Monday, December 24, 2007

இதயம் ரோஜா காதல் முள் - II


ஹலோ! யாருடா இவன்? இவன் பாட்டுக்கு நம்மளப் பாத்து ஹலோ சொல்றானேனு பாக்கறீங்களா? என் பேரு ஷ்யாம். செஞ்சிட்டு இருக்கற வேலை பொட்டித் தட்டற வேலை. ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்னு நிறைய தடவை ஃபீல் பண்ணி இருக்கேன். அம்மா சமையல சாப்பிட்டு அப்பா கூட செஸ் விளையாடிட்டு தங்கச்சிகிட்ட லட்டுக்கு சண்டை போடற லைஃப் இருக்கே. சுகமே சுகம். ஹ்ம்ம்ம். எல்லாத்தையும் விட்டுட்டு வரணும்னு தலைல எழுதி இருக்கு. என்ன பண்றது. நான் எங்க வீட்டோட ரொம்ப attachedங்க. வந்த புதுசுல வாரம் ஆனா வீட்டுக்கு ஓடிப் போயிடுவேன். அதுக்கப்புறம் அப்படியே ஃப்ரெண்ட்ஸ் அப்படி இப்படினு நம்ம லைஃப் இங்க செட்டாயிடுச்சு. அச்சச்சோ! உங்ககிட்ட பேசிட்டு இருந்ததுல டைம் பாக்காம விட்டுட்டேன். அஞ்சரை ஆனா டாண்னு CCDல இருக்கணும். இல்லைனா ஒரு சுனாமியே வந்துடும். ஒரு நிமிஷம் இருங்க. சிஸ்டம் லாக் பண்ணிட்டு என் ஷூ-வப் போட்டுட்டு வரேன்.

ஏன் கிளம்பறீங்க? ஒண்ணும் பிரச்சினை இல்லைங்க. நான் போயிக்கிட்டேதான் பேசறேன். நான் யாரைப் பாக்கப் போறேனு நீங்க தெரிஞ்சிக்க வேணாமா? அவதான் என்னோட அழகான ராட்சசி தெய்வா. ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி காலைல கனவுகள்ல சஞ்சரிச்சிட்டு இருந்த என்னை என் தங்கச்சிக்கிட்ட இருந்து வந்த ஃபோன் தட்டி எழுப்புச்சு. அடிச்சு புடிச்சு எடுத்துப் பேசினேன். டேய்! என் ஃப்ரெண்ட்க்கு உன் கம்பனில வேலை கிடைச்சிருக்கு. அவளுக்கு அந்த ஊருல யாரும் தெரியாது. பாஷை தெரியாத ஊருல மாட்டிக்கிட்டேனேனு புலம்பிட்டு இருந்தா. நான்தான் நீ இருக்கறனு தைரியம் சொல்லி அனுப்பி இருக்கேன். உன் நம்பர் அவட்ட குடுத்திருக்கேன். இன்னைக்கு வந்து ஜாயின் பண்றா. உனக்கு கால் பண்ணுவா. அவள ஒழுங்கா பாத்துக்கோ. உன் வாலுத்தனத்தையெல்லாம் காட்டி என் மானத்த வாங்கிடாத-னு சொல்லிட்டு என் பதில கூட கேக்காம கட் பண்ணிட்டா. சரி தங்கை சொல் மிக்க மந்திரமில்லைனு நல்ல பிள்ளையா இருக்கணும்னு உள்ளுக்குள்ள சபதம் எடுத்துக்கிட்டு(ஹி... ஹி... ச்சும்மா பில்ட் அப்பு;)) ஆபிஸ் போனேன். வேலை பிஸில அப்படியே மறந்துப் போயிட்டேன்.

