என் தமிழ் ஆசிரியர் நீங்க நல்ல கதைகள் எழுதணும். அதிலும் சமுதாயத்துல பலப் பிரச்சினைகள் இருக்கு. அதைப் பத்தியெல்லாம் எழுதணும்னு எனக்கு நிறைய அறிவுரை சொன்னார். நான் எழுதறது வச்சுப் பலப் பிரச்சினைகள் வராம இருந்தா சரினு உள்ளுக்குள்ள நினைச்சுட்டே சிரிச்சு வச்சேன். அப்போதான் அவர் சொன்னார். கல்யாணமாகி ஒரு நாலைஞ்சு வர்ஷம் ஆகி இருக்கறப் பொண்ணுங்கள்ட்ட கேட்டா நிறையப் பிரச்சினைகள் சொல்வாங்கனு சொன்னார். அது என்னங்க சார் நாலைஞ்சு வருஷக் கணக்குனு நான் புரியாமக் கேட்டேன். அதாவது கல்யாணமாகி ரெண்டு மூணு வருஷம் வரைக்கும் அவங்க ரொம்ப அன்னியோன்யமா இருக்கறதால அவ்வளவா பிரச்சினை வராது. வந்தாலும் ரொம்ப பெருசா தெரியாது. ஒரு ஆறேழு வருஷம் ஆனவங்களுக்கு பிரச்சினைகள் பழகிப் போயிடும். அதனால பெருசா எடுத்துக்க மாட்டாங்க. ஆனா இந்த இடைப்பட்டக் காலத்துல இருக்கறவங்களுக்கு தான் நிறையப் பிரச்சினை இருக்கும். அதுக்காக ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருப்பாங்கன்னு அவர் சொன்னார். ஆஹா! இப்படியெல்லாம் மேட்டர் இருக்கா-னு அப்போ இருந்து இந்த ஆரய்ச்சிய ஆரம்பிச்சேன். பல கதைகள்ல படிச்சது, எனக்கு பலர் சொன்ன அறிவுரைகள், நானா ஆராய்ந்து அறிந்தது, என் ஃப்ரெண்ட்ஸ் வச்சு நானா ஒரு முடிவுக்கு வந்தது இப்படி பல விஷயங்கள வச்சு இந்த ஆராய்ச்சிக் கட்டுரைய ரெடிப் பண்ணியிருக்கேன். படிச்சிட்டு எனக்கு முனைவர் பட்டம் கிடைக்குமானு சொல்லிட்டுப் போங்க ;)))
இந்த கட்டுரை முழுக்க முழுக்க திருமணமாகி ஓராண்டுக்குள் இருப்பவர்களுக்காகவும், இனித் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறவர்களுக்காகவும் முக்கியமாய் பெண்களுக்காக மட்டும். ஏனென்றால் இந்தக் கட்டுரையின் நோக்கம் முழுக்க முழுக்க கணவரின் அன்பைப் பெறுவது எப்படி என்பது (ஆஹா! தமிழ்ல புகுந்து விளையாடறேனா ;))))
--------------------------------------ooOoo--------------------------------------
மறுத்துப் பேசாதீர்கள் - உங்க ஆத்துக்காரர் எதாவது இப்படி பண்ணலாம்னு சொல்லும்போது அது உங்களுக்கு வேணாம்னு தோணுச்சுனா உடனே வேணாம்னு டக்குனு சொல்லாதீங்க. ஏங்க! இதுல இப்படி பிரச்சினை இருக்கே பரவால்லயா-னு மெல்ல கேளுங்க. அட ஆமாம்னு அவர் யோசிச்சா அதுக்கு இப்படி செய்யலாமேனு அப்போ உங்க கருத்த முன் வையுங்க. ஆனா அட ஆமாம்னு அவர் யோசிக்கற அளவுக்கு ஸ்ட்ராங்கான பிரச்சினைய சிரிச்சுட்டே சாஃப்டா சொல்லுங்க. அப்புறம் போகப் போக உங்களைக் கேக்காம எதும் செய்யாத அளவுக்கு வந்துடுவாங்க.
