Monday, January 21, 2008

பதில் கூறு ப்ளாக் உலகே!


காதல் - இந்த வார்த்தை மனிதனை எவ்வளவு பாடுபடுத்துகிறது. இந்த வார்த்தை எப்படி இந்த அளவு நமக்கு பரிச்சயமானது? இதற்கான பதிலில் பெரும்பங்கு வகிப்பவை திரைப்படங்களும் இலக்கியங்களும்தான். காதல் இல்லாத திரைப்படம் ஒன்றை கூறி விடுங்கள் பார்க்கலாம். வேறு ஏதேனும் கருப்பொருளைக் கொண்டிருந்தாலும் பழி வாங்குவதில், நகைச்சுவையில் அல்லது வேறு எப்படியாவது இந்த காதல் வந்து விடுகிறது. திரைப்படத்துறை இன்று இந்த அளவிற்கு வளர்ந்தது என்றால் அது இந்த காதல் என்ற வார்த்தையால் மட்டும்தான் என்கிறேன். என்ன சொல்லுகிறீர்கள்? இலக்கியங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அன்றைய திருவள்ளுவர் முதல் இன்றைய பா.விஜய் வரை காதலில் வெளுத்து வாங்குகிறார்கள். இப்படி எல்லாருமாய் சேர்ந்து செய்ததின் விளைவு பள்ளி சேருமுன்னே ஒவ்வொரு குழந்தையும் கற்றுக் கொள்கிற ஒரு அத்தியாவசிய வார்த்தையாகி விட்டது.

எங்கள் அலுவலக HR-க்கு வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்தப் பெண் அவள் தெருவில் இருக்கும் ஒரு பையனை உயிருக்கு உயிராய் நேசிப்பதாயும், ஆனால் அவளது பெற்றோர் இந்த வேலையில் சேரச் சொல்லி வற்புறுத்துவதாயும், அவளுக்கு அவனை விட்டு வருவதற்கு மனமில்லையென்றும் இந்த வேலையை எப்படி முறைப்படி வேண்டாமென்று சொல்வது என்று கேட்டும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள். அதைப் பார்த்ததும் காதல் இப்படியெல்லாம் கூட படுத்துமா என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டேன்.

இதைப் பற்றி பேசும்போது கண்டிப்பாக எனது பன்னிரெண்டாவது வகுப்பில் என்னுடன் விடுதியில் தங்கிப் படித்த ஒரு பெண்ணைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவள் எப்பொழுதுப் பார்த்தாலும் படித்துக் கொண்டேயிருப்பாள். எப்பொழுது தூங்கிகிறாள். எப்பொழுது எழுகிறாள் என்றே தெரியாது. அவள் தூங்கி நான் பார்த்ததேயில்லை. டாக்டராக வேண்டுமென்ற வெறியோடுப் படித்தாள். நான் அவளை வெகு ஆச்சர்யமாகவும் மரியாதையாகவும் பார்ப்பேன். லட்சியத்தை அடைவதற்கு எவ்வளவு வருத்திக் கொள்கிறாள் என்று. பின்பு ஒரு நாள் என் தோழி ஒருத்தி சொன்னாள். அவளுக்கும் அவளது அண்ணனின் நண்பனுக்கும் காதல் என்று. அவள் வீட்டில் அந்த விஷயம் தெரிந்து அவளது அப்பா நீ டாக்டரானால் கண்டிப்பாக அவனுக்கே திருமணம் செய்து வைக்கிறேன் என்றாராம். அதற்குத்தான் உயிரைக் கொடுத்துப் படிக்கிறாளாம். இதைக் கேட்டதும் என்னால் ஆச்சர்யத்தை தாங்கவே முடியவே இல்லை. இப்படியும் இருப்பார்களா என்று. அவள் என்ன ஆனாள் என்றுதான் தெரியவில்லை :(

இதற்கு மேல் காதலை உங்களுக்கு அறிமுகப்படுத்த எனக்குத் தெரியவில்லை. இன்னும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் என்னை விட ஏழெட்டு வயது பெரியவர் என்றாலும் அவரது வயதைக் குறைத்துக் கொள்வதற்காக என்னை அன்போடு அக்கா என்றழைக்கும் நமது பாசக்கார அண்ணன் CVR, முனைவர் பட்டம் பெற வேண்டி காதலைப் பற்றி செய்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைத்தான் நீங்கள் படித்தாக வேண்டும்.

