கேர்ள் ஃப்ரெண்ட்னா என்னங்க? நான் ஸ்கூல் படிக்கறப்பவும் சரி... காலேஜ் படிக்கறப்பவும் சரி. பெண் நண்பர்களை அப்படிதான் சொல்லுவோம். வேலைக்கு வந்ததுக்கப்புறம் ட்ரெயினிங்கப்போ என் க்யூபிக்கிள் மேட்கிட்ட பேசிட்டு இருந்தப்போ ரொம்ப யதேச்சையா "how many gal friends do u hav?" னு சிரிச்சிட்டே கேட்டேன். அவன் அப்படியே ஆடிப் போயிட்டான். என்னைய பாத்து ஒரு மொறை மொறைச்சுட்டு "i hav only one gal friend"னு சொன்னான். சரி பையன் பொண்ணுங்ககிட்ட அவ்வளவா பேச மாட்டான் போலனு நினைச்சுக்கிட்டு அதுக்கு மேல எதும் கேக்காம விட்டுட்டேன்.
அன்னைக்கு நைட் ரூம்ல பேசிட்டு இருந்தப்போ இந்த கதைய எடுத்து விட்டுட்டு ஏன் அவன் என்னை அப்படி மொறைச்சானு தெரியலைனு பாவமா சொன்னேன். அப்போதான் என் ஃப்ரெண்ட் சொன்னா. டேய்! இங்க எல்லாம் கேர்ள் ஃப்ரெண்டுனா லவ்வர்னு அர்த்தம்-னு சொன்னா. அப்போ பசங்க எப்படி அவங்க பெண் நண்பர்களை சொல்லுவாங்கனு நானும் அப்பாவியா கேட்டேன். அடி லூஸு! ஃப்ரெண்ட்னா ஃப்ரெண்ட். அவ்ளோதான். அது பொண்ணா பையனானு எல்லாம் விளக்கி சொல்லிட்டு இருக்க மாட்டாங்க. ஒருவேளை கேர்ள் ஃப்ரெண்ட் இல்ல பாய் ஃப்ரெண்ட்னு சொன்னாங்கன்னா அது அவங்க ஆளுனு அர்த்தம். யார்ட்டயவாது போயி எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்னு கேட்டு வாங்கி கட்டிக்காத-னு சொன்னா. என்ன உலகமடா இதுனு என்னை நானே சமாதானப்படுத்திக்க்கிட்டு அதுக்கப்புறம் அப்படி கேக்கறதையோ சொல்றதையோ விட்டுட்டேன்.
எதுக்கு இவ்ளோ கதை சொல்றேனு பாக்கறீங்களா? ஏன் லவ்வரை இப்படி சொல்றாங்கனு இப்போதான் கண்டுபிடிச்சேன்(ஹி... ஹி... கொலம்பஸ் ஆயிட்டோமாக்கும்). அந்த ரகசியத்த சேர் பண்ணிக்கதான் இந்த பதிவு. அதாவது ஒரு ஃப்ரெண்ட் பிடிக்கலைனா ஐ மீன் ஒத்து வரலைனா ஃப்ரெண்ட மாத்திடுவோம். அது போல மக்கள் எல்லாம் ஈஸியா மாத்திக்கறாங்க. சோ மீனிங் ஒண்ணுதானனு அப்படியே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எப்படி நம்ம கண்டுபிடிப்பு.
இந்த பதிவ எழுத தூண்டியது எங்க BB-ல போன வாரம் வந்த ஒரு மெயில். அந்த மெயில் உங்களுக்காக இதோ...
Hi Folks ,
I have a bag which I need to sell. It's the backpack kinds(college bag) which we can get to office daily . The quality is really good .Its an original Beheim product (trust me with its quality cos I buy only good stuff).
I bought the bag for Rs 650/- few days back . It is still unused , and the tag is also not yet removed . Interested people please call me back or mail me.