புகுந்த வீட்டு உறவுகளை உங்களுடையதாய் பாவியுங்கள் - அவரோட உறவினரை உங்க உறவினரை எப்படி ட்ரீட் பண்றீங்களோ அதே மாதிரி ட்ரீட் பண்ணுங்க. அப்போதான் அவரும் உங்க உறவினர்கிட்ட ரொம்ப நல்லாப் பழகுவார். அதும் அவர் தங்கச்சி, அத்தைப் பொண்ணு, மாமாப் பொண்ணு இப்படி உங்களை விட சின்னப் பொண்ணுங்ககிட்ட ஈஸியா பழக ஆரம்பிக்கலாம். அவங்கள்ட்ட நீங்க க்ளோஸ்ஸா இருந்தாலே நீங்க எல்லார்ட்டயும் அப்டி இருக்கற ஒரு ஃபீல் வந்துடும்.
பிறந்த வீட்டுப் புராணம் பாடாதீர்கள் - எப்போ பார்த்தாலும் எங்க வீட்டுல அப்டி இருக்கும் இப்டி இருக்கும்னு உங்க பிறந்த வீட்டுப் புராணமே பாடாதீங்க. ஒரு வேளை நம்ம நல்லா வச்சுக்கலைனு ஃபீல் பண்றாளோனு நினைக்க ஆரம்பிச்சிடுவாங்க. இன்னும் போகப் போக அதுவே இன்னும் இவளுக்கு என்னதான் செய்யணும்னு ஒரு எரிச்சலா மாறிடும்.
பிறந்த வீட்டை எண்ணி வருந்தாதீர்கள் - சும்மா எங்கம்மா வீட்டுக்குப் போகணும்னு நச்சுப் பண்ணிட்டே இருக்காதீங்க. அவர் சந்தோஷமா இருக்கற சமயமாப் பார்த்து அப்படியே எங்கயாவது வெளிலப் போயிட்டு வரலாமேங்கன்னு ஆரம்பிச்சு ஏங்க நாளைக்கு சென்னைக்குப்(உங்க வீடு இருக்கற ஏரியாப் பேரு) போயிட்டு வரலாமானு மெல்ல பிட்டுப் போடுங்க.
மாமியாரைத் தாய் போல நினையுங்கள் - நான் பார்த்தவரைக்கும் கதைகள்லயும் சரி. படங்கள்லயும் சரி. நண்பர்கள்லயும் சரி. என் தம்பியும் சரி. உலகத்துல அவங்க நேசிக்கிற முதல் ஆள் அவங்க அம்மாவாதான் இருப்பாங்க. இதுல விதிவிலக்கு இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. அதனால அவங்களை ஐஸ் வைக்கனு மட்டும் சொல்லலை. மாமியார் உங்களோட அட்ஜஸ்ட் பண்ணிப் போகாட்டியும் நீங்க அவங்களோட அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க. உங்க அம்மா எதாவது சொன்னா அட்ஜஸ்ட் பண்ணிக்கறதில்லையா? இவங்களும் நமக்கு அம்மா மாதிரி தானனு அட்ஜஸ்ட் பண்ணிப் போங்க. நான் தான் அவருக்கு இதை செய்வேன் அதை செய்வேன்னு அவங்களோட மல்லுக்கு நிக்காதீங்க. அவங்க அன்பை வாங்கிட்டிங்கனா ஆட்டொமேட்டிக்கா அவங்க உங்களுக்கு எல்லாமே விட்டுக் கொடுப்பாங்க.
மாமியார் உதவியை நாடுங்கள் - கண்டிப்பா எந்த ஒரு பையனுக்கும் அவங்க அம்மா சமையல் தான் தேவாமிர்தமா இருக்கும். உங்க சமையல் சரியில்லாமப் போச்சுனா அத்தை செய்யற மாதிரியே செய்யணும்னு ட்ரை பண்ணினேன். ஆனா அவங்கள மாதிரி வரலை. அடுத்த முறை அவங்ககிட்டதான் கேட்டு செய்யணும்னு எடுத்து விடுங்க. அவருக்கு சந்தோஷத்துல நீங்க செஞ்ச சாப்பாடும் அமிர்தமா மாறிடும். எதும் சொல்லாம சாப்பிடுவார்.
