Wednesday, March 28, 2007

சமையலரசி ஆனது எப்படி?

"எருமை மாடு மாதிரி வளர்ந்துட்டே போனா போதாது. பொண்ணுன்னா சமைக்க தெரிஞ்சிருக்கனும்" இப்படி திட்டியது நான் குடியிருந்த கோவில். திட்டினது சாட்சாத் என்னையேதான். இது நடந்தது என்னோட 7வது முழு ஆண்டு தேர்வு லீவுல. ஹி... ஹி... இதெல்லாம் என்னைக்கு நமக்கு உறைச்சிருக்கு. அப்படியே தூச தட்டற மாதிரி தட்டி விட்டுட்டு காதுலயே விழாத மாதிரி TVய வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தேன்.

"நான் சொல்லிட்டே இருக்கேன். காதுல ஏறுதா பாரு. நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போனா மாமியார் உன்னை திட்ட மாட்டாங்க. பொண்ண லட்சணமா வளத்து வச்சிருக்கா பாருன்னு என்னைதான் திட்டுவாங்க" என்று கொஞ்சம் சத்தம் ஜாஸ்தியானதும் என்னால் சந்தோஷம் தாங்க முடியலை. அப்பாடா. எப்படியோ திட்டு வாங்கப் போறது அம்மாதான். நம்மளை ஒண்ணும் சொல்ல மாட்டாங்கன்ற மிதப்புல அசையாம இருந்தேன்.

நேரம் ஆக ஆக திட்டும் அதிகமாயிட்டே இருக்க ஒரு கட்டத்துல பொறுக்க முடியாம எழுந்துப் போயி

"இப்போ என்னதாம்மா பண்ணனும்?"ன்னு அப்படியே கோவத்த காட்டினேன். இதுக்கெல்லாம் அசர ஆளா அம்மா???

"இந்த லீவுல ஒழுங்கா சமையலை கத்துக்கோ" அப்படியே முறைப்பாய் நான் ஒரு லுக் விட

"இந்த முறைக்கிற வேலையெல்லாம் வேணாம். போயி கிச்சன்ல கீரை இருக்கும். எடுத்து பொரியல் பண்ணு. அப்பா சாப்பிட வரதுக்குள்ள சீக்கிரம் செய்யணும்" இப்படி ஆர்டர் போட்டதும்தான் நினைச்சேன். ஆமா நாம ஏன் சமையல் கத்துக்கிட்டு சிறந்த சமையல் மாமணி விருத வாங்கக் கூடாதுன்னு. நமக்குதான் எதையாவது புதுசா கத்துக்கறதுன்னா ரொம்ப பிடிக்குமே.

"சரி எப்படி செய்யணும்?" னு நான் கேட்டதும் அம்மாவுக்கு ஒரே சந்தோஷம்.

"கீரைய எடுத்து நல்லா பொடியா நறுக்கிக்கோ. பர்ஸ்ட்டே கழுவத் தேவையில்ல. அப்புறம் வெங்காயம் வெட்டி வச்சுக்கோ. இந்த வேலைய முடிச்சுட்டு வா. மீதிய சொல்றேன்"

வேக வேகமா போய் கீரைய எடுத்து நல்லா பொடிசா நறுக்க ஆரம்பிச்சேன். 'ஆஹா! உங்கம்மா செய்யறத விட சூப்பரா இருக்குங்கப்பா' அப்படின்னு எங்கப்பா சொல்லப் போற(?) வசனம் என் காதுல ஒலிச்சிட்டே இருந்தது. அம்மா சொன்னதெல்லாம் செஞ்சுட்டு அப்புறம் எப்படி செய்யணும்னு போயிக் கேட்டேன்.

