Wednesday, July 18, 2007

பாய் ஃப்ரெண்ட் தேவையா???

ஒரு தடவை சிங்கார சென்னைக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாமேன்னு மேடம்(வேற யாரு நாந்தான்) முடிவு பண்ணி டிக்கட் எல்லாம் புக் பண்ணிட்டாங்க. வெள்ளிக்கிழமை நைட் 10 மணிக்கு பஸ். எங்க இந்த ஜிலேபி தேசத்துல ட்ராபிக் தொல்லையோ தொல்லை. அதனால ஒரு 7 மணிக்கே கெளம்பி சிட்டி பஸ்ஸ்டாப்ல போயி நின்னேன். எங்கடா ஒரு பஸ்ஸையும் காணோமேனு அப்டியே சுத்தி ஒரு நோட்டம் விட்டேன். ஓ மை காட்!!!!! ஒருத்தன் என்னையே பாத்துட்டு இருக்கான். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ எவ்ளோ தைரியம்??? ஒரு பொண்ணு அழகா இருந்துட கூடாதே.........

சரி கொஞ்ச நேரத்துல நாயி போயிட போகுதுன்னு விட்டுட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சுப் பாத்தா அப்பவும் பாத்துட்டே இருக்கான். ஆஹ்ஹ்ஹ்!!! என்ன இது சோதனைன்னு கொஞ்சம் தள்ளி இன்னொருத்தர் பின்னாடி நின்னா உடனே அவனும் தள்ளி நின்னு வேலைய ஆரம்பிச்சுட்டான். அய்யய்யோ சீக்கிரம் பஸ் வந்தா பரவால்லயேன்னு நான் வேண்டிக்கிட்டது சாமி காதுல விழுந்துடுச்சு போல. உடனே பஸ் வந்துடுச்சு. அப்பாடான்னு சாமிக்கு நிறைய தேங்ஸ் சொல்லிட்டு ஏறி ஒரு சீட் பாத்து உக்காந்துட்டேன். கொஞ்ச நேரத்துல எனக்கு நேர் சீட்ல இருந்தவர் இறங்கிட்டார். அப்டியே ஜாலியா வேடிக்கை பாத்துட்டு இருந்தப்போதான் ஒரு இடி விழுந்துச்சு. ஐயகோ! அவன் பின்னாடி இருந்து எழுந்து வந்து காலியான அந்த நேர் சீட்ல உக்காந்து மறுபடியும் வேலைய ஆரம்பிச்சுட்டான். பேசாம கூப்பிட்டு ஏன் என்னையே பாக்கறனு கேட்டுடலாமானு ஒரு எண்ணம். உடனே மனசாட்சி அவதாரம் எடுத்து அறிவு இருக்கா உனக்கு? இந்த ராத்திரி நேரத்துல தனியா போற..... எதாவது பிரச்சினை பண்ணினா என்ன பண்ணுவன்னு திட்டினதும்தான் ஆஹான்னு கம்முனு வேற பக்கம் திரும்பி உக்காந்துக்கிட்டேன்.

அப்பாடா...... மெஜஸ்டிக் வந்து சேந்தாச்சுன்னு வேக வேகமா பஸ்ல இருந்து இறங்கி திரும்பி பாக்காம KSRTC பஸ் ஸ்டாண்ட்க்கு வேகமா நடக்க ஆரம்பிச்சேன். ரோடு க்ராஸ் பண்ண வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது அவனும் சைடுல நிக்கறான். ஏதடா இம்சைக்கே இம்சையானு ரெண்டு பக்கமும் வண்டி வருதா க்ராஸ் பண்ணலாமானு திரும்பி திரும்பி பாத்தேன். அவன் மெதுவா "Hi"ன்னு சொன்னான். ஆ! என் சின்ன ஹார்ட் வேக வேகமா அடிச்சுக்குது. வேகமா க்ராஸ் பண்ணி உள்ள போனா அவனும் பின்னாடியே வரான். huh! உடனே வேகமா என் மொபைல எடுத்து என் சென்னை சிங்காரிக்கு ஃபோனப் போட்டேன். அவ எடுத்ததும் சத்தமா "டேய் நாயே! எங்கடா இருக்க? கொஞ்சமாவது அறிவிருக்கா? நான் ஒருத்தி இங்க தனியா வந்துட்டு இருக்கேன்"ன்னு கத்தினேன். அவ புரியாம "என்னடா உளறுற? கிளம்பிட்டியா இல்லயா?"ன்னு பாவமா கேட்டா. "ஓ! சாரிடா..... சென்னை பஸ் பக்கத்துலயா நிக்கிற? இரு ஒரு 5 நிமிஷத்துல அங்க இருப்பேன். பை" சொல்லி கட் பண்ணிட்டு பாக்கறேன் ஆளயே காணோம். அப்படியே அப்ஸ்காண்ட் ஆயிட்டான். அப்பாடான்னு போயி பஸ்ஸ புடிச்சு ஒரு வழியா ஊரு போயி சேந்தேன்.
அப்பதான் ஒரு பாய் ஃப்ரெண்டோட அவசியத்த புரிஞ்சிக்கிட்டேன். அட்லீஸ்ட் பஸ் ஏத்தி விடவாவது ஒரு ஃப்ரெண்ட் வேணும்னு. அடுத்த நாள் இதை என் ஃப்ரெண்ட்கிட்ட சொல்லிட்டு இருந்தப்ப அவ சொன்னா "மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துன கதையா இல்ல இருக்கு நீ சொல்றது"ன்னு. அது சரி...... அவ சொல்றதும் சரிதான. பஸ் ஏத்தி விடறதுக்காக எதுக்கு தொல்லைய கூடவே வச்சுக்கணும்னு நானும் ஃப்ரீயா விட்டுட்டேன் ;)

=========================ooOoo===================================

இதோ இதுக்கு என் அன்பு அண்ணன் CVR குடுத்த ஒரு பாசக்கார க்ளைமேக்ஸ்:
ஏதடா இம்சைக்கே இம்சையானு ரெண்டு பக்கமும் வண்டி வருதா க்ராஸ் பண்ணலாமானு திரும்பி திரும்பி பாத்தேன். அவன் மெதுவா "Hi"ன்னு சொன்னான்
நானும் திரும்பி பாத்து"Hi"னு சொன்னேன்.

"உங்கள பாத்தா சமீபத்துல செத்து போன என் தங்கச்சி மாதிரியே இருக்கீங்க,உங்கள நான் தங்கச்சின்னு கூப்பிடலாமா??"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"
==============================ooOoo=============================

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............. அண்ணா உங்க பாசத்துக்கு அளவே இல்லாம போச்சு. ஆனா இது உண்மையா நடந்த ஒரு விஷயம்..............

