Tuesday, January 29, 2008

இம்சை அரசியின் எழுத்துக்களில் எனக்குப் பிடித்தது


நம்ம ஜொள்ளுத்தம்பிக்கு நான் சும்மா இருக்கறதுப் பாத்து ஒரே பொறாமை. நீ எப்படிக்கா சும்மா இருக்கலாம்னு வயிறெரிஞ்சாரா... அதோட விட்டிருக்கனும். அதை விட்டுட்டு உனக்குப் பிடிச்ச பதிவு என்னன்னு எழுதுனு என்னையும் கோர்த்து விட்டுட்டாரு. சரி போன வருஷம் அப்டி என்னதான் நாம எழுதிருக்கோம்னு கொஞ்சம் அப்படியேக்கா தலைய உள்ள விட்டுப் பாத்தேன். ஓ மை காட்! 55 பதிவுகள் எழுதியிருக்கேன் :O நானா? நானா?? நானா???-ன்னு நாலாப் பக்கமும் ஒரே எக்கோவா அடிக்குது. ஒரு வாழைப்பழ சோம்பேறி நானே இவ்ளோ எழுதி இருக்கேனா அது ரொம்ப பெரிய சாதனைதானே...

ஹ்ம்ம்ம்... எனக்குப் பிடிச்ச பதிவு என்னன்னு ஒரு வாரமா ஒரே ஆராய்ச்சி. ஆரய்ச்சி பண்ணினதுல வலைச்சரம் ஆசிரியர் ரேஞ்சுக்குப் பதிவுப் போட வேண்டியதாயிடுச்சு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கப்பு ;)))

கவிதைகள் எழுத நான் முயற்சி செய்து ஓரளவு சுமாராக வந்த கோபமாய் வருகிறது, வெறித்தனமாய் காதலிக்கிறேன், என்ன ஒரு வில்லத்தனம், எங்கே நீ சென்றாயோ கவிதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வெறித்தனமாய் காதலிக்கிறேன் கவிதை எனக்கே ரெண்டு தடவை ஃபார்வார்ட் மெயிலல் வந்துடுச்சு. நம்மளோடது கூட ஃபார்வர்ட் பண்ற அளவுக்கு இருக்கானு எனக்கு ஒரே ஆச்சர்யம் :)))

அப்புறம் சும்மா லுலுலா பதிவுகள்ல எடுத்த சபதம் முடிப்பேன் ரொம்ப பிடிச்ச ஒண்ணு. அது கூட ஃபார்வார்ட்ல சுத்துச்சுனு கேள்விப்பட்டேன். ஆனா எனக்கு வரலை.

தொடர் கதைகள்னு எடுத்துக்கிட்டா வலி மற்றும் அத்தை மகனே அத்தானே. இந்த அத்தை மகனே அத்தானே பத்தி வலைச்சரத்துல நிறைய தடவை எழுதினாங்க. பாரி அரசு அவரது தமிழ்மண வாசிப்பில் என்ற பதிவிலும் இதைப் பற்றி எழுதி இருந்தார். இந்த ரெண்டு கதையும் நிறைய பேர் ரொம்ப நல்லா இருக்குனு சொன்னாங்க.

சிறுகதை எழுத நிறைய தடவை ட்ரை பண்ணிட்டேன். எனக்கு ரொம்ப நல்லா வராது. இப்போதான் கொஞ்சம் முன்னேறி இருக்கேன். அப்டி நான் நல்லா எழுதினதா நினைக்கற ஒரு கதை காலம் கரைந்தாலும். ரொம்ப நாளா எழுதணும்னு யோசிச்சு வச்சிருந்த கதை. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது.

அப்புறம் ரொம்ப முக்கியமானது இதே மாதிரி Tag பண்ணினதுல எழுதின அழகென்ற சொல்லுக்கு. என்னோட சிறந்தப் பதிவுக்கு வாக்களிக்க சொன்னா நிறைய பேர் இதைதான் சொல்வாங்க. வலைச்சரத்துலக் கூட வந்துச்சு.

நம்மளோட லிஸ்ட் இதுதாங்க. அப்டியே நம்ம நட்பு வட்டாரத்துல எல்லாம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்திட்டேன்.

