Sunday, January 6, 2008

நண்பருக்காக பதிவு போட விரும்புகிறீர்களா?


ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஃப்ரெண்ட்கிட்ட பேசிட்டு இருந்தேன். என் பிறந்த நாளை மறந்து போயிட்டதுக்காக ரொம்ப வருத்தப்பட்டுக்கிட்டாங்க. நான் பெருமையா என் பர்த்டேதான் ஊருக்கே தெரியுமே. நிறைய பேர் போஸ்ட் எல்லாம் போட்டு வாழ்த்தினாங்கனு சொன்னேன். உடனே அவங்க உங்களுக்கென்னப்பா? யாருக்காவது வாழ்த்து சொல்லனும்னா உடனே ஒரு போஸ்ட் போட்டுடுவீங்க. எங்களுக்கெல்லாம் யார் இப்படி போடறாங்க? இல்ல நாங்க யாருக்காவது வாழ்த்து போஸ்ட் போடணும்னா அதுக்காக ஒரு ப்ளாக் ஆரம்பிக்க முடியுமா-னு ரொம்ப சலிச்சிக்கிட்டாங்க.

மக்கள் வருத்தப்பட்டா நமக்கு மனசு தாங்குமா? அதான் எக்கச்சக்க மீட்டிங்க் எல்லாம் போடாம, ஓவரா யோசிக்காம நம்ம உலகத்திலுள்ள நண்பர்களுக்காக நானும் அருமை நண்பர் ஜியாவும், பாசக்கார அண்ணன்கள் ராம் மற்றும் CVR (மூணு பேருக்கும் அக்கவுண்ட் நம்பர் மெயில்ல அனுப்பறேன்) சேர்ந்து ஆரம்பித்த ப்ளாக் இந்த Buddy Wishes. இதுல அப்படி என்ன இருக்குனு கேக்கறீங்களா?

ஒண்ணும் இல்லைங்க. நீங்க யாராவது உங்க நண்பருக்காக பதிவு போடவோ இல்லை வாழ்த்து சொல்லவோ இல்லை மெசேஜ் கொடுக்கவோ விருப்பப்பட்டா எங்களுக்கு மெயில் அனுப்புங்க. உங்க சார்பா இந்த Buddy Wishes ப்ளாக்ல நாங்க போட்டுடுவோம். அது மட்டுமில்லாம எங்களுக்கு கிடைக்கற நட்பு பற்றிய கவிதைகள், கதைகள் மற்றும் படங்கள்னு போடலாம்னு இருக்கோம்.

இதுக்கு உங்க பேர், உங்க ஃப்ரெண்ட் பேர், விருப்பப்பட்டால் அவங்க இமெயில் ஐடி(அவங்களுக்கும் பதிவு லிங்க் அனுப்ப) மற்றும் உங்க மெசேஜ் இதை எல்லாம் போட்டு buddywishes@gmail.com-க்கு ஒரு மெயில தட்டி விடுங்க. அதிக பட்சம் மூணு நாளுக்குள்ள உங்க போஸ்ட் வந்துடும். பிறந்த நாள் இல்லை வேற எதாவது விஷேச தின வாழ்த்துனா மூணு நாளுக்கு முன்னாடியே எப்போ போடணும்னு mention பண்ணி அனுப்புங்க. அப்புறம் வேற என்ன? அந்த பதிவோட லிங்க்க உங்க ஃப்ரெண்ட்க்கு குடுத்து சந்தோஷப்படுத்துங்க :)))

நம்ம தமிழ் பதிவர்களுக்கு சுவரொட்டி அப்படின்னு ஒரு வலைப்பூ இருக்கறது தெரிஞ்சது தானே!!
அப்போ இதுக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்னு கேக்கறீங்களா??

இது நம்முடைய தமிழ் தெரியாத நண்பர்களுக்கும், பதிவர்களாக அல்லாத நண்பர்களுக்கும் முக்கியமாக ஆரம்பிக்கப்படுவது. அதனால உங்க்களுக்கு இருக்கற தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் அல்லது வேற ஏதாவது பிற மொழி நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கனும்னா கூட எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பலாம்!!

12 comments:

aruna said...

சூப்பர் கண்ணா சூப்பர்...
அருணா

NejamaNallavan said...

ரொம்ப நல்ல விஷயம். உங்கள் சேவை தடையில்லாமல் தொடர வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

வலைச்சரம் தொடுத்துக் கொண்டிருக்கும் மலேசிய சூறாவளி அண்ணன் 'டிபிசிடி'க்கு வாழ்த்துக்கள் http://blogintamil.blogspot.com/

J K said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும். நல்லா தொடருங்கள்...

Baby Pavan said...

Thanks aunty, from tomorrow we need your support...if you find it difficult to handle our requests kindly please inform us.

இலவசக்கொத்தனார் said...

ஏற்கனவே சங்கம் சார்பில் http://sangamwishes.blogspot.com/ அப்படின்னு ஒண்ணு இருக்கே....

rsubras said...

hey romba nalla vishayam...... heartiest wishes for u to keep continuing to do that... :)

i remember doing something like this.. although not in this magnitude..en friend oruthan enga appa ku letter varuthu, amma ku varuthu, enakku mattum yaarume poda maatengranga nu feel pannan..udane oor la irukkara en friend kitta solli avanukku letter anuppa vachaen...he was sooo happy :)

Gooooooood luck :)

கோபிநாத் said...

சூப்பர்..;)

Dreamzz said...

எந்த ஒரு புது முதற்சியுமே பாராட்டதக்கது தான்! வாழ்த்துக்கள் :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்த்துக்கள். :-)

இம்சை அரசி said...

// Blogger இலவசக்கொத்தனார் said...

ஏற்கனவே சங்கம் சார்பில் http://sangamwishes.blogspot.com/ அப்படின்னு ஒண்ணு இருக்கே....
//

இதைப் பாருங்க கொத்ஸ் :)))

// நம்ம தமிழ் பதிவர்களுக்கு சுவரொட்டி அப்படின்னு ஒரு வலைப்பூ இருக்கறது தெரிஞ்சது தானே!!
அப்போ இதுக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்னு கேக்கறீங்களா??

இது நம்முடைய தமிழ் தெரியாத நண்பர்களுக்கும், பதிவர்களாக அல்லாத நண்பர்களுக்கும் முக்கியமாக ஆரம்பிக்கப்படுவது. அதனால உங்க்களுக்கு இருக்கற தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் அல்லது வேற ஏதாவது பிற மொழி நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கனும்னா கூட எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பலாம்!!
//

இம்சை அரசி said...

aruna, nejamanallavan, மங்களூர் சிவா, JK, Pavan, asubras, கோபி அண்ணா, dreamz, anu உங்க எல்லாரது வாழ்த்துக்களுக்கும் எங்க நால்வர் சார்பா கோடி நன்றிகள் :)))