Sunday, January 6, 2008

இதயம் ரோஜா காதல் முள் - IV


ஹலோ! நான் தாங்க வினி. இப்போதான் எங்கம்மா செஞ்ச சிக்கன் பிரியாணிய மூக்குப் பிடிக்க சாப்பிட்டு வந்து மொட்டை மாடில உக்காந்திருக்கேன். மனசுல இவ்வளவு கவலைய வச்சுக்கிட்டு எப்ப்டி உன்னால மட்டும் மூக்குப் பிடிக்க சாப்பிட முடியுது ஆச்சரியமா நினைக்காதீங்க. நீங்க ஆச்சரியப்படறதுக்கு ஒண்ணுமே இல்ல. ஏன்னா என் மனசுலதான் கவலையே இல்லையே :P இது என்னடா புது கூத்து. இந்த புள்ளக்கு என்னாச்சுனு பாக்கறீங்களா? சரிங்க. சுத்தி வளைச்சு உங்களை கடுப்பேத்தாம விஷயத்துக்கு வரேன். நேத்து நைட்டு அண்ணாகிட்ட பேசணும்னு முடிவு பண்ணி வச்சிருந்தேன். ஆனா எனக்கு ஒரு பயம். அண்ணா என்ன சொல்லுவானோன்னு ஒரு பக்கம் பயம். அண்ணா ஓகே சொல்லி எங்க அவன் இல்லைனு சொல்லிடுவானோன்னு பயம் இன்னொரு பக்கம். எதை மொதல்ல பண்ணலாம்னு எங்க வீட்டுலயே ரூம் போட்டு யோசிச்சேன்.

எப்படியும் அவன் சரி சொல்லி அண்ணா வேணாம்னு சொன்னாலும் அண்ணன சமாதானம் பண்ணப் போறோம். ஆனா அவன் சரி சொல்லி ஷ்யாம் சொல்லலைனா அது ரொம்ப கஷ்டம்னு மொதல்ல அவன்கிட்ட சொல்லிடலாம்னு முடிவு பண்ணி ஃபோன் பண்ணினேன். அவன் ஃபோன எடுத்ததும் அதுவரைக்கும் இருந்த தைரியமெல்லாம் எங்க ஓடிப் போச்சுன்னே தெரியலை. சாப்பிட்டியா சாப்பிட்டியானே நாலு தடவை கேட்டேன். அவன் ஒவ்வொரு முறையும் சாப்பிட்டேனு சொன்னதும் என்ன சாப்பிட்டனு கேட்டேன். அதுக்கு மேல பொறுக்க முடியாம ஏன்டி உளறிட்டே இருக்க?-னு கேட்டான். ஷ்யாம்! எங்க வீட்டுல எனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்காங்கடா-னு சொன்னேன். அந்த பக்கம் இருந்து ஒரு பதிலும் வரலை. பையன் உங்க ஊருதான். உன்கிட்ட சொல்லிதான் விசாரிக்க சொல்லணும்னு இருந்தேன்னு சொன்னதும் அவன் ஓ! அப்படியா? அப்போ நீ ஓகே சொல்லிட்ட-ன்னு சொன்னான். குரல் அப்படியே கொஞ்சம் டல்லாயிடுச்சு. ஆமாம். பையன் சூப்பரா இருக்கான். நல்ல ஃபேமிலி. நல்ல பையன். ரொம்ப கேரிங். என்னை நல்லாப் பாத்துப்பான்-னு நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே போக ஹே! உனக்கெப்படி அவனைப் பத்தி தெரியும்? பாத்துப் பேசிட்டியா அதுக்குள்ள-னு அவன் கேட்டதுல பதட்டம் ரொம்ப நல்லா தெரிஞ்சது. எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. பேசிட்டியாவா? எனக்கு அவனப் பத்தி A to Z தெரியும்-னு சிரிச்சிக்கிட்டே சொன்னேன். என் சிரிப்புல உண்மைய தெரிஞ்சிக்கிட்டவன் பொய் கோழி! பொய்யாடி சொல்ற. இங்கதான வருவ. என்ன பண்றேன் பாரு-னு கத்தினான். நான் பொய் சொல்லலைடா. உண்மையாவே எனக்கு பையன் பாத்தாச்சு-னு சீரியஸா சொன்னேன். ஓஹோ! அப்படியா? பையன் பேரு என்ன? ஊரு என்ன? எங்க வேலை செய்யறான்?-னு நம்பாம கேட்டான். எங்க இருந்து தான் அப்போ எனக்கு அவ்ளோ தைரியம் வந்துச்சுனு இன்னமுமே எனக்கு தெரியலைங்க. உடனே வேகமா பையன் ஊரு கோயம்பத்தூர். வேலை செய்யறது TCSல. பேரு-ன்னு நான் இழுக்கவும் பேரு?-ன்னு ரொம்ப ஆர்வமாக் கேட்டான். உடனே எனக்கு வெக்கம் வந்துடுச்சு. ஹ்ம்ம்ம். இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு ஃபீலிங் அனுபவிச்சதே இல்ல. என்ன ஒரு நைஸ் ஃபீலிங் தெரியுமா? ஆனா அதைப் பாக்க அவன் பக்கத்துல இல்லைனுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு :((( நேர்ல சொல்லி இருக்கலாம். நான்தான் முன்னாடியே சொல்லாம தப்பு பண்ணிட்டேன்.

