைகொட்டி சிரிக்கிறாள். ச்சே! என்ன இது. மணமானப் பெண். அவளைப் பற்றி நினைக்கக் கூடாது. இப்படியெல்லாம் கட்டுபபடுத்த முயல்கிறேன். ஆனால் முடியவில்லை. சரி அப்படியே போய் நிழலில் நிற்கலாம்.
அட! யாரது அது? அவளா? ஆமாம் அவளேதான். அதுவும் மகேஷின் தங்கை ப்ரியாவுடன். அவளது தோழியா இவள். இருக்கும் இருக்கும். ரகுவின் தங்கையும் மகேஷின் தங்கையும் ஒன்றாய்தானே கல்லூரியில் படித்தார்கள். அடக் கடவுளே! அப்போ அவள் வந்திருப்பது ரகுவின் தங்கையின் திருமணத்திற்கா? அவளிடம் ஏதோ பேசி ஒரு பையை கையில் கொடுத்து விட்டுப் போகிறாள். அவள் வருவதற்குள் சீக்கிரம் போய் ப்ரியாவிடம் விசாரித்து விடலாம் என்றெண்ணி வேகமாய் அவளிடம் சென்றேன்.
"ப்ரியா" என்றதும் திரும்பியவள்
"ஹை! சரவணண்ணா... இங்க என்ன பண்றீங்க?" என்று கேட்டுச் சிரித்தாள்.
"அருண பிக் அப் பண்ண வந்தேன். சரி அதை விடு. இப்போ ஒரு பொண்ணு உன்கிட்ட பேசிட்டு போனாளே. பச்சைக் கலர் சுடிதார். யார் அது?"
"ஓ மஞ்சுவா? என் காலேஜ் ஃப்ரெண்ட் அண்ணா. கல்யாணத்துக்குதான் வந்திருக்கா" என்றாள்.
"ஓ! அப்படியா? நேத்து பஸ்லப் பாத்தேன். அதான் கேட்டேன்" என்று சொல்லி விட்டு அதைக் கேட்கலாம வேண்டாமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போதே
"ஓஹோ! பாவம். நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதும் அவ திருப்பி ஈரோடு போய் திருப்பி பெங்களூர் போகணும். திருச்சில இருந்து பெங்களூருக்கு டிக்கட் கிடைக்கலையாம். பேசாம நானாவது உங்கள்ட்ட சொல்லி இருக்கலாம்" என்று அவள் சொன்னபோது எனக்கு குழம்பியது.
"என்கிட்ட கோயம்புத்தூர் போறேனு சொன்னா" என்றேன்.
"கோயம்புத்தூரா? அவ வீடு ஈரோடுல இருக்கு" என்றாள்.
"இல்ல அவங்க மாமியார் வீட்டுக்கு போறேனு சொன்னா"
"மாமியார் வீடா? நீங்க வேற யாரையோ நினைச்சுக்கிட்டு சொல்றீங்கனு நினைக்கறேன். அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே" என்று சாதாரணமாய் சொன்னாள் என்னுள் சந்தோஷ அலையடிக்க வைத்தது தெரியாமல். என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவள் திரும்பி வருவதைக் கண்டதும்
"சரி நான் போய் அருண் வந்துட்டானானு பாக்கறேன். நான் பாத்தது இவங்க இல்ல. கன்பியூஸ் ஆயிட்டேன். நீ அவங்களை போட்டுக் குழப்பிட்டு இருக்காத" என்று வேகமாய் இடத்தைக் காலி செய்தேன்.
என்னையா ஏமாற்றி இருக்கிறாய்? இன்று இருக்கிறது உனக்கு என்றெண்ணியபடியெ அன்றைய பொழுது ஓடி மாலை வந்தது. ஏனோ! அவளது குறும்புத்தனத்தை வெகுவாய் ரசித்தேன். அவளிடம் எப்படி சொல்லலாம் என்ரு யோசித்துக் கொண்டே ரிசப்ஷனிற்கு வந்து சேர்ந்து விட்டேன். எங்கே இருக்கிறாள்?? அதோ! மணப்பெண்ணின் அருகே உள்ள பட்டாளத்தில் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். வா. இன்று உனக்கு இருக்கிறது.
ஆஹா! இங்கேதான் வருகிறாள். அவளைக் கவனியாதவன் போல அமர்ந்திருந்தேன். அருகில் வந்தவள்
"ஹலோ சரவணன். என்னை ஞாபகம் இருக்கா?" என்றபடியே அருகில் இருந்த சேரில் அமர்ந்தாள்.