"கொஞ்சமா எண்ணெய் ஊத்தி காஞ்சதும் கடுகு போட்டு அது பொரிஞ்சதும் கருவேப்பில, வெங்காயம், வரமிளகா எல்லாம் போட்டு நல்லா வனங்க விடணும். கீரைய தண்ணில போட்டு நல்லா அலசி அதையும் போட்டு உப்பு கொஞ்சம் போட்டு கொஞ்ச நேரம் தட்டு வச்சு மூடி வச்சிடணும். அப்போ கொஞ்சம் தேங்காயத் திருவி வச்சுக்கோ. கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்து சாப்பிட்டுப் பாத்து வெந்திருந்தா தேங்காயை போட்டு ஒரு கிளறு கிளறிட்டு இறக்கி வச்சிடணும்" அதுவரைக்கும் TVய சைடுல பாத்து அப்பப்ப அம்மா சொல்றத காதுல கேட்டு multitasking பண்ணிட்டு இருந்த நான் வேக வேகமா

"சரிம்மா. சரிம்மா" ன்னு சொல்லிட்டு வேகமா கிச்சன்க்குள்ள நுழைஞ்சேன். அந்த நல்லா வனங்க விடணும் வரைக்கும் பர்பெக்டா செஞ்சுட்டேன். அதுக்கபுறம் பாருங்க நம்ம அரைகுறை cut & paste பழக்கத்தால 'கீரைய தண்ணில போட்டு நல்லா அலசி'ன்றத cut பண்ணி நம்ம மூளைல paste பண்ண மறந்துட்டேன். அப்படியே போட்டு நல்லா வனங்குனதுக்கு அப்புறம்தான் ஞாபகமே வந்தது. வேகமா அம்மாட்ட ஓடி விஷயத்த சொல்லி என்ன பண்றதுன்னு கேட்டதும் அர்ச்சனை ஆரம்பிச்சது பாருங்க...... அம்மாடியோவ்.... இனி சமையல் பண்ணும் போது எதாவது தப்பு பண்ணினா அதை யார்கிட்டயும் சொல்லக் கூடாதுனு முடிவுக்கு வந்தேன். 'அலசினேன். அப்பயும் இப்படியேதான் இருக்கு. நீங்க வாங்கிட்டு வந்த கீரை சரியில்ல'ன்னு சொல்லத் தெரியாத அளவுக்கு எவ்ளோ அப்பாவியா இருந்திருக்கேன் பாருங்கப்பு.

அதுக்கப்புறம் அந்த திட்டையெல்லாம் சமாளிச்சு ஓடிப் போயி வெந்துட்டு இருந்த கீரைய எடுத்து தண்ணில போட்டு அலசி மறுபடியும் வாணலில போட்டு வதக்கி இதை பண்ணினதுக்கு மறுபடியும் திட்டு வாங்கி எல்லாம் போராட்டமும் முடிஞ்சு இறக்கி வச்சதுக்கு அப்புறம் கொஞ்சம் எடுத்து வாயிலப் போட்டா..... த்தூ..... த்தூ..... ஒரே மண்ணு. எதும் பேசாம அப்படியே வச்சுட்டு பெட் ரூம்ல போயி படுத்துக்கிட்டேன்.

எங்கப்பா வந்ததும் எங்கம்மா "உங்க அருமை மக பொரியல் செஞ்ச லட்சணத்த சாப்பிட்டு பாருங்க"னு சொல்லிட்டே அப்பாவுக்கு பொரியல் வச்சதும் எனக்கு ஒரே கடுப்பு. அதுதான் கேவலமா இருக்கே. அதை ஏன் அவருக்கு வைக்கணும். ஏன் இந்த கொல வெறின்னு நினைச்சுக்கிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு அப்பா கூப்பிட்டார். எப்படியும் எங்கப்பா என்னை திட்ட மாட்டார். அந்த தைரியத்துல அப்படியே சோகமா மொகத்த வச்சுக்கிட்டு எழுந்துப் போனேன்.

"சமையல் செய்ய கத்துக்க ஆரம்பிச்சிட்டிங்களா?" அப்படின்னதும் எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. என் கண்ணு முன்னாடியே அந்த பொரியலை எடுத்து சாப்பிட்டு

