Tuesday, April 22, 2008

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே!!!



அட! ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு நினைச்சுட்டே இருந்தேன். வேற என்ன பெரிய விஷேசம் இருக்கப் போகுது??? கல்யாணம்தான். ஹி... ஹி... எங்க பக்கத்து வீட்டு அக்காவோட வீட்டுக்காரரோட தங்கச்சியோட நாத்தனாரோட கொழுந்தனாரோட மாமனார் தம்பி பொண்ணோட அத்தைப் பையனோட மச்சானோட வீட்டுக்காரம்மாவோட அம்மா வீட்டுப் பக்கத்துல இருக்கற ஆன்ட்டியோட அண்ணன் மருமகளோட தங்கச்சிக்கு கல்யாணம்னு நான் சொல்ல வரலை :)))) (இப்படியெல்லாம் மொறைக்கப்படாது ;))))


என் அப்பாவோட பையனோட அம்மாவோட ஒரே பொண்ணுக்கு மே 18, 2008ஆம் தேதி கல்யாணம். மே 19, 2008ஆம் தேதி திருமண வரவேற்பு. தவமின்றி வரம் பெறப் போகிற அட அதாங்க கல்யாணம் பண்ணிக்கப் போற அதிர்ஷ்டசாலி திரு.மோகன் பிரபு.

அவருக்கும், அவரோட அன்பும் பண்பும் அழகும் அறிவும் நிறைந்த மனைவிக்கும் உங்க விலைமதிப்பற்ற வாழ்த்துக்களை வாங்கித் தரதுக்குதான் இந்த பதிவு :))))))) தந்துட்டு போங்க மக்களே!!!

Thursday, April 3, 2008

இதனால மக்களுக்கு அறிவிக்கறது என்னன்னா.....



முட்டையோட வெள்ளைக்கரு எடுத்து தலைல தேய்ச்சு கொஞ்ச நேரம் ஊற வச்சு தலைக்குக் குளிச்சா முடி நல்லா இருக்கும். பொடுகு போயிடும்னு யாரோ எனக்கு சொன்னாங்க. அதை என் ஆருயிர் தோழிகள்கிட்ட சொன்னேன். இரண்டு பேர் செஞ்சுப் பார்க்கலாம்னு களத்தில இறங்கினாங்க.

ரெண்டு பேரும் முட்டையோட வெள்ளைக்கருவை எடுத்து தலைல தேய்ச்சாங்க. ஒருத்தி கொஞ்ச நேரத்துல தூக்கம் வருதுனு படுத்து தூங்கிட்டா. இன்னொருத்தி துணி துவைக்கப் போயிட்டா. கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பி வந்தவ என் தலையப் பாருடா-ன்னுட்டே சோகமா வந்தா. பார்த்துட்டு எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியலை. தலையெல்லாம் அங்கங்க வெள்ளை வெள்ளையா இருந்துச்சு. வெய்யில்லப் போய் துவைச்சதால முட்டை ஆம்லேட் ஆயிடுச்சுப் போல.

தூங்கிட்டு இருந்தவ அலறியடித்து எழுந்தா. முடி அப்படியே கம்பி கம்பியாய் நீட்டிட்டு இருந்துச்சு. அடிப் பாவி! ஐடியா கொடுத்தியே நீ-ன்னு என் மேல் பாய்ஞ்சாங்க. ஓய்! நான் என்ன ஏழு மணி நேரம் ஊற வை-னா சொன்னேன்?-ன்னு அப்படியே எஸ் ஆயிட்டேன். ஹி... ஹி... நாம யாரு :P

------------ooOoo---------------

எங்க கூட ஒரு தெலுங்குப் பொண்ணு இருக்கா. அவ தமிழ் பேசற அழகு இருக்கே... அழகோ அழகு. ஒரு நாள் சமையல் பண்ணீட்டு இருந்தப்போ ஜிஞ்சி எடு ஜிஞ்சி எடுனு சொன்னா. நான் முழிச்சேன். நான் முழிக்கற முழியப் பாத்துட்டு அவளே வேகமா வந்து இஞ்சிய எடுத்துக்கிட்டுப் போயிட்டா. அடிப்பாவி ஜிஞ்சரயும் இஞ்சியையும் சேர்த்து ஜிஞ்சி பண்ணிட்டாளேனு ஓட்டிட்டு இருந்தோம்.

இதே மாதிரி ஒரு நாள் ஆபிஸ்ல இருந்து வர வழியில ஒரே கரிஞ்ச வாசம்னு சொல்லிட்டு இருந்தா. சரி யாரவது தீய விட்டிருப்பாங்க. அதைதான் வாடை-னு சொல்ல தெரியாம இப்படி சொல்றானு நினைச்சு விட்டுட்டோம். இன்னொரு நாள் எல்லாரும் சேர்ந்து போனப்போ எங்க இருந்தோ கருவாடு செய்யற வாடை(ஹி... ஹி... எனக்கு புடிக்காதுல்ல... அதான் ;)) வந்துச்சு. உடனே ஏ! கரிஞ்ச வாசம் கரிஞ்ச வாசம்னாலே பாக்கலாம்....

------------ooOoo---------------

தக்காளி சாதம் செய்யறப்போ தக்காளி வதங்கினதும் கொஞ்சம் கொத்துமல்லி தழை, கொஞ்சம் புதினா தழை எடுத்து ரெண்டையும் ஒண்ணாப் போட்டு அரைச்சு வதங்கின தக்காளில ஊத்தி அப்புறம் வழக்கம்போல தக்காளி சாதம் செஞ்சு பாருங்க. வாசம் ஊரையேத் தூக்கும். டேஸ்ட்டும் அமர்க்களப்படுத்தும்.

------------ooOoo---------------

ஹ்ம்ம்ம்ம்... கொஞ்ச நாளா என்னன்னே தெரியலை போஸ்ட் போட மேட்டர் கிடைச்சுட்டே இருந்துச்சு. எழுத்தார்வமும் அப்படியே ஊற்றெடுத்துச்சு. இப்போ என்னன்னே தெரியலை. ஒண்ணுமே தோண மாட்டேன்றது.

இதை சொல்லி நான் ஃபீல் பண்ணினப்போ நிறைய நண்பர்கள்(?) அப்பாடா கொஞ்ச நாளைக்கு உன் இம்சை இல்லாம சந்தோஷமா இருக்கலாம்னு சொன்னாங்க :(((( சோ கொஞ்ச நாளைக்கு நம்ம ப்ளாக்குக்கு லீவு விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். பாவம் அதுக்கு மட்டும் சம்மர் ஹாலிடேஸ் வேணாமா??? அதுக்காக சுத்தமா மூடிடுவேனு யாரும் ரொம்ப சந்தோஷப்பட வேணாம். அப்பப்போ வருவேன். அதை எந்த ஒரு தீய சக்தியாலயும் தடுக்க முடியாது :P

இம்சைகள் தொடரும்...