விட்டுக் கொடுத்துப் போங்கள் - எதாவது நீங்க சொல்லி அவர் ஏத்துக்க மறுத்தா விட்டுக் கொடுங்க. இப்படியே ஒரு நாலு தடவை ஆச்சுனா ஆட்டொமேட்டிக்கா அஞ்சாவது தடவை அவரே விட்டுக் கொடுத்துடுவார். பிடிவாதம் பிடிக்கறதால யாருக்கு என்ன லாபம் சொல்லுங்க. நமக்குதான் டென்ஷன். சண்டை. அதனால ஒரு சின்ன விரிசல். இதெல்லாம் தேவையா? சோ சந்தோஷமா விட்டுக் கொடுங்க.
உங்களை ஃப்ரெஷ்ஷாய் வைத்துக் கொள்ளுங்கள் - எப்பவும் நீங்க ஃப்ரெஷ்ஷா எனெர்ஜிடிக்கா இருக்கற மாதிரிப் பாத்துக்கோங்க. அழுது வடிஞ்சுட்டு, தூங்கிட்டு வழிஞ்சிட்டு இருந்தா ஏற்கனவே எதாவது டென்ஷன்ல வந்திருந்தார்னா உங்களைப் பாத்தா இன்னும்தான் எரிச்சலா வரும். சோ எப்பவும் ஃப்ரிட்ஜுக்குள்ள வச்ச ஆப்பிளாட்டம்ம் ஃப்ரெஷ்ஷா இருங்க.
பிடித்ததை செய்யுங்கள் - அவருக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ், ஜுவெல்ஸ், மேக்-அப்னு பண்ணிக்கங்க. அவருக்கு லைட் கலர் பிடிக்கும்னா எனக்கு டார்க் கலர்தான் பிடிக்கும்னு மல்லுக்கு நிக்காதீங்க. அவர் சொல்ற ட்ரெஸ்ஸை செலெக்ட் பண்ணுங்க. அப்புறம் பிற்காலத்துல ஒரு மணி நேரம் என்ன ஒரு நாள் முழுசும் கூட உங்களோட துணிக்கடைல ஸ்பெண்ட் பண்ண வந்துடுவாரு.
யோசித்துப் பேசுங்கள் - மொதல்ல கொஞ்ச நாளுக்கு எதைப் பேசறதுனாலும் கொஞ்சம் இல்ல நல்லாவே யோசிச்சுப் பேசுங்க. ஏனா எதுக்கு அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார்னு உங்களுக்கு முழுசாத் தெரியாது. நாளாக நாளாக அவரோடப் பழக்க வழக்கங்கள் உங்களுக்குப் பழகிடுச்சுனா அப்புறம் எல்லாம் இயல்பாயிடும்.
புரிந்துக் கொள்ளுங்கள் - அவரோட நடவடிக்கைகள், முக பாவனைகள் வச்சு ஓரளவு புரிஞ்சுக்க முயற்சிப் பண்ணுங்க. இப்போ அவர் தலைவலியோட வீட்டுக்கு வரார்னா கேக்கறதுக்கு முன்னாடி காபிப் போட்டுக் குடுங்க. கோபமா இருக்கார்னுத் தெரிஞ்சா எதும் பேச ஆரம்பிக்காம அமைதியா இருங்க. நம்மளப் புரிஞ்சிட்டு நடந்துக்கறானு உங்க மேல பாசம் பிச்சிக்கிட்டு வரும்.
--------------------------------------ooOoo--------------------------------------
பி.கு: இதையெல்லாம் ஒரு வருஷத்துக்குள்ள சக்சஸ்ஃபுல்லா செஞ்சு அவர் அன்பை பெற்று விட்டீர்களானால் காலத்துக்கும் நாய்க்குட்டி மாதிரி உங்களையே சுத்தி சுத்தி வருவார் ;)))
என்னங்க அதுக்குள்ள என்னை டாக்டர்.இம்சை அரசி-ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டிங்க??? ஹி... ஹி... இன்னும் நிறைய இருக்கு. அப்பப்போ ஆராய்ச்சிக் கட்டுரைய சப்மிட் பண்றேன் ;)))
48 comments:
no comments {தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்}
ஆஹா செம ஆச்சர்யம். உங்களுக்கும் என் மனைவிக்கும் முன்பே பழக்கமா? சொல்லிக்கொடுத்ததெல்லாம் நீங்கதானா?கிட்டதட்ட இதுல முக்கால்வாசி மேட்டர கரெக்ட்டா பண்றா.
நான் நாய்குட்டி ஆனதுக்கு மொத்த காரணமும் நீங்கதானா?