"சூப்பரா இருக்குப்பா. ஸ்டார்டிங்ல சின்ன சின்ன தப்பு வரதான் செய்யும். அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது. செய்ய செய்ய சரியாயிடும். சரியா"-ன்னு அவர் சொல்லி தட்டுல இருந்த கீரைய மீதி வைக்காம சாப்பிட்டத பாத்ததும் இனி சூப்பரா சமையல் கத்துக்கிட்டு அப்பாவுக்கு வித விதமா செஞ்சு போடணும்னு முடிவு பண்ணினேன். அதுல இருந்து ஒழுங்கா கத்துக்க ஆரம்பிச்சேன். ரொம்ப இல்லாட்டியும் ஓரளவு நல்லாவே செய்வேன். யாராவது புதுசா சமையல் குறிப்பு சொன்னா அதை கேட்டு செஞ்சு பாப்பேன். எங்க அப்பாவுக்கு எதாவது புதுசு புதுசா செஞ்சு தருவேன். இது வரைக்கும் எவ்வளவோ கேவலமா நான் செஞ்சிருந்தாலும் எங்கப்பா சூப்பரா இருக்குங்கப்பான்னு சொல்லி விரும்பி சாப்பிடுவார்.

இந்த விஷயம் மட்டும் இல்ல. எந்த விஷ்யம்னாலும் என்னை ஊக்கப்படுத்தறது எங்கப்பாதான். எதாவது தோல்வினு உடைஞ்சுப் போனாக் கூட என்னை சரி செய்யறதும் அவர்தான். என்னோட ஃபர்ஸ்ட் and பெஸ்ட் ஃப்ரெண்ட். எங்கேயாவது சின்னப் பொண்ணுங்க அவங்க அப்பா கை பிடிச்சு நடக்கறதப் பாத்தாக் கூட எனக்கு ஏக்கம் வந்துடும். எப்பவுமே இப்படியே ஒரு குட்டிப் பாப்பாவா எங்கப்பா கையப் பிடிச்சுட்டே இருக்கணும்னு. அபி அப்பாவோட அபி பத்தின போஸ்ட் படிக்கும்போதெல்லாம் எனக்கு அப்பாவ பாக்கணும் போல இருக்கும். உடனே ஃபோன் பண்ணி பேசிடுவேன்.

ஓகே இம்சை.................... ஸ்டாப் யுவர் சென்டின்னு நீங்க கத்தறது எனக்கு கேக்குது. ஹ்ம்ம்ம்ம்....... அப்பாவப் பத்தி நினைச்சாலே ரொம்ப சென்டியாயிடறேன்.

அப்புறம் அப்பு... எனக்கு தோசை சுடத் தெரியாதுன்னு நான் வேணாங்க வேணாங்கன்னு ஓட்டி ஓட்டியே என்னை அவ்வ்வ்வ்வ்...... அழ வச்ச அத்தனை பேருக்கும் சமர்ப்பணம்பா.............

Thursday, March 22, 2007

Multi tasking கண்டுபிடித்தது இந்தியர்களா!!!

ஒரே நேரத்துல பல வேலை செய்யறது..... அதான் அப்பு multitasking. இதை காலேஜ்ல operating system பேப்பர்ல வச்சு அழுதுக்கிட்டு இருந்தேன். இதனாலதான் கம்ப்யூட்டரோட மவுசே(அட அந்த எலிக்குட்டி இல்லப்பா) அதிகமாச்சாம். எப்படிதான் இப்படியெல்லாம் கண்டுபிக்கிறாங்களோ..... எவ்ளோ அறிவு...... ஏன் நமக்கெல்லாம் இப்படி தோண மாட்டேன்றதுனு நிறைய தடவை நினைச்சிருக்கேன். இன்னைக்கு வந்த ஒரு மெயிலப் பாத்ததும் என் ரத்தமே கொதிச்சுப் போயிடுச்சு. உண்மையதான் சொல்லுறேன். இந்த அரிய விஷயத்த கண்டுபிடிச்சதே நம்ம இந்தியர்கள்தானு ஆதாரத்தோட ப்ரூஃப் பண்ணியிருக்காங்க. இத்தனை நாளா யாரோ கண்டுபிடிச்சதுனு நினைச்சுட்டு இருந்தா...... கண்டுபிடிச்சது யாரோ..... பேர் வாங்கிட்டு போனது யாரோ........ இதை கேக்கும்போது உங்க முகம் கோவத்துல செவக்கறது நல்லாவே தெரியுது. இந்த ஆதாரத்தப் பாருங்க. உங்க ரத்தமும் கொதிக்கும். அல்லாரும் சேர்ந்து இந்த கொடுமைய எதிர்த்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம். சரியா??? சரி என்ன வழ வழன்னு பேசிட்டு. கீழப் பாருங்க........
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;
;;

