எனக்கு கம்ப்யூட்டர் எப்போ அறிமுகமாச்சுனு எனக்கேத் தெரியாது. அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த நாளை குறிச்சு வைக்காம விட்டுட்டேன். பின்னாடி வரலாறுல எழுதும்போது இதைப் பத்தி எழுதலைனா நல்லா இருக்காது இல்ல. அதான். நான் பத்தாவது படிச்சப்போ எங்க மாமா வீட்டுல புதுசா கம்ப்யூட்டர் வாங்கினாங்க. என் மாமாவோட செஸ் விளையாடறது சின்ன வயசுல இருந்து வழக்கம் எனக்கு. கஜினி முஹம்மது கணக்கா பல தடவை முயற்சிப் பண்ணி கடைசில ஒரு நாள் அவரை நான் ஜெயிச்சதுக்காக சிங்கப்பூர் போயிட்டு வந்தப்போ எனக்கு மேக்னட்டிக் செஸ் போர்ட் வாங்கிட்டு வந்துக் கொடுத்தார். அவர் எதாவது புதுசா கத்துக்கிட்டா எனக்குக் கத்துக் கொடுப்பார். அதனால அவர் என்னை வரச் சொல்லி கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாட சொல்லிக் கொடுத்தார். அந்த நாளை சரித்திரத்துல போட்டுக்கலாம்னு முடிவுப் பண்ணி வச்சிருக்கேன்.
அப்போ ரொம்ப ஆர்வத்தோட விளையாடினாலும் எவ்வளவோ கஷ்டப்பட்டு என் கை அந்த நாலு arrow keys தவிர வேற எங்கேயும் படாம பாத்துக்கிட்டேன். ஒரு தடவை என் சுண்டு விரல் தெரியாம Ctrl key மேல பட்டுடுச்சு. கம்ப்யூட்டருக்கு எதாவது ஆயிடுமோனு பயந்தேப் போனேன். அதுக்கப்புறம் வேற எங்கேயும் கைப்படாம விளையாடி ப்ராக்டிஸ் பண்ணிட்டேன்.
நான் பத்தாவது முடிச்சிட்டு லீவுல இருந்தப்போ எங்கப்பாக்கிட்ட போய் அப்பா நான் கம்ப்யூட்டர் க்ளாஸ் போறேன்னு கேட்டதுக்கு எங்கப்பா மொதல்ல டைப் க்ளாஸ் போங்க. அப்போதான் கம்ப்யூட்டர்ல ஸ்பீடா டைப் பண்ண வரும்னு சொன்னார். அப்போ அவரைப் பொறுத்த வரைக்கும் கம்ப்யூட்டர்னா புதுவித டைப்ரைட்டர்னு எனக்கு அப்போ தெரியாமப் போயிடுச்சு. தந்தை சொல்லைத் தட்டாதப் பெண்ணல்லவா நான். அதான் சமத்துப் பிள்ளையா அப்பா சேர்த்து விட்ட டைப் இன்ஸ்டியூட்ல என் தம்பியோட சமத்தாப் போய் டைப் அடிக்க கத்துக்க ஆரம்பிச்சேன்(அந்தக் கதைய இங்க சொல்ல முடியாது. அதுக்கு தனிப் பதிவே போடணும். அம்புட்டு பெரியக் கதை).