//அதாவது கல்யாணமாகி ரெண்டு மூணு வருஷம் வரைக்கும் அவங்க ரொம்ப அன்னியோன்யமா இருக்கறதால அவ்வளவா பிரச்சினை வராது. வந்தாலும் ரொம்ப பெருசா தெரியாது. //
அப்படியா? சரியா இன்னையோட எங்களுக்கு மூணு வருசம் ஆச்சு. அப்போ இனி குடுமிபிடி சண்டைதானா?
இத டாக்டர் இம்சைஅரசி சொல்றதாலதான் கேக்கரேன் :(
யக்கா எப்படி இப்படி எல்லாம்.grass itching..
மனைவியின் கோபத்த சம்பாதிக்காம இருக்க கணவாஸ் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு விஷயம் தான் - 'எது நடந்தாலும், வாயத் திறக்கவே கூடாது'
அய்யய்யோ!! இதை சில வருடங்களுக்கு முன்னாடியே போட்டிருந்தீங்கன்னா, நான் இப்போது நிம்மதியாக இருந்திருப்பேனே....:-(
//அப்புறம் போகப் போக உங்களைக் கேக்காம எதும் செய்யாத அளவுக்கு வந்துடுவாங்க.//
ஆக முதலில் அமைதியாக இருப்பது போல் நடிப்பது வசமாக சிக்க வைக்க... அப்படிதானே!!!
me the first.nalla sonninga.nerayave araichi seithutinga. dressing tip long runla nallave work out akum.ennaku appadithan.
-isthri potti thangamani
//புரிந்துக் கொள்ளுங்கள் - அவரோட நடவடிக்கைகள், முக பாவனைகள் வச்சு ஓரளவு புரிஞ்சுக்க முயற்சிப் பண்ணுங்க. இப்போ அவர் தலைவலியோட வீட்டுக்கு வரார்னா கேக்கறதுக்கு முன்னாடி காபிப் போட்டுக் குடுங்க. ///
காப்பிய குடிச்ச பிறகு வயிற்று வலி வருமே அதுக்கு என்ன செய்வது!!!
//நீங்க செஞ்ச சாப்பாடும் அமிர்தமா மாறிடும். எதும் சொல்லாம சாப்பிடுவார்.//
அமிர்தம் வரும் முன்பு நஞ்சு வந்தது என்று சொல்வாங்களே அப்ப அது எது?
//பிடித்ததை செய்யுங்கள் - அவருக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ், ஜுவெல்ஸ், மேக்-அப்னு பண்ணிக்கங்க//
உசாராதான் இருக்கீங்க!!!:) முகத்த கழுவி ஒரு பொட்டு வெச்சு இருக்கும் பொழுது இருக்கும் அழகு வேறு எதிலும் இருக்காதுன்னு சொன்ன அதன் பிறகு ஜூவெல்லே கேட்கமாட்டீங்களா?
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.
ஆனாலும் கனவாஸ் புரிஞ்சுக்கனும். அது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப முக்கியம்.
//காப்பிய குடிச்ச பிறகு வயிற்று வலி வருமே அதுக்கு என்ன செய்வது!!!//
வயிற்றுவலிக்கு மருந்து சாப்பிடுங்க குசும்பன். வேனும்னா மனைவியை சுக்கு காபி போட்டு கொடுக்கச் சொல்லுங்க.
:)))))))))))))
//Veerasundar said...
மனைவியின் கோபத்த சம்பாதிக்காம இருக்க கணவாஸ் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு விஷயம் தான் - 'எது நடந்தாலும், வாயத் திறக்கவே கூடாது'//
ஆம்லேட் கேட்டாலும் கத்தியால குத்துறாங்கப்பா...அப்புறம் குத்தினாலும் வாய திறந்து கத்த கூடாதா?
//அமிர்தம் வரும் முன்பு நஞ்சு வந்தது என்று சொல்வாங்களே அப்ப அது எது?//
திருமணத்திற்கு முன்பு வரை தானே சமைப்பதாக சொல்லிகிட்டு செஞ்சு சாப்பிடுறீங்களே அதுவா கூட இருக்கலாம்.
நந்து f/o நிலா said...
