நெஞ்சில் போட்டு
தட்டிக் கொடுத்து
தூங்க வைத்த
பொழுதுகளில்
உங்கள் பெண்ணாய்தானே
நானிருந்தேன்
சைக்கிள் ஓட்டப்
பழகிய நாட்களில்
தவறி விழுந்த போதெல்லாம்
ஓடி வந்து தூக்கிய
பொழுதுகளில்
உங்கள் பெண்ணாய்தானே
நானிருந்தேன்
பள்ளி ஆண்டுவிழாக்களில்
பரிசு வாங்கியபோது
கலங்கிய கண்களுடன்
புன்னகைத்தபடி
கைத்தட்டி மகிழ்ந்த
பொழுதுகளில்
உங்கள் பெண்ணாய்தானே
நானிருந்தேன்
அரசுப் பொதுத் தேர்வுகளில்
எவ்வளவு மதிப்பெண்
வாங்குவேனோ என்று
அதிகக் கவலையுடன்
காத்திருந்த
பொழுதுகளில்
உங்கள் பெண்ணாய்தானே
நானிருந்தேன்
கல்லூரி முடித்து
வேலையில் சேர்ந்தபோது
சொல்ல முடியாத
சந்தோஷத்தில்
பேசத் திணறிய
பொழுதுகளில்
உங்கள் பெண்ணாய்தானே
நானிருந்தேன்
இன்று ஒரே நாளில்
ஒற்றைக் கயிறால்
நம் பந்தம்
அறுந்து விடுமோ?
இனி அவர்கள் வீட்டுப்பெண்
என்று சொல்கிறார்களே?
எப்படியப்பா கேட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்???
Tuesday, February 12, 2008
எப்படியப்பா கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்???
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
தொடர்ந்து இரண்டு கவிதைகள்!!
கவிதை சூப்பரு! நல்ல கான்செப்ட்!
கவிதை அழகு..பொருளும்தான்..
என்ன செய்வது இம்சையரசி? கால காலமாய்க் கேட்டலும் விடையே கிடைக்காத கேள்வி..
// Collapse comments
Blogger Dreamzz said...
தொடர்ந்து இரண்டு கவிதைகள்!!
//
எழுதக் கூடாதா என்ன? :)))
// Blogger Dreamzz said...
கவிதை சூப்பரு! நல்ல கான்செப்ட்!
//
நன்றி :)))
// Blogger பாச மலர் said...
கவிதை அழகு..பொருளும்தான்..
என்ன செய்வது இம்சையரசி? கால காலமாய்க் கேட்டலும் விடையே கிடைக்காத கேள்வி..
//
ஹ்ம்ம்ம்... அப்பாவப் பாத்துட்டு வந்தாலே ஒரே ஃபீலிங் ஆயிடுது என்ன பண்றது? :(((
நன்று..
// Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நன்று..
//
நன்றி :)))
நல்லாயிருக்கு..;)
// Blogger கோபிநாத் said...
நல்லாயிருக்கு..;)
//
தேங்க்ஸ் அண்ணா :)))
என்னோட அக்கா நேரடியா கேட்டாங்க!!
இந்தக்கா கவிதையா போட்டுட்டாங்க!
நல்லாயிருக்குங்க்கா ;)
ம்
கலியாணம் கட்டி வெச்சாச்சு 'சீர்'செனத்தியோட
வேற என்ன அவர் செய்யனும்????
அப்பிடியும் சும்மா விடறீங்களா
'தலை' தீபாவளி
'தலை' பொங்கல்
'தலை' ஆடி
'தலை' அமாவாசை
'தலை' திங்கள்
'தலை' செவ்வாய்
'தலை' புதன் -னு
பாவம் தெய்வ மச்சான் மறந்தாலும் நினைவு படுத்தி கூட்டிகிட்டு கிளம்பி வந்திடறீங்களே!
என் அப்பாவின் நன்பரின் மகனை பார்த்ததில் இருந்து இறந்து போன என் அப்பாவின் ஞாபகம் அவருடைய அருமையான அரவணைப்புக்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.. தங்கள் கவிதை என்னை மீள முடியாத நினைவுச்சங்கிலியில் கட்டிபோட்டது. "அப்பாவின் பெண்ணாய் இருப்பதில் தான் எத்தனை சுகம்"..ம்ம்ம் என்ன செய்ய காலங்கள் ஓடத்தானே செய்கிறது யார் குரலுக்கும் செவி சாய்க்காமல்.. வாழ்த்துக்கள்..
அப்பாடா, ஒரு வழியா மேடம் மாட்டினாங்க !
kavithai nalla irukku akka. nice
நட்போடு
நிவிஷா
Super.. really nice!! :)
kavithai ellam nallathan irukku. veru enna vishesam?
நன்கு உற்றுக் கேட்டீர்களா?? "அவர்கள் வீட்டுக்கும் பெண் என்று" தான் சொல்லியிருப்பார்கள்.
எனினும் வரிகள் பிரமாதம்...
அம்மா;;பற்றித் தான் எழுதுவார்கள். இது அப்பா பற்றி
நன்று!
நன்றி
<==
இனி அவர்கள் வீட்டுப்பெண்
என்று சொல்கிறார்களே?
எப்படியப்பா கேட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்??? ==>
அட, சும்மா இரும்மா. ஒரு ஏமாந்தவன்(த.மணி) மாட்டியிருக்கான்.எங்களுக்கு தொந்தரவு விட்டதுல்ல.அதான்.
<==
இனி அவர்கள் வீட்டுப்பெண்
என்று சொல்கிறார்களே?
எப்படியப்பா கேட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்??? ==>
அட, சும்மா இரும்மா. ஒரு ஏமாந்தவன்(ர.மணி) மாட்டியிருக்கான்.எங்களுக்கு தொந்தரவு விட்டதுல்ல.அதான்.
"ர"க்கு பதிலா "த" போட்டாச்சு.அதான், இந்த கமெண்ட்
இது நம் சமுதாயவழக்கம். எப்போதும் பெண்கள் நாற்றங்கால் போன்றவர்கள். திருமணம்ஆன பிறகுபுகுந்த வீடுதான் அவர்களுக்குசொந்த வீடு. இரண்டு பெண்களின் தந்தையான என் சொந்த அனுபவம் இது
சூப்பர் கவிதை!
நெஞ்சைத் தொட்ட வரிகள்!
//நன்கு உற்றுக் கேட்டீர்களா?? "அவர்கள் வீட்டுக்கும் பெண் என்று" தான் சொல்லியிருப்பார்கள்.
//
கரெக்டாச் சொன்னீங்க யோகன் பாரீஸ்!
அதெப்படி நம்ம வீட்டுப் பேன் இல்லைன்னு ஆயிடும்!
இது ஒரு சக்கர கொடுக்கல் வாங்கலோ..!
இவர் கொண்டுவந்ததும்
இன்னொருவர் மகளைத்தானே
மனைவி என்ற பெயரில்??
அதுதான்
எடுத்துவந்ததை சமூகத்தில்
திருப்பிக்கொடுக்கும்போது
பேசமுடியவில்லை போலும்!
That's really marvellous... I really had tears in my eyes.
-Sasi
Post a Comment