Tuesday, January 22, 2008

காபி பிரியரா நீங்கள்? அவசியம் இங்க வாங்க :)

காபி... ஸ்ஸ்ஸ்ஸ்... நினைக்கும்போதே அப்படியே அந்த வாசம் மூக்கைத் துளைக்குது(என் பக்கத்து க்யூபிக்கிள்ல காபி குடிச்சிட்டு இருக்காரு எங்க தல. அதான் போல ;)))). எனக்கு காபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல காபி போட்டுதான் அம்மா எழுப்புவாங்க. வேகமா ப்ரஷ் பண்ணிட்டு ஓடி வந்து நானும் என் தம்பியும் எங்க வீட்டு நிலகால்ல ஆளுக்கு ஒருப் பக்கமா உக்காந்துக்கிட்டு அந்த காபிய ரசிச்சு ருசிச்சுக் குடிப்போம். எனக்கு ஃபில்டர் காபின்னா உயிர். ஸ்ட்ராங்கா டிகாக்ஷன் போட்டு சக்கரை கம்மியா இருக்கணும். இல்லைனா பேயாட்டம் ஆடுவேன். அதென்னவோ பில்டர் காபில ஒரு தனி வாசமே வரும். அது வேற எந்த காபிலயும் வரது இல்ல.

அப்புறம் சென்னை வந்ததும் வெண்டிங் மிஷின் காபி அறிமுகம். நிஜமா காபின்னு காதுல கேட்டாலே அலறியடிச்சுட்டு ஓடற அளவுக்கு இருந்துச்சு அதோட டேஸ்ட். ஹ்ம்ம்ம். கர்ண கொடூரம். அப்புறம் பெங்களூர் வந்ததுக்கு அப்புறம் வேற ஒரு வெண்டிங் மெஷின் காபி. அது கொஞ்சம் பரவால்லயா இருந்துச்சு. அதுல காபி கொட்டைய அரைச்சு காபி போட்டுத் தரும். காபி மேல இருந்த லவ்ல காபிய குடிக்கறத விட்டுட்டு மில்க் குடிச்சிட்டு அந்த காபி பீன் சாப்பிட ஆரம்பிச்சேன். எல்லாரும் எவ்வளவோ அட்வைஸ் பண்ணியும் என்னால விட முடியலை. அப்புறம் நானா தெளிஞ்சு விட்டுட்டேன். அதுக்கு ரீஸன் CCD காபி அறிமுகம். Cappucino, Cafe Latte இப்படி எத்தனை அவதாரங்கள்... அப்பப்பா... டேஸ்ட்டோ டேஸ்ட்டு...

ஆனா கொஞ்ச நாள்ல இந்த Hot Chocalate அறிமுகத்தால அதை எல்லாம் விட்டுட்டேன். வீட்டுல குடிக்கற காபி மட்டும்தான். சரி சரி உன் காபி புராணத்தக் கொஞ்சம் நிறுத்தறயானு நீங்க சொல்றது கேக்குது. இப்போ பக்கமா என் டீம் மேட் எனக்கு ஒரு வித்தியாசமான காபி சொல்லிக் குடுத்தா. ரொம்ப ஈஸியா செஞ்சுடலாம். நான் ட்ரை பண்ணிட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. சோ வழக்கமான வசனம்தான். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் :)))

ஒரு டம்ளர் காபிக்கு எவ்வளவு சர்க்கரை, ப்ரூ இல்லைனா சன்ரைஸ் காபித்தூள் (இன்ஸ்டன்ட்காபித்தூள் ஒன்லி)போடுவீங்களோ அதை ஒரு டம்ளர்ல எடுத்துக்கோங்க. அது கரையற அளவுக்கு சுடுதண்ணி ஊத்தி அதுல ஒரு ஸ்பூனப் போட்டு நல்லா அடிங்க. தண்ணி ஊத்தினதும் கருப்பு கலர்ல இருந்தது இப்போ ப்ரவுன் கலர்ல ஆயிடும். லைட் ப்ரவுன் கலர்ல வரவரைக்கும் நல்லா அடிங்க. அப்படியே க்ரீமியா வரும். இப்போ அதுல தேவையான அளவு பாலை ஊத்தி ஸ்பூன்ல ஒரு கலக்கு கலக்குங்க. அவ்ளோதான். நம்ம க்ரீமி காபி ரெடி. எஞ்சாய் பண்ணுங்க :)))

இதை செய்யும்போது நீங்க செய்யக் கூடாதது(என் அனுபவத்துல கண்டுபிடிச்சது):
1. சுடுதண்ணி ரொம்ப ஊத்தாதீங்க. இல்லைனா ஸ்பூன் போட்டு அடிக்கும்போது உங்க ட்ரெஸ்ல எல்லாம் அடிச்சு ட்ரெஸ் வீணாயிடும்.