"ம்ம்ம்ம். நீங்களும் இந்த கல்யாணத்துக்குதான் வந்திருந்தீங்களா?" என்று தெரியாதவன் போல் நடித்தேன்.
"ஆமா. இவ என் காலேஜ் ஃப்ரெண்ட்"
"ஓஹோ! ரகு, மகேஷ், நான் எல்லாரும் சின்ன வயசுல இருந்து க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். இவங்க ரெண்டு பேரும் என் சொந்த தங்கச்சிங்க மாதிரி"
"தெரியுமே எனக்கு" என்று என்னை ஆச்சர்யப்படுத்தினாள்.
"இன்னைக்கு மதியம் ப்ரியா சொல்லி இருப்பா" என்றேன் ஆச்சர்யத்தைக் காட்டாமல்.
"இல்லையே! எனக்கு காலேஜ் படிக்கும்போதே தெரியும். உங்க ஃபோட்டோஸ் பாத்திருக்கேன்"
"ஓ! அப்போ நேத்து..." என்று நான் ஆச்சரியத்தை வெளிக்காட்ட
"நேத்தே உங்களைத் தெரியும் எனக்கு" என்று சிரித்தாள். எப்படி விளையாடியிருக்கிறாள்??? அந்த சிரிப்பு வேறு என்னுள் லேசானக் கோபத்தை தூண்டி விட
"ஓஹோ! சரி உங்க வீட்டுக்கார் பேரு என்ன?" என்றேன் கிண்டலாய். அந்தக் கேள்வியிலேயே எனக்கு உண்மைத் தெரிந்து விட்டதை அறிந்துக் கொண்டவள்
"ஹஸ்பெண்ட் பேரெல்லாம் சொல்லக் கூடாது" என்றாள் அதே சிரிப்புடன்.
"பரவால்ல சொல்லுங்க"
"ஹ்ம்ம்ம்... மிஸ்டர்.எக்ஸ்-னு வச்சுக்கங்களேன்" என்றாள்.
"அந்த எக்ஸை சரவணன்னு ரீப்ளேஸ் பண்ணிடலாமா?" என்று எதையும் யோசியாமல் டக்கென்று கேட்டேன். ஒரு நொடித் திகைத்தவள் பின் கலகலவென்று சிரித்தாள். என்ன சொல்வாளோ என்ற பதட்டத்தில் அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தேன். எனதுப் பார்வையை சந்திக்கத் துணிவின்றி தலையைத் தாழ்த்தி யோசித்தாள். ஒரு நிமிடம் கழித்து கைக்குட்டையை இரு கைகளால் போட்டு பிசைந்தபடியே
"அதை விட வேற பெஸ்ட் ரீப்ளேஸ்மெண்ட் இருக்குமா என்ன?" என்றாளேப் பார்க்கலாம். நான் எங்கு இருக்கிறேன் என்றுப் புரியாமல் விழித்தேன். அட என்ன இது? பாரதிராஜா படத்தைப் போல தேவதைகள் எங்களைச் சுற்றி ஆஆஆ என்றுப் பாடிப் பூக்களைத் தூவினால் எவ்வளவு நன்றாய் இருக்கும். அன்றையத் திருமணம் முழுநேரமும் எனக்கு எப்படிப் போனதென்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா உங்களுக்கு???
இப்போ திருச்சியில் இருந்து பெங்களூர் போகும் பேருந்தில் நான். என்னருகில் என் மஞ்சு. என் தோளில் சாய்ந்து கண்களை மூடியிருக்கிறாள். எனது ஐபாடின் ஹியர் ஃபோனின் ஒரு புறம் அவள் காதில். மற்றொன்று என் காதில். எங்களிடையே பேச்சு இல்லை. இளையராஜாதான் எங்களுக்காகப் பாடிக் கொண்டிருந்தார்.
'நேத்து ஒருத்தர ஒருத்தரு பார்த்தோம். பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்...'
