Wednesday, December 27, 2006

என் சோக கதைய கேளு ப்ளாக் குலமே!!!

கிறிஸ்துமஸ் லீவு முடிஞ்சிதே. நாளைக்கு ஆபிஸ்க்கு போகணுமேன்னு அவசர அவசரமா பொட்டிய கட்டிட்டு ஓடியாந்தா... அட பாவி மக்கா! இன்னும் ஒருத்தியும் வந்து சேரலையே... சரி எப்படியும் இன்னைக்கு ஒருத்தி வந்துடுவான்ற நம்பிக்கைல கெளம்பி ஆபிஸ்க்கு போயி மொத வேலயா போன போட்டா... நேத்து பஸ் கெடக்கல செல்லம் இன்னைக்கு நைட்தான் கெளம்பறேன்னு மனசாட்சியே இல்லாம சொல்றா. அய்யோ நான் என்ன பண்ணுவேன்? இன்னைக்கு ஆபிஸ்லதான் சாப்பாடா? கடவுளே...

வேலைய முடிச்சுட்டு கெளம்பலாம்னு பாத்தா மணி எட்டரை. எட்டரை மணிக்கா எனக்கு ஏழரை ஆரம்பிக்கணும்? நாமளே எதாவது செஞ்சா என்னன்னு ஒரு யோசனை பளீர்னு ப்ளாஷ் அடிச்சது. சரி என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டேன். தோசை செய்யாலாம் அதான் ஈஸின்னு முடிவும் பண்ணிட்டேன். அடடா தொட்டுக்க என்ன செய்யறது? அம்மாகிட்ட கேக்கலாம்னு போனை எடுத்து டயல் பண்றேன்... அட கொடுமையே! ரீசார்ஜ் பண்ண மறந்து தொலைச்சிட்டேன். சனி இப்படியா நம்ம தலைல உக்காந்து டான்ஸ் ஆடனும்? சரி இட்லி பொடி வாங்கிக்கலாம்னு ஐடியா பண்ணி போய் வாங்கிட்டு வந்துட்டேன். அய்யோ பசி வேற உயிர் போகுதேன்னு அவசர அவசரமா பாக்கெட்ட பிரிச்சு ஊத்தி மாவு ரெடி பண்ணி தோசய ஊத்தி தட்டுல பொடியக் கொட்டி எண்ணைய ஊத்தி கலக்கி ஒரு தோச சுட்டதும் பிச்சு வாயில வச்சா... அய்யோ... அய்யோ.... உப்பே இல்ல. மறுபடியும் மாவுல உப்ப போட்டு கலக்கி கொஞ்சம் தோச ஊத்தி எடுத்துட்டு வந்து அப்பாடான்னு உட்காந்து பிச்சு வாயில வக்கறேன்.... மொபைல் அடிக்குது.

யார்ரா இந்த நேரத்துலன்னு கோபத்தை அடக்கிக்கிட்டு போய் எடுத்தா சென்னைல இருந்து ஒரு ப்ரெண்டு. நான் மட்டும் வீட்டுல தனியா இருக்கேன்னு எவ்வளவு பீல் பண்ணி சொல்றேன். அந்த பிசாசு ரொம்ப அக்கறையா வீட்ட நல்லா லாக் பண்ணிட்டு படுத்துக்கோ. அப்புறம் யாராவது வந்து உன்ன பார்த்து பயந்து செத்து போயிட போறாங்கன்னு சொல்லி... இதுல ஒரு சிரிப்பு வேற.... கேட்டேனா இவளை?

இந்த கொடுமைய எல்லாம் முடிச்சுட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தா... அப்படியே என் கண்ணு ரெண்டும் கலங்குது..... ஏற்கனவே என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என் கல்யாணத்தன்னைக்கு வந்து என் வீட்டுக்காரருக்காக கூட்டு பிரார்த்தனை பண்ண போறதா சொல்லுவாங்க. அவ்ளோ பாசக்கார புள்ளைங்க.

