Tuesday, January 1, 2008

இதயம் ரோஜா காதல் முள் - III

அப்பாடா! உங்களப் பாத்து ரெண்டு வாரம் ஆச்சுல்ல. என்னங்க பண்றது? எல்லாம் இந்த இம்சையாலதான். அடடா! இம்சை அரசிய சொல்லலைங்க. அவங்க எவ்ளோ நல்லவங்க... வல்லவங்க... எவ்ளோ பெரிய அறிவாளி... திறமைசாலி... பொறுமையானவங்க... பொறுப்பானவங்க... அமைதியானவங்க... அவங்களப் போய் இப்படியெல்லாம் சொல்லுவேனா? நான் சொன்னது என்னைப் பிடிச்சு ஆட்டற இம்சை... அதான் அந்த இம்சை புடிச்சவன் ஷ்யாம்...
உங்ககிட்ட பேசிட்டு இருந்தப்போ அவன் யாரோ ஒரு பொண்ணு கூட வரானு பயந்துட்டு இருந்தேன் இல்ல. அந்த பொண்ணு அவனோட வேலை செய்யற பொண்ணாம். ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டுனு சொன்னான். இருந்தாலும் என்னை விட க்ளோஸா இருக்க மாட்டானு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன் :))) அவ உடனே கிளம்பிட்டா. அன்னைக்கு படம் பார்த்துட்டு பீச் போனோம். அவன் கையப் பிடிச்சிட்டு பீச்ல கால் நனைய நடக்கற சந்தோஷத்த அனுபவிச்சிட்டு இருந்தப்போதான் பேசாம நாமளே சொல்லிடலாமானு தோணுச்சு. நீ கல்யாணத்தப் பத்தி என்ன நினைக்கறனு மெல்ல பேச்ச ஆரம்பிச்சேன். கல்யாணம்னு ஒரு ரெண்டு நிமிஷம் சீரியஸா யோசிச்சான். எனக்கு வரவ என்னை நல்லா புரிஞ்சவளா இருக்கணும். என் ஃபேமிலியோட நல்லா மிங்கிள் ஆகி எங்க வீட்டுப் பொண்ணு மாதிரி பாசமா இருக்கணும். எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டா என் சந்தோஷத்தை கொண்டாடி, என் துக்கத்துல ஆறுதலா இருந்து, என் தப்பையெல்லாம் செல்லமா குட்டி ஒரு புன்னகையோட சரி செய்யறவளா இருக்கணும்னு சொன்னான். சொல்லிடு சொல்லிடுனு மனசு சொன்னாலும் வாய் மட்டும் திறக்கவே மாட்டேன்றது. நான் என்னதான் பண்ணுவேன். சரி எதாவது கேக்கணுமேனு யாரையாவது லவ் பண்ணியிருக்கியா ஷ்யாம்னு நான் கேட்டதும் என்னை முறைச்சான். ஹே! என் டீம் மேட் ப்ளாக் எழுதறா இல்ல. அதுக்கு எதாவது கதை தேறுமானு கேட்டேன்பானு நான் சமாளிச்சேன். உடனே என்னைப் பாத்து அவன் சிரிச்சப்போ எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு. வேற எதாவது இருக்குனு சொல்லிடுவானோனு நெஞ்சு படபடனு அடிச்சுக்குது.

சொல்லுடானு நான் அவசரப்படுத்தவும் முகத்த சோகமா வச்சிக்கிட்டு எனக்கு ஏகப்பட்ட காதல் கதை இருக்கு. ஆன எல்லாமே ஃபெயிலியர் லவ்ஸ்னு அவன் சொன்னதும் எனக்கு மனசு இன்னும் பக் பக்குனு அடிச்சது. சரி ஒவ்வொண்ணா சொல்லுனு நான் கஷ்டப்பட்டு எதையும் வெளில காட்டிக்காம சாதரணமா கேட்டேன். நான் பத்தாவது படிக்கறப்போ சிம்ரன் சிம்ரன்னு ஒரு பொண்ண லவ் பண்ணினேன். ஆனா அந்த பொண்ணு அப்போ வேற ஒருத்தர லவ் பண்ணுச்சுனு சொன்னாங்க. கொஞ்ச நாள் அப்படியே சோகத்துல இருந்தேன்னு அவன் சொன்னதும் எனக்கு கோபம் தலைக்கேறுச்சு. நான் முறைக்கவும் இரு இரு. இன்னும் கதை இருக்கு. சொல்றத முழுசா கேளுடி. அதுக்கப்புறம் பன்னெண்டாவது படிச்சப்போ ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய்னு ஒரு பொண்ண லவ் பண்ணினேன். அந்த பொண்ணும் வேற ஒருத்தர லவ் பண்ணிடுச்சு. அந்த சோகமும் தாங்க முடியாம என் நெஞ்சே வெடிச்சுடுச்சு. ஆனாலும் என் வாழ்க்கைல இவ்ளோ சோகம் இருக்க கூடாதுனு சாமிகிட்ட எல்லாம் சண்டை போட்டேனு அவன் ரொம்ப சோகமான குரல்ல சொல்லவும் நான் பயங்கர கடுப்பாகி பட்பட்டுன்னு நாலு சாத்து சாத்தினேன். ஹே! இது மாதிரி இன்னும் எவ்ளோ சோகம் இருக்கு தெரியுமா? இதுக்கே இவ்ளோ சலிச்சுக்குற. கஷ்டப்பட்ட எனக்குதான தெரியும்னு அவன் சொல்லி முடிச்சப்போ அவன் பைக்கிட்ட வந்துட்டோம். சரி நேரமாச்சுனு கிளம்பினோம். வண்டில போகும்போது எப்படி சொல்றதுனு நான் யோசிச்சிட்டே வந்தேன். அவனும் எதுமே பேசலை. அமைதியாவே வந்தான்.

சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு போனோம். இப்போ எப்படியாவது சொல்லிடணும்னு லவ் பத்தி என்ன நினைக்கற ஷ்யாம்னு கேட்டேன். அவன் ஒரு ஸ்மைல் பண்ணினான். நான் சீரியஸா கேக்கறேனு சீரியஸா முகத்த வச்சுக்கிட்டு சொன்னேன். சரி நீ ஃபர்ஸ்ட் சொல்லு. நீ என்ன நினைக்கறனு கேட்டான். இவங்க கூட நாம ஃலைப் லாங்க் இருக்கணும்னு தோணற ஃபீலிங்னு நான் சொன்னதும் அது ஃப்ரெண்ட்ஸ் கூடவும் லைப் லாங்க் இருக்கலாமேனு சொன்னான். இது ஃப்ரெண்ட்ஷிப்பையும் மீறிய ஒரு ஃபீலிங். இவங்க மட்டும்தான் அந்த இடத்த ஃபில் பண்ண முடியும்னு தோணுது பாத்தியா. அதானு நான் சொன்னதும் மறுபடியும் அவன் சிரிச்சான். போடா எனக்கு சொல்லத் தெரியல. பட் இட்ஸ் அ நைஸ் ஃபீலிங்னு நான் சொன்னேன். சோ நீ யாரையோ லவ் பண்ற. அம் ஐ ரைட்?-னு அவன் கேக்கவும் எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. கோழி திருடுனவளாட்டம் முழிச்சேன். நல்லா மாட்டிக்கிட்டேனு முழிச்சிட்டே சமாளிக்க நீ யாரையாவது லவ் பண்றியானு கேட்டேன். நான் கேட்டதுக்கு பதில் சொல்லுனு அவன் சீரியஸா கேக்கவும் இதுக்கு மேல மறைக்க முடியாதுனு யெஸ்னு சொன்னேன். யாருனு அவன் கேக்கவும் நான் பதில் சொல்லாம நான் கேட்டதுக்கு மொதல்ல பதில் சொல்லுனு கேட்டேன். அவன் ஒரு நிமிஷம் டேபிள்ல வச்சிருந்த கையவே பாத்துட்டு இருந்தான். அப்புறம் ஆமாம். நானும்தான்னு சொன்னான். எனக்கு அப்படியே சந்தோஷமாயிடுச்சு. இருந்தாலும் வேற யாராவதா இருந்துட்டானு ஒரு பயமும் வந்துடுச்சு. நான் அவள ரொம்ப சீரியஸா லவ் பண்றேன். அவ இல்லைனா எனக்கு லைஃபே இல்லைனு நினைச்சுட்டு இருக்கேனு அவன் சொன்னப்போ அவங்க வீட்டுல இருந்து அவனுக்கு ஃபோன் வந்துச்சு. அவன் தாத்தாவுக்கு ரொம்ப சீரியஸ்னு உடனே கிளம்பி வர சொன்னாங்க. அதனால என்னை ஆட்டோ பிடிச்சு ஹாஸ்டல் போக சொல்லிட்டு அவன் உடனே கிளம்பி போயிட்டான். இன்னும் ஹாஸ்பிட்டல்லதான் இருக்காங்க. தாத்தாவுக்கு இப்போ பரவால்லையாம். ஃபோன் பண்ணினப்ப சொன்னான். சரி இந்த நேரத்துல அதைப் பத்தி கேக்க வேணாம்னு நான் கேக்கலை.

எனக்குதான் சோறு தண்ணி இறங்க மாட்டேன்றது. அவன் சொன்னது என்னைதான்னும் ஒரு வேளை வேற யாராவதா இருக்குமோனு மனசு ரெண்டா பிரிஞ்சு உக்காந்து பட்டிமன்றம் நடத்தி என்னைப் பாடாபடுத்துது. இந்த வாரம் ஊருக்கு போறேன். அண்ணன் வரான். அவன்கிட்ட இதை சொல்லப் போறேன். அவன்கிட்ட பேசினாதான் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும். பட் நேர்ல பாத்து பேசணும்னுதான் போறேன். அவன் வேற என்ன சொல்வானோனும் பயமா இருக்கு. காதல்ல விழுந்தா இப்படிதான் பயந்து பயந்தே சாகணும்னு எதாவது எழுதி வச்சிருக்குப் போல. பாவம்பா லவ் பண்றவங்க. அதும் நான் ரொம்ப பாவம். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொல்லி வச்சிருக்காங்க. சரி விடுங்க. விட்டா நான் உக்காந்து ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடுவேன். உங்களுக்கு நியூ இயர் செலிப்ஸ் எப்படி போச்சு? நல்லா எஞ்சாய் பண்ணினிங்களா? Happy New Year!!! நான் வரேங்க. இன்னொரு நாள் பாப்போம். பை.