பி.கு: சரவணன், மஞ்சு பேரைப் பாத்துட்டு நம்ம குசும்பனோட கதையான்னு கேக்கப்படாது. இது சத்தியமா அவங்கக் கதை இல்ல. ஆனா திஸ் கதை இஸ் டெடிகேட்டட் டு கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போற சரவணன் (அதாங்க நம்ம குசும்பன்) அண்ட் அவர் வுட்பி மஞ்சு :)))
Wednesday, February 6, 2008
யாரிந்த தேவதை - II
Posted by இம்சை அரசி at 6:37 PM
Labels: தொடர் கதை, யாரிந்த தேவதை
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
superu :)
sandhoshamaana mudivu kodathathukku thankies :)
Wishes to the marriage couple!
பாகம் 2 ஐப் படிச்சுட்டு முதல் பாகத்தைப் படிச்சேன். தெய்வக்குத்தம் ஒண்ணும் ஆயிடாதே??
கதை நன்றாயிருந்தது.!
கதை அருமை, ஆனா நீங்க ஹீரோவின் அழகை பற்றி ஒன்னுமே சொல்லவில்லையே,முதல் பதிவில் கூட ஹீரோயினை பற்றிதான் சொன்னீங்க ம்ம்ம்:(
அப்புறம் நீங்க டெடிக்கேட் செஞ்சதுக்கு மிக்க நன்றி:)) அவுங்களயாவது எந்த கஷ்டமும் இன்றி சேர்த்துவையுங்க:)
2nd part arumai.
mudivu.. epecteda irunthalum, was nice
natpodu
nivisha
//
குசும்பன் said...
கதை அருமை, ஆனா நீங்க ஹீரோவின் அழகை பற்றி ஒன்னுமே சொல்லவில்லையே
//
ஹீரோவின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதுவோய் அதனாலதான்
//
குசும்பன் said...
கதை அருமை, ஆனா நீங்க ஹீரோவின் அழகை பற்றி ஒன்னுமே சொல்லவில்லையே
//
ஹீரோ 'கோட்' போட்ட படத்தை பாத்து தமிழ்மணமே கதிகலங்கில்ல நிக்குது இதுக்கு மேல என்ன சொல்லனும்??
//
குசும்பன் said...
அவுங்களயாவது எந்த கஷ்டமும் இன்றி சேர்த்துவையுங்க:)
//
இது நல்ல புள்ளைக்கு அடையாளம்.
சூப்பரு!!
மிக அழகான கதை அக்கா!!
குசும்பன் அண்ணாச்சிக்கு சூப்பரு டெடிகேஷன்!!
அண்ணா அண்ணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-D
யக்கோவ், இப்படி எல்லாம் கதை எளுதினா பார்ட் ஒண்ணுக்கு ஒரு லிங்க் கொடுத்திடுங்க, புண்யமா போவும்.. தேடித் தேடி கண்டுபுடிச்சி படிச்சனாக்கும்..
ஆஹா...இப்படி எல்லாம் கூட டெடிகேட்டட் செய்யாலமா...!! ;))
சூப்பர் ;)
\\குசும்பன் said...
அப்புறம் நீங்க டெடிக்கேட் செஞ்சதுக்கு மிக்க நன்றி:)) அவுங்களயாவது எந்த கஷ்டமும் இன்றி சேர்த்துவையுங்க:)\\
என்ன ஒரு நடிப்பு...))
romba intresting aaha irunthathu imsai kadhai.......dialogues & expressions superb!!!
கதை மிக அருமையா,அழகா இருக்குங்க
நான் அந்த கல்லுளிமங்கனுக்கு என்ன ஆச்சுனு கேட்டு இருந்தேன் ஆனால் அது அவன் இல்லை அவள்னு இரண்டாம் பகுதியில் சொல்லிவிட்டிங்க,கதை நன்றாக இருந்ததுங்க,
இம்சை அரசி :))
நீங்க தான் அந்த மரத்தடியிலே வடை சுட்ட பாட்டியா..?? என்னாமா கதை சொல்லுறீய...... ச்சும்மா காதல் கதறுதுல்ல.... ( நெசமா கதை கலக்ஸ் அரசி !! ) :)))
super i like this
please visit www.TamilKudumbam.com (தமிழ்குடும்பம்.காம்) This is a simple website with lots of information on Veg, non-veg cooking (with photos) and several other hobbies for the family.
kadhai supera irukku imsai.. kalakkunga.. nalla dedication post :)
நல்ல கதை இம்சை அரசி! உங்க கதை சொல்ற நடை நல்லாஇருக்கு! எல்லா Postடும் படிச்சேன்! Nice Job!
U R too goood in writing stories..
Keep it up.......
Post a Comment