Thursday, January 31, 2008

யாரிந்த தேவதை - I


"தாலாட்டும் பூங்காற்று நானல்லவ்வா... நீ கேட்டுத் தாலாட்டு ஓ மன்னவா" - ஜானகி ஐபாடில் இதமாய் தாலாட்டிக் கொண்டிருக்க, கண்கள் வெளியே வேடிக்கைப் பார்த்தாலும் மனம் மட்டும் ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தது. என்னைத் தாலாட்டும் பூங்காற்றே! எங்கே இருக்கிறாய் என் தேவதையே? எப்படி இருப்பாய் நீ? பூங்காற்றாகவா இல்லை புயலாகவா? எப்பொழுது என் கண்முன் வருவாய் நீ? இருபத்தேழு வயது இளைஞனுக்குரிய எதிர்பார்ப்புகளை நெஞ்சில் சுமந்தவனாய் நான் மெல்லிய பெருமூச்சு விட்டபோது மெல்லிய குலுங்கலுடன் பெங்களூரிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மடிவாலாவில் நின்றது.

அதுவரை எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்த மனதைக் கட்டியிழுத்தது ஒரு கருவண்டு. அட! இரு கருவண்டுகள். ஒரே மாதிரியே இரு கருவண்டுகள் அலைபாயுமா என்ன? அதுவும் துறுதுறுவென குழந்தைத்தனமான முக்கியமாய் அழகான ஒரு முகத்தில் கள்ளமில்லாமல் அலைபாயும் அவள் விழிகளைப் பார்த்தபோது இதுதான் தோன்றியது. படபடவென பட்டாம்பூச்சியாய் இமையடிக்கும் அவள் விழிகளை விட்டு என்னால் பார்வையை நகர்த்தவே முடியவில்லை. நான் இருந்த பேருந்திற்காக காத்திருந்த பயணிகளில் ஒருத்திப் போலும். அவளுடனிருந்த அவளது தோழிகளுடன் கிண்டலாய் பேசி விளையாடியிருந்த அவளது நொடிக்கொருதரம் மாறிய முக பாவனைகளை இமை மூட மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை. அவள் என்னைப் பார்க்கவில்லை. இறைவா! நீ இருப்பது உண்மையானால் அவளை என்னிடம் பேச வைத்து விடு. பாவம் இறைவன். அவன் இருப்பதை இப்படியெல்லாம் நிரூபித்தாக வேண்டியிருக்கிறது அல்லவா. அங்கே காத்திருந்த மற்றப் பயணிகள் ஏறியதும் கடைசியாய் அவளும் அவள் தோழிகளும் ஏறினர்.

எங்கே உட்காருவாள் என்று ஆவலுடன் ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது இருக்கையை அவள் நெருங்க இதயம் படபடவென அடித்துக் கொண்டது. வந்தவள் எனது இருக்கையை நெருங்கியதும் கையில் இருந்த பயணச்சீட்டை வைத்து இருக்கை எண்ணைப் பரிசோதித்தவள் அவளது உடைமைகளை மேலே வைத்து விட்டு என்னருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். இறைவா! நீ இருப்பது உண்மையென நூறு சதம் என்ன ஆயிரம் சதம் ஒத்துக் கொள்கிறேன். பேச வைக்க வேண்டி கோரிக்கை வைத்த உன் பக்தனுக்கு அருகிலேயே உட்கார வைத்து உன்னை நிரூபித்து விட்டாயே! உள்ளுக்குள் விசிலடித்துக் கொண்டிருந்த நான் மெல்ல அவளைப் பார்த்தேன். நான் பார்ப்பதை உணர்ந்தவள் என்னைப் பார்த்து நட்பாய் புன்னகைத்தாள். "விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே"- என்று இளையராஜா வேறு சமயம் பார்த்து பாடிக் கொண்டிருந்தார். சாரி பாஸ். உங்களை நிறுத்த வில்லையென்றால் உயிரில் கலக்கப் போகும் உறவு பறந்துப் போய் விடும் என்றெண்ணியபடி ஐபாடை நிறுத்தி எடுத்து வைத்தேன்.