2. பால் ஊத்தும்போது ரொம்ப தூக்கி ஊத்தாதீங்க. அப்டி பண்ணினா அந்த க்ரீம் பால்ல கரைஞ்சுப் போயிடும்.

3. ஸ்பூன் போட்டு லைட்டாக் கலக்குங்க. ரொம்ப ஸ்பீடா கலக்காதீங்க. அப்போதான் அந்த காபி க்ரீம் ஒரு தனி லேயரா மேல இருக்கும்.

ரொம்ப ஈஸியா இருக்கு இல்ல. ரொம்ப ஸ்ட்ராங்கா வெணும்னா காபித்தூள் நிறைய போட்டுக்கோங்க. இல்லைனா உங்களுக்கு தேவையான அளவுப் போட்டுக்கோங்க. செஞ்சுப் பாத்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க மக்கள்ஸ் :)))

41 comments:

மங்களூர் சிவா said...

//
லைட் ப்ரவுன் கலர்ல வரவரைக்கும் நல்லா அடிங்க.
//
பாவம் அதைப்போய் எதுக்குங்க அடிக்கணும்!?!?!?

CVR said...

இந்த ஊருல காபி ரொம்ப மோசம் யக்கோவ்!! :-(
நான் நம்ம ஊரு விஷயங்களிலே நம்ம ஊரு காபியும் ஒன்னு!! :-(

இங்கிட்டு எங்கே போனாலும் ஒரே தண்ணியா,சக்கரை கம்மியா தராங்க!! அதுவுமில்லாம காபி சுவையும் நம்ம ஊரு போல இல்ல! :-(

இம்சை அரசி said...

// Blogger மங்களூர் சிவா said...

//
லைட் ப்ரவுன் கலர்ல வரவரைக்கும் நல்லா அடிங்க.
//
பாவம் அதைப்போய் எதுக்குங்க அடிக்கணும்!?!?!?
//

யோவ்... நான் என்ன நாலைஞ்சு ரவுடிங்கள வச்சு ரெண்டு ஆள அடின்னா சொன்னேன்??? ;)))

காபி நல்லா வேணும்னா பண்ணிதான் ஆகணும்... :P

மங்களூர் சிவா said...

//
இம்சை அரசி said...

யோவ்... நான் என்ன நாலைஞ்சு ரவுடிங்கள வச்சு ரெண்டு ஆள அடின்னா சொன்னேன்??? ;)))
//

அப்ப நாமளே களத்துல எறங்கீறனுமா!?!?

இம்சை அரசி said...

// Blogger CVR said...

இந்த ஊருல காபி ரொம்ப மோசம் யக்கோவ்!! :-(
நான் நம்ம ஊரு விஷயங்களிலே நம்ம ஊரு காபியும் ஒன்னு!! :-(

இங்கிட்டு எங்கே போனாலும் ஒரே தண்ணியா,சக்கரை கம்மியா தராங்க!! அதுவுமில்லாம காபி சுவையும் நம்ம ஊரு போல இல்ல! :-(
//

இப்படி நம்ம மக்கள் கவலைப்படக்கூடாதுன்னு தான் இவ்ளோ பெரிய ஒரு சமூகப் பணி செஞ்சிட்டு இருக்கேனாக்கும் ;)))

இதை ட்ரைப் பண்ணிப் பாருங்கண்ணா... சூப்பரா இருக்கும். நீங்களே எனக்கு தேங்ஸ் சொல்வீங்க :)))

மங்களூர் சிவா said...

//
இம்சை அரசி said...

இப்படி நம்ம மக்கள் கவலைப்படக்கூடாதுன்னு தான் இவ்ளோ பெரிய ஒரு சமூகப் பணி செஞ்சிட்டு இருக்கேனாக்கும் ;)))
//

ஆமா மெடிக்கல் ரீஇம்பர்ஸ்மெண்ட்டும் இவிங்களே குடுத்துருவாக அதனால நீங்க நிச்சயம் ட்ரை பண்ணுங்கோ!!

ஆம்பூலன்ஸ் நம்பர் எதுக்கும் ரெடியா எடுத்து வெச்சிக்கங்க!!

