Saturday, December 15, 2007

இதயம் ரோஜா காதல் முள் - I

ஹாய்! எப்படி இருக்கீங்க? நானா? நான்தாங்க வினி அலைஸ் வினிதா. என் வீட்டுக்கு வினிக்குட்டி. எங்க வீடு பத்தி சொல்லணும்னா அம்மா, அப்பா, அண்ணா, நானு ஒரு அழகான கூடு. எங்கம்மாவும் அப்பாவும் எங்களை பாசத்த மட்டுமே கொட்டி கொட்டி வளத்திருக்காங்க. அவங்க மூணு பேரோட குட்டி ஏஞ்சல் நான்தான். ஹ்ம்ம்ம்ம்.... என் ஃப்ரெண்ட்ஸ்க்கு நான் வினி. என்னைப் பொறுத்த வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ் விஷயத்துல அடிச்சுக்க முடியாத அளவுக்கு அதிர்ஷ்டசாலிங்க நான். வீட்ட விட்டு வந்து தனி்யா தங்கி இருந்தாலும் ஃப்ரெண்ட்ஸ் தயவுல வாழ்க்கை ஜாலியாவே போயிட்டு இருக்கு. என்ன பண்றது? பொட்டி தட்டறவங்க நிறைய பேர் பொழப்பு இப்படிதானே போகுது.

அதுக்கப்புறம்... இன்னொருத்தருக்கு நான் வினு டியர் :))) யெஸ். உங்க கெஸ் ரொம்ப சரி. நான் உள்ளுக்குள்ள கோட்டை மேல கோட்டை கட்டி அதுல ஒரே ஒரு சிம்மாசனம் வச்சு காலியாவே இத்தனை நாளா வச்சுட்டு இருந்தேன். அதுல எனக்கே தெரியாம அதுவும் என்னோட அனுமதி இல்லாமலே நுழைஞ்சு கம்பீரமா பெவிகால் போட்டு ஒட்டி வச்ச கணக்கா உக்காந்துக்கிட்டு இருக்கற ஷ்யாம். அவன நினைச்சாலே மனசு படபடனு அடிச்சுக்கிது :))) இது வரைக்கும் கல்யாணமா... ச்சீ... என்னால ஒரு வட்டத்துக்குள்ள எல்லாம் வாழ முடியாது... காதலா... ச்சீச்சீ... எல்லாம் சுத்த பேத்தல்... வேலை வெட்டி இல்லாதவங்க சும்மா பண்ணிட்டு திரியறது... காதலாவது கத்திரிக்காயாவதுனு பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு இருந்தவதாங்க நான். இப்போ மேடம் டோட்டல் டேமேஜ். இப்போ என்னை பாத்தா என் முகத்த வச்சே நான் எதை பத்தி பேசறேன்னு கண்டுபிடிச்சிடுவிங்க... அந்த அளவுக்கு ஆயிட்டேன்.

சரி அதை விடுங்க. அவனை எப்போ நான் பாத்தேன் தெரியுமா?? இதோ இப்ப நான் நின்னுட்டு இருக்கற இதே இடத்துல சரியா ஒரு வருஷம் நாலு மாசம் ஏழு நாள் மூணு மணி நேரத்துக்கு முன்னாடிதான் மீட் பண்ணினேன். எப்படி தெரியும்னு முழிக்காதீங்க. என்னோட காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து இந்த செகண்ட் வரைக்கும் என்னோட ஆருயிர், ஏழுயிர், எட்டுயிரா இருக்கற சுஜியோட ஸ்கூல் ஃப்ரெண்ட் அவன். இங்கதான் அவன எனக்கு சுஜி இன்ட்ரோ பண்ணி வச்சா. அந்த நாள்ல இருந்து நாங்க மூணு பேரும் மூவேந்தரா... சண்டை போட்டுக்கலைங்க... போன வாரம் வரைக்கும் ஒண்ணா சுத்திட்டு இருந்தோம். ஹ்ம்ம்ம்... ஒரே சோகம் :((( சுஜிக்கு லாஸ்ட் வீக் தான் கல்யாணம் ஆகி UK போயிட்டா. போகும்போது எனக்கு ஒரே அட்வைஸ். அந்த மோப்ப நாய் எனக்குள்ள அவன் வந்தத கெஸ் பண்ணிடுச்சு. ஆனா நம்ம ஊர் போலிஸ் டாக் மாதிரி அவளும் ஒரு அரைகொறை. அவனுக்கு வந்துடுச்சானு அவளால கெஸ் பண்ண முடியலை. ஆனா எனக்கு நல்லாவே தெரியும் அவனுக்குள்ள நான் வந்துட்டேன்னு. ஆனா சொல்லியே தொலைய மாட்டேன்றான்.