அப்புறம் ரிசல்ட் வந்து பதினொண்ணாவது சேர்ந்து என் இம்சை தாங்க முடியாம எங்கப்பா என்னைக் கொண்டுப் போயி ஹாஸ்டல்லத் தள்ளிட்டார். அங்கயும் ஆறு பேரு சேர்ந்து ஒரு வானரப் படையமைச்சோம். பதினொண்ணாவதுல பயாலஜி அதாங்க ஃபர்ஸ்ட் க்ரூப்ல இருந்தேன். எங்கப் படைல மூணுப் பேரு பயாலஜி. மூணு பேரு கம்ப்யூட்டர் சயின்ஸ். எனக்கு அப்போல்லாம் கம்ப்யூட்டர் க்ரூப்ல இருந்தவங்களப் பார்த்தா ஒரு பொறாமையா இருக்கும். நாமளும் அதுலயே சேர்ந்திருக்கலாமோன்னு. அப்போதான் பாதிலயே பன்னிரெண்டாவது சிலபஸ் எடுக்க ஆரம்பிச்சாங்க. மத்ததெல்லாம் ஓகே. ஆன இந்த ஜுவாலஜி. உவ்வே... அந்த அனாடமியெல்லாம் படிக்கறதுக்குள்ள வாந்தியெடுக்காத கொறைதான். இயற்கையிலேயே எனக்கு கொஞ்சம் இளகிய மனசா. அதான்... அடம் பிடிச்சு எனக்கு க்ரூப் மாத்தி தரலைனா படிக்க மாட்டேனு எல்லாம் சபதம் எடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப்புக்கு மாறிட்டேன். எடுத்த சபதம் முடித்தப் பெண்ணல்லவா நான்... ஹி... ஹி... ஹி...
நான் அந்த க்ரூப்புக்கு மாற இருந்த இடைப்பட்டக் காலத்துல நடந்ததுதான் இந்தப் பதிவெழுதக் காரணமான அந்த வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சம்பவம். நானும் என் வானரக் கூட்டத்து தோழி ஒருத்தியும் கம்ப்யூட்டர் லேப் முன்னாடி உக்காந்து படிக்கறோம்ன்ற பேருல கதையடிச்சுட்டு இருந்தோம். அப்போதான் அவ கேட்டா "கம்ப்யூட்டர் லேபுக்கு மட்டும் ஏன் ஏசி போடறாங்கன்னு தெரியுமா உனக்கு?" அட ஆமா! இத்தனை நாளா இதை நோட் பண்ணினது இல்லையே. கெமிஸ்ட்ரி லேபுல அடுப்பு... ச்சே... விளக்குப் பத்த வைப்போம். அது அணைஞ்சிடும். சோ அங்க ஏசி போட முடியாது. ஆனா பிசிக்ஸ் லேப், பயாலஜி லேபுல போட்டிருக்கலாமே. அங்க எல்லாம் போடாம இங்க மட்டும் ஏன் போட்டாங்க? நான் கேள்வியாய் அவளைப் பார்த்தேன். இதுக் கூடத்தெரியாதா உனக்குன்ற மாதிரி என்னைப் பாத்துக் கேவலமா ஒரு லுக்கு விட்டு அந்தப் பிசாசு சொன்னுச்சு.
"கம்ப்யூட்டர் லேப்ல ஏசி போடலைனா வைரஸ் வந்துடும். அது அட்டாக் பண்ணிட்டா கம்ப்யூட்டரே வேஸ்ட் ஆயிடும்"-னு சொன்னா.
அடக் கடவுளே! இத்தனை நாளா இது தெரியாமாப் போச்சே-னு என்னையே நொந்துக்கிட்டேன். எவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கா என்று ஆச்சர்யமாய் அவளைப் பாத்தப்போதான் தோணுச்சு. அய்யய்யோ எங்க மாமா வீட்டுல ஏசி போடலையேனு எனக்கு ஒரே வருத்தம். அப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருஷமா கம்ப்யூட்டர் ஒரு மெஷின்தான. அதை எப்படி வைரஸ் அட்டாக் பண்ணும். அது உயிருள்ள விஷயங்களைதான அட்டாக் பண்ணும்ன்ற கேள்வி என் மண்டையக் குடைஞ்சிட்டே இருந்துச்சு.
காலேஜ் சேர்ந்து கொஞ்ச நாளுல கம்ப்யூட்டர் வைரஸ்னா ஒரு சாஃப்ட்வேர் ப்ரோக்ராம்தானு நான் தெரிஞிட்டப்போ அவ மேல வந்த கொலை வெறி இருக்கே.... grrrrrrrrrrrrrrr......... இன்னும் என் கேள்விக்கு விடைக் கிடைக்கலை. அந்த துரோகி வேணும்னே அப்டி சொன்னாளா இல்லை நிஜமாவே அவளும் அப்படி யார்ட்டயோ லூசாயிட்டு வந்து அதுதான் உண்மைனு நினைச்சு சொன்னாளான்னு. ஹ்ம்ம்ம்ம்....
