Wednesday, January 30, 2008

எதற்கும் கண் கலங்காத நான்...

குழந்தையாய் இருந்த போது கூட அழவே மாட்டேனாம். என் அம்மா அடிக்கடி சொல்வார்கள். எனக்கு நினைவுத் தெரிந்து நான் எதற்கும் அவ்வளவாக அழுததுக் கிடையாது. சிறு வயதில் ஏதேனும் தப்பு செய்து விட்டு அம்மாவிடம் அடி வாங்கியபோது கூட லேசாய் கண்கள் பனிக்கும். அவ்வளவுதான் (நான் அதிகம் அடி வாங்கியது கிடையாது. சமத்துப் பிள்ளையாக்கும்). LKG-யில் சேர்த்த நாளன்று வகுப்பில் இருந்த அனைத்துப் பிள்ளைகளும் அழுதனவாம். என்னை விட்டு விட்டு என் அம்மா இங்கேயே இரு கண்ணு. சாயந்திரம் வந்து அம்மா கூட்டிப் போறேன் என்று சொன்னதும் சரிங்கம்மா என்று சொல்லி விட்டு அமைதியாய் சென்று உட்கார்ந்து அழுதிருந்த பிள்ளைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேனாம். இன்றும் என் அம்மா பெருமையாய் சொல்லும் ஒரு விஷயம் இது.

அதன் பின் ஒன்பதாவது படித்த போது ஒருமுறை நாலாவது ரேங்க் வாங்கி விட்டேன். அதுவரை இரண்டைத் தாண்டாத நான் இப்போது நாலாவதாக. என்ன ஒரு அவமானம். என்னை விட அதிகம் வாங்க வேண்டும் என்ற போட்டியில் முயன்று முயன்று இந்த முறை சாதித்து விட்டதாய் பெருமிதத்தில் என் வகுப்புப் பெண் ஒருத்தியின் வெற்றிப் புன்னகையில் என் மீதே எனக்கு கோபம்தான் வந்ததே ஒழிய அப்பொழுதும் அழவில்லை. என் அப்பா ரேங்க் சீட்டில் கையெழுத்துப் போட மாட்டேன் என்று சொன்னபோது கூட அடுத்த முறை கண்டிப்பாக முதல் ரேங்க் எடுப்பேன் இல்லையென்றால் பள்ளி செல்வதை நிறுத்தி விட்டு மாடு மேய்க்கப் போகிறேன் என்று பொய்யாய் சபதம் எல்லாம் செய்து கையெழுத்து வாங்கினேனேத் தவிர அப்பொழுதும் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை.

பன்னிரெண்டாவது வகுப்பு முடித்து விடுதியில் இருந்து கிளம்பியபோது என்னுடனே சுற்றிக் கொண்டிருக்கும் எனது ஜூனியர்ப் பெண் எனது கைகளைப் பிடித்துக் கொண்டு அழுத போது எனக்கே என் மேல் எரிச்சலாய் வந்தது. என்னடா இது எவ்வளவு முயன்றும் இந்த கண்ணீர் வந்து தொலைய மாட்டேன்றதே. எனது உயிர்த்தோழிகளைப் பிரிந்தபோது கூட மனது கனத்ததே தவிர கண்ணீர் வரவில்லை.

கல்லூரி காலத்தில் என் ஆருயிய் தோழியிடம் சண்டையிட்டுக் கொண்டு பேசாமலிருந்தபோது நான் செய்த தவறுக்காக மனது உறுத்தி அவளிடம் சென்று உருக்கமாய் பேசி மன்னிப்பு கேட்ட பொழுது தாங்க முடியாமல் அவள் அழுதாள். நானோ என்ன செய்வதென்று அறியாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளைப் பிரிந்து சென்ற போது கூட எதற்கும் நீ அழக் கூடாது சங்கி. நான் என்றும் உன்னுடனேயே இருப்பதாய் நினைத்துக் கொள். நான் உன்னை விட்டுப் பிரிந்திருந்தாலும் உன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான தருணங்களிலும் கட்டாயம் உன்னுடன் இருப்பேன். அதனால் இன்று பிரிகிறோம் என்று நீ அழக் கூடாது என்று அவளையும் அழ விடாமல் அனுப்பி வைத்தேன்.