76 comments:

சுந்தர் / Sundar said...

//ஒரு பொண்ணு அழகா இருந்துட கூடாதே.........//

ஓ ... கத அப்படி போடுதா ...

அப்ப சரிதான் ...

சினேகிதி said...

awwwwwwwwwwwwwwwww :-)))nalla kaalam ungaluku bf ilai :-) naye enda kopiduveengal!

குசும்பன் said...

"என் சின்ன ஹார்ட் வேக வேகமா அடிச்சுக்குது. "

முதல்ல டாக்டர் கிட்ட செக் செய்யுங்க,,, இப்படி இருக்க கூடாது

TBCD (Tamilnadu Born Confused Dravidian) said...

/*ஒரு பொண்ணு அழகா இருந்துட கூடாதே........*/

இது வேரயா..

ஒரு வேலை அத சொல்லா தான் வந்தனோ

நாடோடி said...

//எவ்ளோ தைரியம்??? ஒரு பொண்ணு அழகா இருந்துட கூடாதே.........//

Mirrorன்னு ஒரு கண்டுபிடிப்பே உலகத்துலெ இன்னும் நிறைய பேருக்கு தெரியல போல ..
;)

நாடோடி said...

//அப்பதான் ஒரு பாய் ஃப்ரெண்டோட அவசியத்த புரிஞ்சிக்கிட்டேன். அட்லீஸ்ட் பஸ் ஏத்தி விடவாவது ஒரு ஃப்ரெண்ட் வேணும்னு.//

பாய்பிரண்டின் உண்மையான சேவையை உலகுக்கு உணர்த்திய மங்கையே நீர் வாழ்க.. உம் கொற்றம் வாழ்க..

ஏங்க ஒரு சந்தேகம். பாய் உங்கள பஸ் ஏத்திவிடவந்தா யாருங்க சாம்பிராணி புகை போடுவாங்க?..(pls don't be serious just jokessssssssssssssssssss)
;)))))))))))

தம்பி said...

தோ பார்றா...

ரொம்ம்ப நக்கலா போச்சிமா உனக்கு...

ஜெஸிலா said...

உங்கள மாதிரிதான் நிறைய பொண்ணுங்க ரொம்ப இம்சையா நினைச்சிக்கிறாங்க ஒரு பையன் பார்த்தா. அவனை நீங்க பார்த்தாதானே அவன் உங்களை பார்ப்பது தெரியும்!? அப்படியே பார்த்தாலும் பார்த்துட்டு போகட்டும்னு உங்க வேலையப் பார்க்காம, அவன் பார்க்கிறதையே நீங்களும் ஏன் பார்த்தீங்க? 'ஹை' சொன்னா, நீங்க 'பாய்' சொல்லிட்டுப் போங்க என்ன குறைஞ்சிப் போகப் போறோம்? சரி இதற்கு பாய் பிரெண்ட் எதற்கு - அப்பாக்கிட்ட இல்ல அண்ணன்க்கிட்ட பேசுறா மாதிரிக் கூட செஞ்சிருக்கலாமே?

TBCD (Tamilnadu Born Confused Dravidian) said...

/*உங்கள மாதிரிதான் நிறைய பொண்ணுங்க ரொம்ப இம்சையா நினைச்சிக்கிறாங்க ஒரு பையன் பார்த்தா. அவனை நீங்க பார்த்தாதானே அவன் உங்களை பார்ப்பது தெரியும்!? அப்படியே பார்த்தாலும் பார்த்துட்டு போகட்டும்னு உங்க வேலையப் பார்க்காம, அவன் பார்க்கிறதையே நீங்களும் ஏன் பார்த்தீங்க? 'ஹை' சொன்னா, நீங்க 'பாய்' சொல்லிட்டுப் போங்க என்ன குறைஞ்சிப் போகப் போறோம்? சரி இதற்கு பாய் பிரெண்ட் எதற்கு - அப்பாக்கிட்ட இல்ல அண்ணன்க்கிட்ட பேசுறா மாதிரிக் கூட செஞ்சிருக்கலாமே?*/
இப்படி செம் சைடு கொல் போட்டா ....பாவம் என்ன பன்னுவாஙா..கொஞ்ஜம் ஆதரிஙா..
....
அழகனா பொன்னு வேரா சொல்லுராங்...மனசு கேக்கல..:))

தம்பி said...

//உங்கள மாதிரிதான் நிறைய பொண்ணுங்க ரொம்ப இம்சையா நினைச்சிக்கிறாங்க ஒரு பையன் பார்த்தா. அவனை நீங்க பார்த்தாதானே அவன் உங்களை பார்ப்பது தெரியும்!? அப்படியே பார்த்தாலும் பார்த்துட்டு போகட்டும்னு உங்க வேலையப் பார்க்காம, அவன் பார்க்கிறதையே நீங்களும் ஏன் பார்த்தீங்க? 'ஹை' சொன்னா, நீங்க 'பாய்' சொல்லிட்டுப் போங்க என்ன குறைஞ்சிப் போகப் போறோம்? சரி இதற்கு பாய் பிரெண்ட் எதற்கு - அப்பாக்கிட்ட இல்ல அண்ணன்க்கிட்ட பேசுறா மாதிரிக் கூட செஞ்சிருக்கலாமே? //

ரிப்பீட்டேய்

நல்லா சொல்லுங்க ஜெசிலா.

vathilai murali said...

ஜெசிலா நல்லா சொன்னீங்க

நாடோடி said...

//அழகனா பொன்னு வேரா சொல்லுராங்...மனசு கேக்கல..:))//
நாட்டுல நிறையபொண்ணுங்க இப்படிதான் பேசிட்டு திரியுராங்க...

நாடோடி said...

ஆபிஸ்ல ஆணி புடுங்க சொன்னா...
எல்லாவனும் நல்லா இங்க வந்து வாய் பாத்துகிட்டு இருக்கானுங்க பாய்பிராண்டுன்னு ஒரு வார்த்தைய பாத்த வுடனே..
சே என்ன உலகம்ப்பா இது..

Sridhar Venkat said...

