Saturday, December 15, 2007

தாயா? தாரமா?? - நஒக

"ஹே! பேசாம நாம தனிக் குடித்தனம் போயிட்டா என்ன?" பெட்டில் கிடந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த கவிதா நிமிர்ந்து கார்த்திக்கை முறைத்தாள்.

"கல்யாணமாயி ஒரு மாசம் கூட ஆகலை. மருமக வந்து ஒரே பையன பிரிச்சு கூட்டிட்டுப் போயிட்டானு எனக்கு பேரு வாங்கித் தரணுமா?"

"அது இல்ல டியர். அம்மா அப்பா இருக்கறதால என்னால ஃப்ரீயா என் ஆசை மனைவிய நினைச்சப்போ எல்லாம் கொஞ்ச முடியறது இல்ல" என்று அவள் இடுப்பை வளைத்துப் பிடித்து காதில் சொன்னான். அவனது கைகளை அவள் தட்டி விட

"இல்ல எல்லா எடத்துலயும் அம்மா உரிமை எடுத்துக்கும்போது உன் முகம் சுருங்குதே. நீ ஃபீல் பண்ணினா என்னால தாங்க முடியுமா சொல்லு. அதான் கேட்டேன்"

"இங்க பாருங்க. அவங்க பாசமா வளத்த பையனுக்கு திடீர்னு எதும் செய்யக் கூடாதுனு சொன்னா அவங்களுக்கு எப்படி இருக்கும். இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆயிடுவாங்க. சரியா"

"நீ ஃபீல் பண்ணலைனா ஓகே" என்று தோளை குலுக்கி விட்டு எழுந்து டைனிங் ஹாலுக்கு சென்றான்.

"கவிம்மா வந்து கார்த்திக்குக்கு டிஃபன் வை" என்ற மாமியாரின் குரலில் ஆச்சர்யமாகிப் போனவள் 'எப்போமே அவங்கதானே வைப்பாங்க' என்று எண்ணியபடியே வந்து அவனுக்கு சாப்பாடு வைத்தாள்.

கோவிலுக்கு கிளம்ப காரை கார்த்திக் வெளியில் எடுத்து வந்ததும் முன்னால் உட்காரப் போன மாமனாரைத் தடுத்து கவிதாவை முன்னால் உட்கார சொன்ன மாமியாரை இன்னும் ஒரு மடங்கு ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

கோவில் பிரகாரத்தை சுற்றி வருகையில் கவிதா அன்றைய ஆச்சரியங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு விஷமப் புன்னகையுடன் அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவன் மனம் அமைதியாய் சொன்னது

'ஹ்ம்ம்ம்... நீ இப்பதான் வந்திருக்கறதால அம்மா மேல பாசமாதான் பேசுவ... பின்னாடி உங்க ரெண்டு பேர் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்காம இருக்கறதுக்கு இதை விட வேற வழி தெரியல. அதான் இப்படி ட்ராமா பண்ணினேன். நம்ம ரூமுக்கு எதுக்கோ வந்த அம்மாவ கண்ணாடில பாத்துட்டுதான் தனிக் குடித்தனம் பத்தின பேச்சை ஆரம்பிச்சேனு உனக்கு எங்க தெரியப் போகுது'

***************************************

இது சர்வேசன் சாரோட நச்சுனு ஒரு கதை போட்டிக்காக முயற்சி செஞ்ச கதை. நச்சுனு இருக்கானு சொல்லுங்க... :)))

13 comments:

OSAI Chella said...

kalakkittada kannu!

minnal said...

hi, super

Gopal said...

Sorry, Kathai nalla illa. Very old style. Please try better then this.

நாகை சிவா said...

முடிவே நடுவிலே யூகிக்கும் படி உள்ளது.

அடுத்த கதை ரெடி ஆகுது போல இருக்கே.. அதுல பாப்போம்.

NejamaNallavan said...

ரொம்ப பழைய ஸ்டைல் கதை தான். உங்க உசந்த(!!)ரசனைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தமே இல்ல. உங்க பேருக்கு பொருத்தமான கதை "இம்சை". அரசி அவர்களே.ஒருவேளை எங்களை இம்சை பண்ண இந்த கதைய இங்க பதிவா போட்டுட்டு வேற நல்ல கதைய போட்டிக்கு அனுப்பி வச்சுடீங்களா?

மங்களூர் சிவா said...

அட்டெண்டன்ஸ் போட்டுக்க்கிறேன்!!

'நச்'னு அடுத்த கதைக்கு வெயிட்டிங்!!

ரசிகன் said...

இன்று முதல் "இம்சை பேரரசி" என்று அழைக்கப் படுவீர்களாக..:P

சென்ஷி said...

:))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

பேருக்குத்தகுந்தமாதிரி நல்லா இம்சை பண்றீங்க!

ராஜா முஹம்மது said...

எதிர்பார்த்த முடிவு. நல்லா இருந்தது.

I Am Me said...

Very very nach :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

நச்சுன்னு இருக்கு.. ;-)

Nithya A.C.Palayam said...

எதிர்பார்த்த முடிவுதாங்க. நல்லா இருந்ததுங்க.