Thursday, January 10, 2008

அருகாமையில் புரிவதில்லை!


அலட்சியமாய் வீசிய
பார்வைகளும்
காரணமில்லா பொய்க்
கோபங்களும்
விட்டுத்தர மறுத்த
உள்ளுணர்வுகளுமாய்
வீணடிக்கப்பட்ட நொடிகளுக்கு
அன்று ஏனோ
புரிந்ததேயில்லை...
பார்க்குமிடமெல்லாம்
தோன்றும் உன் முகம்
ஒன்றாய் கழித்த நொடிகளின்
ஞாபகத் தந்திகளை
மீட்டிச் செல்கிறது...
அருகாமையில் புரிவதில்லை
எந்த ஒரு பொருளின்
அருமையும் பெருமையும்!!

13 comments:

நிஜமா நல்லவன் said...

கவிதை ரொம்பவே நெஞ்சை தொட்டுடுச்சி. நீங்க இன்னும் நிறைய கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்.



இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

டெஸ்ட் மெசேஜ்

CVR said...

ரைட்டு தான் யக்கோவ்!! :-)

Dreamzz said...

//அருகாமையில் புரிவதில்லை
எந்த ஒரு பொருளின்
அருமையும் பெருமையும்!!
//
வாவ்! வாவ்! அருமையான கவிதை :)

Dreamzz said...

சொல்லாமல் போன காதலோ? இல்லை முன்னமே சொல்லி இருக்கலாம்னு நினைச்சதா?

Dreamzz said...

நான் பர்ஸ்டா?

காட்டாறு said...

அப்போ என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம்.... அப்படின்னு பாட்டு இருக்கே... அது என்னாங்க? :)

நவீன் ப்ரகாஷ் said...

//காரணமில்லா பொய்க்
கோபங்களும்
விட்டுத்தர மறுத்த
உள்ளுணர்வுகளுமாய்
வீணடிக்கப்பட்ட நொடிகளுக்கு
அன்று ஏனோ
புரிந்ததேயில்லை...//

மிக அழகான நினைவுகளை இருத்திக்கொள்ளவே வீணடிக்கப் பட்ட உணர்வுகள் அல்லவா ??

அப்பொழுது புரிந்திருந்தால் இப்பொழுது
அழகான கவிதை ஆகி இருக்காது அல்லவா ?? :)))

ரசித்தேன் !!!

கோபிநாத் said...

\\ CVR said...
ரைட்டு தான் யக்கோவ்!! :-)
\\

ரீப்பிட்டேய்ய்ய்ய்

ஜி said...

marupadiyum kavippayanamaa?? vaazththukkal.. thodaranthu ezuthunga...

//மிக அழகான நினைவுகளை இருத்திக்கொள்ளவே வீணடிக்கப் பட்ட உணர்வுகள் அல்லவா ??

அப்பொழுது புரிந்திருந்தால் இப்பொழுது
அழகான கவிதை ஆகி இருக்காது அல்லவா ?? :)))//

rasiththen :)))

cheena (சீனா) said...

//அருகாமையில் புரிவதில்லை
எந்த ஒரு பொருளின்
அருமையும் பெருமையும்!!//

உண்மை. காதலாகட்டும், நட்பாகட்டும், தாய் தந்தை உறவாகட்டும், சகோதர சகோதரி உறவாகட்டும் எதுவுமே இவ்விதியைக் கடைப்பிடிப்பவை தான்.

Mani G Sankar said...

//காரணமில்லா பொய்க்
கோபங்களும்
விட்டுத்தர மறுத்த
உள்ளுணர்வுகளுமாய்
வீணடிக்கப்பட்ட நொடிகளுக்கு
அன்று ஏனோ
புரிந்ததேயில்லை...//

சரியான வார்த்தைக் கோர்வுங்க...

ஸ்ரீவி சிவா said...

ஹாய் இ.அ,
கவிதை நல்லா இருக்கு... உணர்வுகள் வரிகளில் தெரிகிறது!