சரி... ஏதோ பதில் வேண்டுமென்று போட்டிருந்தாயே அது என்ன என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. எனது பிரச்சினை இதுதான். நான் கதை எழுதினால் காதல் கதைதான் எழுதுகிறேனாம். கவிதை எழுதினால் காதல் கவிதைதான் எழுதுகிறேனாம். ஏன்? தேன்கிண்ணத்தில் பாட்டு எழுதினால் கூட காதல் பாட்டுதான் எழுதுகிறேனாம். ஏகப்பட்ட குற்றச்சாட்டு என்மேல். நீங்களே சொல்லுங்கள். தமிழ்ப்படங்களில் எதைப் பற்றி அதிகப் பாட்டுகள் இருக்கின்றன? இது என் குற்றமா இல்லை காதல் திரைப்படங்களையே கொடுக்கும் இந்த திரைப்படத்துறையின் குற்றமா? (பதிவெழுத என்னை அர்ப்பணித்துக் கொண்டதால் நான் தற்பொழுது புத்தகங்கள் படிக்க நேரம் கிடைப்பதேயில்லை என்பதை நான் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்). இல்லை தேன்கிண்ணத்தில் தத்துவப் பாடல்களாக எழுத கப்பி, ராம், புலியைப் போல் எனக்கு வயசாகி விட்டதா என்ன? பதில் கூறுங்கள் ப்ளாக் கூறும் நல்லுலகே...

பி.கு: அப்பாடா இனிமேல் காதல் கதை அதிகம் எழுதப் போறதில்லைனு சொல்றதுக்கு என்னென்ன பில்டப்பு குடுக்க வேண்டி இருக்கு... போதும் போதும்னு ஆச்சுடா சாமி... :P

20 comments:

CVR said...

//என்னை விட ஏழெட்டு வயது பெரியவர் என்றாலும் ////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இது உங்களுக்கே ஓவரா தெரியலையா யக்கோவ்!! :-P

நீங்க கேள்வியை ப்ளாக் உலகம் கிட்ட கேட்டதுனால நான் ஒன்னும் பதில் சொல்லல!! :-P

Dreamzz said...

//திரைப்படத்துறை இன்று இந்த அளவிற்கு வளர்ந்தது என்றால் அது இந்த காதல் என்ற வார்த்தையால் மட்டும்தான் என்கிறேன். என்ன சொல்லுகிறீர்கள்//

ஹிஹி.. காதல் இவ்ளோ பரிச்சியமானதற்கு, திரைபடங்கள் காரணம் என்கிறேன்.. Mutuallay beneficial :)

Dreamzz said...

//இன்னும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் என்னை விட ஏழெட்டு வயது பெரியவர் என்றாலும் அவரது வயதைக் குறைத்துக் கொள்வதற்காக என்னை அன்போடு அக்கா என்றழைக்கும் நமது பாசக்கார அண்ணன் CVR,/
சொல்லவே இல்லை... CVR.. இந்த மேட்டர?

Dreamzz said...

//அப்பாடா இனிமேல் காதல் கதை அதிகம் எழுதப் போறதில்லைனு சொல்றதுக்கு என்னென்ன பில்டப்பு குடுக்க வேண்டி இருக்கு... போதும் போதும்னு ஆச்சுடா சாமி... :P//
குற்றச்சாட்டுக்கு பயந்து காதலை ஏன் விடறீங்க.. ஐ மீன் காதல் கதைகளை.. ஊர் ஆயிரம் சொல்லும் :D

ILA(a)இளா said...

2 பழமொழிங்க ஞாபகத்துக்கு வந்துச்சுங்க..

1)தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான், தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.

2)நமக்கு எது நல்லா வருதோ அதையே ஒழுக்கமா செஞ்சா போதும்.

கோபிநாத் said...

மொக்கை தொடர் பதிவுக்கா!??

சூப்பர் மொக்கை ;)\\\இதற்கு மேல் காதலை உங்களுக்கு அறிமுகப்படுத்த எனக்குத் தெரியவில்லை. இன்னும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் என்னை விட ஏழெட்டு வயது பெரியவர் என்றாலும் அவரது வயதைக் குறைத்துக் கொள்வதற்காக என்னை அன்போடு அக்கா என்றழைக்கும் நமது பாசக்கார அண்ணன் CVR, முனைவர் பட்டம் பெற வேண்டி காதலைப் பற்றி செய்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைத்தான் நீங்கள் படித்தாக வேண்டும்.\\

சிவிஆர் இதுக்கு எம்புட்டு செலவு ஆச்சுன்னு நீங்களே சொல்லிடுங்க ;))


\\\\\பி.கு: அப்பாடா இனிமேல் காதல் கதை அதிகம் எழுதப் போறதில்லைனு சொல்றதுக்கு என்னென்ன பில்டப்பு குடுக்க வேண்டி இருக்கு... போதும் போதும்னு ஆச்சுடா சாமி... :P\\\\

எல்லோரும் தைரியமாக பதிவுக்கு வாங்க மக்கா ;))

மங்களூர் சிவா said...

test message

மங்களூர் சிவா said...