Cost Price :- Rs 650
Selling Price :- Around 250 rs
Reason for sale :- I bought it as a gift for Girlfriend's brothers Birthday , The GF has become an X-GF now. why the hell should I waste money on her brother now ???
இதுக்கு வேற நம்ம மக்கள் பதில் அனுப்பறாங்க. அதை நீயே வச்சுக்கோ. புது கேர்ள் ஃப்ரெண்டோட brother birthdayக்கு குடுக்க உதவும்னு.
இதை எங்க போயி சொல்ல?? உலகம் எங்கயோ போயிட்டு இருக்கு சாமி :))))
Thursday, December 20, 2007
கேர்ள் ஃப்ரெண்ட் எக்ஸ்-கேர்ள் ஃப்ரெண்ட் ஆனால்...
Posted by இம்சை அரசி at 5:07 PM
Labels: அனுபவம், சும்மா... லுலுலா...
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
//
இதுக்கு வேற நம்ம மக்கள் பதில் அனுப்பறாங்க. அதை நீயே வச்சுக்கோ. புது கேர்ள் ஃப்ரெண்டோட brother birthdayக்கு குடுக்க உதவும்னு.
//
கரெக்ட் தானே!!
What people dont understand is that there can be surprisingly longer periods in love when you dont feel the same gushing romantic feeling that you experience during the beginning of the relationship.
Lasting love is sheer commitment.
"Beautiful mind" படம் பாத்திருக்க்கீங்களா??
// Blogger மங்களூர் சிவா said...
//
இதுக்கு வேற நம்ம மக்கள் பதில் அனுப்பறாங்க. அதை நீயே வச்சுக்கோ. புது கேர்ள் ஃப்ரெண்டோட brother birthdayக்கு குடுக்க உதவும்னு.
//
கரெக்ட் தானே!!
//
தம்பி மங்களூர்ல இந்த வேலையதான் பாத்துட்டு இருக்கீயளோ??? :P
// Blogger CVR said...
What people dont understand is that there can be surprisingly longer periods in love when you dont feel the same gushing romantic feeling that you experience during the beginning of the relationship.
Lasting love is sheer commitment.
"Beautiful mind" படம் பாத்திருக்க்கீங்களா??
//
அடடா! காதல் ஆராய்ச்சியாளரே :)))
பாக்கலை. தேடி பாக்கறேன் :)))
என்னதான் இருந்தாலும் 70% கு மேல discount குடுக்கும் போது, பேசாம வாங்கிட்டுப்போவீங்களா..? அத விட்டுட்டு..
( Stock இன்னும் இருக்கா..?;-) )
ஆமா.. 2 bag கிடைக்குங்களா..? கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்..
:-))
//"கேர்ள் ஃப்ரெண்ட் எக்ஸ்-கேர்ள் ஃப்ரெண்ட் ஆனால்..."//
சனியன் விட்டதுனு போக வேண்டியது தான்...
//உலகம் எங்கயோ போயிட்டு இருக்கு சாமி :))))//
எங்கு போகுதுனு சொல்லுங்க.. நானும் அங்க போகனும்...
அந்த மெயில் உண்மையிலேயே BBல வந்ததா இல்ல இப்படி ஒரு பதிவு போட நீங்களே கிரியேட் பண்ணுனதா?
கேர்ள் பிரண்டு எக்ஸ் கேர்ள் பிரண்டு ஆனா, புது கேர்ள் பிரண்டு வரப் போறான்னு அர்த்தம்...இதுக் கூட தெரியலையே அவனுக்கு....
//அதாவது ஒரு ஃப்ரெண்ட் பிடிக்கலைனா ஐ மீன் ஒத்து வரலைனா ஃப்ரெண்ட மாத்திடுவோம். அது போல மக்கள் எல்லாம் ஈஸியா மாத்திக்கறாங்க. சோ மீனிங் ஒண்ணுதானனு அப்படியே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எப்படி நம்ம கண்டுபிடிப்பு.