Wednesday, March 21, 2007

விசித்திர ஆராய்ச்சி

உங்க 5 விசித்திர குணம் பத்தி எழுதணும்னு ஜி என்னை மாட்டி விட்டதும்தான் தோணுச்சு. அப்படி என்னடா நம்மகிட்ட விசித்திர குணம் இருக்குனு. ஆஹா! இது ஒரு நாள்ல கண்டுபிடிக்கிற விஷயமா? பெரிய ஆராய்ச்சி பண்ணியில்ல கண்டுபிடிக்கணும்னு நானும் ரெண்டு நாளா விழுந்து விழுந்து ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சா அது பாட்டுக்கு லிஸ்ட் நீளமா போயிட்டே இருக்கு. ஹி... ஹி... நம்மள பொறுத்த வரைக்கும் நாமளே விசித்திரம்தான். அதனால சாப்பிடறது தூங்கறதுனெல்லாம் எழுதாம வடிக்கட்டி 5-ஐ தேடி பிடிக்கனும்னு எங்க வீட்டு டீ வடிகட்டிய சுட்டுட்டு வந்து வடிகட்டி கீழ லிஸ்ட் போட்டிருக்கேன் (டீ வடிகட்டியை காணவில்லைனு இன்னைக்கு வந்த விளம்பரத்த பாத்தவங்க அதை தயவு செய்து மறந்து விடுங்கள். இந்த பச்ச புள்ளய போட்டுட்றாதீங்க. புண்ணியமா போகும்). இனி சித்திரம்... ச்சே...... விசித்திரம்......

1. எழுத்து - எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து புத்தகம்னா பைத்தியமா இருந்திருக்கேன். கையில புக் கிடைச்சா சுத்தி என்ன நடக்குதுனு கூடத் தெரியாது. அப்படி ஆயிடுவேன். நாம அப்படி எழுதி அதனால அட்லீஸ்ட் சிலராவது சுத்தி இருக்கறத மறக்கற அளவுக்கு ஒரு பெரிய எழுத்தாளராகனும்னு கனவு. அதனால படிக்கும்போதே நாவல் எழுதி அதுல 2 நாவல் தேவியின் கண்மணில வெளி வந்துச்சு. ஜர்னலிஸ்ட் ஆகனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். தாய்க்குலம் தடா போட்டுட்டாங்க. அதுக்கப்புறம் படிப்பு, வேலைனு அதை விட்டு வெளில வந்துட்டேன். :( இப்ப உட்கார்ந்தா கூட என்னால எழுத முடியும்னு நம்பிக்கை இருக்கு. ஆனா நேரம்தான் கிடைக்க மாட்டேன்றது. எல்லாம் என்னை விட்டுப் போயிடுச்சுனு நினைச்சு ஏங்கினப்பதான் வலையுலக அறிமுகம். இங்க ஜாலியா என் பாட்டுக்கு எல்லாரையும் இம்சை பண்ணிட்டு பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன் ;)

2. Taste - அது என்னமோ என்னோட டேஸ்ட் மத்த எல்லார்கிட்ட இருந்தும் மாறுபட்டு இருக்கும். எல்லாரும் ஒண்ணை பிடிக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு அது பிடிக்காது. மத்தவங்களுக்கு பிடிக்கலைனா அத எனக்கு பிடிக்கும். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் coffee விரும்பி குடிக்கும்போது நான் மட்டும் coffee bean-ஐ விரும்பி சாப்பிடுவேன். அப்படி போடு பாட்டுல அவங்க த்ரிஷா புடவைல அழகா இருக்கிறானு சொன்னப்ப எனக்கு மட்டும் ஏனோ அந்த கருப்பு ட்ரஸ்லதான் ரொம்ப பிடிச்சது. இப்படி நிறைய சொல்லிட்டேப் போகலாம்.

3. ஓவரா திங்க் பண்றது - யாராவது எதாவது சொன்னா இதனால சொன்னாங்களோ இதனால சொன்னாங்களோன்னு எல்லா possibilitiesம் யோசிப்பேன். அப்புறம் அவங்க சொன்ன விதம், சூழ்நிலை இதெல்லாம் வச்சு இதனாலதான் ஒரு முடிவுக்கு வருவேன். அது maximum கரெக்டாதான் இருக்கும். இதனால நிறையப் பேர் என்கிட்ட அவங்க பிரச்சினை சொல்லி suggestion கேட்டிருக்காங்க.