1. அண்ணன் CVRக்குப் பிடிச்சது அத்தை மகனே அத்தானே.
2. தல ஜி சொன்னது எடுத்த சபதம் முடிப்பேன் மற்றும் அழகென்ற சொல்லுக்கு.
3. செல்லத் தங்கச்சி மைஃப்ரெண்ட் சொன்னது அழகென்ற சொல்லுக்கு.
4. சிறுகதை சூறாவளி தேவ் அண்ணாவுக்கு பிடிச்சது காலம் கரைந்தாலும மற்றும் கோடி நன்றிகள். இது என் பிறந்த நாளுக்காக போட்டப் பதிவு.
5. கடைசி தங்கச்சி துர்காவுக்கு பிடிச்சது அத்தை மகனே அத்தானே.
6. மோகன்தாஸுக்கு பிடித்ததும் அத்தை மகனே அத்தானே.
7. ஐயப்பன்(ஜீவ்ஸ்) அண்ணாச்சி சொன்னது அத்தை மகனே அத்தானே.
8. நம்ம ஜொள்ளுத் தம்பிக்கு பாய் ஃப்ரெண்ட் தேவையா பதிவுதான் ரொம்ப பிடிக்குமாம். இதைப் படிச்சப்போ தரைல விழுந்து புரண்டு சிரிச்சாராம். அப்படி சிரிக்கற அளவுக்கு அதுல என்னங்க இருக்குனு கேட்டதுக்கு அதுல மொத paragraph-ல கடைசி லைன படிச்சிட்டு அவரால சிரிப்ப அடக்கவே முடியலையாம். grrrrrrr........ என்ன ஒரு வில்லத்தனம்???

சரி இதுல எதைப் போடலாம்னு என் குருவி மூளைய கசக்கி கசக்கி யோசிச்சேன். ஹ்ம்ம்ம். உனக்கு உன் பெரிய பிள்ளை பிடிக்குமா இல்ல சின்னப் பிள்ளையப் பிடிக்குமானு கேட்டா என்ன சொல்வீங்க? ரெண்டுமே ரொம்ப பிடிக்கும்னுதானே சொல்வீங்க. அதே மாதிரிதான். என்னோடப் படைப்புகள் என் பிள்ளைகள். அதுல இதைதான்னு தனியா குறிப்பிட்டு சொல்ல முடியாது. அதனால என்னோடதுல எனக்குப் பிடிச்ச பதிவுனா நான் எழுதின எல்லாமேதான் :)))

அப்புறம் ஏன் இங்க கொஞ்சம் பதிவுகள் பத்திதான் சொல்லி இருக்கனு கேக்கறீங்களா. என் பெரிய பையன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினா அதைப் பத்தி மட்டும்தான் சொல்வேன். கூடவே என் ரெண்டாவது பையன் பத்தாவது ரேங்க் வாங்கினானு சொல்ல மாட்டேன். அது மாதிரிதான் இதுவும் ;)))

சரி இப்போ நான் யாரையாவது எழுத சொல்லணுமே... இவங்களை எல்லாம் கூப்பிடலாம்னு யோசிச்சேன்.

 • அபி அப்பா
 • CVR
 • தேவ் அண்ணா
 • ஜி
 • கப்பி
 • மைப்ரெண்ட்
 • துர்கா
 • மோகன்தாஸ்
 • ஜீவ்ஸ் அண்ணா
 • கோபி அண்ணா
 • G3
 • அனுசுயா
 • கண்மணி அக்கா
 • புலி
 • சிபி அண்ணா
 • இளா அண்ணா
 • ராம் தம்பி
அப்புறம்தான் தோணுச்சு. ஒரு வாழைப்பழ சோம்பேறி நானே எழுதிட்டேன். இவங்க எல்லாம் இன்னுமா எழுதாம இருப்பாங்கன்னு பேசாம விட்டுட்டேன் :)))

27 comments:

Dreamzz said...

நல்லா இருங்க :)

Dreamzz said...

//வெறித்தனமாய் காதலிக்கிறேன்! //
இந்த கவிதை இப்ப தான் படிச்சேன்.. நல்லா இருக்கு :)

இம்சை அரசி said...