பேருந்து கிளம்பி பத்து நிமிடங்கள் ஆகி விட்டது. எப்படி பேச ஆரம்பிக்கலாம். நாமாக ஆரம்பித்தால் எதாவது நினைத்துக் கொள்வாளோ என்று எக்கச்சக்க ஆரய்ச்சிகள் செய்துக் கொண்டிருந்த என் காதுகளில் தேனாகப் பாய்ந்தது "திருச்சிக்கு எத்தனை மணிக்குப் போய் சேரும்னு உங்களுக்குத் தெரியுமா?" என்று அவள் கேட்டது.

"காலைல ஒரு ஏழு மணிக்கெல்லாம் போய் சேர்ந்துடுவோம்" என்றேன்.

"ஓ! தேங்ஸ்" என்றவள் இரு நிமிடங்கள் கழித்து

"நீங்களும் திருச்சிக்கா போறீங்க" என்றாள். வாய்ப்புக் கிடைத்தாயிற்று. நழுவ விட நான் என்ன முட்டாளா?

"ஆமாம். திருச்சி பஸ்ல திருச்சி தானே போக முடியும்?" என்று கிண்டலாய் நான் கேட்கவும் சிரித்தாள்.

"இல்ல. சேலம், நாமக்கல் போறவங்க கூட இதுல வருவாங்கன்னு கேள்விப்பட்டேன்" என்றாள்.

"ஓ! நீங்க திருச்சிக்கு இதுதான் முதல் தடவையா?" என்றதும் ஆமாமென்பதுப் போல தலையாட்டினாள்.

"வீக் எண்ட்ல எல்லாம் அப்டி ஏத்த மாட்டாங்க. ஒன்லி திருச்சிப் போறவங்க மட்டும்தான் ஏத்துவாங்க" என்றேன்.

"ஓஹோ! திருச்சில இருந்து உறையூர் எப்படி போகணும்?"

"சத்திரம் பஸ் ஸ்டாண்ட்ல இறங்கிக்கங்க. அங்க இருந்து நிறைய பஸ் இருக்கு. ஈஸியா போயிடலாம்" என்று நான் முடிப்பதற்குள் பேருந்தில் வேலை செய்யும் பையன் அவளிடம் வந்து முன்னால் ஒரு பெண் இருப்பதாயும் இருக்கை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியதும் எனக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது. என்ன செய்வது காட்ட முடியாத சூழ்நிலை. அவள் என்ன சொல்வாளோ என்று அவளையேப் பார்த்தேன். ஒரு நிமிடம் யோசித்தவள்

"நோ ப்ராப்ளம். இங்கேயே உக்காந்துக்கறேன்" என்று அந்தப் பையனை அனுப்பி வைக்கவும்தான் என்னால் நிம்மதியாய் மூச்சு விட முடிந்தது.

அதன் பின் எங்கே வேலை செய்கிறோம் வேலை எப்படிப் போகிறது என்று ஆரம்பித்து மற்ற நிறுவனங்களைப் பற்றி அலசி ஆரய்ந்துப் பின் பொழுதுபோக்கு, சினிமா, பிடித்த நடிகர், நடிகை, இயக்குனர், பாடல்கள், படம், பிடித்த ஊர், இறுதியாய் சென்ற சுற்றுலா என்று பல விஷயங்களை அலசி ஆராய்ந்து முடித்தபோது அவளிடம் நெருக்கமாகி விட்டதாய் உணர்ந்தேன். அவளும் என்னை நன்கு பழகிய நண்பனிடம் பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தாள். பெண்கள் அழகுதான். அதோடு குழந்தைத்தனமும் சேர்ந்துக் கொண்டால்... அழகோ அழகு. அதிலும் முகத்தை அழகாய் சுழித்து வெவ்வெவ்வே என்று பழிப்புக் காட்டும்போது அந்தக் கன்னக் குழிகளில் வழுக்கி வழுக்கி விழுகிறேன். இப்படி நான் விழுவது தெரிந்தால் இதேப் போல் என்னுடன் பேசுவாளா? இப்படி நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அவளோ பேசிப் பேசிக் களைப்பாகி மெல்ல தூங்க ஆரம்பித்திருந்தாள்.

எனக்கோ தூக்கம் வரவில்லை. இருகையில் சாய்ந்து கன்னத்தில் கைவைத்துத் தூங்கிக் கொண்டிருந்த அவளை என் நெஞ்சில் போட்டுத் தட்டிக் கொடுத்து தூங்க வைக்க வேண்டும் போல இருந்தது. இதெல்லாம் நடக்குமா? இப்படியே விடிய விடிய நான் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க பேருந்தும் திருச்சி எல்லையைத் தொட்டது. மெல்ல கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தவள்

"நீங்க அதுக்குள்ள எழுந்தாச்சா?" என்றாள் மெதுவாக.