இப்ப தோச சுட்ட அனுபவத்துல நானும் அவருக்காக ப்ரே பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். நீங்களே சொல்லுங்க. என் ஒருத்திக்கு தோசை சுடவே நான் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேன். நாளைக்கு எனக்கும் சேர்த்து அவர் செய்யணும்னா அவர் எவ்வளவு கஷ்டப்படு்வாரு? இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல.......

48 comments:

நாடோடி said...

அய்யோ பாவம்.

:))

இராம்/Raam said...

//இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல....... //

ஏன் தாயி...

சாப்பிட்டா ஏழு தோசை தான் சாப்பிடுறதா....???

சுந்தர் / Sundar said...

நாட்டாம ... தலைப்ப மாத்து ..:
" அவர் சோக கதைய கேளு ப்ளாக் குலமே!!! "

சென்ஷி said...

அய்யய்யோ....
மாப்பிள்ளைக்கு என் மனமார்ந்த வருத்தங்கள்

சென்ஷி

மோகன் said...

கவலையே படாதீங்க..நல்லா தோசை சுட தெரிஞ்ச பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க...US'ல இருக்குற பசங்களுக்கு சமைக்கற்துல நல்ல அனுபவம் இருக்கும்..best of luck

கார்த்திக் பிரபு said...

kalakal ..keep goin

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
அய்யோ பாவம்.

:))

//

அய்யோ பாவம் சொல்லிட்டு சிரிக்கறீங்க???

இம்சை அரசி said...

// ராம் 덧글 내용...
//இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல....... //

ஏன் தாயி...

சாப்பிட்டா ஏழு தோசை தான் சாப்பிடுறதா....???
//

இல்லீங்க... இன்னும் நிறைய சாப்பிட்டிருப்பேன்(அதயெல்லாம் count பண்றது இல்ல. கண்ணு பட்டுடும் இல்ல).

அதான் சொன்னேனே கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியலன்னு...

இம்சை அரசி said...

// சுந்தர் 덧글 내용...
நாட்டாம ... தலைப்ப மாத்து ..:
" அவர் சோக கதைய கேளு ப்ளாக் குலமே!!! "

//

அடடா... என்னங்க இப்படி சொல்லிட்டீங்க???

என்னைய பாத்தா பாவமா இல்லயா?

இதெல்லாம் ஆவற கதை இல்ல... ஆமாம்... சொல்லிப்பிட்டேன்...

இம்சை அரசி said...

// சென்ஷி 덧글 내용...
அய்யய்யோ....
மாப்பிள்ளைக்கு என் மனமார்ந்த வருத்தங்கள்

சென்ஷி

//

ஏனுங்க கூட்டு பிரார்த்தனைல நீங்களும் சேர்ந்துட்டீங்களா???

இம்சை அரசி said...

// Mohan 덧글 내용...
கவலையே படாதீங்க..நல்லா தோசை சுட தெரிஞ்ச பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க...US'ல இருக்குற பசங்களுக்கு சமைக்கற்துல நல்ல அனுபவம் இருக்கும்..best of luck

//

அய்யோ அய்யோ...

என்னமா ஐடியா குடுக்கறீங்க!!!

ரொம்ப தேங்க்ஸூங்கோவ்.

அப்படியே பண்ணிட்டா போச்சு... :)

இம்சை அரசி said...

// கார்த்திக் பிரபு 덧글 내용...
kalakal ..keep goin

//

thank u Karthick :)

நாடோடி said...

//அய்யோ பாவம் சொல்லிட்டு சிரிக்கறீங்க???//

உலகத்த நினைச்சேன் சிரிச்சேன்.

:))

Anonymous said...

இ.அரசி,

//எட்டரை மணிக்கா எனக்கு ஏழரை ஆரம்பிக்கணும்?//
அடாடாடா! என்ன ஒரு சொற்கோர்வை..

//அடடா தொட்டுக்க என்ன செய்யறது? அம்மாகிட்ட கேக்கலாம்னு போனை எடுத்து டயல் பண்றேன்... //
அடப்பாவிகளா! இந்தக் காலத்துப் பிள்ளைங்க இவ்வளவு மோசமாவா இருப்பீங்க?