கல்லூரி முடித்து வேலைத் தேடி அலைந்து அதனால் மனம் வருந்தி கண்ணீர் விட்ட அனுபவமும் எனக்குக் கிடைக்கவில்லை. ப்ராஜக்ட் முடிக்கும் முன்பே வேலைக் கிடைத்து விட்டது. இங்கே வந்தும் எதையும் கண்டு கொள்ளாமல் என் கடன் ப்ளாக் எழுதிக் கிடப்பதே என்று எனது தலையைதான் அழ வைத்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படி எதற்கும் கண்கலங்காத நான் இன்று நிறுத்தாமல் கண்ணீர் வடிக்கிறேன் என்றால் அது யாருடையக் குற்றம்? என் தலையில் எழுதி இருக்கும் எழுத்தா? இல்லை விதி செய்யும் சதியா? இல்லை பெண்ணாய் பிறந்தாலே இப்படித்தான் அழ வேண்டி இருக்குமா? பெண்களுக்கு மட்டும் நேர்வதில்லையே இது. அதனால் இந்த குற்றச்சாட்டை விட்டு விடுங்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட்டுப் பழகியது என் தவறா? இல்லை சாம்பார் சட்னி என்று எதில் பார்த்தாலும் வெல்லத்தைக் கலக்கும் இந்த கர்நாடக மக்களைத்தான் நான் குறை சொல்ல முடியுமா? இப்படி குறை சொல்வதால் மட்டும் என்ன செய்து விட முடியும்? தினம் தினம் வெங்காயம் வெட்டும்போது நான் லிட்டர் லிட்டராய் விடும் கண்ணீரை நிறுத்ததான் முடியுமா என்ன? ;)))

23 comments:

ILA (a) இளா said...

//எனக்கு நினைவுத் தெரிந்து நான் எதற்கும் அவ்வளவாக அழுததுக் கிடையாது.//

அடுத்தவங்களை மட்டும்தான் அழ வெப்பாங்க.

//ஒன்பதாவது படித்த போது /
ஓஹ அவ்வளவு படிச்சு இருக்கீங்களா? அதுவும் பெயிலாகி பெயிலாகி படிச்சீங்கதானே? 5 கழுதை வயசில் 9வது படிச்சா அடிப்பாங்களா?

ILA (a) இளா said...

//தாங்க முடியாமல் அவள் அழுதாள். //
அதானே..

உங்க பதிவெல்லாம் படிச்சு நாங்க அழுவுறோமே அது போதாதா இந்தப் பதிவுக்கு ஒரு சாட்சியா.. ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாமக்கல் சிபி said...

//உங்க பதிவெல்லாம் படிச்சு நாங்க அழுவுறோமே அது போதாதா இந்தப் பதிவுக்கு ஒரு சாட்சியா.. ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

Repeaaaaateeeeei!

நாமக்கல் சிபி said...

//அடுத்தவங்களை மட்டும்தான் அழ வெப்பாங்க.//

Oh My God!

idhu veraiya?

நாமக்கல் சிபி said...

Neenga Innum Palai Thinai Pakkam Vanthathu Illainnu Ninaikkiren!

Serial Parkurathai vida adhigama azhuveenga!

pudugaithendral said...

நான் வெங்காயம் நறுக்கும்போதுக் அழமாட்டேனே.

எப்படின்னு பார்க்கறீங்களா/ கேக்குரீங்களா?

வெங்காயத்தை உரிச்சு தண்ணில கழுவினாலும் சரி, தண்ணீல ஊரவெச்சு உரிச்சாலும், உரிச்ச வெங்காயத்தை தண்ணீல போட்டுட்டு நறுக்கினாலும் அழாம நறுக்கலாம்.

இதுக்குப் போயா அழுவாங்க.

ஹாரி said...

//எனக்கு நினைவுத் தெரிந்து நான் எதற்கும் அவ்வளவாக அழுததுக் கிடையாது.

நீங்க எதுக்கும் ஒருமுறை அமெரிக்கா போய், ஹிலாரி கிளின்டனை பார்த்துட்டு வந்துடுங்க.

Dreamzz said...

என் செய்தாயோ... மனமே....

Dreamzz said...

எப்படிங்க இப்படி எல்லாம்... தாங்கல... அழ வைக்கறீங்க.. எங்கல... கொஞ்சம் விட்ட இந்த ப்ளாக்க்கரே அழும்..

Dreamzz said...

எப்படிங்க இப்படி எல்லாம்... தாங்கல... அழ வைக்கறீங்க.. எங்கல... கொஞ்சம் விட்ட இந்த ப்ளாக்க்கரே அழும்..

இம்சை அரசி said...

// Blogger ILA(a)இளா said...

//எனக்கு நினைவுத் தெரிந்து நான் எதற்கும் அவ்வளவாக அழுததுக் கிடையாது.//

அடுத்தவங்களை மட்டும்தான் அழ வெப்பாங்க.