"ம்ம்ம்" என்றேன் மெதுவாய். பின் இருவரும் மொபைல் நம்பரை மாற்றிக் கொண்டோம். சத்திரம் பேருந்து நிலையம் செல்ல பத்து நிமிடங்களே இருந்தன. திடீரென்று ஞாபகம் வந்தவனாய்

"திரும்ப எந்த பஸ்ல டிக்கட் புக் பண்ணியிருக்கீங்க?" என்றேன்.

"இல்ல ஆக்சுவலா என் ஃப்ரெண்ட் கல்யாணத்துக்காக திருச்சி வரேன். ஞாயித்துக் கிழமை கல்யாணம். முடிஞ்சதும் கிளம்பி கோயம்புத்தூர் போறேன்"

"நீங்க ஈரொடுனு சொன்னீங்க"

"அது எங்கம்மா வீடு. நான் இப்போ போறது எங்க மாமியார் வீட்டுக்கு" என்று அவள் என்னுள் இடி இறக்குவது தெரியாமல் வெகு சாதாரணமாய் சொன்னாள். என்னால் பேச இயலாமல் வாயடைத்து நின்றேன். சொல்லிவிட்டு நான் ஏதேனும் பேசுவேனென்று என் முகத்தையேப் பார்த்தாள்.

"ஓ! உங்க வீட்டுக்கார்..." என்று நான் இழுக்கவும்

"அவர் ஆன்சைட் போயிருக்கார். அடுத்த மாசம் வந்துடுவார்" என்று அவள் முடித்தபோது சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்க அவள் தோழிகள் அழைக்கவும்

"சரி வரேங்க. பை" என்று கூறிவிட்டு அவளது உடமைகளை எடுத்துக் கொண்டு அமைதியாய் சிரித்தபடிச் சென்றாள் எனது இதயத்தை கூர்க்கத்தி கொண்டு கிழித்துவிட்டு.

(தேவதை வருவாள்)

39 comments:

Dreamzz said...

//எங்கே இருக்கிறாய் என் தேவதையே? எப்படி இருப்பாய் நீ? பூங்காற்றாகவா இல்லை புயலாகவா?//
இல்ல இரெண்டும் கலந்தா?

Dreamzz said...

வர்ணனை எல்லாம் கலக்கல் இம்சை!

Dreamzz said...

//இறைவன். அவன் இருப்பதை இப்படியெல்லாம் நிரூபித்தாக வேண்டியிருக்கிறது அல்லவா//
LOL...பின்ன நம்மகிட்ட (உன்கிட்ட) மாட்டினா

Dreamzz said...

கதை முடிவு ... யதார்த்தம்...

ஜி said...

// Dreamzz said...
கதை முடிவு ... யதார்த்தம்...
//

Innum mudiyalaiyaam Dreamz..:)))

Imsai... nalla irukku.. continue.. :)))

CVR said...

அட அட!!
நாவலாசிரியைனா சும்மாவா??

போட்டு தாக்கியிருக்கீங்க மேடம்!!
அடுத்த பகுதி என்ன ஆகுதுன்னு பாக்கலாம்!! ;)

கோபிநாத் said...

\\ ஜி said...

Imsai... nalla irukku.. continue.. :)))\\

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;))

நிவிஷா..... said...

//Innum mudiyalaiyaam Dreamz..:)))
//
Dreamz, mulusa padichu comment podunga :)

Imsai akka, kadhai nalla irukku.
seekiram adutha paguthiyum podunga..

apparam naanum next post pottuten..

Natpodu
Nivisha!

ஜே கே | J K said...

இப்படி காத்து போன பலூன் போல ஆயிடுச்சே.

சரி அடுத்த பகுதில என்ன நடக்குதுனு பாக்கலாம்.

கப்பி | Kappi said...

//அட அட!!
நாவலாசிரியைனா சும்மாவா??

போட்டு தாக்கியிருக்கீங்க மேடம்!!
அடுத்த பகுதி என்ன ஆகுதுன்னு பாக்கலாம்!! ;)//

ரிப்பீட்டு :))

Sanjai Gandhi said...

//(தேவதை வருவாள்)//
அப்போ இது சிறுகதை இல்லையா? :P

குசும்பன் said...