சுரேகா.. said...

அந்த ரெண்டு படங்கள்லருந்தும்..நல்ல கம கமன்னு வாசனை வருது!

Anonymous said...

erkanave dosai(without salt)pottachu.ippo coffee.koli masalaku readya?
-isthri potti

Unknown said...

http://www.rediff.com/getahead/2008/jan/21preg.htm....

have a look at this miss. A child in the womb can get killed cos of excessive coffee. It always smells like poison to me.

so check ur sip counts...

Iyappan Krishnan said...

குடிச்ச்சேனே ... அதை நானும் குடிச்சேனே
:(

ஒரு நாளைக்கு ஒரு கப் காபிக்கு மேலே குடிக்கறதில்லைங்கற சபதத்தில இருந்து மட்டும் என்னைக்கும் பின் வாங்கமாட்டேனாக்கும்

Dreamzz said...

ஒரு காபிக்க்கு இவ்ளோ கதையா :)
நல்லா தானுங்க இருக்கு...

Dreamzz said...

//இந்த ஊருல காபி ரொம்ப மோசம் யக்கோவ்!! :-(
நான் நம்ம ஊரு விஷயங்களிலே நம்ம ஊரு காபியும் ஒன்னு!! :-(/
தல.. ஒரு 21 நாள் தொடர்ந்து குடிங்க.. பழகிடும் :P

இம்சை அரசி said...

// மங்களூர் சிவா said...

//
இம்சை அரசி said...

யோவ்... நான் என்ன நாலைஞ்சு ரவுடிங்கள வச்சு ரெண்டு ஆள அடின்னா சொன்னேன்??? ;)))
//

அப்ப நாமளே களத்துல எறங்கீறனுமா!?!?
//

ஸ்ஸ்ஸ்... அப்பாஆஆஆ... சரியான ரவுடிப் பையன் :P

இம்சை அரசி said...

// மங்களூர் சிவா said...

//
இம்சை அரசி said...

இப்படி நம்ம மக்கள் கவலைப்படக்கூடாதுன்னு தான் இவ்ளோ பெரிய ஒரு சமூகப் பணி செஞ்சிட்டு இருக்கேனாக்கும் ;)))
//

ஆமா மெடிக்கல் ரீஇம்பர்ஸ்மெண்ட்டும் இவிங்களே குடுத்துருவாக அதனால நீங்க நிச்சயம் ட்ரை பண்ணுங்கோ!!

ஆம்பூலன்ஸ் நம்பர் எதுக்கும் ரெடியா எடுத்து வெச்சிக்கங்க!!
//

செய்முறை விளக்கம் மட்டும்தான் நம்மளோடது. அதுக்கப்புறம் உங்க பாடு :P

இம்சை அரசி said...

// சுரேகா.. said...

அந்த ரெண்டு படங்கள்லருந்தும்..நல்ல கம கமன்னு வாசனை வருது!
//

இதை செஞ்சு பாருங்க... இன்னும் கமகமனு வாசனை வரும் :)

மங்களூர் சிவா said...

//
இம்சை அரசி said...

செய்முறை விளக்கம் மட்டும்தான் நம்மளோடது. அதுக்கப்புறம் உங்க பாடு :P

//
இவ்ளோ நல்லவிங்களா நீங்க!!

இம்சை அரசி said...

// erkanave dosai(without salt)pottachu.ippo coffee.koli masalaku readya?
-isthri potti
//

ஹி... ஹி... இதெல்லாம் நமக்காக கத்துக்கிட்டது. இதுல எந்த உள்நோக்கமும் இல்ல :)))

மங்களூர் சிவா said...

//
இம்சை அரசி said...

இதை செஞ்சு பாருங்க... இன்னும் கமகமனு வாசனை வரும் :)

//
வாய்ல வைக்க முடியுமா!?!?!?

இம்சை அரசி said...

// இசை said...

http://www.rediff.com/getahead/2008/jan/21preg.htm....

have a look at this miss. A child in the womb can get killed cos of excessive coffee. It always smells like poison to me.

so check ur sip counts...
//

அளவுக்கு மீறினா அமுதமும் நஞ்சு தாங்க. அதுக்கு காபி மட்டும் விதிவிலக்கா என்ன? :)))

informationக்கு நன்றிங்க :)))

இம்சை அரசி said...

// Jeeves said...