பதில் சொன்னா பிரியாணி வாங்கி குடுப்பீங்களா!?!?!

மங்களூர் சிவா said...

//
என்னை விட ஏழெட்டு வயது பெரியவர் என்றாலும் அவரது வயதைக் குறைத்துக் கொள்வதற்காக என்னை அன்போடு அக்கா என்றழைக்கும் நமது பாசக்கார அண்ணன் CVR
//
ஓ , அப்ப CVR க்கு 48 வயசா????

madhan said...

It is true...

G3 said...

//இனிமேல் காதல் கதை அதிகம் எழுதப் போறதில்லை//

//Labels: சும்மா... லுலுலா... //

:))))))))))

SweetJuliet said...

NO WAY...imsaiarasi....please don't stop writing kadhal kavithaigal...

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
இளா said
1)தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான், தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்.
....
....
....
===>
ரிப்பீட்டேய்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

மங்களூர் சிவா,நன்றி.
இம்சை அரசியின் வயது 40 என்று கண்டுபிடிச்சு சொன்னதுக்கு.
<==
இல்லை தேன்கிண்ணத்தில் தத்துவப் பாடல்களாக எழுத கப்பி, ராம், புலியைப் போல் எனக்கு வயசாகி விட்டதா என்ன? பதில் கூறுங்கள் ப்ளாக் கூறும் நல்லுலகே... ===>
அதானே,40 வயசெல்லாம் ஒரு வயசா?

அனுசுயா said...

G3 said...
//இனிமேல் காதல் கதை அதிகம் எழுதப் போறதில்லை//

//Labels: சும்மா... லுலுலா... //

:))))))))))

ரிப்பீட்டேய் :))

மங்களூர் சிவா said...

//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
மங்களூர் சிவா,நன்றி.
இம்சை அரசியின் வயது 40 என்று கண்டுபிடிச்சு சொன்னதுக்கு.

//
எதுக்குங்க நன்றி

இது என் கடமை!!

ஜி said...

:))) appo ini bloga izuththu mooda poreengannu sollunga ;))))

சுரேகா.. said...

வடிவேலுவை 'மாயி' படத்துல சொல்லுவாங்க...!

'தொட்டேனா தொட்டேனான்னு கேட்டுக்கிட்டே...தொடுறியேடா' ன்னு!

எழுதமாட்டேன்னு சொல்லிட்டே காதலைப்பத்தி இவ்வளவு எழுதுற நீங்க..இதைப்பத்தியே எழுதுங்க..

நாங்க வாசிக்கிறோம்..

ரசிகன் said...

என்னவோ போங்க... ஆனாலும் ஒன்லி பெண்கள் காதலுக்காக செய்யற தியாகங்கள் மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியுமோ?..
ஆண்களோட காதலை பாசிட்டிவா ஆக்கி அவனை முன்னேற்ற வைக்க பெண்களால முடியும்.. அதென்னவோ பெரும்பாலும்,தன்னை நேசிக்கரவனோட.தன்னம்பிக்கையை முழுசா குறைக்கற வேலையத்தான் செய்யறாய்ங்க.. ஆவ்வ்வ்வ்வ்.....இதைத் தான் தமிழ் படங்களை அதிகமா பாக்கறத்தோட தாக்கம்ன்னு சொல்லுவாங்களோ?...
ஹலோ நீங்க மட்டும் தான் சம்பந்தமில்லாம குழப்புவிங்களா?.:P

ரசிகன் said...

// Dreamzz said...

//அப்பாடா இனிமேல் காதல் கதை அதிகம் எழுதப் போறதில்லைனு சொல்றதுக்கு என்னென்ன பில்டப்பு குடுக்க வேண்டி இருக்கு... போதும் போதும்னு ஆச்சுடா சாமி... :P//
குற்றச்சாட்டுக்கு பயந்து காதலை ஏன் விடறீங்க.. ஐ மீன் காதல் கதைகளை.. ஊர் ஆயிரம் சொல்லும் :D//

// சுரேகா.. said...

வடிவேலுவை 'மாயி' படத்துல சொல்லுவாங்க...!

'தொட்டேனா தொட்டேனான்னு கேட்டுக்கிட்டே...தொடுறியேடா' ன்னு!

எழுதமாட்டேன்னு சொல்லிட்டே காதலைப்பத்தி இவ்வளவு எழுதுற நீங்க..இதைப்பத்தியே எழுதுங்க..

நாங்க வாசிக்கிறோம்..//

ரிப்பீட்டு..ஹிஹி..