//நீ இருப்பது உண்மையானால் அவளை என்னிடம் பேச வைத்து விடு. பாவம் இறைவன். அவன் இருப்பதை இப்படியெல்லாம் நிரூபித்தாக வேண்டியிருக்கிறது அல்லவா.///

:) இதுவாது பரவாயில்லை.

காதல் கதை போல படிக்க ஏதும் ஏஜ் லிமிட் இருக்கா??

குசும்பன் said...

இப்படி ஒரு தொடரும் எதிர்பார்க்கவில்லை பார்கலாம் அடுத்து எப்படி போகுதுன்னு?

Unknown said...

sema bulb namma herokku :)))
aama hero peru enna???
atha sollamayae oru episode ootiteenga!!!! ungalukku nalla ethirkaalam irukku mega serial directora :)))

ரசிகன் said...

இம்சை.. என்னதான் சொன்னாலும் கதையெல்லாம் சொம்மா நச்சின்னு இருக்கு...ஆமா அதென்ன கல்யாணம் ஆன பொண்ணுக்குறிய அடையாளங்கள் கூடவா தெரியாது அந்த காலேஜ் மங்கனுக்கு? (அதான் கல்லூரி மங்கன்ம்பாங்களே..)..
ஹிம் இந்த பொண்ணுங்களையும் சொல்லனும்..சும்மா சின்னப் பசங்க மனச என்னவோ பிளேகிரவுண்டுன்னு நெனச்சி ரொம்பவே விளையாடுறாங்க..
அப்படித்தான் ,அன்னிக்கு ஒரு சுடிதார் பார்டிய பின்னாடியிருந்து பாத்துட்டு மயங்கிப்போன என்னோட பிரண்டு வேக வேகமா தலையெல்லாம் சீவிக்கிட்டு வண்டில சீறிக்கிட்டு முன்னாடிப்போயி சைடு கண்ணால பாத்துப்புட்டு ,நொந்து வந்தவந்தவன் தான். நாளு நாளா சோறு தண்ணி எறங்கலை...ஆனா தொடந்ந்து புலம்பிக்கிட்டே இருந்தான்... "40 வயசு பாட்டிக்கு சுடிதார் ரொம்ப முக்கியமா?"ன்னு...,
இதுக்குதான்.. பசங்க மனசை பேங்க் லாக்கர்ல போட்டு பாதுகாக்கனுங்கறது..

தொடந்து கலக்குங்க இம்சை பேரரசி.. வாழ்த்துக்கள்...

நிஜமா நல்லவன் said...

///"ஓ! உங்க வீட்டுக்கார்..." என்று நான் இழுக்கவும்

"அவர் ஆன்சைட் போயிருக்கார். அடுத்த மாசம் வந்துடுவார்" என்று அவள் முடித்தபோது.....///



சும்மா பொய் தானே?

Anonymous said...

அது எப்படீங்க பாய்ஸ் ட மனச 100% அப்படியே reflect பண்ணியிருக்றீங்க? ம்ம்ம்...இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான்!...பஸ்ல ஏறினோடனேயே ஆத்துக்காரர் ஆன்சைட் போய்ருக்கார்னு சொல்லியிருந்தா அந்த புள்ள மனசு இப்படி அலஞ்சிருக்குமா? என்ன ஒரு ரவுடித்தனம்! Superb as usual :)

இம்சை அரசி said...

// Blogger Dreamzz said...

//எங்கே இருக்கிறாய் என் தேவதையே? எப்படி இருப்பாய் நீ? பூங்காற்றாகவா இல்லை புயலாகவா?//
இல்ல இரெண்டும் கலந்தா?
//

எப்படி இப்படியெல்லாம்???
அனுபவமா??? ;)))

இம்சை அரசி said...

// Blogger Dreamzz said...

வர்ணனை எல்லாம் கலக்கல் இம்சை!
//

நன்றி நன்றி :)))

இம்சை அரசி said...

// Blogger Dreamzz said...

//இறைவன். அவன் இருப்பதை இப்படியெல்லாம் நிரூபித்தாக வேண்டியிருக்கிறது அல்லவா//
LOL...பின்ன நம்மகிட்ட (உன்கிட்ட) மாட்டினா
//

கடைசில என்னையவே சொல்றிய்ய நீயி... தம்பின்றதால சும்மா விடறேன் ;)))

இம்சை அரசி said...