இது மாதிரி உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்கும்னு நினைக்கறேன். முடிஞ்சா சொல்லுங்க மக்கள்ஸ். விரைவில் டைப் கத்துக்கிட்ட கதையுடன் மேடம் வருவாங்க :))))
Monday, February 4, 2008
கம்ப்யூட்டர் லேபுக்கு ஏன் ஏசி போடறாங்க?
Posted by இம்சை அரசி at 6:25 PM
Labels: அனுபவம், சும்மா... லுலுலா...
Subscribe to:
Post Comments (Atom)
34 comments:
காலேஜ் சேர்ந்து கொஞ்ச நாளுல கம்ப்யூட்டர் வைரஸ்னா ஒரு சாஃப்ட்வேர் ப்ரோக்ராம்தானு நான் தெரிஞிட்டப்போ அவ மேல வந்த கொலை வெறி இருக்கே.... grrrrrrrrrrrrrrr........
ஆகா அப்ப கம்ப்யூட்டர் வைரஸ்னா புரோக்கிராமா நிஜமான வைரஸ் இல்லயா, அப்ப ஏசி வைரஸ் அட்டாக் ஆகாம இருக்க போடலயா... திரும்ப ஒரு தரம் யாருகிட்டயாவது கன்பர்ம் பண்ணிசொல்லுங்க... நான் கூட எங்க ஊர் பூரா இப்படி தான் சொல்லி வெச்சிருக்கேன் யாராவது உங்க பதிவ பாத்துட்டு எனக்கு ஆப்பு வெச்சிட போராங்க
நிஜமாவே இன்னும் இந்த வைரஸ் வைரஸ்னு சொல்ராங்களே அது எப்படி வருது எப்படி அட்டாக் பண்ணுதுன்னு தெரியலங்க.. அத பத்தி யாராவது கொஞ்சம் விளக்கமா எடுத்து சொல்லுங்க ... நான் வேற என் கிட்ட கேக்கரவங்க கிட்ட எல்லாம் வேற மாதிரி சொல்லி ஒப்பேத்தி வெச்சிருக்கேன்...
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலே !
கவுண்டமணி-செந்தில் ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது.... :)
15 வருஷத்துக்கு முன்னாடி இப்படித்தான் சொல்லிகிட்டு இருந்தாங்க. ஏசி இல்லாமல் கம்ப்யூட்டர் வைக்கவே முடியாது அப்பொல்லாம்.
அதைவிட கூத்து கொஞ்ச நாளைக்கு முன்னால் குமுதமா துக்ளக்கான்னு நினைவில்லை. அதில் கம்ப்யூட்டரால் வரும் தீமைகள் பத்தி சொல்லும்போது
"கம்ப்யூட்டர் வைரஸ் என்று சொல்கிறார்கள். மனிதர்களை அது பாதிக்குமாகக்கூட இருக்கும் நன்கு ஆராய வேண்டும் இதை" என்று எழுதி இருந்தார்கள்.
தலைல அடிச்சுக்கனும் போல இருந்துச்சு
என்னது இம்சைக்கு வைரஸ்னா தெரியாதா??
யாருப்பா அங்க? இம்சைக்கு ரெண்டு வைரஸ் பார்சல்ல்ல்ல். கூடவே ரெண்டு ஸ்பைவேர் எக்ஸ்ட்ராவா :P
// Collapse comments
Blogger இம்சை said...
காலேஜ் சேர்ந்து கொஞ்ச நாளுல கம்ப்யூட்டர் வைரஸ்னா ஒரு சாஃப்ட்வேர் ப்ரோக்ராம்தானு நான் தெரிஞிட்டப்போ அவ மேல வந்த கொலை வெறி இருக்கே.... grrrrrrrrrrrrrrr........