4. ஆர்வம் - புதுசா எதையாவது கத்துக்கனும்னு ரொம்ப ஆர்வம் இருக்கும். எதுவும் தெரியாதுனு சொல்லப் பிடிக்காது. அட்லீஸ்ட் இந்த அளவுக்காவது தெரியும்னு சொல்லனும்னு நினைப்பேன். அதே மாதிரி எந்த விஷயம் செஞ்சாலும் தனியா தெரியனும்னு நினைப்பேன்.

5. தோல்வியில் துவளும் மனது - எனக்கு தோல்விய ஏத்துக்கவே முடியாது. நான் மாத்தியே ஆகனும்னு நினைக்கற விஷயம் இது. என்னால மாத்திக்க முடியலை. ஒரு போட்டில கலந்துக்கிட்டா கண்டிப்பா ஜெயிப்பேனு தெரிஞ்சாதான் கலந்துக்குவேன். இல்லைனா அந்த பக்கமே எட்டிக் கூட பாக்க மாட்டேன். காலேஜ்ல நான் கலந்துக்கிட்டது 5 competitionலதான். 4 தடவை chess. ஒரு கவிதை போட்டி. கவிதைல 1st. my badluck 4 தடவையுமே chessல runnerதான்.

இப்ப நம்ம நேரம். யாரையாவது மாட்டி விடனும் இல்ல............

யாராவது ஏற்கனவே மாட்டியிருந்தா விட்டுடுங்கப்பு........... :)))

Thursday, March 15, 2007

வலி - III

"உன் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?" கேட்ட துர்காவை வித்தியாசமாய் பார்த்த மனோ

"தெரியாது" என்றான்.

"இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கறது இல்லயா?" என்று அவள் செல்லமாய் குறை சொல்லவும்

"தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போறேன்" என்று சலித்துக் கொண்டு கூறினான்.

"எனக்கு இதுல எல்லாம் ரொம்ப இண்ட்ரெஸ்ட். நான் சின்ன வயசுல சக்திய பத்தி ஒரு புக்ல படிச்சேன். அப்ப ரொம்ப ஃபீல் பண்ணினேன். எனக்கு சக்தினு பேர் வைக்கலையேன்னு. அப்புறம்தான் தெரிஞ்சது. சக்தியோட இன்னொரு பேர்தான் துர்கான்னு. தெரிஞ்சப்ப எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா?? இப்பவெல்லாம் எனக்கு ரொம்ப பெருமை. துர்கானு பேர் இருக்கறதுக்கு" என்று பெருமையாய் சொன்னாள். அதை கேட்டு ஆச்சர்யப்பட்டவன்

"பேர்ல எல்லாம் கூட இவ்ளோ விஷயம் இருக்கா?!! அப்படி என்னதான் சக்தியப் பத்திப் படிச்ச?" என்றான் ஆர்வமாய்.

"அதுவா. சிவனோட ஒரு பாதிதான் சக்தி. அது உலகத்தையே ஆட்டி வைக்கிறது. எரிசக்தி, அணுசக்தி, மின்சக்தினுதான் சொல்வாங்களே தவிர எரிசிவம், அணுசிவம், மின்சிவம்னு சொல்றதில்ல. சக்தி நினைச்சா ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். சக்திய யாராலயும் திருப்திபடுத்த முடியாது. தானா திருப்திப்பட்டுட்டாதான் உண்டு. உலகத்துல இருக்கற ஒவ்வொரு ஆணும் சிவம். ஒவ்வொரு பெண்ணும் சக்தி. ஒவ்வொரு சிவத்துக்கும் ஒரு சக்தி கண்டிப்பா இருக்கும் சரிபாதியா. எனக்கு அவர் சிவம். அவருக்கு நான் சக்தி. உனக்கு ஒரு சக்தி வருவா. அவதான் உனக்கு எல்லா சக்தியுமா இருப்பா" என்று அவள்பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போக 'அவருக்கு நான் சக்தி' என்ற வார்த்தைகளில் நொறுங்கியவன் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அவள் இரு தோளைப் பற்றினான்.