// Blogger Dreamzz said...

கதை முடிவு ... யதார்த்தம்...
//

யோவ்வ்வ்வ்.... இன்னும் கதைய முடிக்கல... :@@@

இதுக்குதான் ஒழுங்காப் படிக்கணும்ன்றது...

இம்சை அரசி said...

// Blogger ஜி said...

// Dreamzz said...
கதை முடிவு ... யதார்த்தம்...
//

Innum mudiyalaiyaam Dreamz..:)))

Imsai... nalla irukku.. continue.. :)))
//

நன்றி செல்லம் :P

இம்சை அரசி said...

// Blogger CVR said...

அட அட!!
நாவலாசிரியைனா சும்மாவா??

போட்டு தாக்கியிருக்கீங்க மேடம்!!
அடுத்த பகுதி என்ன ஆகுதுன்னு பாக்கலாம்!! ;)
//

இதுல உள்குத்து ஏதும் இல்லையே??? ;)))

இம்சை அரசி said...

// Blogger கோபிநாத் said...

\\ ஜி said...

Imsai... nalla irukku.. continue.. :)))\\

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;))
//

போட மாட்டேனே ;)))

இம்சை அரசி said...

// Blogger நிவிஷா..... said...

//Innum mudiyalaiyaam Dreamz..:)))
//
Dreamz, mulusa padichu comment podunga :)

Imsai akka, kadhai nalla irukku.
seekiram adutha paguthiyum podunga..

apparam naanum next post pottuten..

Natpodu
Nivisha!
//

நன்றி நன்றி... வந்துப் பாக்கறேன் :)))

இம்சை அரசி said...

// Blogger J K said...

இப்படி காத்து போன பலூன் போல ஆயிடுச்சே.

சரி அடுத்த பகுதில என்ன நடக்குதுனு பாக்கலாம்.
//

காத்துப் போனா திரும்பவும் ஊதிக்கலாம். இதான் இந்தக் கதைல நான் சொல்லப் போற தத்துவம் ;)))

இம்சை அரசி said...

// Blogger கப்பி பய said...

//அட அட!!
நாவலாசிரியைனா சும்மாவா??

போட்டு தாக்கியிருக்கீங்க மேடம்!!
அடுத்த பகுதி என்ன ஆகுதுன்னு பாக்கலாம்!! ;)//

ரிப்பீட்டு :))
//

நன்றி நன்றி :)))

இம்சை அரசி said...

// Blogger SanJai said...

//(தேவதை வருவாள்)//
அப்போ இது சிறுகதை இல்லையா? :P
//

அடடே அப்போ இது புரியலையா??? ;)))

இம்சை அரசி said...

// Blogger குசும்பன் said...

//நீ இருப்பது உண்மையானால் அவளை என்னிடம் பேச வைத்து விடு. பாவம் இறைவன். அவன் இருப்பதை இப்படியெல்லாம் நிரூபித்தாக வேண்டியிருக்கிறது அல்லவா.///

:) இதுவாது பரவாயில்லை.

காதல் கதை போல படிக்க ஏதும் ஏஜ் லிமிட் இருக்கா??
//

அதுக்கெல்லாம் ஏதுங்க லிமிட்டு?

காதல்ல பழம் தின்னு கொட்டைப் போட்டவர் நீங்க. நீங்களே இப்படிக் கேக்கலாமா??? ;)))

இம்சை அரசி said...

// Blogger குசும்பன் said...

இப்படி ஒரு தொடரும் எதிர்பார்க்கவில்லை பார்கலாம் அடுத்து எப்படி போகுதுன்னு?
//

பாருங்க பாருங்க... உங்களுக்குதான் ஆப்பு ;)))

இம்சை அரசி said...

// Blogger ரசிகன் said...