இம்சை,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

இது உண்மையான அனுபவமாக இருக்கும் பட்சத்தில் (அப்படித்தான் நீங்களும் எழுதியிருக்கீங்க) இது ஒரு நுணுக்கமான உளவியல் பிரச்னைதான். எனக்கு தெரிந்த சில பெண் நன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் 'I am getting needles in my seat' என்று. இந்த மாதிரி பிரச்சினைகள் ஆண்களுக்கு ஏற்படுவது உண்டு. என்னுடைய பள்ளி பருவத்தில் ஒரு பேருந்து நிலையத்தில் இதே மாதிரி ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்தார். மிகவும் கஷ்டமாகவும் பயமாகவும் இருந்தது. ஒரு மாதிரி போக்கு காட்டி தப்பித்ததில்(?!) நிம்மதியாக இருந்தது.

சில சமயங்களில் வக்கிரமாகவும் இருக்கும் பார்வைகள்.

நீங்கள் கையாண்ட முறை சரிதான்.

குறிப்பாக இந்த மாதிரி சூழ்நிலையில் பெண்களுக்கு செல்போன் பெரும் உதவி. செல்போனில் மூழ்கி அந்த நபரை முழுவதுமாக ignore செய்துவிடுங்கள்.

தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். நடை உடை பாவனைகளில் தெரிய வேண்டும்.

What is your problem என்று கேட்டாலே 90% பேர் ஓடி விடுவார்கள். :-))

பாய் ப்ரெண்ட் வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை :-). முறைத்து பார்ப்பவர்கள் கூட நட்பு கரம் நீட்டினால் சாதாரணம் ஆகிவிடுவார்கள் :-))

TBCD (Tamilnadu Born Confused Dravidian) said...

/*naye enda kopiduveengal! */
உலகத்தில் மழ வருதுனா அது இவங்ளாலா தான் போலா

அபி அப்பா said...

எனக்கு ஏகப்பட்ட பாய் பிரண்ட் இருக்காங்க, அவ்வலவு ஏன் நான் இருப்பதே து'பாய்' தான்:-))

குசும்பன் said...

ஜெஸிலா said...
" அவனை நீங்க பார்த்தாதானே அவன் உங்களை பார்ப்பது தெரியும்!? "

கேட்டீங்க பாருங்க ஒரு கேள்வி....
அக்கா சூப்பர்..

ரிப்பீட்டே:))))))))))))))))))

Deepa said...

///'I am getting needles in my seat' ///
ரொம்ப சரி.. பலமுறை உணர்ந்திருக்கிறேன்.. இது வரை என் உள்ளூணர்வு சரியா தான் சொல்லியிருக்கு..
கும்பலில் "யாருப்பா அது என்னை பார்கிரது"... ன்னு யாரும் வேலை மெனெக்கெட்டு தேடமாட்டங்க.. ஆனாலும் ஏதோ ஒரு restlesnessness..

//What is your problem என்று கேட்டாலே 90% பேர் ஓடி விடுவார்கள். :-))/// இதுவுமே சரி தான்.. இப்படி கேட்கிரதுக்கு முன்னே.. நல்லா. "மொறைப்பவர்" பக்கம் நிதனமா திரும்பி ஏற இறங்க ஒரு 20 sec பார்த்து அப்புறம்.. "ம்ம் .. ( புருவத்தை சுருக்கி).. whats your problem ன்னு கேட்டா... அடுத்த செகெண்ச்ட் ஆள் அபீட்.. அனால் இதெல்லாம் வெளிச்சம் இருக்கும்போது ஓகே...

twilight / night ன்னா.. மனசாட்சி சொன்ன மாதிரி கம்முன்னு ஏதாவது Mixed கும்பல் இருந்தா.. அவங்க கிட்டே போய் நிக்க வேண்டியது தான்

Anonymous said...

டி.ராஜேந்தர் said...
தட்டி பாத்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்தேன் அன்பு தங்கச்சி.........
தூக்கி எரிஞ்சா! கண்ணு கொளமாச்சி......

CVR :-)

TBCD (Tamilnadu Born Confused Dravidian) said...

/*ஆபிஸ்ல ஆணி புடுங்க சொன்னா...*/
எல்லொருமே ஆனி பிடுங்குரவ்ங்க என்று எப்படி சொல்லலாம்.....இதை நான் வன்மையாக கண்டிகிரேன்..:))

இம்சை அரசி said...

// ஜெஸிலா 덧글 내용...
உங்கள மாதிரிதான் நிறைய பொண்ணுங்க ரொம்ப இம்சையா நினைச்சிக்கிறாங்க ஒரு பையன் பார்த்தா. அவனை நீங்க பார்த்தாதானே அவன் உங்களை பார்ப்பது தெரியும்!? அப்படியே பார்த்தாலும் பார்த்துட்டு போகட்டும்னு உங்க வேலையப் பார்க்காம, அவன் பார்க்கிறதையே நீங்களும் ஏன் பார்த்தீங்க? 'ஹை' சொன்னா, நீங்க 'பாய்' சொல்லிட்டுப் போங்க என்ன குறைஞ்சிப் போகப் போறோம்? சரி இதற்கு பாய் பிரெண்ட் எதற்கு - அப்பாக்கிட்ட இல்ல அண்ணன்க்கிட்ட பேசுறா மாதிரிக் கூட செஞ்சிருக்கலாமே?
//

ஜெஸீலா அக்கா... கூல்... ஏன் டென்ஷன் ஆகறீங்க?

நான் ரோட்டுல எங்கப்பா எதிர்த்தாப்ல வந்தாலே கவனிக்காம போற ஆளு... தனியா போனா மொபைல்ல கேம் விளயாடறது, புக் படிக்கறதுனு சுத்தி எதையும் கண்டுக்காம போவேன். அப்படி இருக்கற நானே ஃபீல் பண்ற மாதிரி அன்னைக்கு நடந்தது. சைட் அடிக்கறாங்கன்னா அது தப்பு அப்படி இப்படினு பேசற ஆள் நானில்ல. ஆனா அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு.

நான் பாக்கற மாதிரி எனக்கு நேரா வந்து நின்னு முறைச்சு பாத்தா எப்டி இருக்கும். தள்ளிதான் போக முடியும். போற எடத்துக்கெல்லாம் வந்தா என்ன பண்ண முடியும்? எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க... :)))

"பை"னு சொல்லும்போது அவன் போயிட்டா பரவால்ல. திமிரா சொல்றானு பின்னாடியே இன்னும் வந்தா என்ன செய்வீங்க? எங்க போனாலும் தனியா போயிட்டு வந்துட்டு இருக்கோம். ஆபிஸ்ல இருந்து சில நாள் 11 மணிக்கெல்லாம் கூட வரோம். நோட் பண்ணி வச்சு எதும் பிரச்சினை பண்ணினா என்ன பண்றது??? so be at safer side. இதைதான் நானும் பண்ணினேன் :)

செந்தழல் ரவி said...