அடடா! இப்படிதாங்க. ஒரு விஷயத்த சொல்றதுக்குள்ள வேற விஷயத்துக்கு போயிடுவேன். back to the matter. பேரு-ன்னு அவன் கேக்கவும் என்னால பேச முடியலை. ஏனோ கண்கள் அப்படின்னு கள்வனின் காதலி படத்துல ஒரு பாட்டு இருக்கும் தெரியுமா? அதுல ஒரு லைன் வரும். நூறு கோடி மான்கள் ஓடும் வேகம் போல இருதயம் துடிக்கிறதே அப்படின்னு. அந்த வரிய அப்போதான் அனுபவத்துல உணர்ந்தேன். அப்படியே நெஞ்சு பக் பக்குனு அடிக்குது. அந்த ஒரு நிமிஷத்துல அவன் என்ன சொல்லுவானோனு ஒரு எதிர்பார்ப்பு, ஓகே சொல்லிடுவான்ற சந்தோஷம், இல்லைனு சொல்லிட்டா-ன்ற பயம், அப்படி சொல்லிட்டா என்ன பண்றதுனு கவலை இப்படி எல்லா ஃபீலிங்ஸையும் மிக்ஸில போட்டு அடிச்சா என்ன ஃபீலிங் வரும். அதேதான் எனக்கும் இருந்துச்சு. ஷ்யாம்-னு வாய் வரைக்கும் வந்த வார்த்தை எனக்கேத் தெரியாம ஊஹூம்-ன்ற வார்த்தையா மாறிப் போய் வெளில வந்துச்சு. மேடம் வெக்கப்படறாங்கப் போல-னு அவன் சொன்னப்போ அவங்கம்மா அவனைக் கூப்பிட்ட சத்தம். grrrrrrrr....... அவன் அத்தைகிட்ட(ஹி... ஹி...) பேசிட்டு என்கிட்ட திரும்பி நான் வெளில போகணும் இப்போ. வர லேட்டாகும். சீக்கிரம் சொல்லு-னு என்னை அவசரப்படுத்தினான்.