ஒரு பதினோரு மணி போல மீட்டிங்ல இருந்தப்போ அனானிமஸ் கால் வந்துச்சு. யாரா இருக்கும்னு எடுத்து பேசினேன். "நா...ன்... தெய்வா". எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. இருந்தாலும் கெத்தா "மீட்டிங்ல இருக்கேன். வில் கால் யு பேக்"-னு சொல்லி வச்சிட்டேன். ஆனாலும் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்திங்க. அன்னைக்கு அப்படியே மறந்துப் போயிட்டேன். அன்னைக்கு நைட் ஃபோன் பண்ணி என் உடன்பிறப்பு சாமியாடினாப் பாருங்க. வாழ்க்கைல மறக்கவே முடியாது. அந்த பொண்ணு இப்படியா போட்டுக் குடுக்கறதுனு ஒரு சின்ன கடுப்பு. இருந்தாலும் நான் மறந்திருக்கக் கூடாதுதானு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். அதுக்கப்புறம் அவளுக்கு நல்ல ஹாஸ்டல்லா பாத்து சேர்த்து விட்டு, சிம் கார்டு வாங்கி கொடுத்து, ஊருக்கு பஸ் ஏறது எல்லாம் எங்கனு சொல்லிக் குடுத்து, சனிக்கிழமை ஷாப்பிங் கூட்டிட்டுப் போயி, ஞாயித்துக் கிழமை சும்மா வெளிய எங்கயாவது கூட்டிட்டு போன என்கிட்ட அவ நல்லா பழக ஒரு மாசம் ஆச்சு. ஒரு மாசத்துக்கப்புறம் ஆபிஸ்லயும் எங்க ப்ரேக் பாஸ்ட் டைம், லஞ்ச் டைம் ஒண்ணாச்சு. அப்புறம் சாயந்திரம் டிஃபன் டைம். அப்புறம் மொபைல்ல ஆட்-ஒன் கார்ட் போட்டு நைட்டெல்லாம் பேசி, ஆபிஸ்ல எக்ஸ்டென்ஷன், இன்டெர்னல் கம்யூனிக்கேட்டர்னு ஆகி என் வாழ்க்கை ஃபுல்லா இவ என்னோடவே இருக்கணும்னு நான் நினைக்கற அளவுக்கு ஆயிடுச்சு.

அவகிட்ட எப்படி சொல்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அதுமில்லாம அவளுக்கும் அந்த மாதிரி இருக்கோ இல்லையோனு ஒரு சின்ன... இல்ல... ரொம்பவே பெரிய சந்தேகம். அதுனால என்ன பண்றதுனு புரியாம டெய்லி நைட்டு விட்டத்தப் பாத்து யோசிச்சிட்டே இருந்த எனக்கு எந்த ஐடியாவும் தோணவே இல்ல :((( போன வாரம் ரெண்டு பேரும் ஒரு பேய்ப்படத்துக்கு போயிருந்தோம். அடிக்கடி பயந்துப் போயி என் கைய இறுக்கிப் பிடிச்சுக்கிட்டே இருந்தா. இதுக்கு முன்னாடி போனப்போ ரொம்ப தைரியமாதான் பாத்தா. இன்னைக்கு ஏன் இப்படி பயந்துக்கறானு எனக்கு ஒரே டவுட். படம் முடிஞ்சு வெளில நடந்தப்போ என் சந்தேகத்தக் கேட்டேன். அது என்னவோ தெரியலை. இப்போல்லாம் எதைப் பாத்தாலும் ரொம்ப பயமா இருக்குனு சொன்னா. எனக்கு ஒண்ணுமே புரியல. பயமா இருந்தாதானே உங்க கையப் பிடிச்சிக்க முடியும்னு சொல்லிட்டு ஒரு புன்னகைய சிதற விட்டா பாருங்க. எனக்குள்ள லட்சம் பட்டாம் பூச்சி பறந்துச்சு. இருந்தாலும் ஒண்ணும் தெரியாதவன் போல என் கையப் பிடிக்கறதுக்கு என்ன இருக்குனு கேட்டேன். சென்னைல நான் பாக்காம மிஸ் பண்ணின சுனாமிய அவ முகத்துலதான் பாத்தேன். இன்னும் என்ன விளக்கமா சொல்லணுமா? என் லைஃப் லாங்க் உங்க கையப் பிடிச்சிட்டே இருக்கணும் போதுமானு சொல்லிட்டு என்னை மொறைச்சுப் பாத்தா. அது வரைக்கும் எனக்குள்ள மொட்டு விட்டுக்கிட்டு இருந்த காதல் பூவா மலர்ந்துச்சு. பாருங்க பாருங்க. முன்னாடியெல்லாம் இப்படி பூவு, மொட்டு, பட்டாம்பூச்சினு எல்லாம் நான் பேசவே மாட்டேன். என்ன பண்றது? இந்த காதல் வந்து என்னைய இப்படி பாடாப்படுத்துது.