// Dreamzz said...

நல்லா இருங்க :)
//

இதுல எந்த உள்குத்தும் இல்லையே??? ;)))

இம்சை அரசி said...

// Blogger Dreamzz said...

//வெறித்தனமாய் காதலிக்கிறேன்! //
இந்த கவிதை இப்ப தான் படிச்சேன்.. நல்லா இருக்கு :)

//

டேங்க்ஸ் :)))

நிவிஷா..... said...

நல்லா எழுதி இருக்கீங்க..

Puthusa kadai open panni irukken.. etti paarunga.. time kidaikarappo

நட்போடு
நிவிஷா!

நிவிஷா..... said...

//இதுல எந்த உள்குத்தும் இல்லையே??? ;)))//
இதெல்லாம் இப்படி ஓபனா கேட்கலாமோ :P

நிவிஷா..... said...

//டேங்க்ஸ் :)))//
சொன்ன உடன் நம்பறீங்க.. ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே :)

இம்சை அரசி said...

// Blogger நிவிஷா..... said...

நல்லா எழுதி இருக்கீங்க..

Puthusa kadai open panni irukken.. etti paarunga.. time kidaikarappo

நட்போடு
நிவிஷா!
//

நன்றி...

வந்துட்டே இருக்கேன் உங்க கடைக்கு :)))

Dreamzz said...

//இதெல்லாம் இப்படி ஓபனா கேட்கலாமோ :P//
adapaavigala.. oruthan commenta pottutu pona udane athula pidichu ingana gummiya???

enna koduma ithu...

aana sonnadhu ennamo correct..

Dreamzz said...

//சொன்ன உடன் நம்பறீங்க.. ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே :)//
repeatu :)
athellam oru pechuku solradhu ;)

seriousave nalla thaanunga irundhuchu

Dreamzz said...

gummi stopped? appo me the S..

இம்சை அரசி said...

// Blogger நிவிஷா..... said...

//இதுல எந்த உள்குத்தும் இல்லையே??? ;)))//
இதெல்லாம் இப்படி ஓபனா கேட்கலாமோ :P
//

வாங்காத ஆப்பா? இதெல்லாம் ச்சும்மா சாதாரணம் ;)))

இம்சை அரசி said...

// Blogger நிவிஷா..... said...

//டேங்க்ஸ் :)))//
சொன்ன உடன் நம்பறீங்க.. ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே :)
//

என்ன பண்றது??? பேசிக்காவே நான் ரொம்ப நல்ல பொண்ணு. ஒரு அப்பாவிப் பொண்ணு

Dreamzz said...

//வாங்காத ஆப்பா? இதெல்லாம் ச்சும்மா சாதாரணம் ;)))//

//என்ன பண்றது??? பேசிக்காவே நான் ரொம்ப நல்ல பொண்ணு. ஒரு அப்பாவிப் பொண்ணு//

ungalke ithu rendum contradictorya illaiya IA ?? hehe

இம்சை அரசி said...

// Blogger Dreamzz said...

//இதெல்லாம் இப்படி ஓபனா கேட்கலாமோ :P//
adapaavigala.. oruthan commenta pottutu pona udane athula pidichu ingana gummiya???

enna koduma ithu...

aana sonnadhu ennamo correct..
//

போஸ்ட் போட்ட அடுத்த நிமிஷமே நீங்க கமெண்ட் போடலையா? அதே மாதிரிதான்... :P:P:P

துர்கா said...

நான் இன்னும் இந்த tag எழுதவில்லை.ஏன் ன்னு நான் சொல்லிதான் தெரியனுமா :P
நான் ஒரு சோம்பேறி.
எனக்கு பிடிச்சது எல்லாரும்க்கும் ரொம்ப பிடிச்சு இருக்கு போல ;)

Dreamzz said...

//போஸ்ட் போட்ட அடுத்த நிமிஷமே நீங்க கமெண்ட் போடலையா? அதே மாதிரிதான்... :P:P:P//

comment podarathu oru thappa? ellam indha google reader kaaranam
:P:P:P:P

Kamal said...