எச்சூஸ்மீ சிஸ்டர்...

எனக்கு ஒரு 'பாய்' பிரண்டா இருக்கார்...அவர் கிட்ட சொல்லவா ?

பேரு கலீல் முகமது...வயசு நாப்பத்தஞ்சு...பரவாயில்லையா ?

எங்க கடைக்கு அவர்தான் வழக்கமா சாம்பிராணி எடுத்துக்கிட்டு வந்து புகை போடுவார்...

ஆவோ ஆவோ அப்படீன்னு சொல்லுவேன்..

இந்த பாய் பிரண்டு உங்களுக்கு ஓக்கேவா ?

ஜெஸிலா said...

//ஜெஸீலா அக்கா... கூல்... ஏன் டென்ஷன் ஆகறீங்க?// அடடா மத்தவங்கதான் அக்கா அக்கான்னா நீங்களுமா? :-( நான் எப்போதுமே கூல்தாம்ப்பா.

//ஆனா அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு.// அதற்கு அளவுகோலெல்லாம் இல்லப்பா.

ஒரு நாள் போகிற இடத்திற்கெல்லாம் வந்ததற்கே இப்படி சொல்றீங்க. நீங்க பீட்டர்ஸ் காலனில இருந்திருக்கணும் ;-) அதுதான் நான் வளர்ந்த குடியிருப்பு. நியூ காலேஜ் தெரியுமா சென்னையில், அதற்குள்ளேயே போய் கணிணி பயின்றவள் நான். என்னுடைய டீன் ஏஜில் நான் போட்டுக்கிட்டு இருக்கும் பேட்ஜ் என்ன சொல்லும் தெரியுமா? 'I am not deaf just ignoring you' என்று. நாயை கவனிச்சிருக்கீங்களா? நாம திரும்பி திரும்பி பார்த்தா பின்னாலேயே வரும், பயந்தா குரைக்கும். அதே பார்முலாதான் ஜொள்ளர்களுக்கும். பஸ்ஸில் இடிப்பவனை ஒரு மணி நேரம் காலை மிதித்துக் கொண்டு நின்றாலும் சுகமாக கொடுத்துக் கொண்டிருக்கும் ஜென்மங்கள். கண்டுக்கவோ, பயப்படவோ கூடாது 'என்னடா கிழிச்சிடுவ' என்பது போல் பார்த்தால் அவர்களுக்கு கிலி வந்திடும். இரவில் பயனிக்கும் நீங்கள் தற்காப்பு கலையை கற்றுக் கொள்ளுங்கள்.

இம்சை அரசி said...

// ஜெஸிலா 덧글 내용...
//ஜெஸீலா அக்கா... கூல்... ஏன் டென்ஷன் ஆகறீங்க?// அடடா மத்தவங்கதான் அக்கா அக்கான்னா நீங்களுமா? :-( நான் எப்போதுமே கூல்தாம்ப்பா.
//

நான் ரொம்ப சின்ன பொண்ணு அக்கா... அதான் :)))

////ஆனா அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு.// அதற்கு அளவுகோலெல்லாம் இல்லப்பா.

ஒரு நாள் போகிற இடத்திற்கெல்லாம் வந்ததற்கே இப்படி சொல்றீங்க. நீங்க பீட்டர்ஸ் காலனில இருந்திருக்கணும் ;-) அதுதான் நான் வளர்ந்த குடியிருப்பு. நியூ காலேஜ் தெரியுமா சென்னையில், அதற்குள்ளேயே போய் கணிணி பயின்றவள் நான். என்னுடைய டீன் ஏஜில் நான் போட்டுக்கிட்டு இருக்கும் பேட்ஜ் என்ன சொல்லும் தெரியுமா? 'I am not deaf just ignoring you' என்று. நாயை கவனிச்சிருக்கீங்களா? நாம திரும்பி திரும்பி பார்த்தா பின்னாலேயே வரும், பயந்தா குரைக்கும். அதே பார்முலாதான் ஜொள்ளர்களுக்கும். பஸ்ஸில் இடிப்பவனை ஒரு மணி நேரம் காலை மிதித்துக் கொண்டு நின்றாலும் சுகமாக கொடுத்துக் கொண்டிருக்கும் ஜென்மங்கள். கண்டுக்கவோ, பயப்படவோ கூடாது 'என்னடா கிழிச்சிடுவ' என்பது போல் பார்த்தால் அவர்களுக்கு கிலி வந்திடும். இரவில் பயனிக்கும் நீங்கள் தற்காப்பு கலையை கற்றுக் கொள்ளுங்கள்.
//

அதெல்லாம் நாங்க எல்லா சேட்டையும் பண்ணியிருக்கோம். பஸ்ல யாரவது சைட் அடிச்சா அவங்கள பாத்து கேவலமா ஒரு சிரிப்பு சிரிக்கறது. திரும்பி பாக்காம போயிடுவான். அமைதியா சைட் அடிக்கறவங்கள நான் தப்பு சொல்லவே இல்ல. நாமளே டிஸ்டர்ப் ஆகற மாதிரி பண்ணினா அது தப்பு தான???

அச்சோ டாபிக்கே மாறி போச்சு. நான் ஒரு ஜாலிக்கு இதை எழுதினேன். யாரையும் ப்ளேம் பண்ண எழுதலை :)))

இம்சை அரசி said...

// சுந்தர் / Sundar 덧글 내용...
//ஒரு பொண்ணு அழகா இருந்துட கூடாதே.........//

ஓ ... கத அப்படி போடுதா ...

அப்ப சரிதான் ...
//

என்ன சுந்தர் இப்படி சொல்லிட்டிங்க? என் blog headerல இருக்கிற pic என்னோடதுதான். நல்லா பாத்துட்டு சொல்லுங்க ;)

இம்சை அரசி said...

// சினேகிதி 덧글 내용...
awwwwwwwwwwwwwwwww :-)))nalla kaalam ungaluku bf ilai :-)
//

ஆமா ஆமா... நல்ல காலம்... :)

// naye enda kopiduveengal!
//
இது என்னன்னு எனக்கு புரியவே இல்ல

இம்சை அரசி said...

// குசும்பன் 덧글 내용...
"என் சின்ன ஹார்ட் வேக வேகமா அடிச்சுக்குது. "

முதல்ல டாக்டர் கிட்ட செக் செய்யுங்க,,, இப்படி இருக்க கூடாது
//

பண்ணிட்டேன்... குசும்பன் அண்ணாச்சி செலவுல லீலா பேலஸ்ல வாங்கி லஞ்ச் சாப்பிட்டா சரியா போயிடும்னு சொல்லிட்டார் ;)

அக்கவுண்ட் நம்பர் அனுப்பவா???