//நான் நாய்குட்டி ஆனதுக்கு மொத்த காரணமும் நீங்கதானா?//
திடீர் என்று எல்லாம் மாத்த முடியாது...:)))
//முகத்த கழுவி ஒரு பொட்டு வெச்சு இருக்கும் பொழுது இருக்கும் அழகு வேறு எதிலும் இருக்காதுன்னு சொன்ன அதன் பிறகு ஜூவெல்லே கேட்கமாட்டீங்களா?//
அப்படி அழகா இருக்கும் போது அழகுக்கு அழகு சேர்க்க நகை. பொறுங்க இன்னும் 3 மாசம் தானே? நாங்க சொல்லாமலே விளங்கும்.
//அப்படி அழகா இருக்கும் போது அழகுக்கு அழகு சேர்க்க நகை. பொறுங்க இன்னும் 3 மாசம் தானே? நாங்க சொல்லாமலே விளங்கும்.//
யக்கோவ் இது மிரட்டல் மாதிரில்ல இருக்கு:))
ச்சின்னப் பையன் said...
அய்யய்யோ!! இதை சில வருடங்களுக்கு முன்னாடியே போட்டிருந்தீங்கன்னா, நான் இப்போது நிம்மதியாக இருந்திருப்பேனே....:-(//
கண் கெட்டபிறகு சூர்யநமஸ்காரம்:))
இதை படித்து எல்லாம் பெண்கள் மாறிடுவாங்களா... என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு:)))
மிரட்டல குசும்பன்,
காஞ்சாலும் காயும், பேஞ்சாலும் பேயும்னு மழைக்கு ஒரு பாட்டு பாடுவாங்க. அதுமாதிரி நடக்கலாம்னு சொன்ன்னே. அவ்வளவுதான்.
அழப்ப்டாது!!!!!!!!!!!!
//இந்த கட்டுரை முழுக்க முழுக்க திருமணமாகி ஓராண்டுக்குள் இருப்பவர்களுக்காகவும், இனித் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறவர்களுக்காகவும் முக்கியமாய் பெண்களுக்காக மட்டும். //
ஏன்னா அந்த ஸ்டேஜை தாண்டிட்டா ஆண்டவன் வந்து சொன்னா கூட அவுங்கள மாத்த முடியாது... அதுக்காகதானே இந்த டைம் லிமிட் கொடுத்து இருக்கீங்க:)
//ஒரு நாலைஞ்சு வர்ஷம் ஆகி இருக்கறப் பொண்ணுங்கள்ட்ட கேட்டா நிறையப் பிரச்சினைகள் சொல்வாங்கனு சொன்னார். //
இதே புருசனுங்க கிட்ட கேட்டே சொல்லும் ஒரே பதில் ஒரே ஒரு பிரச்சினைதான் என்று சொல்லுவாங்க ஏன்னா அவுங்க எல்லாம் ஜென்டில் மேன்..
என்னா அந்த ஒரே ஒரு பிரச்சினை என்பதை நான் சொல்லிதான் தெரியனுமா...... ஹி ஹி ஹி.
ஏன்னா அந்த ஸ்டேஜை தாண்டிட்டா ஆண்டவன் வந்து சொன்னா கூட அவுங்கள மாத்த முடியாது...//
நீங்க அந்த டயலாக்கை சொல்லிட்டா, அது உங்கள்துன்னு ஆயிடுமா. பெண்கள் சொல்லவேண்டிய டயலாக்.
"கொஞ்ச நாளைக்கு பல்லைக் கடிச்சுகிட்டு இருங்க"
"அப்புறம்"
"அப்புறம் பல்லைக் கடிச்சுக்க பழகிடுவீங்கன்னு" சொல்வாங்களே அதுமாதிரி, பெணகள் பழகிக்கிடுவாங்க. வேற என்ன செய்ய?
குசும்பரே பின்றீங்க.
me no the commentu.. me the S
//என்னைப் பற்றி
ச்சின்னப் பையன்
எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஜென்மம் - இது தங்கமணியின் அருள்வாக்கு ///
ச்சின்னப் பையன் மேலே இருப்பது உங்க பதிவில் இருந்து எடுத்தது....
இது நீங்க இந்த பதிவில் போட்ட பின்னூட்டம்
//ச்சின்னப் பையன் said...
