Friday, May 17, 2013

ஓ நண்பனே நண்பனே!!

ரெண்டு நாளைக்கு முன்னாடி லேட்டா மெஷின் -ல துணி போட்டுட்டு போரடிக்குதேனு உக்காந்திருந்தேன். பப்புக் குட்டி இருந்திருந்தா நான் தூங்க போற வரைக்கும் தூங்காம பூனைக் குட்டி மாதிரி என்னையே சுத்திட்டு இருப்பா. அவ வேற vacation-ன்னு அவ அம்மாயி வீட்டுக்குப் போயிட்டா :( சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப பேசாம படம் பாக்கலாமானு தோணுச்சு. படம் முழுசா பாக்கறதுக்குள்ள மெஷின் முடிஞ்சிடும் அதனால இன்னைக்குப் பாதி நாளைக்குப் பாதினு என் ப்ராஜக்ட் ப்ளானப் போட்டுட்டு என்ன படம் பாக்கலாம்னு தேடினப்போ கண்ணுல சிக்குச்சு இந்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'. ரொம்ப நாளா எல்லாரும் நல்லா இருக்குனு சொன்னாங்களே இதயேப் பாப்போம்னு ஆரம்பிச்சேன்.நைட்டு 3 மணிக்குதான் தூங்கினேன் :)

ஏற்கனவே பல தடவை சொல்லி இருக்கேன். நமக்கு இந்த விமர்சனம் எல்லாம் எழுத வராதுனு. So these are just my observations. படம் என்னவோ விறுவிறுனு தான் போச்சு. ஆனா இந்த ரிசப்ஷன் சீன் வந்தப்போ கொஞ்சம் போரடிச்ச மாதிரி இருந்துச்சு. சும்மா சொன்னதையே எவ்ளோ நேரம்தான் சொல்லிட்டே இருப்பாங்கன்ற மாதிரி. ஆனா அதுக்கப்புறம் நல்ல ஸ்பீடுதான். கதைல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் ப்ரேம், சரஸ்(இவரோட ஃபுல் நேம் என்னவா இருந்திருக்கும்?!) ஃப்ரெண்ட்ஷிப். செம இல்ல?! அவருக்கு இப்படி ஆயிடுச்சுனு தெரிஞ்சதும் மூக்கு விடைக்க அழுததும், அடுத்த நாளும் சரி ஆகலைன்றப்போ சோகத்துல என்ன பண்றதுனு தெரியாம குழம்பறதும், ரிசப்ஷன் அப்போ சொன்னதையே கேட்டு கேட்டு அலுக்காம பேசி பேசி சரி கட்டினதும், சரி ஆன உடனே 'நான் சொன்னா கேப்பியா மாட்டியா'னு கேட்டு விஜயோட பதிலுக்கு அவ்ளோ சந்தோஷப்பட்டதும்.. சான்ஸே இல்ல. என்னா எக்ஸ்பிரஷன்ஸ்... விஜய்-அ மட்டும் கொண்டாடறாங்க. இவர ஏன் கண்டுக்காம விட்டாங்கனு தெரில. அவரோட நடிப்ப விட எனக்கு இவரதான் ரொம்ப பிடிச்சிருந்தது.

இது உண்மைக் கதைனு சொன்னப்போ நிஜமாவே ப்ரேம் அண்ட் சரஸ் ஃப்ரெண்ட்ஷிப் மேல ஒரு சின்ன பொறாமையே வந்துச்சு. 'நீ சொன்னா பில்டிங் மேல இருந்து குதிக்கறது மட்டும் இல்ல. தெரியாத பொண்ணு கழுத்துல தாலி கூட கட்டுவேன்'-னு சொல்றப்போ அந்த இடத்துல நிஜ சரஸோட ஃபீலிங்க்ஸ் எப்படி இருந்திருக்கும். How much he would have treasured his friendship? புல்லரிக்குது எனக்கு! இந்த incident அவங்க ஃப்ரெண்ட்ஷிப்ப இன்னும் ஆழமாக்கி இருக்கும். Envying on them!!

எனக்கு மனதுக்கு நெருக்கமான ரொம்ப ரொம்ப பிடிச்ச ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர். ஒருத்தி ஃபேஸ்புக், ப்ளாக் வாசமே இல்லாம அடுப்படி, வீட்டுக்கார், குழந்தைங்க, மாமனார், மாமியார்-னு திருச்சி-ல இருக்கா. இன்னொருத்தன் ஆபிஸ், ஆஃப்சோர் கால்ஸ், மனைவி, குழந்தை-னு US-ல உக்காந்திருக்கான். இவங்க என் பக்கத்துல இல்லயேனு எவ்ளோ ஏங்கி இருக்கேன். இந்தப் படம் ரொம்ப கிளப்பி விட்டுடுச்சு. Badly missing you my dear friends :( Love you... :)

பி.கு: இந்தப் போஸ்ட் எழுதலாம்னு வந்துப் பாத்தப்போதான் ஒரு உண்மை பளார்னு என் கன்னத்துல அறைஞ்சது. ஆமா! 2012-ல ஒரு போஸ்ட் கூட போடல :(

பி.கு-க்கு பி.கு: அதனால இனிமேல் எழுதி குவிக்கலாம்னு நினைச்சுட்டு இருக்கேன். அது மட்டும் நடந்தது அந்த ஆண்டவனால கூட உங்கள காப்பாத்த முடியாது... ஹி ஹி...