ரெண்டு பேர் வீட்டுலயும் ஒண்ணும் பிரச்சினை இல்ல. ஆனா என் தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி நான் இப்படி போயி நின்னா நல்லா இருக்காது இல்ல. அதான் அவளுக்கு கல்யாணம் ஆனதும் வீட்டுல இதுப் பத்தி பேசலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கோம். என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கூட இதைப் பத்தி சொல்லலை. அதுலயும் ரெண்டு ராட்சசிங்க இருக்காளுங்க. சொன்னா என்ன பாடுபடுத்துவாளுங்கனு தெரியலை. சரிங்க. வந்து சேர்ந்துட்டேன். இவ்ளோ தூரத்திலேயும் அவ முகத்துல இருக்கற கோபம் இங்க என்னை அடிக்குது. நான் போய் சமாதானப்படுத்தறேன். டேக் கேர். இன்னொரு நாள் பார்ப்போம். பை :)))

தொடரும்...

14 comments:

மங்களூர் சிவா said...

attendance Pottukkaren!!

மங்களூர் சிவா said...

padichittu vandhudaren!!

ரசிகன் said...

ஹலோ..இம்சை.. கதை நல்லா ஒரு ஃFலோவுல போயிக்கிட்டிருக்கு.. அத அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கோங்கப்பு... தீடீருன்னு பிரிஞ்சிட்டாய்ங்கன்னெல்லாம் காதுல அமிலத்த ஊத்த வேண்டாமுன்னு கேட்டுக்கிறோம்..

கோபிநாத் said...

ம்ம்ம்...நல்லாயிருக்கு எழுத்து நடை ;)

Aruna said...

http://naanirakkappokiraen-aruna.blogspot.com/
உங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனால் இதுதான் முதல் தடவை உங்க எழுத்துக்கள் படிக்கிறேன் .ரொம்ப நல்லா எழுதுறீங்க.இம்சை அரசி பேர் கூட ரொம்ப சூப்பர்.னான் இப்போ உங்க விசிறியாக்கும் okஆ?
aruna

Anonymous said...

opening nalla irukku

Nithi said...

opening nalla irukku

நிஜமா நல்லவன் said...

படம் ரொம்ப நல்லா இருக்கு.

I Am Me said...

aaha, ennanga,, ippadi panniputeeengale!!

hmmmm

Arunkumar said...

excellent write-up...
adutha part Jan 1st aa?
eagerly waiting....

(neraya comments potadhille but ella postsayum padippen :P)

Wish you and your re(a?)el life characters, a very Happy New Year 2008 :)

Anonymous said...

வணக்கம், ஜீவா இலண்டனிலிருந்து....சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக உங்கள் தளத்தினுள் நுழைந்தேன், ஆனால் அன்றிலிருந்து வாரம் ஒருமுறையாவது வந்து செல்வது வழமையாகிவிட்டது....உங்கள் ஆக்கங்கள் அருமை...கதையின் அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்... நன்றி!!!

G.Ragavan said...

Freeflow writting...அதாவது ஓடும் எழுத்து நடை...படபடன்னு படிக்க முடியுது. நல்லா எழுதீருக்க. அடுத்த பாகத்துக்கு ஓடுறேன்.

ஜொள்ளுப்பாண்டி said...

இம்சைஸ் :)))
இப்படி போட்டுதாக்குனா எப்படி..?? என்னா ஒரு நடை என்னா ஒரு naration !!!! கலகல் தொடருது... பின்னுங்க...

Unknown said...

supper cho...............sweet