குடிச்ச்சேனே ... அதை நானும் குடிச்சேனே
:(

ஒரு நாளைக்கு ஒரு கப் காபிக்கு மேலே குடிக்கறதில்லைங்கற சபதத்தில இருந்து மட்டும் என்னைக்கும் பின் வாங்கமாட்டேனாக்கும்
//

எவ்வளவு சூப்பரா போட்டுத் தந்தேன். அண்ணிகிட்ட கூட எப்படி போடறதுனு கேட்டுக்க சொன்னீங்க இல்ல. அப்புறம் என்ன சோக ஸ்மைலி??? :@

இம்சை அரசி said...

// Dreamzz said...

ஒரு காபிக்க்கு இவ்ளோ கதையா :)
நல்லா தானுங்க இருக்கு...
//

காபிக்கு கதை இல்லீங்கோ... காபி எப்படி போடறதுனு சொல்றதுக்கு...

எல்லாமே வழ வழா கொழகொழான்னே ஆயாச்சு... ஹ்ம்ம்ம்... என்ன பண்றது???

இம்சை அரசி said...

// Dreamzz said...

//இந்த ஊருல காபி ரொம்ப மோசம் யக்கோவ்!! :-(
நான் நம்ம ஊரு விஷயங்களிலே நம்ம ஊரு காபியும் ஒன்னு!! :-(/
தல.. ஒரு 21 நாள் தொடர்ந்து குடிங்க.. பழகிடும் :P
//

அதுக்குத்தான நாமளே எப்டி செய்யறதுனு சொல்லிக் குடுத்துருக்கேன். அப்புறம் என்ன??? :@@@

நானானி said...

இம்சையரசியின் இம்சையில்லாத காபி..பேஷ்! பேஷ்! ரொம்ப நல்லாருக்கு.
ஆனா நம்மூர் பாலில் எங்கிருந்துங்க க்ரீம் கிடைக்கும்? அதையும் சொல்லிட்டா தேவல.

sathish (bengaluru) said...

Kaapi Receipe was excellent.Kaapi Tips Konjam (fulla) kappi adichukiren.....

MyFriend said...

//இல்லைனா பேயாட்டம் ஆடுவேன்//

சாதாரணமா இருக்கும்போதேஏ இந்த ஆட்டம்தானே? :-)))))

MyFriend said...

//காபி பிரியரா நீங்கள்? அவசியம் இங்க வாங்க :) //

இல்லீங்க.. காப்பி, டீ, பால்ன்னு எதைஇயும் தொடறது இல்ல நான்.. அப்போ போ போன்னு துறத்துவீங்களா என்னை?? :-(

ஜி said...

:))) Nice

பாச மலர் / Paasa Malar said...

இதப் படிச்சு ரொம்ப tempting ஆயிருச்சு..குளிருக்கும் அதிக்கும்..அடுத்த காபிக்கு ரெடியாயிட்டேன்..இருங்க..உங்க ஸ்டைல்ல போட்டுக் குடிச்சுட்டு வர்றேன்..

பாச மலர் / Paasa Malar said...

யப்பா..போட்டுக் குடிச்சாச்சு..என்ன அடி அடின்னு அடிச்சதுல சூடு கொஞ்சம் கம்மியாப் போய்ருச்சு..அடுத்த தடவை சரி பண்ணிரலாம்..நல்ல டிப்ஸ்..

மங்களூர் சிவா said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
//இல்லைனா பேயாட்டம் ஆடுவேன்//

சாதாரணமா இருக்கும்போதேஏ இந்த ஆட்டம்தானே? :-)))))
//

அவ்வ்வ்
மை பிரெண்ட் பதிவ படிச்சி பாயிண்டை பிடிச்சிட்டீங்களே!!

க்ரேட்

இன்னும் கெளம்பலையா!????

:-))))

இம்சை அரசி said...

// Blogger நானானி said...

இம்சையரசியின் இம்சையில்லாத காபி..பேஷ்! பேஷ்! ரொம்ப நல்லாருக்கு.
//

தேங்க் யூ... தேங்க் யூ...

// ஆனா நம்மூர் பாலில் எங்கிருந்துங்க க்ரீம் கிடைக்கும்? அதையும் சொல்லிட்டா தேவல.
//

அது பால்ல வர க்ரீம் இல்ல. காபித் தூள், சர்க்கரை போட்டு அடிக்கறீங்க இல்ல. அது க்ரீமாயிடும். அந்த க்ரீம் லேயர் தான் மேல இருக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க :)))

இம்சை அரசி said...

// Black said...