நாடோடி said...

//எல்லொருமே ஆனி பிடுங்குரவ்ங்க என்று எப்படி சொல்லலாம்.....இதை நான் வன்மையாக கண்டிகிரேன்..:))//
அய்யா நீங்க ஆபிஸ்ல பில்லரையே பெயர்க்குற பெரிய ஆளுன்னு தெரியாமா பேசிட்டேன். மன்னிச்சிக்கோங்க...
:)))))

//எனக்கு ஒரு 'பாய்' பிரண்டா இருக்கார்...அவர் கிட்ட சொல்லவா ?//
ஏம்ப்பா செந்தழலு இந்த பிட்ட நான் ஏற்கன்வே சூசகமா இங்கே போட்டேன்.
http://www.blogger.com/profile/04144625419420069451
//பாய் உங்கள பஸ் ஏத்திவிடவந்தா யாருங்க சாம்பிராணி புகை போடுவாங்க?// இருந்தாலும் உமக்கு குசும்பு அதிகம்மய்யா. உன் பதிவுல மாய்ஞ்சு மாய்ஞ்சு பின்னூட்டம் போட்ட பதில் சொல்லாம(நன்றி தான்) அடுத்தவங்க பதிவுல வந்து கும்மி அடிக்கிறேயே பாத்தியா?..
:))

இம்சை அரசி said...

// TBCD (Tamilnadu Born Confused Dravidian) 덧글 내용...
/*ஒரு பொண்ணு அழகா இருந்துட கூடாதே........*/

இது வேரயா..

ஒரு வேலை அத சொல்லா தான் வந்தனோ
//

ஹி... ஹி... இருக்கலாம்... :)

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
//எவ்ளோ தைரியம்??? ஒரு பொண்ணு அழகா இருந்துட கூடாதே.........//

Mirrorன்னு ஒரு கண்டுபிடிப்பே உலகத்துலெ இன்னும் நிறைய பேருக்கு தெரியல போல ..
;)
//

கண்ணாடி பாத்து அழகுபடுத்திக்கணும்னு எங்களுக்கெல்லாம் அவசியமே இல்ல... natural beautyபா... ;)

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
//அப்பதான் ஒரு பாய் ஃப்ரெண்டோட அவசியத்த புரிஞ்சிக்கிட்டேன். அட்லீஸ்ட் பஸ் ஏத்தி விடவாவது ஒரு ஃப்ரெண்ட் வேணும்னு.//

பாய்பிரண்டின் உண்மையான சேவையை உலகுக்கு உணர்த்திய மங்கையே நீர் வாழ்க.. உம் கொற்றம் வாழ்க..

ஏங்க ஒரு சந்தேகம். பாய் உங்கள பஸ் ஏத்திவிடவந்தா யாருங்க சாம்பிராணி புகை போடுவாங்க?..(pls don't be serious just jokessssssssssssssssssss)
;)))))))))))
//

யோவ்வ்வ்வ்வ்வ்வ்...... சரியான பட்டிகாடா இருப்ப போல... போய் திருப்பி LKGல சேந்து ஒழுங்கா டீச்சர சைட் அடிக்காம படிச்சுட்டு வாய்யா... ;)
?..(pls don't be serious just jokessssssssssssssssssss)
;)))))))))))

இம்சை அரசி said...

// தம்பி 덧글 내용...
தோ பார்றா...

ரொம்ம்ப நக்கலா போச்சிமா உனக்கு...
//

ரொம்ப இல்ல தம்பிண்ணே... கொஞ்சம் தான் ;)))

நாடோடி said...

//கண்ணாடி பாத்து அழகுபடுத்திக்கணும்னு எங்களுக்கெல்லாம் அவசியமே இல்ல... natural beautyபா... ;)//

Mirror cracking Materialன்னு கேள்வி பட்டு இருக்கேன். அத சொல்லுகிறீர்களோ?.:)

இம்சை அரசி said...

// TBCD (Tamilnadu Born Confused Dravidian) 덧글 내용...
அழகனா பொன்னு வேரா சொல்லுராங்...மனசு கேக்கல..:))
//
ஹி... ஹி... உண்மை பேசும் உத்தமர் நீங்கதானுங்கோ... :)))

இம்சை அரசி said...

// vathilai murali 덧글 내용...
ஜெசிலா நல்லா சொன்னீங்க
//

ஏங்க இப்டி கொலவெறி??? இது சும்மா லுலுலாயி போஸ்ட் :)))

cool buddy... no tensiono :)))

Inder said...

natural beautyபா... ;)

am the kuber kuber laughing
- inder

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
//அழகனா பொன்னு வேரா சொல்லுராங்...மனசு கேக்கல..:))//
நாட்டுல நிறையபொண்ணுங்க இப்படிதான் பேசிட்டு திரியுராங்க...

//

ஏனா பொண்ணுங்க எப்பவும் உண்மைதான் பேசுவாங்க :)))

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
ஆபிஸ்ல ஆணி புடுங்க சொன்னா...
எல்லாவனும் நல்லா இங்க வந்து வாய் பாத்துகிட்டு இருக்கானுங்க பாய்பிராண்டுன்னு ஒரு வார்த்தைய பாத்த வுடனே..
சே என்ன உலகம்ப்பா இது..
//

நீங்களே அதை பாத்துட்டு தான வந்தீங்க... அப்புறம் என்ன??? ;)))

நாடோடி said...

//யோவ்வ்வ்வ்வ்வ்வ்...... சரியான பட்டிகாடா இருப்ப போல... போய் திருப்பி LKGல சேந்து ஒழுங்கா டீச்சர சைட் அடிக்காம படிச்சுட்டு வாய்யா... ;)///

எங்க மிஸ் மடியில உக்காந்து A,B,C,D... படிக்கிறது நடக்குமாங்க..
எங்க நான்வேனா டைரைக்டா M.B.B.S. படிச்சு கலெக்ட்ரா ஆகி பாய்பிராண்ட் சர்வீஸ் சென்டர் ஆரம்பிச்சுடுவா?..
(மாமன் மகள் பட டையலாக் சரியா ஞாயபகத்துக்கு வரமாட்டேனுது. யாரவது ஹெல்ப் பண்ணங்கப்பா, LKG படிக்க இல்ல இந்த பின்னூட்டத்துக்குதான்).

:)))))))))))))

குசும்பன் said...