ஆகா அப்ப கம்ப்யூட்டர் வைரஸ்னா புரோக்கிராமா நிஜமான வைரஸ் இல்லயா, அப்ப ஏசி வைரஸ் அட்டாக் ஆகாம இருக்க போடலயா... திரும்ப ஒரு தரம் யாருகிட்டயாவது கன்பர்ம் பண்ணிசொல்லுங்க... நான் கூட எங்க ஊர் பூரா இப்படி தான் சொல்லி வெச்சிருக்கேன் யாராவது உங்க பதிவ பாத்துட்டு எனக்கு ஆப்பு வெச்சிட போராங்க
//
கம்ப்யூட்டர் வைரஸ்னா என்னன்னு தெரியாதவங்களா இங்க வந்து ப்ளாக் படிக்கப் போறாங்க? ;)))
ஆமா, உங்களுக்கு ஏன் கோவம் வந்துச்சு? வைரஸ் பாதிக்காம இருந்தா நல்லதுதானே? ஏஸி அதுக்குதானே போட்டிருக்காங்க?
என்னவோ ப்ரோகிராம் அது இதுன்னு அரைவேக்க்காடுங்க சொல்றத எல்லாம் நம்பாதீங்க! உங்க தோழி முதல்ல சொன்னது சரிதான்.
// Blogger இம்சை said...
நிஜமாவே இன்னும் இந்த வைரஸ் வைரஸ்னு சொல்ராங்களே அது எப்படி வருது எப்படி அட்டாக் பண்ணுதுன்னு தெரியலங்க.. அத பத்தி யாராவது கொஞ்சம் விளக்கமா எடுத்து சொல்லுங்க ... நான் வேற என் கிட்ட கேக்கரவங்க கிட்ட எல்லாம் வேற மாதிரி சொல்லி ஒப்பேத்தி வெச்சிருக்கேன்...
//
அது வேற ஒண்ணும் இல்ல... கம்ப்யூட்டர்ல ஒண்ணு வந்துட்டாப் போதும். அப்டியே பரவ ஆரம்பிச்சு உள்ள ஒயர் எல்லாத்தையும் கடிச்சு சாப்பிட்டிடும். அப்புறம் கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்யும்??? இது மாதிரி மவுஸ, கீ போர்டையே சாப்பிடற கொடூரமான வைரஸ்லாம் இருக்காம். நினைச்சாலே பயமா இருக்கு... பாத்து இருங்க. நம்மளையும் பிடிச்சுதுன்னா அவ்ளோதான்
// Blogger இம்சை said...
நிஜமாவே இன்னும் இந்த வைரஸ் வைரஸ்னு சொல்ராங்களே அது எப்படி வருது எப்படி அட்டாக் பண்ணுதுன்னு தெரியலங்க.. அத பத்தி யாராவது கொஞ்சம் விளக்கமா எடுத்து சொல்லுங்க ... நான் வேற என் கிட்ட கேக்கரவங்க கிட்ட எல்லாம் வேற மாதிரி சொல்லி ஒப்பேத்தி வெச்சிருக்கேன்...
//
அது வேற ஒண்ணும் இல்ல... கம்ப்யூட்டர்ல ஒண்ணு வந்துட்டாப் போதும். அப்டியே பரவ ஆரம்பிச்சு உள்ள ஒயர் எல்லாத்தையும் கடிச்சு சாப்பிட்டிடும். அப்புறம் கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்யும்??? இது மாதிரி மவுஸ, கீ போர்டையே சாப்பிடற கொடூரமான வைரஸ்லாம் இருக்காம். நினைச்சாலே பயமா இருக்கு... பாத்து இருங்க. நம்மளையும் பிடிச்சுதுன்னா அவ்ளோதான் ;)))
// Anonymous Anonymous said...
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலே !
//
நடப்பத்தான சொன்னேன்... ஹி... ஹி...
// Anonymous Anonymous said...
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலே !
//
நடப்பத்தான சொன்னேன்... ஹி... ஹி...
//Blogger இராம்/Raam said...
கவுண்டமணி-செந்தில் ஜோக்தான் ஞாபகத்துக்கு வருது.... :)
//
என்ன ஜோக்???
// Blogger நந்து f/o நிலா said...
15 வருஷத்துக்கு முன்னாடி இப்படித்தான் சொல்லிகிட்டு இருந்தாங்க. ஏசி இல்லாமல் கம்ப்யூட்டர் வைக்கவே முடியாது அப்பொல்லாம்.