///
aaandava :(. ithukuthaan naan GF nu ellam solrathu illa
:))
இம்சை,
1. தமிழ் வார்த்தை "காதல்" என்பது ஆண்-பெண் (உள்ளம் +உடல்) இரண்டும் பிடிக்கும் பட்சத்தில் வரும் நெருக்கத்தை மட்டும் குறிக்கும் வார்த்தை. அப்படித்தான் இன்னும் உள்ளது.
2. தமிழ் வார்த்தை நண்பர்/ தோழர்/நட்பு/தோழி என்பது ஆண்-ஆண், ஆண்-பெண்,பெண்-பெண்...என்று எல்லாரிடமும் (உடல் கவர்ச்சி அடிப்படையில் இல்லாமல்) வரும் நெருக்கத்தை குறிக்கும்.
3.ஆனால் மேற்கு / western வழக்கில் "Love" என்பது வேறு பொருள் கொண்டது. தாய்,தந்தை , வாத்தியார், பக்கத்து வீட்டு ஆண்டி, பாப்பா,அம்மா,பையன்,அக்கா,தோழி,தோழர்... என்று யாரிடமும் சொல்லலாம். வாலண்டைஸ் டேயில் I love you Teacher என்று சொல்லலாம் .
4.அந்த Love என்ற வார்த்தையை ஆங்கிலமாக மட்டும் நினைத்துக் கொண்டு அதன் பின்னனி தெரியாமல், "காதல்" என்று தமிழ்ப்படுத்தி "நான் உங்களை காதலிக்கிறேன் டீச்சர்" என்று சொல்லமுடியாது. "வாழ்த்துகள் டீச்சர்-அன்புடன் ரமேஷ் 3-ஆம் வகுப்பு "ஆ" பிரிவு .. என்று மட்டுமே சொல்ல முடியும்.
4.என்னதான் நாம் மேற்கு வழக்கை காப்பி அடித்து சட்டை/துணி போட்டாலும் அவர்களின் நல்ல பண்பாடுகள் இங்கே பின்பற்றப்படுவது இல்லை.அதனால்தான் நான் அலுவலகத்தில் இருக்கும்போது உடன் வேலை செய்யும் மேலை நாட்டு (மேற்கு / western) பெண்கள் , சர்வ சாதரணமாக "thank you sweety " , "thanks for the help , love you " என்றோ சர்வசாதரணமாச் சொல்வார்கள்.
நான் அதையே நம்மூர்ப் பெண்களிடம் சொல்ல முடியாது.
5.நாம் love என்பதை காதல் என்ற குறுகிய வட்டத்தில் சிறை வைத்துவிட்டோம்.
**
ஆங்கிலத்தில் (மேற்கு வழக்கில்) friend என்பது friend தான் அதைத்தாண்டி ஒன்றும் இல்லை. ஆணுக்கு பெண் நட்பாக இருந்தாலும், அல்லது ஆணுக்கு- ஆண்/ பெண்-பெண் நட்பாக இருந்தாலும் friend தான்.
ஒரு friend ஐ அல்லது புதிதாகச் சந்திக்கும் யாரோ ஒருவரை எப்போது உடல் ரீதியாகவும் பிடித்து அதன் அடிப்படையிலும் பழக ஆரம்பிக்கிறோமோ அப்போது அவர் பாலியல் அடையாளத்துடன் friend ஆக அறியப்படவேண்டும். அதாவது அந்த நட்பில் sex (Boy/Girl) அடையாளப்படுத்தலும் அவசியம். Boy-Friend / Girl-Friend
***
மேற்கு வழக்கில் ..நாங்க 10 வருசமா காதலிக்கிறோம் (love) இப்ப கல்யாணம் செஞ்சிட்டோம் என்று சொல்ல மாட்டார்கள். We dataed for 10 years என்றுதான் சொல்வார்கள்.