இம்சை அரசி said...
"பண்ணிட்டேன்... குசும்பன்
அண்ணாச்சி செலவுல லீலா பேலஸ்ல வாங்கி லஞ்ச் சாப்பிட்டா சரியா போயிடும்னு சொல்லிட்டார் ;)"

இம்சை அரசி என்ன சொல்றாங்கன்னா
குசும்பா அண்ணாச்சி (ஆசிப் மீரான்) செலவுல லீலா பேலஸ்ல வாங்கி லஞ்ச் சாப்பிட்டா சரி ஆகிடும் என்று சொல்கிறார்

அதைதான் சேர்த்து சொல்லி விட்டார் சரிதானே!!!

இம்சை அரசி said...

// Sridhar Venkat 덧글 내용...
இம்சை,

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

இது உண்மையான அனுபவமாக இருக்கும் பட்சத்தில் (அப்படித்தான் நீங்களும் எழுதியிருக்கீங்க) இது ஒரு நுணுக்கமான உளவியல் பிரச்னைதான். எனக்கு தெரிந்த சில பெண் நன்பர்கள் சொல்லியிருக்கிறார்கள் 'I am getting needles in my seat' என்று. இந்த மாதிரி பிரச்சினைகள் ஆண்களுக்கு ஏற்படுவது உண்டு. என்னுடைய பள்ளி பருவத்தில் ஒரு பேருந்து நிலையத்தில் இதே மாதிரி ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்தார். மிகவும் கஷ்டமாகவும் பயமாகவும் இருந்தது. ஒரு மாதிரி போக்கு காட்டி தப்பித்ததில்(?!) நிம்மதியாக இருந்தது.

சில சமயங்களில் வக்கிரமாகவும் இருக்கும் பார்வைகள்.

நீங்கள் கையாண்ட முறை சரிதான்.

குறிப்பாக இந்த மாதிரி சூழ்நிலையில் பெண்களுக்கு செல்போன் பெரும் உதவி. செல்போனில் மூழ்கி அந்த நபரை முழுவதுமாக ignore செய்துவிடுங்கள்.

தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். நடை உடை பாவனைகளில் தெரிய வேண்டும்.

What is your problem என்று கேட்டாலே 90% பேர் ஓடி விடுவார்கள். :-))

பாய் ப்ரெண்ட் வைத்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை :-). முறைத்து பார்ப்பவர்கள் கூட நட்பு கரம் நீட்டினால் சாதாரணம் ஆகிவிடுவார்கள் :-))
//

அப்பாடி... தேங்க்ஸ் Sridhar... நீங்களாவது புரிஞ்சிக்கிட்டிங்களே... :)))

இம்சை அரசி said...

// TBCD (Tamilnadu Born Confused Dravidian) 덧글 내용...
/*naye enda kopiduveengal! */
உலகத்தில் மழ வருதுனா அது இவங்ளாலா தான் போலா
//

பின்ன என்ன உங்களாலயா வருது??? ;)

லொடுக்கு said...

அவனை மிரட்டுவதற்கு சென்னைக்கு போன் செய்து காசு வீணாக்கி, மறுமுனையில் எடுத்தவரையும் குழப்பாமல் சும்மா செல் போனை காதில் வைத்து சத்தமாக பேசி நடித்திருக்கலாமே!...

சரி சரி.. இதனால் உங்களுக்கு கிடைக்கவிருந்த பாய் ஃப்ரெண்ட் எஸ்பேப்...

இம்சை அரசி said...

// அபி அப்பா 덧글 내용...
எனக்கு ஏகப்பட்ட பாய் பிரண்ட் இருக்காங்க, அவ்வலவு ஏன் நான் இருப்பதே து'பாய்' தான்:-))

//

அண்ணாஆஆஆஆஆஆஆஆஆ!!! :@@@

நாடோடி said...

//நீங்களே அதை பாத்துட்டு தான வந்தீங்க... அப்புறம் என்ன??? ;)))///

ஆணி பிடுங்க சொல்லிருந்தா பரவாயில்ல.மவராச நீ நீடுழி வாழ்கந் சொல்லிட்டு, நைட்டு,பகலா,ஆணி பிடுங்கியிருப்பேன் பிலாக் பக்கமே வராம.1 1/2 வருச ஆணி பிடுங்கியதற்கு சேர்த்து document பண்ணல சொல்லுராங்க. இந்த கொடுமைய நான் எங்க போயி இறக்குவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இம்சை அரசி said...

// Deepa 덧글 내용...
///'I am getting needles in my seat' ///
ரொம்ப சரி.. பலமுறை உணர்ந்திருக்கிறேன்.. இது வரை என் உள்ளூணர்வு சரியா தான் சொல்லியிருக்கு..
கும்பலில் "யாருப்பா அது என்னை பார்கிரது"... ன்னு யாரும் வேலை மெனெக்கெட்டு தேடமாட்டங்க.. ஆனாலும் ஏதோ ஒரு restlesnessness..

//What is your problem என்று கேட்டாலே 90% பேர் ஓடி விடுவார்கள். :-))/// இதுவுமே சரி தான்.. இப்படி கேட்கிரதுக்கு முன்னே.. நல்லா. "மொறைப்பவர்" பக்கம் நிதனமா திரும்பி ஏற இறங்க ஒரு 20 sec பார்த்து அப்புறம்.. "ம்ம் .. ( புருவத்தை சுருக்கி).. whats your problem ன்னு கேட்டா... அடுத்த செகெண்ச்ட் ஆள் அபீட்.. அனால் இதெல்லாம் வெளிச்சம் இருக்கும்போது ஓகே...

twilight / night ன்னா.. மனசாட்சி சொன்ன மாதிரி கம்முன்னு ஏதாவது Mixed கும்பல் இருந்தா.. அவங்க கிட்டே போய் நிக்க வேண்டியது தான்
//

ஆமாம் தீபா... நான் கூட பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணும்போது எதாவது ஃபேமிலி நிக்கிற பக்கமா போயி அவங்களோடவே நின்னுப்பேன். யாராவது பாத்தா அந்த கூட்டத்து பொண்ணு மாதிரி தெரியும். அப்பப்போ நல்லாவே வேலை செய்யுது... ஹி... ஹி...

இம்சை அரசி said...

// Anonymous 덧글 내용...
டி.ராஜேந்தர் said...
தட்டி பாத்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வெச்சி
தூக்கி வளத்தேன் அன்பு தங்கச்சி.........
தூக்கி எரிஞ்சா! கண்ணு கொளமாச்சி......

CVR :-)

//

அய்யோ அண்ணா... நான் என்னைக்கு உங்கள தூக்கி எறிஞ்சேன்??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... இப்படியெல்லாம் பேசப்படாது...

இராம் said...