"ஏன் துர்கா உன்னோட சிவமா நான் இருப்பேனு ஏன் உனக்கு தோணவே மாட்டேன்றது? என்னோட சக்தி நீதான்னு என்னைக்கோ முடிவு பண்ணிட்டேன். எனக்குள்ள இருந்து என்னை ஆட்டி வைக்கறது நீதானு ஏன் உனக்கு புரியலை. நீ என்னை விட்டு போயிட்டா எல்லாமே என்னை விட்டுப் போயிடும்" என்று கூறினான். அப்பொழுது தன்னை மறந்து கூறியவன் உணர்வு வர என்ன செய்வதென்று தெரியாமல் வேக வேகமாய் திரும்பி சென்றான். அவள் எவ்வித உணர்ச்சியுமின்றி அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

-------------------------------------------------------------

இரவு முழுவதும் அவளது ஃபோனுக்காக காத்திருந்தவன் அவள் ஃபோன் செய்யாமல் போகவே நினைத்து நினைத்து வருந்தியபடி விடியும் வேளையில் தூங்கிப் போனான். ஒரு பத்து மணியளவில் யாரோ அடித்து எழுப்ப திடுக்கிட்டு எழுந்தவன் துர்கா நிற்பதைக் கண்டதும் தலை வரை போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

"டேய் நாயே! இங்க ஒருத்தி நின்னுட்டு இருக்கேன். எவ்ளோ கொழுப்பு இருந்தா இழுத்துப் போத்திட்டு தூங்குவ" என்று அவள் மீண்டும் அடிக்க ஆச்சர்யத்துடன் எழுந்தவன்

"நான் கூட என்கிட்ட பேசமாட்டேனு நினைச்சுட்டு இருந்தேன். என் மேல உனக்கு கோபம் இல்லயே??" என்று அவன் எங்கோ பார்த்தபடி கேட்க

"இதுல கோபப்பட என்னடா இருக்கு? உன் மனசுல நினைச்சத ஓபனா சொல்லிட்ட. மனசுல ஒண்ணு வச்சுக்கிட்டு வெளில இல்லாத மாதிரி நடிக்கிறதுதான் தப்பு. எனக்கு எந்த கோபமும் இல்ல"

"ஆக்சுவலா நான் மொதல்ல எல்லாம் அப்படி நினைக்கலை. எப்ப உனக்கு கல்யாணம்னு சொன்னியோ அப்பதான் நீ இல்லாம என்னால இருக்க முடியாதுனு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா உன்கிட்ட சொல்ற அளவுக்கு தைரியம் இல்ல. நேத்தே எப்படி சொன்னேனு தெரியலை"

அவள் அமைதியாய் இருக்கவே

"உன் சிச்சுவேஷன் எனக்கு புரியுது. நிச்சயம் பண்ணி அவர்தான்னு நீ இப்படி இருக்கறப்ப இப்படி நான் சொன்னது எவ்ளோ பெரிய தப்புனு எனக்கு புரியுது. ஆனா என்னால முடியல துர்கா. இதுக்கு என்ன முடிவு பண்றதுன்னும் எனக்கு புரியலை. நீதான் எப்பவும் எனக்கு எல்லா விஷயத்துலயும் Suggestion சொல்லுவ. இப்பயும் நீயே சொல்லு" என்று அவள் முகத்தையே பார்த்தான். ஒரு நிமிடம் யோசித்தவள்

"எனக்கு நீ இப்படி நினைக்க ஆரம்பிச்சவே தெரியும் மனோ. நீயாவே சொல்லுவனுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்" என்று அவள் மெதுவாய் சொல்லவும் தூக்கி வாரிப் போட நிமிர்ந்தான்.

"நீ இந்த நிமிஷம் என்ன நினைக்கறன்னு என்னால சொல்ல முடியும்னு உனக்கே தெரியும். அப்படி இருக்கும்போது உனக்குள்ள நான் வந்துட்டதக் கூட என்னால கண்டுப்பிடிக்க முடியாதுனு நினைச்சியா?" என்றபோது ஒட்டுமொத்த ஆச்சர்யமும் அவன் கண்களில் இருந்தது.