நீங்களே சொல்லுங்க. அவன்தான மொதல்ல சொல்லணும். நானா சொன்னா நல்லா இருக்காது இல்ல. அவன் வந்து சொல்லும்போது எப்படி நான் பதில் சொல்லணும்னு நிறைய யோசிச்சிட்டு இருக்கேன். மி டூன்னு சொல்லவா இல்ல நானும்னு சொல்லவா இப்படிதான். ஆனா ஒரு ஐடியாவும் தோண மாட்டென்றது :((( பேசாம கொஞ்சம் பிகு பண்ணிட்டு அப்புறம் சரி சொல்லலாமான்னு இப்பொ நினைச்சுட்டு இருக்கேன். அடடா... அவன் வந்துட்டான். சரிங்க. நாங்க இப்போ "Jab We Met" படத்துக்கு போறோம். அந்த படத்துலயாவது எனக்கு எதாவது ஐடியா கிடைக்குதானு பாக்கறேன் ;))) யார்கிட்டயும் இதை சொல்லிடாதீங்க. அய்யோ என்ன இது?? ஒரு பொண்ணோட வரான். அந்த பொண்ணு வேற இவன் கைய பிடிச்சுட்டே நடந்து வருது. எனக்கு வேற பயமா இருக்கே... நான் போய் யாருன்னு பாக்கறேன். நாம இன்னொரு நாள் பாப்போங்க. சீ யு. பை...

(தொடரும்)

பி.கு: ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.

பி.குக்கு பி.கு: ஆனால் அவர்கள் வழியை பின்பற்றாமல் அதாவது பிரதி திங்களன்று இல்லாமல் பிரதி செவ்வாயன்று வெளியிடுவேன் ;)

பி.குக்கு பி.குக்கு பி.கு: இது ஒரு மாத கதை. அதாவது நான்கு வாரங்கள் மட்டுமே. அதாவது நான்கு பகுதிகள் மட்டுமே. அய்யோ மொறைக்காதீங்க. பாவம் சின்ன பொண்ணு. பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுங்க.

24 comments:

ஜி said...

kalakkal thodaraa vara vaazththukkal :)))

கப்பி | Kappi said...

எடுத்தவுடனே டாப் கியர்ல பட்டையக் கிளப்புதே!! சூப்பர் :))

ஜே கே | J K said...

யக்கோவ்.......

சொல்லறதுக்கு ஒன்னும் இல்ல.

ஜே கே | J K said...

//பி.கு: ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.//

அப்போ இதுவும் சொந்த கதைனு சொல்றீங்களா?

நாகை சிவா said...

//ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.//

நீங்களும் அந்த வரிசை தான் என்பது நல்லாவே தெரியும்..

உங்களுக்கு எல்லாம் வேலை கொடுத்த அந்த புண்ணியவானை நினைச்சா தான் பாவமா இருக்கு....

G3 said...

//எடுத்தவுடனே டாப் கியர்ல பட்டையக் கிளப்புதே!! சூப்பர் :))//

repeatae :))))

CVR said...