இம்சை.. என்னதான் சொன்னாலும் கதையெல்லாம் சொம்மா நச்சின்னு இருக்கு...ஆமா அதென்ன கல்யாணம் ஆன பொண்ணுக்குறிய அடையாளங்கள் கூடவா தெரியாது அந்த காலேஜ் மங்கனுக்கு? (அதான் கல்லூரி மங்கன்ம்பாங்களே..)..
ஹிம் இந்த பொண்ணுங்களையும் சொல்லனும்..சும்மா சின்னப் பசங்க மனச என்னவோ பிளேகிரவுண்டுன்னு நெனச்சி ரொம்பவே விளையாடுறாங்க..
அப்படித்தான் ,அன்னிக்கு ஒரு சுடிதார் பார்டிய பின்னாடியிருந்து பாத்துட்டு மயங்கிப்போன என்னோட பிரண்டு வேக வேகமா தலையெல்லாம் சீவிக்கிட்டு வண்டில சீறிக்கிட்டு முன்னாடிப்போயி சைடு கண்ணால பாத்துப்புட்டு ,நொந்து வந்தவந்தவன் தான். நாளு நாளா சோறு தண்ணி எறங்கலை...ஆனா தொடந்ந்து புலம்பிக்கிட்டே இருந்தான்... "40 வயசு பாட்டிக்கு சுடிதார் ரொம்ப முக்கியமா?"ன்னு...,
இதுக்குதான்.. பசங்க மனசை பேங்க் லாக்கர்ல போட்டு பாதுகாக்கனுங்கறது..

தொடந்து கலக்குங்க இம்சை பேரரசி.. வாழ்த்துக்கள்...
//

ஹாஹாஹா... அது கல்லூரி மங்கன் இல்ல சாரே... கல்லுளி மங்கன் :)))

வாழ்த்துக்களுக்கு நன்றி :)))

இம்சை அரசி said...

// Blogger NejamaNallavan said...

///"ஓ! உங்க வீட்டுக்கார்..." என்று நான் இழுக்கவும்

"அவர் ஆன்சைட் போயிருக்கார். அடுத்த மாசம் வந்துடுவார்" என்று அவள் முடித்தபோது.....///



சும்மா பொய் தானே?

//

ஹிஹி... அதெல்லாம் சொல்ல மாட்டேன் :P:P:P

இம்சை அரசி said...

// Anonymous ஜீவா UK said...

அது எப்படீங்க பாய்ஸ் ட மனச 100% அப்படியே reflect பண்ணியிருக்றீங்க?
//

அதுவா வருது. இப்போ யாரும் கேக்க முடியாது இல்ல சொந்தக் கதையானு ;)))

// ம்ம்ம்...இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான்!...பஸ்ல ஏறினோடனேயே ஆத்துக்காரர் ஆன்சைட் போய்ருக்கார்னு சொல்லியிருந்தா அந்த புள்ள மனசு இப்படி அலஞ்சிருக்குமா? என்ன ஒரு ரவுடித்தனம்!
//

இவன் இப்படியெல்லாம் ட்ரீம் அடிச்சிட்டு இருப்பானு அவளுக்கு தெரியுமா என்ன???? :)))

// Superb as usual :) //

thank u thank u :)))

Nithi said...

சீக்கிரமா இரண்டாவது பகுதியை எழுதுங்கள்.அந்த கல்லுளிமங்கனுக்கு என்ன ஆச்சுனு !!!!!!!

இராம்/Raam said...

//"அவர் ஆன்சைட் போயிருக்கார். அடுத்த மாசம் வந்துடுவார்" என்று அவள் முடித்தபோது சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்க அவள் தோழிகள் அழைக்கவும்//

இதுதான் இந்த இடத்திலே ஐ மீன் கதையிலே வர்ற ஜெர்க்'ஆ??? :)

Anonymous said...

ரொம்ப சிம்பிள் கதை.அடிக்கடி நம்ம வாழ்கைல நடக்கற விஷயம்.... முடிக்கும் பொது மறுபடியும் ipod ல "போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே" அப்படின்னு முடிச்சிருந்தா என்னை மாதிரி முன்னால் இளைஞர்கள் அடிக்கடி பாடிய பாடல்கள் லிஸ்ட் கம்ப்ளீட் ஆகி இருக்கும். - பிளேடு பக்கிரி

Anonymous said...

ரொம்ப சிம்பிள் கதை.அடிக்கடி நம்ம வாழ்கைல நடக்கற விஷயம்.... முடிக்கும் பொது மறுபடியும் ipod ல "போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே" அப்படின்னு முடிச்சிருந்தா என்னை மாதிரி முன்னால் இளைஞர்கள் அடிக்கடி பாடிய பாடல்கள் லிஸ்ட் கம்ப்ளீட் ஆகி இருக்கும். - பிளேடு பக்கிரி

Anonymous said...

//தேவதை வருவாள்//

epothu??

Thiru said...

I felt like she cut my heart.