அய்யய்யோ. நைட் வேற அண்ணன்கிட்ட பேசணுமே. அதுக்குள்ள இவன்கிட்ட பேச முடியாம போயிடுச்சுனா என்ன பண்றதுனு ஒரு பயம் வந்து வேக வேகமா நீதாண்டா-னு பட்டுனு போட்டு உடைச்சிட்டேன். ஓ! அப்படியா? சரிடி. நான் போயிட்டு வந்து பேசறேன்-னு ரொம்ப சாதாரணமா சொல்றான் மடையன். எனக்கு வந்துச்சே கோபம். டேய் நான் எவ்வளவு சீரியஸா கேட்டுட்டு இருக்கேந்னு கத்தவும் இப்ப உனக்கு என்னடி வேணும்னு கேட்டான். உன் பதில சொல்லு-னு கேட்டப்போ என் வாய்ஸ் எனக்கே கேக்கலை. ஒரு ரெண்டு செகண்ட்ஸ் யோசிச்சிட்டு என்னை ரொம்ப ஏமாத்திட்ட வினு-ன்னான். எனக்கு அப்படியே உள்ளுக்குள்ள ஏதேதோ கெமிக்கல் ரியாக்ஷன் எல்லாம் நடக்குது. கண்ணு கலங்குது. பேச்சே வரலை. அவனே உனக்குள்ள நான் வந்துட்டேன்னு எனக்கு எப்போவே தெரியும். அதே மாதிரி எனக்குள்ள நீ வந்தது உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். பட்.... ஏமாத்திட்டடி சொன்னானே பாக்கலாம். எனக்கு கோபமா வந்துச்சு. அழுகையாவும் வந்துச்சு. அப்படியே அழ ஆரம்பிச்சிட்டேன். போடா ராஸ்கல். என்னை பயமுறுத்திட்ட இல்லனு நான் அழவும் எதுக்கு இப்போ அழற? எந்த நிலைமைலயும் உன்னை விட்டுட்டு நான் போக மாட்டேன். சரியா? நீ இல்லாம, உன் செல்ல சண்டை இல்லாம, பொய்க் கோபம் இல்லாம, FM ரேடியோ மாதிரி வாய மூடாம பேசற பேச்சு இல்லாம, இழுத்து அறை விடத் தோண வைக்கற உன் அடம் இல்லாம, அட்வைஸ் பண்றதா நினைச்சு சொல்ற வெட்டி அறுவை இல்லாம, கோபப்பட்டு சிணுங்கற அந்த சிணுங்கல் இல்லாம, அறிவாளித்தனமா பேசறதா நினைச்சு என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கற இந்த அறிவு ஜீவி இல்லாம எனக்கு என்ன லைஃப் இருக்கு சொல்லு-னு மூச்சு விடாமப் பேசி முடிச்சான். அவன் பேச்சுல என் அழுகை அடங்கி வந்த பொய் கோபத்துல இதுதான் சாக்குனு என்னை நல்லா மட்டம் தட்டிட்ட இல்ல. ஊருக்கு வா உனக்கு நல்லா உண்டு-னு சண்டை போட ஆரம்பிச்சிட்டேன். அதுக்குள்ள அத்தை திரும்ப கூப்பிடவும் அப்புறம் பேசறேனு ஓடிப் போயிட்டான்.

அப்புறம் நைட் அண்ணனும் நானும் சாப்பிட்டு மொட்டை மாடிக்கு போனோம். ரொம்ப நேரம் அது இதுனு எல்லாம் பேசிட்டு இருந்தோம். எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்னு நான் யோசிச்சிட்டு இருந்தப்போ வினி நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன்னு அவன் ஆரம்பிச்சான். என்னடா இது. அவனுக்கும் ஒரு ஸ்டோரி ஓடிருக்கும் போலனு நினைச்சுட்டே சொல்லுனு சொன்னேன். லவ் பத்தி என்ன நினைக்கறனு கேட்டான். ஹுஹாஹாஹானு விழுந்து புரண்டு சிரிக்கணும் போல இருந்துச்சு. கஷ்டப்பட்டு சிரிப்ப அடக்கிக்கிட்டு இதுல நினைக்க என்ன இருக்குனு நான் முடிக்கறதுக்குள்ள நினைக்க ஒண்ணும் இல்ல. ஆன செய்ய மட்டும் தெரியுதோனு சொல்லவும் ஒரு நிமிஷம் நடுங்கிப் போயிட்டேன். இன்னைக்கு மதியம் சாப்பிட்டு முடிச்சிட்டு ப்ளேட்ல ஹார்ட்டின் வரைஞ்சு அதுக்குள்ள உன் பேரையும் இன்னும் ஏதோ ஒரு பேரையும் எழுதினியே பாத்துட்டுதான் இருந்தேன்னு அவன் சிரிச்சுக்கிட்டே சொல்லவும்தான் என் பயம் போச்சு. அடியே வினிதா! இப்படியா லூசுத்தனமா செஞ்சு மாட்டிப்பனு என்னை நானேத் திட்டிக்கிட்டு அவன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னேன். சரி அம்மா அப்பாகிட்ட உனக்காக நான் பேசறேன். அதுக்கு நீ பதிலுக்கு என்ன செய்வ?-னு கேட்டான். ஒண்ணும் புரியாம முழிச்சிக்கிட்டே என்ன பண்ணனும்னு கேட்டேன். என் விஷயம்பத்தி அம்மா அப்பாகிட்ட நீதான் சொல்லணும்னு சொன்னானேப் பாக்கலாம். அடப்பாவி. என்னமோ நல்லவன் மாதிரி நடிச்ச. யாரு என் அண்ணினு கேக்கவும் அவனுக்கு வெக்கம் வந்துடுச்சு. தலையக் குனிஞ்சிட்டே உனக்கு தெரிஞ்ச பொண்ணுதான்னு சொன்னான். தோடா! உனக்கு வெக்கம் வருதானு அவன் காதை திருகி யாருனு ஒழுங்கா சொல்லுனு சொன்னான். உன் ஃப்ரெண்ட். என் ஆபிஸ்ல...னு அவன் ஆரம்பிச்சவே எனக்கு தெரிஞ்சிடுச்சு. ஓ! தெய்வா... அவதான் அந்த கல்ப்ரிட்டா. அவளைப் பேசிக்கறேனு சொன்னதும் ஆரம்பிச்சான் அவன் கதைய. ரொம்ப நேரம் உக்காந்து பேசிட்டு திரும்பி வரப்போதான் உன் ஆள் பேரென்னனு கேட்டான். ஷ்யாம்-னு நான் சொல்லவும் ஆச்சர்யமாப் பாத்தான். உன் பேரை வச்சிருந்ததாலதாண்ணா அவன மொதல்ல பாத்ததும் டக்குனு பிடிச்சதுனு சொன்னேன் :)))