அதைவிட கூத்து கொஞ்ச நாளைக்கு முன்னால் குமுதமா துக்ளக்கான்னு நினைவில்லை. அதில் கம்ப்யூட்டரால் வரும் தீமைகள் பத்தி சொல்லும்போது
"கம்ப்யூட்டர் வைரஸ் என்று சொல்கிறார்கள். மனிதர்களை அது பாதிக்குமாகக்கூட இருக்கும் நன்கு ஆராய வேண்டும் இதை" என்று எழுதி இருந்தார்கள்.
தலைல அடிச்சுக்கனும் போல இருந்துச்சு
//
ஹாஹாஹா... நிறைய பேரு இப்படித்தான் திரியறாங்களா? நான்கூட நான் மட்டும்தானு நினைச்சு ஃபீல் பண்ணிட்டுல்ல இருந்தேன் ;)))
// Blogger நந்து f/o நிலா said...
என்னது இம்சைக்கு வைரஸ்னா தெரியாதா??
யாருப்பா அங்க? இம்சைக்கு ரெண்டு வைரஸ் பார்சல்ல்ல்ல். கூடவே ரெண்டு ஸ்பைவேர் எக்ஸ்ட்ராவா :P
//
அச்சோ... எவ்வளவு பாசம். இதுக்கு கைமாறா என்ன செய்வேன்??? அதனால என் பேரை சொல்லி நீங்களே வச்சுக்கங்க ;)))
thx for ur visit :)))
// Blogger பினாத்தல் சுரேஷ் said...
ஆமா, உங்களுக்கு ஏன் கோவம் வந்துச்சு? வைரஸ் பாதிக்காம இருந்தா நல்லதுதானே? ஏஸி அதுக்குதானே போட்டிருக்காங்க?
என்னவோ ப்ரோகிராம் அது இதுன்னு அரைவேக்க்காடுங்க சொல்றத எல்லாம் நம்பாதீங்க! உங்க தோழி முதல்ல சொன்னது சரிதான்.
//
பெரியவங்க நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். நம்பறேன் ;)))
:))) Virus bloga kooda attack pannumaam.. paathu irunthukonga Imsai...
என்னமோ ரொம்பாஆ டெக்னிக்கலா பேசியிருக்கீங்க எனக்கு ஒண்ணும் புரியலை.
//
இம்சை said...
ஆகா அப்ப கம்ப்யூட்டர் வைரஸ்னா புரோக்கிராமா
//
இம்சை ப்ரொக்ராமா எங்க? என்னைக்கு எத்தனை மணிக்கு சொன்னீங்கன்னா நானும் வருவேன்ல!!
//
அப்ப ஏசி வைரஸ் அட்டாக் ஆகாம இருக்க போடலயா...
//
ரூம்க்கு மொதல்ல ஒரு ஏசி போடணும்பா
//
இம்சை said...
நான் வேற என் கிட்ட கேக்கரவங்க கிட்ட எல்லாம் வேற மாதிரி சொல்லி ஒப்பேத்தி வெச்சிருக்கேன்...
//
அதை கொஞ்சம் சொன்னீங்கன்னா நாங்களும் அப்பிடியே ஃபாலோ பண்ணிக்குவோம்ல!!
//
நந்து f/o நிலா said...
என்னது இம்சைக்கு வைரஸ்னா தெரியாதா??
//
அண்ணாத்தே எனக்கும் என்னன்னு தெரியாதே நிலா பாப்பாகிட்ட சொல்லி எனக்கு ட்யூஷன் எடுக்க சொல்லுங்களேன்.
