"அது ஏம்மா உருளைக்கிழங்கை கட் பண்ணி உப்பு கலந்த தண்ணில போடணும்?"
நான் வெகு ஆர்வமாய் கேட்கவும் என் அம்மாவிற்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அதே ஆர்வம் அவரையும் தொற்றிக் கொள்ள
"அப்போதான் ஃப்ரை பண்னும்போது ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம வரும். பாத்திரத்துலயும் அடிப் பிடிக்காது" என்று விளக்கினார்.
"சரி இன்னைக்கு உருளைக்கிழங்கு ஃப்ரை கத்துக்கிட்டது போதும்மா. நான் போய் என் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்றேன்" என்று சொல்லிவிட்டு வேக வேகமாக என அறைக்குள் ஓடினேன்.
"முன்னாடி சமையல் கத்துக்கோ சமையல் கத்துக்கோனு தலைல அடிச்சிப்பேன். அப்போ எல்லாம் கண்டுக்கவே மாட்டா. போற எடத்துல உங்கம்மா என்னத்ததான் சொல்லிக் குடுத்தானு என்னையதான் திட்டுவாங்கன்னு எனக்கு ஒரே கவலையா இருந்துச்சு. வேலைக்குப் போனதும் ரொம்ப பொறுப்பு வந்துடுச்சு. அவளே வந்து அது எப்படி செய்யணும் இது எப்படி செய்யணும்னு கேட்டுக் கத்துக்கறா" என்று பக்கத்து வீட்டு மாமியிடம் அம்மா சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்ததும் என்னையும் மீறிய ஒரு புன்னகை வந்தது.
அதற்கு மேல் அவர்களது பேச்சை கவனியாமல் தீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருந்தேன். கடைசியாய் சமையல் குறிப்புதானே போட்டேன். அடுத்தே இன்னொன்று போடுவதா? இல்லை. வேண்டாம். ஒரு கதை போட்டு விட்டு முந்தா நாள் எழுதி வைத்த கவிதையும் போட்ட பின் இந்த உருளைக்கிழங்கு குறிப்பை போட்டு விடலாம் என்று முடிவெடுத்துக் கொண்டு அடுத்துப் போட வேண்டிய கதையை யோசிக்க ஆரம்பித்தேன்.
பி.கு : எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தாலும் உடனடியாய் அதை எப்படி ப்ளாக்கில் எழுத வேண்டுமென்று யோசிக்கும் என் இனிய ப்ளாக் மக்களுக்கு சமர்ப்பணம் :)))
Wednesday, January 23, 2008
என் பொண்ணுக்கு ரொம்ப பொறுப்பு வந்துடுச்சு!!
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அடக்கொடுமையே!.
மக்கா எல்லாருமே இப்படிதானா?...
\\பி.கு : எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தாலும் உடனடியாய் அதை எப்படி ப்ளாக்கில் எழுத வேண்டுமென்று யோசிக்கும் என் இனிய ப்ளாக் மக்களுக்கு சமர்ப்பணம் :)))\\
இதுதான் சரியான சமையம் சீக்கிரம் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு போங்கப்பா...இல்லைன்னா கஷ்டம் நமக்கு தான்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தாலும் உடனடியாய் அதை எப்படி ப்ளாக்கில் எழுத வேண்டுமென்று யோசிக்கும் என் இனிய ப்ளாக் மக்களுக்கு சமர்ப்பணம் :)))//
//எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தாலும் உடனடியாய் அதை எப்படி ப்ளாக்கில் எழுத வேண்டுமென்று யோசிக்கும் என் இனிய ப்ளாக் மக்களுக்கு சமர்ப்பணம் :)))//
ரொம்ப சூப்பரா சொன்னீங்க!!!
//எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தாலும் உடனடியாய் அதை எப்படி ப்ளாக்கில் எழுத வேண்டுமென்று யோசிக்கும் என் இனிய ப்ளாக் மக்களுக்கு சமர்ப்பணம் :)))//
தனக்கு தானே சமர்ப்பணம்ல்லாம் செஞ்சுக்கிட்டு. ஹிஹி.. இம்சை..ரொம்ப விபரமான ஆளுதானுங்கோ..:))))))
மொக்க தாங்கலை......
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((
ஆஹா ஆஹா....
நான் எதுவும் சொல்லல...
ஹா ஹா.. i thought you were preparing for an onsite assignement.
''எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தாலும் உடனடியாய் அதை எப்படி ப்ளாக்கில் எழுத வேண்டுமென்று யோசிக்கும் என் இனிய ப்ளாக் மக்களுக்கு சமர்ப்பணம் ''
u r correct
நான் புதுசா எழுத வெளிக்கிட்டு எதைப்பார்த்தாலும் எழுதவேண்டுமென்று தோன்றுது
உங்கள் சிறுகதைலிருந்து, "உருளைக்கிழங்கை கட் பண்ணி உப்பு கலந்த தண்ணில போடணும். ஃப்ரை பண்னும்போது ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம வரும். பாத்திரத்துலயும் அடிப் பிடிக்காது" என்பதை தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி.
யககா.. உங்களுக்கு வியாதி முத்திப்போச்சுன்னு நெனைக்கிறேன்.. அட்மிஷன் வாங்கி தரவா????
பி.கு: பதிவு சூப்பர். ;-)
Post a Comment