இன்னைக்கு காலைல அம்மா அப்பாகிட்ட ரெண்டு பேர் விஷயத்தையும் சொல்லி சம்மதம் வாங்கியாச்சு. அவன் வீட்டுல பேசினதும்... வேறென்னங்க??? ஊஹூம். சிரிக்காதீங்க. இனிமேல் எனக்கு அவன்கிட்ட சாரி அவர்கிட்ட பேசவே நேரம் இருக்காதுன்னு நினைக்கறேன். ரொம்ப சாரிங்க. எங்க கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைப்பேன். அவசியம் வரணும் நீங்க. அண்ணனுக்கு கூட உங்களைத் தெரியுமாமே. போன வாரத்துக்கு முன்னாடி வாரம் உங்களோட பேசினானாம். அவனும் உங்களைக் கூப்பிடனும்னு சொல்லிட்டு இருந்தான். மறக்காம வந்துடுங்க. ஓகே. பைங்க. ஷ்யாம் கால் பண்றான். நான் போறேன் டேக் கேர். சீ யூ.

(சுபம்)

பி.கு: இந்த வினிதா ஒரு கற்பனை கதாப்பாத்திரம் ஆகையால் பத்திரிக்கை வரும் போய் ஒரு பிடி பிடிச்சிட்டு வரலாம்னு யாரும் கனவுல மிதக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் ;)))

17 comments:

ஜே கே | J K said...

வாழ்த்துக்கள் வினி.

இம்சை நல்லாவே இம்ச கொடுக்கறீங்க போங்க....

மங்களூர் சிவா said...

மீ த பர்ஸ்ட்டு??

மங்களூர் சிவா said...

அப்புறமா படிச்சிட்டு வந்து கமெண்டுறேன்!!

மங்களூர் சிவா said...

என்ன அதுக்குள்ள முடிச்சிட்டீங்க வேற எதும் ப்ராஜக்ட் ரெடியா??

மங்களூர் சிவா said...

என்ன கெமிகல் ரியாக்சனா? கேடலிஸ்ட் எதாவது சேருங்க வேகமா ரியாக்சன் ஆவும்!!

Divya said...

'ஷ்யாம்' - ஒரே பேர்ல ரெண்டு பேரு வைச்சு, சூப்பரா கதை நகர்த்திட்டீங்க!

ரொம்ப நல்லாயிருந்தது இம்சை!

நக்கல்ஸ் நிறைந்த உரையாடல்கள் எல்லாம் , paragraph குள்ளவே மறைஞ்சுக்குது, அதை கொஞ்சம் தனியா போட்டா இன்னும் ரொம்ப நல்லாயிருக்கும்.

சுபமா முடிச்சுட்டீங்க, பாராட்டுக்கள்!

ஜொள்ளுப்பாண்டி said...

இம்சைஸ் :))))
அட அட அட ... சும்மா பேரை வெச்சே இப்படி வெளையாடிட்டீங்க.... ரொம்ப நல்லா இருந்ததுங்கோவ்.... :))))

ஜொள்ளுப்பாண்டி said...