//நாளைக்கு எனக்கும் சேர்த்து அவர் செய்யணும்னா அவர் எவ்வளவு கஷ்டப்படு்வாரு?//
சே! உங்களோட நல்ல மனசு யாருக்காச்சும் புரியுதா? கவலபடாதீங்கோ... நல்லா சமைக்க தெரிஞ்ச பையனா மாட்டுவான் :-) அது வரைக்கும் 7 தோசை சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :-)

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
//அய்யோ பாவம் சொல்லிட்டு சிரிக்கறீங்க???//

உலகத்த நினைச்சேன் சிரிச்சேன்.

:))

//

இதெல்லாம் நெம்ப ஓவரு... சொல்லிப்பிட்டேன்... ஆமாம்...

இம்சை அரசி said...

// நான் 덧글 내용...
இ.அரசி,

//எட்டரை மணிக்கா எனக்கு ஏழரை ஆரம்பிக்கணும்?//
அடாடாடா! என்ன ஒரு சொற்கோர்வை..
//

அய்யோ இப்படியெல்லாம் பாராட்டாதீங்க.... என்னால ஒண்ணும் முடியல....

//அடடா தொட்டுக்க என்ன செய்யறது? அம்மாகிட்ட கேக்கலாம்னு போனை எடுத்து டயல் பண்றேன்... //
அடப்பாவிகளா! இந்தக் காலத்துப் பிள்ளைங்க இவ்வளவு மோசமாவா இருப்பீங்க?

//

ஏனுங்ணா அம்மாகிட்ட கேட்டு செய்யறது அவ்வளவு பெரிய உலக மகா குத்தமுங்களாண்ணா???

//நாளைக்கு எனக்கும் சேர்த்து அவர் செய்யணும்னா அவர் எவ்வளவு கஷ்டப்படு்வாரு?//
சே! உங்களோட நல்ல மனசு யாருக்காச்சும் புரியுதா? கவலபடாதீங்கோ... நல்லா சமைக்க தெரிஞ்ச பையனா மாட்டுவான் :-) அது வரைக்கும் 7 தோசை சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க :-)

//

:( என்ன பண்றது???

எல்லாம் தலையெழுத்து... அட்ஜஸ்ட் பண்ணிதானுங்களே ஆகணும்...

G.Ragavan said...

// என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என் கல்யாணத்தன்னைக்கு வந்து என் வீட்டுக்காரருக்காக கூட்டு பிரார்த்தனை பண்ண போறதா சொல்லுவாங்க. அவ்ளோ பாசக்கார புள்ளைங்க.//

இப்படிப் பட்ட ஆருயிர் நண்பர்கள் கிடைக்க நீங்க கொடுத்து வெச்சிருக்கனும்.

// இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல....... //

நாளைக்கு உங்ககூட உக்காந்து சாப்பிடப் போறவங்கள நெனச்சேன்..ம்ம்ம்..பாவம்.

ஜி said...

ஏன் இந்த கொலவெறி? இல்ல ஏன்னு கேக்குறேன்...

வீட்ட விட்டு வெளில வந்து நல்ல சாப்பாடு சாப்ட முடியாம, சரி கல்யாணம் ஆனதுக்கப்புறமாவது, பொண்டாட்டி சமைச்சி போடுவான்னு நெனச்சிக்கிட்டு இருந்தா...

ஒட்டுமொத்த பெண்குலத்துக்கும் இப்படி ஐடியா கொடுத்து, அவங்க ஃபொக்கஸ டைவர்ட் பண்றீங்களே... இது நியாயமா?

நாமக்கல் சிபி said...

//அந்த பிசாசு ரொம்ப அக்கறையா வீட்ட நல்லா லாக் பண்ணிட்டு படுத்துக்கோ. அப்புறம் யாராவது வந்து உன்ன பார்த்து பயந்து செத்து போயிட போறாங்கன்னு சொல்லி... இதுல ஒரு சிரிப்பு வேற.... கேட்டேனா இவளை?//
ரொம்ப க்ளோஸ் ஃபிரெண்டோ ;)

//இப்ப தோச சுட்ட அனுபவத்துல நானும் அவருக்காக ப்ரே பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். நீங்களே சொல்லுங்க. என் ஒருத்திக்கு தோசை சுடவே நான் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேன். நாளைக்கு எனக்கும் சேர்த்து அவர் செய்யணும்னா அவர் எவ்வளவு கஷ்டப்படு்வாரு? இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல.......//
அந்த அப்பாவிக்காக நாங்களும் வேண்டிக்கறோம் :-)

கோபிநாத் said...

