Tuesday, December 4, 2007

ஏனம்மா வளர்ந்தேன்???


கந்தலாய் கசக்கிப் போடும்
அன்றாட வாழ்வின் துயரங்களிலும்
துயரங்களை நெஞ்சில் சுமந்து
தலை தடவிய காதலிலும்
காதல் அள்ளித் தந்த
உயிர் பிரியும் வலியிலும்
வலியில் மயிலிறகாய் வருடி
ஆறுதலாய் தோள் தந்த நட்பிலும்
நட்பு நிலையில்லாத உறவாய்
பிரிந்து சென்ற வேதனைகளிலும்
குழம்பித் தவிக்கிற மனதில்
மழலையாய் உன் மடியில்
மகிழ்ந்திருந்த என் நினைவுகள்
மத்தாப்பூவாய் விரிகிறது
மழலையாகவே இருந்திருக்கலாமோ?
ஏங்கித் தவிக்கிறேன்
ஏனம்மா வளர்ந்தேன்???

10 comments:

Baby Pavan said...

நல்லா இருக்கு அக்கா

Anonymous said...

ஆமா நாங்க ஆபீஸ்லயாவது நிம்மதியா இருந்திருப்போம்!!!

Anonymous said...

Nalla irukku Kavidhai

ரசிகன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்....

நீங்களும் ஆரம்பிச்சிங்களா?..
நல்லாத்தேன் இருக்கு...கவிதையும் படமும்..

கோபிநாத் said...

ம்ம்ம்..

CVR said...

இதை எழுதறதுக்கு தான்!! :-)

காட்டாறு said...

இதெல்லாம் துக்கமா இருக்கும் போது மட்டும் தானே... மத்த நேரங்களில்.. நல்ல வேளை வளர்ந்திட்டேன்னு நெனச்சிருக்கனுமே... இன்றைய குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை நெனச்சிப் பாருங்க.

கவிதை நல்லாயிருக்குதுங்க.

நாகை சிவா said...

இம்சை கூட்ட தான் :)

நிஜமா நல்லவன் said...

இந்த மாதிரி நல்ல கவிதைகள் எழுதத்தான் வளர்ந்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

Anonymous said...

Dear Imsai,
I invite you to visit my site @ http://www.nytryk.co.cc/