அங்கே love எனபது அனைவருக்கும் பொதுவானது. (Date என்பதும் பொதுவானது என்றாலும் Girl-Friend உடன் date எனும்போது உடல் சார்ந்த ஈர்ப்பும் உள்ளது என்பது உண்மை.)
**
மேற்கு வழக்கில் ஒருவனுக்கு ஒரு Girl-Friend மட்டுமே இருக்க முடியும் . மற்ற பெண்கள் நட்பாக இருந்தாலும் ,அவன் அவர்களைப் பெண் என்ற உடல்-உருவ அடிப்படையில் பார்க்கவில்லையாதலால் அவள் Friend மட்டுமே. உடல் சார்ந்த அடையாளப்படுத்தல் தேவை இல்லை.
ஒன்றுக்கு மேல் Girl-Friend இருந்தால் அது cheating.
***
மதுமிதாவின் கட்டிப்புடி வைத்தியம் மற்றும் அதன் பின்னூட்டங்களையும் பார்த்து விடுங்கள்.
நட்புகளும் கட்டிப்புடி வைத்தியமும்*
http://madhumithaa.blogspot.com/2007/12/blog-post_6355.html
With Love
Balloon MaMa
<==என்னதான் இருந்தாலும் 70% கு மேல discount குடுக்கும் போது, பேசாம வாங்கிட்டுப்போவீங்களா..? அத விட்டுட்டு..
==>
ரிப்பீட்டேய்...
//அப்போ பசங்க எப்படி அவங்க பெண் நண்பர்களை சொல்லுவாங்கனு நானும் அப்பாவியா கேட்டேன்.//
நம்பிட்டோம்ல.. :P
// அடி லூஸு! //
உங்கள இப்டி சொன்னது யாருன்னு மட்டும் சொல்லுங்க.. கொஞ்சம் கவனிக்கனும் அவங்கள.. :P
Bag விற்பனைக்கு வந்ததுக்கா இப்டி ஒரு பதிவு. GF / X GF - ம்ம்ம்ம் இதெல்லாம் இங்கே அவ்ளா கிடையாது. அங்கே GF கிடையாது.
காதல் என்றாலே முடிவு எப்படியும் இருக்கும். பிரிவு என்றால் என்ன செய்வது ? பிரிய வேண்டியது தான். அனைத்துக் காதல்களும் வெற்றி பெற முடியுமா என்ன
என்னங்க, அந்தப் பையன் இவ்வளவு அப்பாவியா இருக்காரு? இதான், மொதல் 'காதலோ'? இப்பிடி நெறைய நடக்கும்னு சொல்லுங்க. இப்பல்லாம், தெனமும் துணி மாத்துறாங்களோ இல்லையோ..காதலன்/காதலிகள மாத்திக்கிட்டே இருக்காங்க. வாழ்க மேலை நாட்டு அடிமைத்தனம்!
பலூன் மாமாவின் விளக்கங்கள் ரொம்ப அருமை! காதல் என்ற வார்த்தை, இந்தியாவில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தை! நானும், அமெரிக்கா வந்த புதுசுல, மூனாவது கல்யாணம், அஞ்சாவது கல்யாணம் இதெல்லாம் கேள்விப் பட்டு, அதிர்ந்து போய்ட்டேன்...இப்பல்லாம் பழகிப் போச்சு! இங்கே எல்லாமே வெளி வேஷம்தான்.
//
இம்சை அரசி said...
தம்பி மங்களூர்ல இந்த வேலையதான் பாத்துட்டு இருக்கீயளோ??? :P
//
ச்சும்மா பார்ட் டைம்......
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//"how many gal friends do u hav?" //
இந்த கேள்விக்கு காரணம் என்னங்க....
many people have a very wrong notion about friendship and it is highly difficult to make them understand..i am new comer and do visit me and if you are interested give me an introduction to your friends ...thank you
Post a Comment