\\அதான் சொன்னேனே கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியலன்னு...\\

உண்மையாவ.. இல்ல... மாவு இல்லையா...

\\ கூட்டு பிரார்த்தனை பண்ண போறதா சொல்லுவாங்க. அவ்ளோ பாசக்கார புள்ளைங்க.\\

தேதி சொல்லி ஒரு பதிவு போடுங்க நானும் பிராத்திக்கிறேன்.

இம்சை அரசி said...

// G.Ragavan 덧글 내용...
// என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என் கல்யாணத்தன்னைக்கு வந்து என் வீட்டுக்காரருக்காக கூட்டு பிரார்த்தனை பண்ண போறதா சொல்லுவாங்க. அவ்ளோ பாசக்கார புள்ளைங்க.//

இப்படிப் பட்ட ஆருயிர் நண்பர்கள் கிடைக்க நீங்க கொடுத்து வெச்சிருக்கனும்.
//

ஹி... ஹி... ஹி....
இதை விட கேவலமா அவளுங்களை நான் ஓட்டியிருக்கேன்

// இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல....... //

நாளைக்கு உங்ககூட உக்காந்து சாப்பிடப் போறவங்கள நெனச்சேன்..ம்ம்ம்..பாவம்.

//

ச்சேச்சே... கூட உக்காந்து சாப்பிடறவங்களுத பிடுங்கி சாப்பிடற பழக்கம் எல்லாம் நமக்கு இல்லீங்க... அதனால பயப்பட வேண்டாம்...

இம்சை அரசி said...

// ஜி 덧글 내용...
ஏன் இந்த கொலவெறி? இல்ல ஏன்னு கேக்குறேன்...

வீட்ட விட்டு வெளில வந்து நல்ல சாப்பாடு சாப்ட முடியாம, சரி கல்யாணம் ஆனதுக்கப்புறமாவது, பொண்டாட்டி சமைச்சி போடுவான்னு நெனச்சிக்கிட்டு இருந்தா...

ஒட்டுமொத்த பெண்குலத்துக்கும் இப்படி ஐடியா கொடுத்து, அவங்க ஃபொக்கஸ டைவர்ட் பண்றீங்களே... இது நியாயமா?

//

அய்யோ என்னங்க என் மேல இவ்வளவு பெரிய பழிய போடறீங்க??? ஏதோ என்னோட அனுபவத்த சொன்னேன்.

இதுல இருந்து நீங்க கத்துக்க வேண்டிய பாடம் ஒண்ணு இருக்கு. அது ஏன் யாருக்கும் புரிய மாட்டேன்றதுன்னே தெரியல!!!

"உங்க நெனப்பு பின்னாடி பொய்யா போக வாய்ப்புகள் அதிகம். அதனால இப்பவே சமைக்க கத்துக்கிட்டா நாளைக்கு உங்களுக்கும் பிரச்சினை இல்ல. உங்க வீட்டம்மாகிட்டயும் சபாஷ் வாங்கலாம்"

இப்படியெல்லாம் நீங்க திட்டறதை கூட பொருட்படுத்தாம உங்களுக்கு ஐடியா தரேன். நீங்க என்னடான்னா.......

இம்சை அரசி said...

// வெட்டிப்பயல் 덧글 내용...
//அந்த பிசாசு ரொம்ப அக்கறையா வீட்ட நல்லா லாக் பண்ணிட்டு படுத்துக்கோ. அப்புறம் யாராவது வந்து உன்ன பார்த்து பயந்து செத்து போயிட போறாங்கன்னு சொல்லி... இதுல ஒரு சிரிப்பு வேற.... கேட்டேனா இவளை?//
ரொம்ப க்ளோஸ் ஃபிரெண்டோ ;)
//

எப்படிங்ணா கண்டுபிடிச்சீங்க??!!!