Kaapi Receipe was excellent.Kaapi Tips Konjam (fulla) kappi adichukiren.....
//

ரெசிப்பி எக்சலன்ட்னு சொல்றது இருக்கட்டும். செஞ்சுப் பாத்துட்டு சொல்லுங்க :)))

இம்சை அரசி said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

//இல்லைனா பேயாட்டம் ஆடுவேன்//

சாதாரணமா இருக்கும்போதேஏ இந்த ஆட்டம்தானே? :-)))))
//

உனக்கு அக்காவா இருக்கேனே... அப்புறம் வேறெப்படி இருப்பேன் ;)))

ச்சும்மா... லுலுலாயிக்கு... :)))

இம்சை அரசி said...

// Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

//காபி பிரியரா நீங்கள்? அவசியம் இங்க வாங்க :) //

இல்லீங்க.. காப்பி, டீ, பால்ன்னு எதைஇயும் தொடறது இல்ல நான்.. அப்போ போ போன்னு துறத்துவீங்களா என்னை?? :-(
//

காபி பிரியர் இல்லைனா வர வேணம்னு சொல்லலையே ;)))

இம்சை அரசி said...

// Blogger ஜி said...

:))) Nice
//

காபியா இல்ல போஸ்ட்டா??? :)))

இம்சை அரசி said...

// Blogger பாச மலர் said...

இதப் படிச்சு ரொம்ப tempting ஆயிருச்சு..குளிருக்கும் அதிக்கும்..அடுத்த காபிக்கு ரெடியாயிட்டேன்..இருங்க..உங்க ஸ்டைல்ல போட்டுக் குடிச்சுட்டு வர்றேன்..
//

ஹ்ம்ம்ம்... இதுக்கப்புறம் இந்த காபிய மட்டும்தான் குடிப்பிங்க பாருங்க :)))

இம்சை அரசி said...

// Blogger பாச மலர் said...

யப்பா..போட்டுக் குடிச்சாச்சு..என்ன அடி அடின்னு அடிச்சதுல சூடு கொஞ்சம் கம்மியாப் போய்ருச்சு..அடுத்த தடவை சரி பண்ணிரலாம்..நல்ல டிப்ஸ்..
//

பாலை ஊத்தி அடிச்சிட்டிங்களா??? அச்சோ... சுடு தண்ணிய ஊத்தி அடிக்கணும். அதை நல்லா அடிச்சப் பிறகு பாலைக் காய வச்சு கலக்குங்க. அப்போ ஆறிப் போகாது :)))

இம்சை அரசி said...

// Blogger மங்களூர் சிவா said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
//இல்லைனா பேயாட்டம் ஆடுவேன்//

சாதாரணமா இருக்கும்போதேஏ இந்த ஆட்டம்தானே? :-)))))
//

அவ்வ்வ்
மை பிரெண்ட் பதிவ படிச்சி பாயிண்டை பிடிச்சிட்டீங்களே!!

க்ரேட்
//

அப்போ நீங்க பதிவப் படிக்கவே இல்லையா??? கிர்ர்ர்ர்ர்ர்.... :@@@@

மங்களூர் சிவா said...

//
//
.:: மை ஃபிரண்ட் ::. said...
//காபி பிரியரா நீங்கள்? அவசியம் இங்க வாங்க :) //

இல்லீங்க.. காப்பி, டீ, பால்ன்னு எதைஇயும் தொடறது இல்ல நான்.. அப்போ போ போன்னு துறத்துவீங்களா என்னை?? :-(
//
இன்னும் கெளம்பலையா!????

கெளம்பி டைரக்டா 'டாஸ்மாக்' போயிடுங்க நான் அங்கனதான் இருப்பேன்!!
:-))))

பாச மலர் / Paasa Malar said...

//பாலை ஊத்தி அடிச்சிட்டிங்களா??? அச்சோ... சுடு தண்ணிய ஊத்தி அடிக்கணும். அதை நல்லா அடிச்சப் பிறகு பாலைக் காய வச்சு கலக்குங்க. அப்போ ஆறிப் போகாது//

இல்லை இல்லை. தண்ணீரின் சூடு மாறும் என்று நினக்காமல் போய்விட்டேன். பாலை அடிக்கவில்லை.

இதைப் படித்ததும்தான் நினைவு வந்தது..எப்போதோ ஒரு முறை நெஸ்கபேக்கு ஒரு battery operated handy coffee blender free ஆகக் கொடுத்தார்கள்..அதில் அடிக்க ஆரம்பித்துவிட்டேன்..