//ஒன்பதாவது படித்த போது /
ஓஹ அவ்வளவு படிச்சு இருக்கீங்களா? அதுவும் பெயிலாகி பெயிலாகி படிச்சீங்கதானே? 5 கழுதை வயசில் 9வது படிச்சா அடிப்பாங்களா?
//

என்னைப் பத்திதான் எழுதினேன். உங்களப் பத்தி இல்ல அண்ணா :P

இம்சை அரசி said...

// Blogger ILA(a)இளா said...

//தாங்க முடியாமல் அவள் அழுதாள். //
அதானே..

உங்க பதிவெல்லாம் படிச்சு நாங்க அழுவுறோமே அது போதாதா இந்தப் பதிவுக்கு ஒரு சாட்சியா.. ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

அடடே அழ வைக்கற அளவுக்கு அவ்வளவு சிறப்பா இருக்கா என் பதிவு??? ;)))

இம்சை அரசி said...

// Blogger நாமக்கல் சிபி said...

//உங்க பதிவெல்லாம் படிச்சு நாங்க அழுவுறோமே அது போதாதா இந்தப் பதிவுக்கு ஒரு சாட்சியா.. ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

Repeaaaaateeeeei!
//

என்னது இது சின்னப் புள்ளத்தனமா??? இந்த ரிப்பீட்டு போடறப் பழக்கத்த எப்போதான் விடப் போறீங்களோ அய்யோ அய்யோ...

இம்சை அரசி said...

// Blogger நாமக்கல் சிபி said...

//அடுத்தவங்களை மட்டும்தான் அழ வெப்பாங்க.//

Oh My God!

idhu veraiya?
//

நான் என்னைக்கு அண்ணா அடுத்தவங்கள அழ வச்சிருக்கேன்??? உம்ம்ம்ம்ம்... எப்டி அழறேன் பாருங்க :'(

இம்சை அரசி said...

// Blogger நாமக்கல் சிபி said...

Neenga Innum Palai Thinai Pakkam Vanthathu Illainnu Ninaikkiren!

Serial Parkurathai vida adhigama azhuveenga!
//

இப்படி நிறைய வார்னிங் வந்ததாலதான நான் இப்போ சேஃபா இருக்கேன் :)))

ஜொள்ளுப்பாண்டி said...

இம்சைஅரசி இதெல்லாம் நெம்ம ஓவரா தெரில.... ;))))

நீங்க என்னமோ கண்ணு கலங்கரது இல்லீங்கோ.. ஆனா உங்க எழுத்துக்களையெல்லாம் படிச்சு நாங்க தெனமும் கண்ணு கலங்கி லட்டோட நிக்கிற ' குணா' கமல் கணக்காவுல்ல நிக்கோம்... ?? ;))))))

நிஜமா நல்லவன் said...

////என் அப்பா ரேங்க் சீட்டில் கையெழுத்துப் போட மாட்டேன் என்று சொன்னபோது கூட அடுத்த முறை கண்டிப்பாக முதல் ரேங்க் எடுப்பேன் இல்லையென்றால் பள்ளி செல்வதை நிறுத்தி விட்டு மாடு மேய்க்கப் போகிறேன் என்று....////


நல்ல வேளை மாடுங்க தப்பிச்சிடுச்சி. ஆனா நாங்க தான்.............

காட்டாறு said...

ஹா ஹா ஹா... தெரியாத்தனமா உள்ளே வந்துட்டேன்பா..:-)

கோபிநாத் said...

\\ ILA(a)இளா said...
//தாங்க முடியாமல் அவள் அழுதாள். //
அதானே..

உங்க பதிவெல்லாம் படிச்சு நாங்க அழுவுறோமே அது போதாதா இந்தப் பதிவுக்கு ஒரு சாட்சியா.. ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
\\

ரீப்பிட்டேய்ய்ய்..அவ்வவ்வவ்வ்வ்

நிவிஷா..... said...

ippo thaan en ungala இம்சை அரசி nu solraanganu purinjadhu akka :)

nice one

natpodu
nivisha

கருப்பன் (A) Sundar said...

யப்பா... தாங்கமுடியலடா சாமீய்ய்ய்...

நான் கூட இதுநாள் வரைக்கும் அழுததில்லை உங்க பதிவை படிச்சதுக்கப்புறந்தான்...கதறி அழுதுகெண்டிருக்கிறேன்! இன்னும் கொஞ்ச நேரத்தில் நானே எனது கண்ணீரில் மூழ்கினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை :'-(

ரவி said...

sister what the hell mokkai is this ????

Anonymous said...

ம்ம்ம்...நீங்க ரொம்ப கல் நெஞ்சக்காரி தான் போல...