சூப்பரு யக்கோவ்!
யதார்தமான நடை!!

படங்கள் போட்டு கதை போடும் ட்ரெண்ட் சூடு புடிச்சா நல்லது!!
கலக்குங்க!!
வாழ்த்துக்கள்!! :-)

இம்சை அரசி said...

// Blogger ஜி said...

kalakkal thodaraa vara vaazththukkal :)))
//

ஏதோ உங்க அளவுக்கு இல்லைனாலும் என்னால முடிஞ்ச அளவு :)))

இம்சை அரசி said...

// Blogger கப்பி பய said...

எடுத்தவுடனே டாப் கியர்ல பட்டையக் கிளப்புதே!! சூப்பர் :))
//

ரொம்ப நன்றிங்க அறிவு ஜீவி ;)))
(பெயர் உபயம்: ஃமைப்ரெண்ட்)

இம்சை அரசி said...

// Blogger J K said...

யக்கோவ்.......

சொல்லறதுக்கு ஒன்னும் இல்ல.
//

அப்போ ரெண்டு இருக்கா??? ;)

இம்சை அரசி said...

// Blogger J K said...

//பி.கு: ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.//

அப்போ இதுவும் சொந்த கதைனு சொல்றீங்களா?
//

யோவ் போடற கதையெல்லாம் சொந்த கதைனு சொன்னா எனக்கு எத்தனை கதை இருக்கறது??? ;)))

சொந்த கதைனா நாலாவதா ஒரு பி.கு போட தெரியாதா எனக்கு?

இம்சை அரசி said...

// Blogger நாகை சிவா said...

//ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.//

நீங்களும் அந்த வரிசை தான் என்பது நல்லாவே தெரியும்..
//

எப்படி தெரியும்???

// உங்களுக்கு எல்லாம் வேலை கொடுத்த அந்த புண்ணியவானை நினைச்சா தான் பாவமா இருக்கு....
//

ஏன்??? நிஜமா அவர் புண்ணியம் பண்ணினதாலதான் என்னை வேலைக்கு எடுத்திருக்கார் :)))

இம்சை அரசி said...

// Blogger G3 said...

//எடுத்தவுடனே டாப் கியர்ல பட்டையக் கிளப்புதே!! சூப்பர் :))//

repeatae :))))

//

வாங்க ஜி3 :)))

ரொம்ப டாங்கீஸ் :)))

இம்சை அரசி said...

// CVR said...

சூப்பரு யக்கோவ்!
யதார்தமான நடை!!

படங்கள் போட்டு கதை போடும் ட்ரெண்ட் சூடு புடிச்சா நல்லது!!
கலக்குங்க!!
வாழ்த்துக்கள்!! :-)
//

நன்றி CVR :)))

அடுத்த கதைக்கு உங்க போட்டோவ அனுப்பி வைக்கறீங்களா?? ;)))

கோபிநாத் said...

சிவிஆர் வியாதி உங்களுக்கும் வந்துடுச்சா...;))

நடத்துங்க..;)

Unknown said...

ஆரம்பம் ஓக்கே. இனிமே என்னாகுதுனு பாக்கனும்.
பிகு – பாக்கும்போதே சின்னப் பதிவா இருந்ததாலதான் படிச்சேன் :)
பிகு க்கு பிகு – இன்னும் 3 பகுதிதாங்கறதால அதையும் கண்டிப்பா படிப்பேன் :-)

ஜே கே | J K said...

//இம்சை அரசி said...
சொந்த கதைனா நாலாவதா ஒரு பி.கு போட தெரியாதா எனக்கு?//

ஒரு வேல நீங்க தன்னடக்கத்தோட இருப்பீங்களோனு நெனச்சேன்.

நிஜமா நல்லவன் said...

ஆ'ரம்பம்' நல்லா தான் இருக்கு. அடுத்தடுத்த வாரங்களில் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

இராம்/Raam said...