"பொண்ணுங்க எப்பவும் கூட இருக்கறவங்கள புரிஞ்சுக்குவாங்க. ஆனா பசங்களால அது முடியாது" என்று அவள் சொல்லவும்

"அப்படியெல்லாம் கிடையாது" என்று அவன் மறுத்தான். புன்னகைத்தபடி தலையைக் குனிந்தவள்

"அப்படின்னா எப்பவோ நீ எனக்குள்ள வந்துட்டத ஏன் உன்னால கண்டுபிடிக்க முடியல?" என்றாள். அவன் கண்களையே நம்ப முடியாமல் விழித்தவன் மெல்ல "துர்கா..." என்றான். அப்படியே ஜன்னல்புறமாய் திரும்பிக் கொண்டு அவள் தொடர்ந்தாள்.

"நான் எப்பயோ முடிவு பண்ணிட்டேன். முடிவு பண்ணின உடனே வீட்டுலயும் பேசி பர்மிஷன் வாங்கிட்டேன். நானா சொல்லி உனக்கு வரதை விட உனக்கும் தானா வரனும்னுதான் சொல்லாமலேயே இருந்தேன்" என்றாள்.

"அப்ப அந்த US மாப்பிள்ளை...???"

"அந்த அலையன்ஸ் வந்துச்சு. ஆனா அம்மாவுக்குதான் நான் சொல்லிட்டேன் இல்ல. அதனால சமாளிச்சு அனுப்பிட்டாங்க" என்றபடியே திரும்பியவள் அவன் முகத்தில் கோபத்தைக் கண்டதும் முகம் சுருங்கினாள்.

"என் மேல கோபமாடா?" என்று திணறினாள்.

"இவ்ளோ நாளா பொய் சொல்லி என்கிட்ட நடிச்ச இல்ல. அதுக்கு உனக்கு கண்டிப்பா பனிஷ்மெண்ட் குடுக்கப் போறேன்" என்று அவன் கோபமாய் சொல்ல அவள் முகம் பயத்தில் சுருங்கியது.

"என்ன பனிஷ்மெண்ட்?" என்று அவள் கேட்கவும் சிரித்துக் கொண்டே உதட்டில் கை வைத்துக் காட்டினான். அதைக் கண்டதும் அவள் முகம் வெட்கத்தில் சிவக்க

"அட பாவி! அவ்ளோ தைரியம் ஆயிடுச்சா உனக்கு?" என்றுக் கூறிக் கொண்டிருக்கும்போதே அவன் எழுந்து அவளை நோக்கி வர பின்னாலேயே நகர்ந்தவள்

"இன்னும் நீ ப்ரஷ் கூட பண்ணலைடா" என்றாள்.

"என்னது டாவா??? வீட்டுக்காரரை டா போட்டு சொன்னதால கணக்குல ஒண்ணு add ஆயிடுச்சு" என்று நெருங்கி வர அவள் வேகமாக திரும்பி ஓடினாள்.

"ஏய்! நில்லு. அப்புறம் உங்க அம்மாவுக்கு ஃபோன் பண்ணி அத்தை உங்க பொண்ணு சொன்ன பேச்ச கேக்கவே மாட்டேன்றானு சொல்லுவேன்" என்று அவளை துரத்தினான்.

"நீ யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ" என்றபடி அவள் வேகமாக ஓட

"நாளைக்கு புல்லட்டின் போர்டுல போடுவேன். என் காதலி எனக்கு முத்தம் குடுக்க மாட்டேனு கஞ்சத்தனம் பண்றா. சரி பரவால்லை கடையெட்டாவது வள்ளல் நானாவது தரேனு சொன்னா வாங்கிக்க மாட்டேன்றானு" என்றபடியே அவளை எட்டிப் பிடித்தான். அவள் சிணுங்க சிணுங்க.........

கட்...... கட்.......

எல்லாரும் போயி பொழப்பப் பாருங்கப்பு. கதை அம்புட்டுதான்.............

Monday, March 5, 2007

வலி - II

"நீ வர வர பண்றது எல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்ல" மனோ வேறுபக்கமாய் பார்த்தபடி சொல்ல

"என்ன பண்ணினேனாம்?" என்றாள் துர்கா கேலிக் குரலில்.