//இப்ப தோச சுட்ட அனுபவத்துல நானும் அவருக்காக ப்ரே பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். நீங்களே சொல்லுங்க. என் ஒருத்திக்கு தோசை சுடவே நான் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேன். நாளைக்கு எனக்கும் சேர்த்து அவர் செய்யணும்னா அவர் எவ்வளவு கஷ்டப்படு்வாரு? இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல.......//
அந்த அப்பாவிக்காக நாங்களும் வேண்டிக்கறோம் :-)
//

ரொம்ப தேங்க்ஸூங்கோவ்....

இம்சை அரசி said...

// கோபிநாத் 덧글 내용...
\\அதான் சொன்னேனே கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியலன்னு...\\

உண்மையாவ.. இல்ல... மாவு இல்லையா...

//

மாவு எல்லாம் இருந்தது. நெஜமாவே மனசு கஷ்டமா இருந்ததாலதான் சாப்பிட முடியல....

ரொம்ப இளகின மனசுங்க....

\\ கூட்டு பிரார்த்தனை பண்ண போறதா சொல்லுவாங்க. அவ்ளோ பாசக்கார புள்ளைங்க.\\

தேதி சொல்லி ஒரு பதிவு போடுங்க நானும் பிராத்திக்கிறேன்.
//

கண்டிப்பா சொல்றேங்க.....

Yogi said...

// இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல....... //

என்னங்க .. ரொம்ப கம்மியா சொல்றிங்க .. உடம்புக்கு ஏதும் முடியலையா ?

Anonymous said...

ஹலோ எனக்கு நல்லா தோசை சுட வரும்.

ஹி... ஹி... ஹி....

--Guy from chennai

நாமக்கல் சிபி said...

//இம்சை அரசி said...

// வெட்டிப்பயல் 덧글 내용...
//அந்த பிசாசு ரொம்ப அக்கறையா வீட்ட நல்லா லாக் பண்ணிட்டு படுத்துக்கோ. அப்புறம் யாராவது வந்து உன்ன பார்த்து பயந்து செத்து போயிட போறாங்கன்னு சொல்லி... இதுல ஒரு சிரிப்பு வேற.... கேட்டேனா இவளை?//
ரொம்ப க்ளோஸ் ஃபிரெண்டோ ;)
//

எப்படிங்ணா கண்டுபிடிச்சீங்க??!!!//

நண்பர்கள் தானே தைரியமா உண்மைய சொல்லுவாங்க... அதனால தான் ;)

Santhosh said...

ஆனாலும் உங்களுக்கு தகிறீயம் அதிகம் நீங்க சுட்ட தோசையை நீங்களே சாப்பிட்டு இருக்கீங்க அதுவும் தனியா இருக்கும் பொழுது.
// இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல....... //
ஒடம்பை பாத்துகோங்க இ.அ, இப்படி எல்லாம் கஷடப்படாதிங்க. அடுத்த முறை இந்த மாதிரி ஒரு நிலைமை வந்தா நான் இங்க பண்ணி இருக்குற மாதிரி ஒரு மாநாடை கூட்டிடுங்க :))..

இம்சை அரசி said...

// யோகேஸ்வரன் 덧글 내용...
// இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல....... //

என்னங்க .. ரொம்ப கம்மியா சொல்றிங்க .. உடம்புக்கு ஏதும் முடியலையா ?

//

ஒரே சோகம்... அதான் சாப்பிட முடியலங்ணா... மத்தபடி இப்ப நல்லாதான் சாப்பிட்டுட்டு இருக்கேன்...

உங்க பாசத்தை நெனக்கும்போது அப்படியே புல்லரிக்குது....

நாடோடி said...

//இதெல்லாம் நெம்ப ஓவரு... சொல்லிப்பிட்டேன்... ஆமாம்...//

டெஸ்ட் மேட்சா இருந்தாக்கூட ஒரு நாளைக்கு அதிகமா 90 ஓவருதான். அதுக்குமேல முடியாது.