தொடரும்...

15 comments:

நிஜமா நல்லவன் said...

////அப்பாடா! உங்களப் பாத்து ரெண்டு வாரம் ஆச்சுல்ல. என்னங்க பண்றது? எல்லாம் இந்த இம்சையாலதான். அடடா! இம்சை அரசிய சொல்லலைங்க. அவங்க எவ்ளோ நல்லவங்க... வல்லவங்க... எவ்ளோ பெரிய அறிவாளி... திறமைசாலி... பொறுமையானவங்க... பொறுப்பானவங்க... அமைதியானவங்க... அவங்களப் போய் இப்படியெல்லாம் சொல்லுவேனா? /////


பொய் சொல்ல ஒரு அளவு இல்லையா???????

ஜே கே | J K said...

வாழ்த்துக்கள் இம்சை அரசி. கலக்குறீங்க...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Anonymous said...

sondha kathaiyo ?

G.Ragavan said...

ஓ இது வினிதாவா... ம்ம்ம்ம்...பாவம் இந்தப் பொண்ணு. அந்தப் பய தெய்வாவ நெனச்சிக்கிட்டிருக்கான். பேசாம பேர வள்ளின்னு மாத்தி வெச்சுக்கச் சொல்லு. வாய்ப்பிருந்தாலும் இருக்கும். ஆனா அந்தப் பயலும் அதுக்குப் பேர மாத்தனுமே!!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கோபிநாத் said...

\\உங்களுக்கு நியூ இயர் செலிப்ஸ் எப்படி போச்சு? \\

தொடர்கதை படிச்சிக்கிட்டே போச்சு..;))

மங்களூர் சிவா said...

~~~~~~~~~
பன்னனு வயசில் பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே
கண்ணை பார்த்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பார்க்குமே
லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே

கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது
உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே
ஜவுளி கடை பொம்மையை பார்க்கும் போது
உன் புத்திக்குள்ள கவுலி கத்தும் அதுவும் லவ் இல்லே

இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்
எதனையும் புரிஞ்சு நடக்கணும்
காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா
இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா
~~~~~~~~~

இன்னைக்கு மத்தியானம் லஞ்ச் டைம்ல பாத்த பாட்டு இதுதான் ஞாபகத்துக்கு வருது!!

Anonymous said...

வாவ்... என்ன ஒரு இனிய காதல் தொடர்...இதயம் சிலிர்த்துக் கொள்கிறது... உங்கள் சொந்த அனுபவமாக இருக்குமோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது... :) தயவுசெய்து அடுத்த பகுதியிலாவது இருவரையும் ஒன்று சேர்த்துவிடுங்கள்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Dreamzz said...

இந்த கதை தொடர் முழுசா படிச்சேன்..காதல் எப்பவுமே இப்படி தான் இல்ல.

அழகிய கொடுமை.

நல்லா இருக்கு.. சீக்கிரம் சஸ்பென்ஸ உடைங்க யக்கொவ்!

Divya said...

இம்சை, உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

'இதயம் ரோஜா காதல் முள்' மூன்று பகுதிகளையும் இன்றுதான் படித்தேன்,

ரொம்ப சுவாரஸியமாக இருந்தது!

ரியலிஸ்டிக்கா எழுதுறீங்க, பாராட்டுக்கள்!

அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்க்ஸ்......!

ரசிகன் said...

அவ்வ்வ்..... இன்ரஸ்டா இருக்கு .. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்கு..

வித்தியாசமா முடிவு குடுக்கறேன்னு
கதையில ஏதாவது குளருபடி பண்ணிராத தாயி...

ரசிகன் said...

அவ்வ்வ்..... இன்ரஸ்டா இருக்கு .. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்கு..

வித்தியாசமா முடிவு குடுக்கறேன்னு
கதையில ஏதாவது குளருபடி பண்ணிராத தாயி...

Nithi said...

ஒரு இனிய தொடர் கதை ,நல்லா இருக்குங்க

ஜொள்ளுப்பாண்டி said...

இம்சைஸ் :)))
அடடா என்ன ஆச்சு.. உங்க கதை சொல்லும் நடை ச்சும்மா.. சுண்டி இழுக்குதுங்கோ... கலக்கல்...

புத்தாண்டு வாழ்த்துகள் !!! :))))

Arunkumar said...

whenz next?

GK said...

hi the story is nice. but where is the next part???