யக்கோவ்,

நீங்க ஒங்க சோகத்தை சொன்னீங்க.... இதேமாதிரி நாங்கெல்லும் எதுக்கு கேர்ள்-ஃபிரண்ட்ஸ் வேணாமின்னு லிஸ்ட் போடலாமா??

இராம் said...

// நாடோடி 덧글 내용...
//அழகனா பொன்னு வேரா சொல்லுராங்...மனசு கேக்கல..:))//
நாட்டுல நிறையபொண்ணுங்க இப்படிதான் பேசிட்டு திரியுராங்க...

//

ஏனா பொண்ணுங்க எப்பவும் உண்மைதான் பேசுவாங்க :)))//

ஆஹா...இது எம்புட்டு பெரிய உண்மை??? :)

இம்சை அரசி said...

// செந்தழல் ரவி 덧글 내용...
எச்சூஸ்மீ சிஸ்டர்...

எனக்கு ஒரு 'பாய்' பிரண்டா இருக்கார்...அவர் கிட்ட சொல்லவா ?

பேரு கலீல் முகமது...வயசு நாப்பத்தஞ்சு...பரவாயில்லையா ?

எங்க கடைக்கு அவர்தான் வழக்கமா சாம்பிராணி எடுத்துக்கிட்டு வந்து புகை போடுவார்...

ஆவோ ஆவோ அப்படீன்னு சொல்லுவேன்..

இந்த பாய் பிரண்டு உங்களுக்கு ஓக்கேவா ?
//

நாடோடிக்கு போட்ட கமென்ட்டை தயவு செய்து படிக்கவும் அண்ணா :)))

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
//கண்ணாடி பாத்து அழகுபடுத்திக்கணும்னு எங்களுக்கெல்லாம் அவசியமே இல்ல... natural beautyபா... ;)//

Mirror cracking Materialன்னு கேள்வி பட்டு இருக்கேன். அத சொல்லுகிறீர்களோ?.:)
//

அது நீங்க mirror பாத்தா அப்டி ஆகும் ;)

நாடோடி said...

//அது நீங்க mirror பாத்தா அப்டி ஆகும் ;)//

அந்த கொடுமைக்குதான் கண்ணாடி பாக்குற பழக்கத்தவிட்டு பல வருசமாச்சே. இருந்தாலும் அதை நேர்மையா நான் ஒத்துக்கொள்வேன். ஆனா பொண்னுங்ககிட்ட இந்த விசயத்துல மட்டும் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?..
:)

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
//யோவ்வ்வ்வ்வ்வ்வ்...... சரியான பட்டிகாடா இருப்ப போல... போய் திருப்பி LKGல சேந்து ஒழுங்கா டீச்சர சைட் அடிக்காம படிச்சுட்டு வாய்யா... ;)///

எங்க மிஸ் மடியில உக்காந்து A,B,C,D... படிக்கிறது நடக்குமாங்க..
எங்க நான்வேனா டைரைக்டா M.B.B.S. படிச்சு கலெக்ட்ரா ஆகி பாய்பிராண்ட் சர்வீஸ் சென்டர் ஆரம்பிச்சுடுவா?..
(மாமன் மகள் பட டையலாக் சரியா ஞாயபகத்துக்கு வரமாட்டேனுது. யாரவது ஹெல்ப் பண்ணங்கப்பா, LKG படிக்க இல்ல இந்த பின்னூட்டத்துக்குதான்).

:)))))))))))))
//

விசாரிச்சு பாருங்க... எங்கயாவது கண்டிப்பா கிடைக்கும்... MBBS படிச்சுட்டு ஏன் பில் கலெக்டரா போறீங்க? ஷேம் ஷேம்...

Anonymous said...

:))
யக்கோவ் என்ன அனுபவம் என்ன அனுபவம்.நான் எல்லாம் விழுந்து அடிச்சுகிட்டு ஓடிதான் போனேன்.நீங்க கொஞ்சம் அறிவைப் பயன்படுத்தி தப்பிச்சுட்டீங்க.சூப்பர்.

நாடோடி said...

//BBS படிச்சுட்டு ஏன் பில் கலெக்டரா போறீங்க?//
எல்லாம் ஒரு சோஷியல் சர்வீஸ்க்குதான்..

இம்சை அரசி said...

// குசும்பன் 덧글 내용...
இம்சை அரசி said...
"பண்ணிட்டேன்... குசும்பன்
அண்ணாச்சி செலவுல லீலா பேலஸ்ல வாங்கி லஞ்ச் சாப்பிட்டா சரியா போயிடும்னு சொல்லிட்டார் ;)"

இம்சை அரசி என்ன சொல்றாங்கன்னா
குசும்பா அண்ணாச்சி (ஆசிப் மீரான்) செலவுல லீலா பேலஸ்ல வாங்கி லஞ்ச் சாப்பிட்டா சரி ஆகிடும் என்று சொல்கிறார்

அதைதான் சேர்த்து சொல்லி விட்டார் சரிதானே!!!
//

அதெல்லாம் அண்ணாச்சி blogger meetக்கு வந்தப்பவே குடுத்துட்டார். நான் சொன்னது குசும்பன் அண்ணா உங்களதான் :)

இம்சை அரசி said...

// Inder 덧글 내용...
natural beautyபா... ;)

am the kuber kuber laughing
- inder
//

அய்யோ நான் உங்கள சொல்லலீங்க... அப்படி எதும் தப்பா எடுத்துக்காதீங்க ;)

இம்சை அரசி said...

// லொடுக்கு 덧글 내용...
அவனை மிரட்டுவதற்கு சென்னைக்கு போன் செய்து காசு வீணாக்கி, மறுமுனையில் எடுத்தவரையும் குழப்பாமல் சும்மா செல் போனை காதில் வைத்து சத்தமாக பேசி நடித்திருக்கலாமே!...

சரி சரி.. இதனால் உங்களுக்கு கிடைக்கவிருந்த பாய் ஃப்ரெண்ட் எஸ்பேப்...
//

2 கால்க்கு அப்படி என்ன பெருசா செலவாயிட போகுது. அதுமில்லாம அப்போ நமக்கு தெரிஞ்சவங்களோட பேசினா கொஞ்சம் தெம்பா இருக்குமில்ல???