அய்யய்யோ!! இதை சில வருடங்களுக்கு முன்னாடியே போட்டிருந்தீங்கன்னா, நான் இப்போது நிம்மதியாக இருந்திருப்பேனே....:-(///
கொஞ்சம் அருள்வாக்கை மாத்தி சாமியாட வெச்சுடலாமா?:))))
ஐடியா எல்லாம் நல்லா தான் இருக்கு. :)
ஆனா // jayaradha said...
no comments {தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்}// இந்த பின்னூட்டம் தான் உண்மையா தெரியுது.
ஆண் == நாய்க்குட்டியா????
இத வன்மயா கன்டிக்கிறோம்......
நந்து f/o நிலா said...
//நான் நாய்குட்டி ஆனதுக்கு மொத்த காரணமும் நீங்கதானா?//
திடீர் என்று எல்லாம் மாத்த முடியாது...:)))
avv.....
பயனுள்ள பதிவு. நன்றி அக்கா
நட்போடு
நிவிஷா
தலைப்பு தப்பா வச்சிட்டீங்க. "கணவனை கைக்குள் போட்டுகொல்வது (ஆமா, கொல்வதுதான்) எப்படி?"ன்னு தலப்பு வச்சிருக்கணும்.
<==
குசும்பன் said...
//இந்த கட்டுரை முழுக்க முழுக்க திருமணமாகி ஓராண்டுக்குள் இருப்பவர்களுக்காகவும், இனித் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறவர்களுக்காகவும் முக்கியமாய் பெண்களுக்காக மட்டும். //
ஏன்னா அந்த ஸ்டேஜை தாண்டிட்டா ஆண்டவன் வந்து சொன்னா கூட அவுங்கள மாத்த முடியாது... அதுக்காகதானே இந்த டைம் லிமிட் கொடுத்து இருக்கீங்க:)
==>
கரீக்டு. கரீக்டு
<==
புதுகைத் தென்றல் said...
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.
ஆனாலும் கனவாஸ் புரிஞ்சுக்கனும். அது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப முக்கியம்.
==>
எத, கல்யாணம் பண்ணதும் கஷ்டமும் கூடவே வரும்கரதயா?
//குசும்பன் said...
//Veerasundar said...
மனைவியின் கோபத்த சம்பாதிக்காம இருக்க கணவாஸ் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு விஷயம் தான் - 'எது நடந்தாலும், வாயத் திறக்கவே கூடாது'//
ஆம்லேட் கேட்டாலும் கத்தியால குத்துறாங்கப்பா...அப்புறம் குத்தினாலும் வாய திறந்து கத்த கூடாதா?//
அட்டகாசம் குசும்பா.... சத்தம் போட்டு சிரிச்சேன்... :)
//குசும்பன் said...
//Veerasundar said...
மனைவியின் கோபத்த சம்பாதிக்காம இருக்க கணவாஸ் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு விஷயம் தான் - 'எது நடந்தாலும், வாயத் திறக்கவே கூடாது'//
ஆம்லேட் கேட்டாலும் கத்தியால குத்துறாங்கப்பா...அப்புறம் குத்தினாலும் வாய திறந்து கத்த கூடாதா?//
முதல்ல வாய பொத்திவிட்டு அப்புறம் கத்தியால குத்துனா எப்படி கத்தமுடியும்.
வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!
குசும்பா அதுக்குள்ள கும்மி முடிஞ்சிடிச்சாஆஆஆஆஆ
//
நந்து f/o நிலா said...
அப்படியா? சரியா இன்னையோட எங்களுக்கு மூணு வருசம் ஆச்சு. அப்போ இனி குடுமிபிடி சண்டைதானா?
//
நீங்க சொன்னதுக்கப்புறம்தான் டாக்டர் பட்டம் குடுக்கிறதா இல்லையாண்ணு முடிவு பண்ணனும்!!
//
குசும்பன் said...
//அப்புறம் போகப் போக உங்களைக் கேக்காம எதும் செய்யாத அளவுக்கு வந்துடுவாங்க.//
ஆக முதலில் அமைதியாக இருப்பது போல் நடிப்பது வசமாக சிக்க வைக்க... அப்படிதானே!!!
//
காப்பிய குடிச்ச பிறகு வயிற்று வலி வருமே அதுக்கு என்ன செய்வது!!!
//
ஆம்லேட் கேட்டாலும் கத்தியால குத்துறாங்கப்பா...அப்புறம் குத்தினாலும் வாய திறந்து கத்த கூடாதா?