:)))) (திரும்பவும் உலகத்த நினைச்சேன்)

:((( (அந்த பாவ பட்ட அப்பாவிக்கு. ஏழே ஏழு ஜென்மத்துக்கும் விமோச்சனமே இல்ல போல அந்த அப்பாவிக்கு).

நாடோடி said...

//நண்பர்கள் தானே தைரியமா உண்மைய சொல்லுவாங்க... அதனால தான் ;)//

வெட்டி நீ என்னைப்போல் ஒரு அறிவாளி என்பதை நிறுபித்துவிட்டாய்.பலே.. பலே..

:))

ஜி said...

//இப்படியெல்லாம் நீங்க திட்டறதை கூட பொருட்படுத்தாம உங்களுக்கு ஐடியா தரேன். நீங்க என்னடான்னா.......//

உண்மையிலேயே நீங்க இம்சை அரசிதாங்க...

இம்சை அரசி said...

//Anonymous said...

ஹலோ எனக்கு நல்லா தோசை சுட வரும்.

ஹி... ஹி... ஹி....

--Guy from chennai//

உங்க wife கொடுத்துவச்சங்கண்ணோவ்!

இந்த மாதிரியே உலகத்துல எல்லாரும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்

இம்சை அரசி said...

// வெட்டிப்பயல் 덧글 내용...
//இம்சை அரசி said...

// வெட்டிப்பயல் 덧글 내용...
//அந்த பிசாசு ரொம்ப அக்கறையா வீட்ட நல்லா லாக் பண்ணிட்டு படுத்துக்கோ. அப்புறம் யாராவது வந்து உன்ன பார்த்து பயந்து செத்து போயிட போறாங்கன்னு சொல்லி... இதுல ஒரு சிரிப்பு வேற.... கேட்டேனா இவளை?//
ரொம்ப க்ளோஸ் ஃபிரெண்டோ ;)
//

எப்படிங்ணா கண்டுபிடிச்சீங்க??!!!//

நண்பர்கள் தானே தைரியமா உண்மைய சொல்லுவாங்க... அதனால தான் ;)

//

ஆனாலும் உங்க அம்மா உங்கள இவ்வளோ அறிவாளி புள்ளயா பெத்திருக்க கூடாது..........

இம்சை அரசி said...

// சந்தோஷ் 덧글 내용...
ஆனாலும் உங்களுக்கு தகிறீயம் அதிகம் நீங்க சுட்ட தோசையை நீங்களே சாப்பிட்டு இருக்கீங்க அதுவும் தனியா இருக்கும் பொழுது.
//

அய்யோ இப்படியெல்லாம் புகழகூடாது...
ஏதோ என் தைரியத்தப் பத்தி உங்களுக்காவது தெரிஞ்சதே.......

// இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல....... //
ஒடம்பை பாத்துகோங்க இ.அ, இப்படி எல்லாம் கஷடப்படாதிங்க. அடுத்த முறை இந்த மாதிரி ஒரு நிலைமை வந்தா நான் இங்க பண்ணி இருக்குற மாதிரி ஒரு மாநாடை கூட்டிடுங்க :))..

//

உங்க பதிவ படிக்காம விட்டதால எனக்கு எவ்வளசு கஷ்டம் பாருங்க சந்தோஷ்... இனிமே இந்த மாதிரி தப்பு நடக்காம பாத்துக்கறேனுங்க....

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
//இதெல்லாம் நெம்ப ஓவரு... சொல்லிப்பிட்டேன்... ஆமாம்...//

டெஸ்ட் மேட்சா இருந்தாக்கூட ஒரு நாளைக்கு அதிகமா 90 ஓவருதான். அதுக்குமேல முடியாது.
//

ஓ! அப்படியா சங்கதி??? எனக்கு இத்தன நாளா தெரியவே தெரியாதுங்க....

//:)))) (திரும்பவும் உலகத்த நினைச்சேன்)

:((( (அந்த பாவ பட்ட அப்பாவிக்கு. ஏழே ஏழு ஜென்மத்துக்கும் விமோச்சனமே இல்ல போல அந்த அப்பாவிக்கு).