//நீ இல்லாம, உன் செல்ல சண்டை இல்லாம, பொய்க் கோபம் இல்லாம, FM ரேடியோ மாதிரி வாய மூடாம பேசற பேச்சு இல்லாம, இழுத்து அறை விடத் தோண வைக்கற உன் அடம் இல்லாம, அட்வைஸ் பண்றதா நினைச்சு சொல்ற வெட்டி அறுவை இல்லாம, கோபப்பட்டு சிணுங்கற அந்த சிணுங்கல் இல்லாம, அறிவாளித்தனமா பேசறதா நினைச்சு என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கற இந்த அறிவு ஜீவி இல்லாம எனக்கு என்ன லைஃப் இருக்கு சொல்லு//

wowwwwww...... இம்சைஸ் ரொம்ப ரொம்ப டாப்பு இந்த part !!! I Like it very much !!! :)))))

Dreamzz said...

வாவ்! சிம்ப்ளி Romantic! superb a எழுதி இருக்கீங்க!

Dreamzz said...

இதயம் ரோஜா காதல் முள் -
இதயம் ரோஜா காதல் விரல்கள் :)

கோபிநாத் said...

\\உன் பேரை வச்சிருந்ததாலதாண்ணா அவன மொதல்ல பாத்ததும் டக்குனு பிடிச்சதுனு சொன்னேன் :)))\\

அண்ணானுக்கு அல்வான்னா ரொம்ப பிடிக்குமோ!? ;))

ரசிக்கும் படியாக இருந்தது தொடர்..:)

நிஜமா நல்லவன் said...

ஒரு வழியா சுபம் போட்டாச்சு. அடுத்து என்ன?


////பி.கு: இந்த வினிதா ஒரு கற்பனை கதாப்பாத்திரம் ஆகையால் பத்திரிக்கை வரும் போய் ஒரு பிடி பிடிச்சிட்டு வரலாம்னு யாரும் கனவுல மிதக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் ;)))////

உங்க பத்திரிக்கை அனுப்புங்க!!!!

Dreamzz said...

//இந்த வினிதா ஒரு கற்பனை கதாப்பாத்திரம் ஆகையால் பத்திரிக்கை வரும் போய் ஒரு பிடி பிடிச்சிட்டு வரலாம்னு யாரும் கனவுல மிதக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் //

HAHA :)

G.Ragavan said...

:) இதுதான் திருப்பமா. மொதல்ல புரியலை. ரெண்டாவது வாட்டி படிக்கிறப்போ புரிஞ்சது.

நல்ல முயற்சி. கொஞ்சம் சிரமப்பட்டிருந்தா பிரமாதமா இருந்திருக்கும். மற்ற படி நல்ல யோசனை.

ஜே கே | J K said...

//ஜொள்ளுப்பாண்டி said...
//நீ இல்லாம, உன் செல்ல சண்டை இல்லாம, பொய்க் கோபம் இல்லாம, FM ரேடியோ மாதிரி வாய மூடாம பேசற பேச்சு இல்லாம, இழுத்து அறை விடத் தோண வைக்கற உன் அடம் இல்லாம, அட்வைஸ் பண்றதா நினைச்சு சொல்ற வெட்டி அறுவை இல்லாம, கோபப்பட்டு சிணுங்கற அந்த சிணுங்கல் இல்லாம, அறிவாளித்தனமா பேசறதா நினைச்சு என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கற இந்த அறிவு ஜீவி இல்லாம எனக்கு என்ன லைஃப் இருக்கு சொல்லு//

wowwwwww...... இம்சைஸ் ரொம்ப ரொம்ப டாப்பு இந்த part !!! I Like it very much !!! :)))))//

ரிப்பீட்டேய்!...

ரசிகன் said...

இம்சை.. ரொம்ப அருமையா இருக்கு.. அதிலும் நடு நடுவே வர்ர..நச் வசனங்களும், உதாரணங்களும் கலக்கலா இருக்கு.ரொம்பவே ரசிச்சேன். வாழ்த்துக்கள்.
நல்லபடியா கதையை முடிச்சதுக்கு நன்றிகள்...

Nithi said...

என்னங்க அதுக்குள்ள முடிச்சிட்டீங்க ?நிறைய எழுதுவீங்கன்னு எதிர் பார்த்தேன்.ரொம்ப நல்லாயிருந்ததுங்க