Thursday, December 6, 2007

விஜய் டிவியின் காதலிக்க நேரமில்லை பாடல்


போன வாரத்துல இருந்து "காதலிக்க நேரமில்லை"-னு ஒரு காதல் தொடர் 9 மணிக்கு விஜய் டிவில போட்டுட்டு இருக்காங்க. சீரியல் எப்படி இருக்குனு பாத்து தெரிஞ்சுக்கோங்க;) ஆனா அந்த தொடரோட டைட்டில் சாங் அட்டகாசமா இருக்கு. இசை, குரல், வரிகள்னு எல்லாமே அட்டகாசம். பாடினது யாருனு நானும் என் ஃப்ரெண்ட்ஸும் ரெண்டு நாளா உக்காந்து பாத்தோம். பேர் போடவே இல்லை :( என் தம்பி அவனுக்கு யாரோ சொன்னாங்கனு சொன்னான் இதை பாடினது super singerல செலக்ட்டான யாரோனு. யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. வரிகள் இதோ...

என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன் செய்தி அனுப்பு

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வரத் தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவைக் கொல்கிறேன்

(என்னைத் தேடி)

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
இலையை போல் என் இதயம் தவறி விழுதே

(என்னைத் தேடி)


நல்லா இருக்கு இல்ல??? :)))

18 comments:

NejamaNallavan said...

ரொம்ப நல்லா இருக்கு. இந்த பதிவிற்கு நன்றிகள் பல.

வினையூக்கி said...

அருமையான பாட்டு இம்சை அரசி...கடந்த சில வாரங்களாக நான் முணுமுனுக்கும் பாடல் இது தான்.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
அன்புடன்
"வினையூக்கி" செல்வா
www.vinaiooki.com

tamilatamila said...

this song was sung by thenmolzi das
the music for title song was composed by rising music director vijay antony....

ரசிகன் said...

ஏனுங்க இம்சை..
//நானும் என் ஃப்ரெண்ட்ஸும் ரெண்டு நாளா உக்காந்து பாத்தோம//
அந்த ஃபிரண்டு ,நம்ம ஜி3 ங்களா?

அவிங்க முன்னாடியே இந்த பாட்ட இதே போல எழுதி போட்டுப்புட்டாய்ங்களே.. ஹிஹி..

http://pravagam.blogspot.com/2007/11/blog-post_27.html

லக்ஷ்மி said...

very nice....

ambi said...

உடனே ஜி3 அக்கா வீட்டுக்கு போங்க. (முந்தைய பதிவு)

ஏற்கனவே இதை பத்தி துவைத்து தொங்க போட்டுடாங்க. :)

NejamaNallavan said...

அபர்ணா குரல் மாதிரி இருக்கு!!

raji said...

hai akka,
thanks antha paatu enakum romba pidichiruku but i was searching for lyrics.thank god neengalae post pannitinga.thanks.well epa enoda commentsku rply panna poreeinga?eagerly waiting for ur rply....

Sudha said...

hello imsai arasi..
vijaytv kadhalika neramillai song padina singer sangeetha..ivanga nan avan illai movie la yen enaku mayakkam song kuda paadi irukanga.
ungaloda pathivugal nalla iruku

Thank u

சீனு said...

//vijaytv kadhalika neramillai song padina singer sangeetha..//

Dailaamo Sangeetha?

Sudha said...

hi..
yes seenu sir..
dailamo sangeetha than.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
ரசிகன் said
அவிங்க முன்னாடியே இந்த பாட்ட இதே போல எழுதி போட்டுப்புட்டாய்ங்களே.. ==>
இது ரீமிக்சா இருக்குமோ?

Anonymous said...

அன்பு இம்சை அவர்களே..

அந்தப் பாடலை எழுதியவர் திரு.தேன்மொழிதாஸ் என்பவர்.

பாடலைப் பாடியவர் சங்கீதா என்பவர்.

இவர்களைப் பற்றிய மேல் விவரங்கள் தெரியவில்லை. விசாரித்து நாளை எழுதுகிறேன்..

Bee'morgan said...

இம்சை அரசி, This video is not available அப்டீன்னு வருது.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..

இம்சை அரசி said...

// Blogger Bee'morgan said...

இம்சை அரசி, This video is not available அப்டீன்னு வருது.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..
//

எனக்கு நல்லாதானே வருது... இன்னொரு தடவை பாருங்க :)))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

சூப்பர் பதில்.Problem Solving in Production Support வேலைக்கு நீங்க 200 சதவீதம் தகுதியானவர் -))) கிளையண்ட் தனக்கு பிரச்னைனு வரும்போது இப்படித்தான் சொல்வோம் =)))

விஜய் ஆண்டனி said...

அந்த பாடலை பாடியவர் "டைலமோ டைலமோ", "ஏன் எனக்கு மயக்கம்" பாடல்களை பாடிய சங்கீதா தான் இதையும் பாடியிருக்கிறார். இவர் விஜய் ஆண்டனியின் ஆஸ்தான பாடகி

M.D.DAVID said...

Thank'sssssssssss