"நேத்து எவ்ளோ நேரம் ட்ரை பண்ணிட்டே இருந்தேன். வெயிட்டிங்லயே இருந்தது"

"பாத்தேன்டா. ISD கால் பேசிட்டு இருந்தேன். அதான் உன்னோடது அட்டெண்ட் பண்ணலை. சாரிடா செல்லம். கோவிச்சுக்காத"

"நீ இப்பவெல்லாம் என்னோட பேசறதே இல்ல. நான் டெய்லியும் உன்னோட கடைசியா பேசிட்டுதான தூங்குவேன். காலைலயும் எழுந்த உடனே உன்கிட்டதான் பேசுவேன்... ஆனா இப்பவெல்லாம் காலைலயும் நீ பேசறது இல்ல... " என்று அவன் அமர்ந்த குரலில் சொல்லவும்

"சாரிடா. டெய்லியும் நைட் அவர் ஃபோன் பண்றார். அவரோட day என்கிட்ட பேசிதான் ஆரம்பிக்கனும்னு ஆசையாம். அதே மாதிரி என்னொட day அவர்ட்ட பேசிதான் ஆரம்பிக்கனுமாம். அதனால காலைலயும் ஃபோன் பண்ணிடறார். நான் என்ன பண்ணட்டும்?" என்றபோது அவள் குரலில் ஒருவித நாணம் கலந்த பெருமை தெரிந்தது.

அதை கேட்டதும் அவன் முகம் சிவக்க என்ன செய்வதென்று தெரியாமல் "ஹே! என் லீட் வர சொன்னார். மறந்தே போயிட்டேன். பை" என்று பதிலுக்கு காத்திராமல் எழுந்து சென்று விட்டான்.

போகும்போது அவள் சொன்ன வார்த்தைகளே நினைவுக்கு வர 'ச்சே. இப்படி நினைக்க கூடாதுன்னு நினைச்சும் ஏன் இப்படியே தோணுது' என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவன் மனம் 'இருந்தாலும் துர்கா அவருக்கு அவர் day உன்கிட்ட பேசி ஆரம்பிக்கனும்னு ஆசைதான். ஆனா நானா ஆசைப்படாட்டியுமே என் day உன்கிட்ட பேசினாதான் ஆரம்பிக்கும்னு உனக்கு ஏன் தெரியாம போச்சு?.நீ இல்லாட்டி என் உலகமே இருண்டு போயிடுமோனு எனக்கு ரொம்ப பயமா இருக்கு' என்று எண்ணிக் கொண்டே நேராக சென்று rest room-ற்குள் நுழைந்தான். இருட்டறையில் தனியாய் மாட்டி க் கொண்டு தாயைத் தேடும் குழந்தையாய் அவன் மனம் தவிக்க முகத்தில் நன்றாக நீரை அடித்து கழுவினான்.

---------------------------------

"ஹே! உன் ஹைட் எவ்ளோடா?" choco crunch-லேயே முழு கவனமாய் கேட்ட துர்காவை மனோ கேள்வியாய் பார்க்க

"சொல்லு சீக்கிரம்" என்றபடி அவனுக்கு இணையாக மெல்ல நடந்தாள்.

"169. ஏன்?"

"169-ஆ? தேங்க் காட்" என்றவள் அவனை ஒட்டி நின்று

"உனக்கு நான் ஹைட் கரெக்டாதான இருப்பேன்?" என்று கேட்டாள். அவன் அமைதியாய் "ம்ம்ம்" என்று சொல்ல

"அவரும் 169தானாம். அப்பாடா. பயந்துட்டே இருந்தேன். ரொம்ப ஷார்ட்டா தெரிவேனோனு. கரெக்டா இருப்பேன்" என்று புன்னகையுடன் சொன்னாள்.
அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. இயலாமையில் உதடு துடிக்க பேசாமல் அமைதியாகவே வந்தான். துர்கா இது எதுவும் தெரியாமல் அவளுடைய வருங்கால கணவனைப் பற்றி பேசியபடியே வந்தாள்.

'ஹைட்ல மட்டும் இல்ல. எல்லாவிதத்துலயுமே எனக்கு நீ கரெக்டாதான் இருப்ப' என்று சொல்லிவிட இதயம் துடித்தது. என்றாலும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடுக்க அமைதியாகவே வந்தான்.

(தொடரும்...)