Sunday, December 17, 2006

உயிரின் அருமை

"ஏ! அவளை போய் சாப்பிட கூப்பிடுடி. காலைல இருந்து இன்னும் சாப்பிடவே இல்லை. நீ பேசற வரைக்கும் கண்டிப்பா அவ சாப்பிட மாட்டா" என்று சுபா சொன்னதும் திரும்பி அவளை முறைத்தேன்.


"இங்க பாரு. அவங்கவங்க வயித்துக்கு வேணும்னா அவங்களே சாப்பிட்டுப்பாங்க. எனக்கு ரெக்கார்ட்ல சைன் வாங்க போகணும். அதனால நான் போறேன். நீங்க போய் சாப்பிடுங்க" சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் காலேஜ் நோக்கி விடு விடுவென்று நடந்து சென்றேன். காலையிலிருந்து சாப்பிடாததால் பசி வயிற்றை கிள்ளியது. இருந்தாலும் அவ சாப்பிடாம நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன். இது ஏன் அவளுக்கு புரிய மாட்டேன்றது. இருந்தாலும் அதுக்காக எல்லாம் மொதல்ல போய் என்னால பேச முடியாது.

அன்று இரவு எனது வகுப்பு தோழிகளிடம் அரட்டை அடித்து கொண்டிருந்த போது எனது அறைக்கு வந்தாள். "ஒரு வாக் போயிட்டு வரலாம் வா" என்று அவள் அழைத்ததும் எழுந்து அவளுடன் சென்றேன். இதற்காகத்தானே எதிர்பார்த்து காத்திருந்தேன்.


"என்ன சீக்கிரம் சொல்லு. எனக்கு வேலை இருக்கு" என்று நான் சொன்னதும் சடாரென்று என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் நிரம்பியிருந்த கண்ணீரை கண்டதும் எனக்குள் ஏதோ ஒன்று உருகியது. என்றாலும் கட்டுப்படுத்திக் கொண்டு

"இந்த மாதிரி எல்லாம் பண்ணினா அப்படியே உருகி சாரிடி... நான் பன்னினது தான் தப்புன்னு மன்னிப்பு கேட்பேன்னு நினைச்சியா சங்கீ? பண்ணாத தப்புக்கு நான் ஏன் சாரி கேட்கனும்?" என் மேலுள்ள தப்பு எனக்கே புரிந்திரிந்தும் இவ்வாறு கேட்டேன்.


"நீ சாரி கேட்கனும்னு நான் எதிர்பார்க்கலை............" என்று ஆரம்பித்து என்னுடைய தவறை தவறாய் சுட்டிக் காட்டாமல் சொல்லி நான் அவள் மீது தேவையில்லாமல் சொன்னவற்றை எல்லாம் பொறுத்து இறுதியாக என்னை சமாதானம் செய்தாள்.


நான் பி.எஸ்.சியிலும் அவள் பி.காமிலும் இருந்த போது கடைசி ஆண்டில் நடந்த இந்த சம்பவத்தை எம்.சி.ஏ முதல் வருடத்தில் இருக்கும் போது ஒரு ஞாயிற்று கிழமை காலை வேளையில் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். 'ஈகோ துளியளவும் இல்லாம என் அம்மாவை போல் பாசம் வச்சிருந்த உன்னை என்னோட ஈகோவால எவ்வளவு கஷ்டப்படுத்தினேன்' நினைக்கும்போது கண்கள் பனித்தது. நீ பக்கத்துல இருந்தப்ப எல்லாம் அவ்வளவு கஷ்டப்படுத்தினேன். இப்ப நீ என் பக்கத்துல இல்லாம எவ்வளவு கஷ்டப்படுறேன் தெரியுமா சங்கீ? கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து சென்று புதியதாய் வைத்திருந்த டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தேன்.


"உயிரின் அருமை

பிரியும் வேளையில் தான்

தெரியுமாம்!

உண்மைதான்.........

அனுபவத்தில் சொல்கிறேன்!!"

15 comments:

கோபிநாத் said...

இம்சை அரசி,
அருமையான பதிவு, பிரிவு என்றாலே கொடுமை, அதனில் நட்பின் பிரிவு சொல்வதற்க்கு வார்த்தையில்லை.

\\உண்மைதான்.........
அனுபவத்தில் சொல்கிறேன்!!"\\
அனுபவித்துக் கொண்டுயிருக்கிறேன்.

இம்சை அரசி said...

அனுபவித்து எழுதியது....