எனக்கு பாய் ஃப்ரெண்ட்டே வேணாம் சாமி... தொல்லைய கூடவே வச்சுகிட்டு அலையணும் :P

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
//நீங்களே அதை பாத்துட்டு தான வந்தீங்க... அப்புறம் என்ன??? ;)))///

ஆணி பிடுங்க சொல்லிருந்தா பரவாயில்ல.மவராச நீ நீடுழி வாழ்கந் சொல்லிட்டு, நைட்டு,பகலா,ஆணி பிடுங்கியிருப்பேன் பிலாக் பக்கமே வராம.1 1/2 வருச ஆணி பிடுங்கியதற்கு சேர்த்து document பண்ணல சொல்லுராங்க. இந்த கொடுமைய நான் எங்க போயி இறக்குவேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அப்படியா சேதி??? அதான் ப்ளாக்ல வந்து பயங்கரமா document பண்றீங்க போல???!!! ;)))

இம்சை அரசி said...

// இராம் 덧글 내용...
யக்கோவ்,

நீங்க ஒங்க சோகத்தை சொன்னீங்க.... இதேமாதிரி நாங்கெல்லும் எதுக்கு கேர்ள்-ஃபிரண்ட்ஸ் வேணாமின்னு லிஸ்ட் போடலாமா??

//

தாராளமா போடுங்கோ... யாரு வேணாம்னு சொன்னாங்க??? :)))

இம்சை அரசி said...

// இராம் 덧글 내용...
// நாடோடி 덧글 내용...
//அழகனா பொன்னு வேரா சொல்லுராங்...மனசு கேக்கல..:))//
நாட்டுல நிறையபொண்ணுங்க இப்படிதான் பேசிட்டு திரியுராங்க...

//

ஏனா பொண்ணுங்க எப்பவும் உண்மைதான் பேசுவாங்க :)))//

ஆஹா...இது எம்புட்டு பெரிய உண்மை??? :)
//

ஒத்துக்கிட்டா சரி :)))

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
//அது நீங்க mirror பாத்தா அப்டி ஆகும் ;)//

அந்த கொடுமைக்குதான் கண்ணாடி பாக்குற பழக்கத்தவிட்டு பல வருசமாச்சே. இருந்தாலும் அதை நேர்மையா நான் ஒத்துக்கொள்வேன். ஆனா பொண்னுங்ககிட்ட இந்த விசயத்துல மட்டும் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?..
:)
//

நாந்தான் முன்னாடியே ஒத்துக்கிட்டேனே. அப்புறம் என்ன கேள்வி???

இம்சை அரசி said...

// துர்கா|thurgah 덧글 내용...
:))
யக்கோவ் என்ன அனுபவம் என்ன அனுபவம்.நான் எல்லாம் விழுந்து அடிச்சுகிட்டு ஓடிதான் போனேன்.நீங்க கொஞ்சம் அறிவைப் பயன்படுத்தி தப்பிச்சுட்டீங்க.சூப்பர்.
//

இனிமேல் நீயும் இப்படிதான் இருக்கணும் சரியா??? அக்கா பேரை காப்பாத்தணும் :)

இம்சை அரசி said...

// நாடோடி 덧글 내용...
//BBS படிச்சுட்டு ஏன் பில் கலெக்டரா போறீங்க?//
எல்லாம் ஒரு சோஷியல் சர்வீஸ்க்குதான்..
//

சோஷியல் சர்வீஸா??? பண்ணுங்க பண்ணுங்க... நல்லா பண்ணுங்க...

மொதல்ல documentஅ முடிக்கற வழியப் பாருய்யா... ;)

ஜொள்ளுப்பாண்டி said...

//ஒருத்தன் என்னையே பாத்துட்டு இருக்கான். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ எவ்ளோ தைரியம்??? ஒரு பொண்ணு அழகா இருந்துட கூடாதே.........//

ஹஹஹஹஹஹ என்ன இது கலாட்டா?? இம்சை நெசமா??? :)))) சரி சரி அழகான பொண்ணுங்க வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம்தானே?? ;)))) ம்ம்ம்ம் இப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு பாருங்க ??? :))))

கண்மணி said...

இம்சை நீ செஞ்சதுதான் சரி.
எந்த நேரத்துக்கு எப்படி நடந்துக்கனுமோ அப்படி செய்யனும்.ஜெஸிலா சொல்ற தற்காப்பு கலையை வச்சி உதைக்கவா முடியும்[தேவைப்பட்டால் செய்யலாம்]
ஆனால் நோ வயலன்ட் பட் இர்ரிடேட்டிங் மாதிரி சாதுவா அதே நேரம் முறைச்சிப் பாக்குற ஆளை இப்படித்தான் உதார்விட்டு மிரட்டனும்.

ஒரே ஒரு ஆம்பளையாச்சும் இங்க சப்போர்டிவா பேசுதா பாரு நக்கலு நையாண்டி

G.Ragavan said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ILA(a)இளா said...

இந்த நிலைமையில் உங்களுக்கு செக்யூரிட்டி கார்ட்தான் வேணும், அதுக்கு பேரு பாய் பிரண்ட் இல்லே. உங்களுக்கு செயூரிட்டியா, டிரைவரா, செலவு செய்யுற இளிச்சவாயனா ஒரு பாய் பிரண்ட் வேணுமா? இல்லே உண்மையாவே பாய் பிரண்ட் வேணுமா?

அருள் குமார் said...

//பாய் ஃப்ரெண்ட் தேவையா??? //

அதெல்லாம் நமக்குத் தெரியாதுங்க. ஆனா குறஞ்சபட்சம் ஒரு கேர்ள் ஃபிரெண்டாவது தேவை!

பின் குறிப்பு: இது பதிவைப்படிக்காமல் தலைப்பு பாத்ததும் இடப்பட்ட பின்னூட்டம் :)

Anonymous said...

சர்சரியா பார்த்தீர்களா?
நம்ம வலைப்பூ வாசி ஒருவராக இருந்திருக்கலாம்..
"இவங்க இம்சையா இருப்பாங்களோ" என நினைத்திருக்கலாம்..
கிகி
எதுக்கும் அடுத்த தடவை கவனமாக போங்க

போலீஸ்காரன் said...

இந்த பதிவில் பின்னூட்ட கயமை நடைபெறுகிறது.

.:: மை ஃபிரண்ட் ::. said...

superb.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அப்பதான் ஒரு பாய் ஃப்ரெண்டோட அவசியத்த புரிஞ்சிக்கிட்டேன். //

akka, venddaam riskuu...

.:: மை ஃபிரண்ட் ::. said...

//மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துன கதையா இல்ல இருக்கு //

ithu rightuu.. purinju nadanthaa sari. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

75 podadchu. :-)

சங்கீதன் said...

//மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துன கதையா இல்ல இருக்கு //

இதை நான் மிக வன்மையாக சிரித்துக் கொண்டே கண்டிக்கறேன் ..