அடுத்த தொடர்கதையா? :)

Anonymous said...

//
நாகை சிவா said...
//ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.//

நீங்களும் அந்த வரிசை தான் என்பது நல்லாவே தெரியும்..

உங்களுக்கு எல்லாம் வேலை கொடுத்த அந்த புண்ணியவானை நினைச்சா தான் பாவமா இருக்கு....
//
இதை ரிப்பீட் சொல்லலாம்னா எனக்கு வேலை குடுத்த புண்ணியவானை ஒரு நிமிசம் நினைச்சு 'சைலண்ட்'ஆயிட்டேன்.

//
யோவ் போடற கதையெல்லாம் சொந்த கதைனு சொன்னா எனக்கு எத்தனை கதை இருக்கறது??? ;)))
//
ஒரு ஆளுக்கு ஒரு கதைதான் இருக்கனும்னு எந்த ஊரு சட்டம். கதை கதைக்குள் கதை, கிளை கதை அப்பிடி இப்பிடின்னு 1001 இரவுகள் மாதிரி நீண்டுகிட்டேவும் போலாம்

'இது உங்க நிஜ கதை இல்லை நாங்க எல்லாரும் நம்பிட்டோம்'

G.Ragavan said...

ஆகா...வருக வருக. இது தொடர்கதைக்காலம். செவ்வாய் எப்ப வருமுன்னு காத்திருக்கோம்.

நல்ல தொடக்கம். அடுத்த பகுதியப் படிக்கத்தான் இப்போ வெயிட்டிங்கு :)

G.Ragavan said...

// J K said...
//பி.கு: ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.//

அப்போ இதுவும் சொந்த கதைனு சொல்றீங்களா? //

ஆகா...சொந்தமா எழுதுறதால சொந்தக் கதைன்னு சொல்லிக்கலாம்னா சொந்தக் கதைதாங்க :)))))))))))))

// நாகை சிவா said...
//ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.//

நீங்களும் அந்த வரிசை தான் என்பது நல்லாவே தெரியும்..

உங்களுக்கு எல்லாம் வேலை கொடுத்த அந்த புண்ணியவானை நினைச்சா தான் பாவமா இருக்கு.... //

ஹா ஹா ஹா சிவா... ஹா ஹா ஹா விழுந்து விழுந்து சிரிச்சேன்

மங்களூர் சிவா said...

//
மங்களூர் சிவா said...
//
நாகை சிவா said...
//ஜி.ரா, CVR, ஜி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.//

நீங்களும் அந்த வரிசை தான் என்பது நல்லாவே தெரியும்..

உங்களுக்கு எல்லாம் வேலை கொடுத்த அந்த புண்ணியவானை நினைச்சா தான் பாவமா இருக்கு....
//
இதை ரிப்பீட் சொல்லலாம்னா எனக்கு வேலை குடுத்த புண்ணியவானை ஒரு நிமிசம் நினைச்சு 'சைலண்ட்'ஆயிட்டேன்.

//
யோவ் போடற கதையெல்லாம் சொந்த கதைனு சொன்னா எனக்கு எத்தனை கதை இருக்கறது??? ;)))
//
ஒரு ஆளுக்கு ஒரு கதைதான் இருக்கனும்னு எந்த ஊரு சட்டம். கதை கதைக்குள் கதை, கிளை கதை அப்பிடி இப்பிடின்னு 1001 இரவுகள் மாதிரி நீண்டுகிட்டேவும் போலாம்

'இது உங்க நிஜ கதை இல்லை நாங்க எல்லாரும் நம்பிட்டோம்'

//

என்ன என் கமெண்ட் அனானியா வந்திருக்கு நல்லதில்லயே!!

ஜொள்ளுப்பாண்டி said...

இம்சைஸ்:))) என்ன இது ஆரம்பமே டாப் கியர்லா எகிறுதே.. ரொம்ப ரொம்ப ரசிச்சென்ன்... தொடருங்கள் :))))