:)))
//அப்போ ரொம்ப ஆர்வத்தோட விளையாடினாலும் எவ்வளவோ கஷ்டப்பட்டு என் கை அந்த நாலு arrow keys தவிர வேற எங்கேயும் படாம பாத்துக்கிட்டேன். ஒரு தடவை என் சுண்டு விரல் தெரியாம Ctrl key மேல பட்டுடுச்சு. கம்ப்யூட்டருக்கு எதாவது ஆயிடுமோனு பயந்தேப் போனேன். அதுக்கப்புறம் வேற எங்கேயும் கைப்படாம விளையாடி ப்ராக்டிஸ் பண்ணிட்டேன்//
ROFL! ithu vera
nalla virus... nalla computer... nalla biology.. nalla friend...sariyaaana imsai :)
@imsai
Nice one. Comedy was superb :)
naanum oru pathivu pottu irukken akka. paarunga :)
natpodu
nivisha
என்னோட அனுபவத்தைக் கதையா எழுதி வச்சிருக்கேன்.. வந்து பாருங்கம்மணி.
http://www.maraththadi.com/article.asp?id=19
உன்ன மாதிரி ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஒருபதிவுன்னா
பதினைஞ்சு இருபது பதிவாயிருக்கும். ஹ்ம்ம்ம் என்ன செய்ய நமக்கு மொக்கைப் போடவே தெரிய மாட்டேங்குது.
காலேஜ் சேர்ந்து கொஞ்ச நாளுல கம்ப்யூட்டர் வைரஸ்னா ஒரு சாஃப்ட்வேர் ப்ரோக்ராம்தானு நான் தெரிஞிட்டப்போ அவ மேல வந்த கொலை வெறி இருக்கே.... grrrrrrrrrrrrrrr........
நல்லாதனே இருக்கு?????
கம்ப்யூட்டர் வைரஸ்னா என்னன்னு தெரியாதவங்களா இங்க வந்து ப்ளாக் படிக்கப் போறாங்க? ;))) aen illamal. enakku computer-a pathi perisa eduvum theriadhu. unga bolg padikka tamil therinja podhume.
அட... நீங்க வேற... எங்க கல்லூரியில, ஷூ போடாம லேபுக்கு போக கூடாதுன்னு ரூல்ஸ் எல்லாம் போட்டு வச்சிருந்தாங்க. தூசு தும்பு ஆவாதுன்னு ஒரே கட்டுபாடு. :-))
அப்புறம் நம்ம நண்பர் உசிலம்பட்டி, விஜயன் வைரஸ் ஸ்கானர் எல்லாம் எழுதி அதை கமர்ஷியலா மார்கெட்டிங் பண்ணி, நாங்க படிக்கிற காலத்துல பெரிய ஹீரோவா இருந்தது தனி கதை.
ஹா..ஹா.. அப்போ காலேஜ் வர்ர வரை அம்புட்டு தான் பொட்டிய பத்தி சொல்லிக்குடுத்திருந்தாங்களா?..
வாழ்க..தமிழ்நாடு கல்வித்துறை..:)
பாசானது எப்டிங்கோ:)))))))))))ஹிஹி..:P
அட வைரஸ்-னா ப்ரோக்ராமா???
எந்த டி.வி.யில போடுறாங்க??
:)
//அப்டியே பரவ ஆரம்பிச்சு உள்ள ஒயர் எல்லாத்தையும் கடிச்சு சாப்பிட்டிடும். அப்புறம் கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்யும்???//
எங்க போய் சொல்லுவேன்? என்னானு சொல்லுவேன்...
இந்த மாதிரி உங்க கிட்ட இருந்து நிறைய ஏதிர்ப்பார்க்கிறோம் இம்சை அரசி...
:)
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல
ஆச்சா இன்னொரு பதிவு? :)
அரசுப் பள்ளிகளிலேயே முதன் முறையாக (1986) கணிணி வாங்கிய பள்ளியில் முதல் பேட்ச்சில் படித்தவன் என்கிற முறையில், இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ஏசிக்காகவே, கெமிஸ்ட்ரி, கணக்கு வாத்தியாருங்கள்லாம் கணிணி அறைக்குள் வந்து கொஞ்ச நேரம் கடலை வறுத்துட்டு (யார் கூடன்ன்னு கேட்ககூடாது, ரகசியம்!) போவாங்க :)
naan kooda computer yanga veetla vaagana pudhusula, computer paakathula ninnu oru thumbal kooda poda allaruven, yange yen virus computer-kku vandidimonu he he
Post a Comment