//

ஏங்க சோகம்னு சொல்லி அழுதா எனக்கு ஆறுதல் சொல்றத விட்டுட்டு யாரோ பத்தி கவலப்பட்டுட்டு இருக்கீங்க...

ஆனாலும் உங்களுக்கு மனசாட்சியே இல்லீங்க....

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
//நண்பர்கள் தானே தைரியமா உண்மைய சொல்லுவாங்க... அதனால தான் ;)//

வெட்டி நீ என்னைப்போல் ஒரு அறிவாளி என்பதை நிறுபித்துவிட்டாய்.பலே.. பலே..

:))

//

அதை நாங்க சொல்லணும். நீங்களாவே சொல்லிக்க கூடாதுங்ணோவ்....

இம்சை அரசி said...

// ஜி 덧글 내용...
//இப்படியெல்லாம் நீங்க திட்டறதை கூட பொருட்படுத்தாம உங்களுக்கு ஐடியா தரேன். நீங்க என்னடான்னா.......//

உண்மையிலேயே நீங்க இம்சை அரசிதாங்க...

//

ஹி... ஹி...

பேர காப்பாத்த எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு.... ஸ்ஸ்ஸ்... அப்பா.... இப்பவே கண்ண கட்டுதே....

k4karthik said...

//நாளைக்கு எனக்கும் சேர்த்து அவர் செய்யணும்னா அவர் எவ்வளவு கஷ்டப்படு்வாரு? இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல.......//

இது ரொம்ப toomuch-ங்க...

இம்சை அரசி said...

// k@rthik 덧글 내용...
//நாளைக்கு எனக்கும் சேர்த்து அவர் செய்யணும்னா அவர் எவ்வளவு கஷ்டப்படு்வாரு? இத நெனச்சு நெனச்சுதாங்க கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியல.......//

இது ரொம்ப toomuch-ங்க...

//

ஏங்க இவ்வளவு கம்மியா சாப்பிட்டிருக்கேன்னு எவ்வளவு feel பண்ணி சொல்றேன். நீங்க என்னடான்னா too much-னு சொல்றீங்க???

ஆனாலும் உங்களுக்கு மனசாட்சியே இல்லீங்க...

இம்சை அரசி said...

// daya said...
யக்கோய்.. இது உங்க சோக கதை இல்லை.. வரப்போர மாமனோட சோக கதை..
//

ஹி... ஹி... ஹி... :))

Anonymous said...

ammadi, antha last line a vaasicha udane, vandha siripa adkkave mudiyala.

மங்களூர் சிவா said...

நாட்டாம ... தலைப்ப மாத்து ..:
" அவர் சோக கதைய கேளு ப்ளாக் குலமே!!! "

மங்களூர் சிவா said...

// daya said...
யக்கோய்.. இது உங்க சோக கதை இல்லை.. வரப்போர மாமனோட சோக கதை..
//

repeateyyyyyy

மங்களூர் சிவா said...

// என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என் கல்யாணத்தன்னைக்கு வந்து என் வீட்டுக்காரருக்காக கூட்டு பிரார்த்தனை பண்ண போறதா சொல்லுவாங்க. அவ்ளோ பாசக்கார புள்ளைங்க.//

senjiduvOm

மங்களூர் சிவா said...

//அந்த பிசாசு ரொம்ப அக்கறையா வீட்ட நல்லா லாக் பண்ணிட்டு படுத்துக்கோ. அப்புறம் யாராவது வந்து உன்ன பார்த்து பயந்து செத்து போயிட போறாங்கன்னு சொல்லி... இதுல ஒரு சிரிப்பு வேற.... கேட்டேனா இவளை?//
ரொம்ப க்ளோஸ் ஃபிரெண்டோ ;)

மங்களூர் சிவா said...

\\அதான் சொன்னேனே கண்ணு கலங்கினதுல ஏழு தோசைக்கு மேல என்னால சாப்பிடவே முடியலன்னு...\\

உண்மையாவ.. இல்ல... மாவு இல்லையா...

லெனின் பொன்னுசாமி said...

sema comedingka..:)

super..