//
இதை படித்து எல்லாம் பெண்கள் மாறிடுவாங்களா... என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு:)))
//
//இந்த கட்டுரை முழுக்க முழுக்க திருமணமாகி ஓராண்டுக்குள் இருப்பவர்களுக்காகவும், இனித் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறவர்களுக்காகவும் முக்கியமாய் பெண்களுக்காக மட்டும். //
ஏன்னா அந்த ஸ்டேஜை தாண்டிட்டா ஆண்டவன் வந்து சொன்னா கூட அவுங்கள மாத்த முடியாது... அதுக்காகதானே இந்த டைம் லிமிட் கொடுத்து இருக்கீங்க:)
//
ROTFL
:)))))))))))))
//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
தலைப்பு தப்பா வச்சிட்டீங்க. "கணவனை கைக்குள் போட்டுகொல்வது (ஆமா, கொல்வதுதான்) எப்படி?"ன்னு தலப்பு வச்சிருக்கணும்.
//
அண்ணே ஏண்ணே!!
நீங்க இப்பிடி கமெண்ட்டெல்லாம் போடறது அண்ணிக்கு தெரியுமா??
நான் சொல்லி ஒரு ஆண் பாவத்துக்கு ஆளாக மாட்டேன்.
//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
<==
புதுகைத் தென்றல் said...
நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.
ஆனாலும் கனவாஸ் புரிஞ்சுக்கனும். அது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப முக்கியம்.
==>
எத, கல்யாணம் பண்ணதும் கஷ்டமும் கூடவே வரும்கரதயா?
//
அவ்வ்வ்
ரொம்பா பயமுறுத்தறீங்க ச்சின்ன பசங்களை :(
குசும்பன் said...
//ஒரு நாலைஞ்சு வர்ஷம் ஆகி இருக்கறப் பொண்ணுங்கள்ட்ட கேட்டா நிறையப் பிரச்சினைகள் சொல்வாங்கனு சொன்னார். //
இதே புருசனுங்க கிட்ட கேட்டே சொல்லும் ஒரே பதில் ஒரே ஒரு பிரச்சினைதான் என்று சொல்லுவாங்க ஏன்னா அவுங்க எல்லாம் ஜென்டில் மேன்..
என்னா அந்த ஒரே ஒரு பிரச்சினை என்பதை நான் சொல்லிதான் தெரியனுமா...... ஹி ஹி ஹி.///
100% ture, For me also wife only problem!!!
என்னா மகளிர்க்கு மட்டுமா இந்தப் பதிவு....??? மகளிரைத்தவிர அல்லாருமே படிக்கிறாக போல இருக்கே இம்சை :))))
Atention plzz மகளிர்ஸ்....
நீங்களே சொல்லிட்டதாலே நான் ஒரு ஓரமா நின்னு பார்த்துக்கறேன் சரியா ..???
Nice Post Imsai!!
இது ஏதோ பெண்கள் மேட்டர்ன்னு சொன்னதால, உள்ளே வரலைன்னாலும் வெளியிலருந்தே ஆதரவு தர்ரேன்.(ஒரு பிரிண்ட்டு எடுத்துக்கனும்,எதிர்காலத்துல உபயோகப்படும், வர்ரவங்க கண்ணுல படுற மாதிரி வைக்கலாம்ல்ல.. ஹிஹி:)))
கலக்கிட்டிங்க இம்சை.. நன்றிகள்.. ஆண்களுக்கு சப்போர்ட் பண்ணுனதுக்கு:)
உண்மையிலேயே இம்சையோட மனதில் இருந்த தலைப்பு இதுதான்
" கணவனை நாய்குட்டி
ஆக்குவது எப்படி?? "
//
Anonymous said...
உண்மையிலேயே இம்சையோட மனதில் இருந்த தலைப்பு இதுதான்
" கணவனை நாய்குட்டி
ஆக்குவது எப்படி?? "
//
அனானி ஃபுல் பார்ம்ல இருக்கீங்க போல !!!!
::-)))))))))))
நீங்க என்னதான் ஐஸ் வச்சாலும்,
எங்களை அசைக்க முடியாது.
புரிஞ்சிக்கோ?
நான் ட்ரைப்பண்றேன்
நான் ட்ரைப்பண்றேன்
Post a Comment