வெறித்தனமாய் காதலிக்கிறேன், பாய் ஃப்ரெண்ட் தேவையா
இது ரெண்டும் இப்போதான் படிச்சேன் ரெண்டும் சூப்பர்!!!!!
அதுலயும் "பாய் ஃப்ரெண்ட் தேவையா" அல்டிமேட் :)))
இது உங்களுக்கு திரில்லரா இருந்தாலும் படிக்கும் போது செம காமிடியா இருக்கு
ரொம்ப நல்லா எழுதுறீங்க!!!!! keep going :)))))))

NejamaNallavan said...

///அப்புறம் ரொம்ப முக்கியமானது இதே மாதிரி Tag பண்ணினதுல எழுதின அழகென்ற சொல்லுக்கு. என்னோட சிறந்தப் பதிவுக்கு வாக்களிக்க சொன்னா நிறைய பேர் இதைதான் சொல்வாங்க. வலைச்சரத்துலக் கூட வந்துச்சு.///'அழகென்ற சொல்லுக்கு' எனக்கு பிடிச்ச ரொம்ப நல்ல பதிவு.

கோபிநாத் said...

அழகென்ற சொல்லுக்கு, அத்தை மகனே அத்தானே மற்றும் இதயம் ரோஜா காதல் முள் இந்த பதிவுகள் எனக்கு பிடித்த பதிவுகள் :))

\\என் பெரிய பையன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினா அதைப் பத்தி மட்டும்தான் சொல்வேன். கூடவே என் ரெண்டாவது பையன் பத்தாவது ரேங்க் வாங்கினானு சொல்ல மாட்டேன். அது மாதிரிதான் இதுவும் ;)))\\

யப்பா..எப்படி எல்லாம் சமாளிக்கிறிங்க..சூப்பர் ;)

Anonymous said...

எனக்கு என்னமோ 'ஓடா போன்' தான் பிடித்திருந்தது.

தேவ் | Dev said...

ஒரு வழியா எழுதியாச்சா :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மைப்ரெண்ட்

அப்புறம்தான் தோணுச்சு. ஒரு வாழைப்பழ சோம்பேறி நானே எழுதிட்டேன். இவங்க எல்லாம் இன்னுமா எழுதாம இருப்பாங்கன்னு பேசாம விட்டுட்டேன் :)))//

யக்கா.. செம்ம டைரெக்ட் வெளிக்குத்து. :-)))))

இதுக்குதான் நேத்து எழுதிட்டியான்ன்னு கேட்டீங்களா?:-P

J K said...

//Anonymous said...
எனக்கு என்னமோ 'ஓடா போன்' தான் பிடித்திருந்தது.//

:)

ஜொள்ளுப்பாண்டி said...

யக்கோவ்... ரொம்ப டேங்ஸுங்கோ...
ஏதோ நம்மளையும் மதிச்சு எழுதிபுட்டீயளே .. உங்களுக்கு என் கையால ஒரு பில்டர் காபி போட்டுத்தாறேன்.... ;))))

ஜொள்ளுப்பாண்டி said...

என்னா இம்சையக்கா புடிச்சது எழுத சொன்னா நீங்க உங்க எல்லா பதிவுக்கும் ஏதோ தேர்தல் வாக்கெடுப்பு நடத்துர ரேஞ்சுக்கு வாக்கெடுப்பெல்லாம் நடத்தி கெளப்பீட்டியளே.... கலக்குறீங்க போங்க...:))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//மொத paragraph-ல கடைசி லைன படிச்சிட்டு அவரால சிரிப்ப அடக்கவே முடியலையாம். grrrrrrr........ என்ன ஒரு வில்லத்தனம்???//

ஹஹஹஹஹஹ.:)))

அட இதுல என்னா இருக்கு வில்லத்தனம்..?? ;))))) சாம்பிளுக்கு கீழே கொடுத்துருக்கோம்ல...????

//ஓ மை காட்!!!!! ஒருத்தன் என்னையே பாத்துட்டு இருக்கான். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ எவ்ளோ தைரியம்??? ஒரு பொண்ணு அழகா இருந்துட கூடாதே.........//

:)))))))))))))))))))))