உணர்ந்து பாராட்டியதற்கு நன்றி கோபிநாத்...

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு! நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது இதுதானோ?!!

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு! நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது இதுதானோ?!!

இம்சை அரசி said...

// சந்தனமுல்லை said...
நல்ல பதிவு! நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது இதுதானோ?!!

//

நன்றி சந்தனமுல்லை...

வெட்டிப்பயல் said...

இம்சை அரசி,
நான் ரொம்ப வருஷமா ஹாஸ்டல்ல தங்கிதான் படிச்சேன்...

ரொம்ப க்ளோஸ் பிரெண்ட்ஸ் யார்டயாவது சண்டை போட்டா ரெண்டு பேரும் சாப்பிட மாட்டோம். அப்படியே கூட இருக்கவங்களும் எங்களுக்காக சாப்பிட மாட்டாங்க. இல்லை நாங்க வரலனு தெரிஞ்சா மெஸ்ல இருந்து வார்டனுக்கு தெரியாம சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட வைப்பாங்க...

இப்ப நினைச்சாலும் கண்ணு கலங்குது... அவளோ பாசமான நண்பர்கள் யாருக்கூடயும் இப்ப டச் இல்லை :-(

எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவுங்க நம்பரெல்லாம் கிடைக்கல...

இம்சை அரசி said...

ஹ்ம்ம்ம்.... ஆமா வெட்டி... அப்ப எல்லாம் எப்ப காலேஜ் முடிச்சிட்டு ஓடுவோம்னு நினைச்சோம். இப்ப அந்த வாழ்க்கை மறுபடிடும் கிடைக்காதானு ஏங்கிட்டு இருக்கோம்.... என்ன மனசு இது போங்க...

dayamalar said...

enna than life la ego problem irunthalum vittu koduthu porathu nanbargal kitta dhan adhigam.. endha oru kaaranathukagavum nanbargala izhanthudathinga.. anbin unmai vadivam kadhal nu solratha vida, natpu nu solrathu dhan correct..

இம்சை அரசி said...

// dayamalar said...
enna than life la ego problem irunthalum vittu koduthu porathu nanbargal kitta dhan adhigam.. endha oru kaaranathukagavum nanbargala izhanthudathinga.. anbin unmai vadivam kadhal nu solratha vida, natpu nu solrathu dhan correct..
//

ரொம்ப சரியா சொன்னீங்க தயாமலர்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரே விஷயம் friendship மட்டும்தான்.......

வருகைக்கு நன்றி... :)

ராஜி said...

Namba friend oruthi onsite poirukka..Ava inga irukkum poadhu oru maasathukku oru thadava dhaan phone panni paesuvaen..Aana ipa avala romba miss pannuraen..
Unga post paarthadhum ava gyabagam vandhuruchu..Kannula thanniyum vandhuduchu...

Kamal said...

நல்லா இருந்தது!!!!
ஆனா நான் எப்பவும் பிரண்ட்ஸ் கிட்ட ஈகோ பாக்க மாட்டேன்!!!!!
அதுவும் ரொம்ப க்ளோஸ் நா அந்த நடப்பை விட்டுடவே மாட்டேன்!!!!
நாலு நாள் சாப்பாடு இல்லாம கூட இருந்துருவேன் ஆனா பிரண்ட்ஸ் இல்லாம ஒரு நாள் கூட இருக்க முடியாது!!!!ஏழு வருஷமா அப்பா, அம்மா கூட இருந்தத விட அவங்களோட இருந்ததுதான்(இருக்கறது)ஜாஸ்தி!!!!

சுரேகா.. said...

நட்பின் பிரிவு...

விட்டுப்போன நாளில் பேசிய கடைசி வார்த்தையில் இருந்து ஆரம்பிப்பதற்காய்
நாம் இருக்கும் தவம்..!

என்றாவது மீண்டும் சந்திப்போமென்ற ஆசையில்!

சுரேகா.. said...

ஆஹா..அவசரப்பட்டு பொத்தானை அழுத்திட்டேன்...

உண்மை தெரிகிறது உங்கள் எழுத்துக்களில்...அனுபவத்தைத்தவிர ஒரு அற்புத படைப்பு , படைப்பளிக்கு கிடைக்காது.!

வாழ்த்துக்கள்!

Anonymous said...

hai im a great fan of ur blogs ya simply simple and beautiful thoughts.....wishes for ur marriege life ya...

Suba said...

Arumaiya ezhuthirukeenga! apadiye en life la nadanthatha padikara maathiri iruku! :)