Tuesday, July 22, 2008

உன்னோடுதான் என் ஜீவன் - II

இரவு உணவு முடிந்து தனது அறைக்கு படியேறி வந்த கிரிஜாவின் மொபைல் சிணுங்கியது. வீட்டு எண்ணைக் கண்டதும் உற்சாகமானவள் அப்படியே பால்கனிக்கு சென்றுப் பேச ஆரம்பித்தாள்.

"சொல்லும்மா"

"என்னடா பண்ணிட்டு இருக்க?"

"இப்போதான் சாப்பிட்டு ரூமுக்குப் போயிட்டு இருந்தேன். சரி காலைலதான பேசினேன். அதுக்குள்ள என்ன மறுபடியும்? என்ன விஷயம்?"

"ஏன் காலைல பேசினா இப்போ உன்கிட்டப் பேசக் கூடாதா?"

"அப்படி இல்லம்மா... எப்போமே இப்படி பண்ணினதில்லையே. அதான் கேட்டேன். ஏதும் முக்கியமான விஷயமோனு.." என்று இழுத்தாள்.

"முக்கியமான விஷயம் தான். எங்களுக்கு இப்போ இருக்கற ஒரே கவலை உன்னைப் பத்திதான். அதை விட வேற என்ன முக்கியமான விஷயம் இருக்கப் போகுது?"

"ஆரம்பிச்சிட்டியாம்மா. எனக்குனு ஆண்டவன் ஒருத்தனை என் தலைல எழுதி வச்சிருப்பான். எப்பன்னும் எழுதி வச்சிருப்பான். அந்த டைம் வந்தா ஆட்டொமேட்டிக்கா எல்லாம் நடக்கும்"

"சரி சரி. இப்போ ஏன் கோபப்படுற? என் கஷ்டத்தை உன்கிட்ட சொல்லாம நான் யார்கிட்ட சொல்லுவேன்" -தாயின் குரலில் தொய்வைக் காணவும் மனம் குழைந்தவள்

"சரி சொல்லுங்கம்மா என்ன விஷயம்?" என்று கேட்டாள்.

"நானும் அப்பாவும் ஒரு பையனை டிசைட் பண்ணி வச்சிருக்கோம்"

எப்பொழுதும் ஒரு பையன் ஜாதகம் பொருந்தி வருகிறது. குடும்பம் நன்றாயிருக்கிறது என்றே சொல்லும் அம்மா இன்று முடிவு செய்து வைத்திருக்கிறோம் என்று சொன்னதிலேயே அவரின் மனநிலையை அவளால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

"ம்ம்ம்"

"அப்பாவோட ஸ்கூல்ல இருந்து ஒண்ணா படிச்சவர் மனோகர்னு அடிக்கடி சொல்லுவாரில்ல. அவரோட பையன் கார்த்திக்தான். பையனும் பெங்களூர்லதான் இருக்காப்படியாம். டி.சி.எஸ்ல வேலை. காலேஜ் எல்லாம் நீ பாப்பனு தெரிஞ்சுதான் எல்லாமே விசாரிச்சு வச்சுட்டேன். கோயம்பத்தூர் பி.எஸ்.ஜி காலேஜ்-ல மெரிட் சீட்ல பி.இ படிச்சிட்டு முடிச்ச உடனே கேம்பஸ்-ல வேலைக்கு போயாச்சாம். ஒரே ஒரு தம்பி. சென்னைல விப்ரோ-ல வேலைல இருக்காப்படியாம். ஜாதகம் பாத்தாச்சு. சூப்பரா பொருந்தி வந்துடுச்சு. அவங்களுக்கு டபுள் ஓகே. சிவநேசன் பொண்ணுன்னா கண்ணை மூடிக்கிட்டு ஓகே சொல்லிடுவேனே-னு மனோ அங்கிள் சொல்லிட்டார். எங்களுக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. இனி நீ பேசிட்டு ஓகே சொல்றது மட்டும் தான் பாக்கி"

அப்போ பேசிட்டு நான் ஓகேதான் சொல்லணும்னு அம்மா எதிர்பாக்கறாங்க என்று யோசித்தவளை

"என்னடா சத்தமே காணோம்?" என்ற குரல் கலைத்தது.

"இல்லம்மா. நான் பேசணும். பேசிப் பாத்துட்டுதான் எதுவா இருந்தாலும் சொல்லுவேன். நான் ஓகேதான் சொல்வேன்னு ரொம்ப ஹோப் வச்சுக்காதீங்க"

"ரொம்ப நல்ல பையன். பையனைப் பத்தியும் நல்லா விசாரிச்சிட்டோம். சோ உனக்கு கண்டிப்பா பிடிக்கும்னு எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் உன் முடிவுல நான் தலையிடலை. கார்த்திக்கு இந்நேரம் உன் நம்பர் குடுத்திருப்பாங்க. கால் பண்ணுவார். பேசு. கார்த்திக் நம்பரையும் நான் மெசேஜ் பண்ணிடறேன் சரியா?"

"ஹ்ம்ம்ம்.... சரிம்மா" - சுரத்தில்லாமல் தொடர்பைத் துண்டித்து விட்டு அங்கேயே நின்றிருந்தாள்.

'நான் சொன்ன எல்லா கண்டிஷன்ஸ்ம் சேட்டிஸ்ஃபை பண்றானே. எப்படி வேணாம்னு சொல்றது. பேசிப் பாப்போம். அட்லீஸ்ட் ஒரு காரணமாவது கிடைக்காமலா போயிடும். ஆனா அம்மாதான் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க. சோ அவனையே வேணாம்னு சொல்ல வச்சிடணும்' என்று எண்ணியவள் மனது திடீரென்று குண்டைத் தூக்கிப் போட்டது 'எவ்வளவு நாள்தான் இப்படியே ஏமாத்தறது? இப்படியே லேட் பண்ணிட்டேப் போனா கடைசில எவனாச்சும் சிக்கினா போதும்னு அவன் தலைலக் கட்டிட்டாங்கன்னா??' யோசித்துக் கொண்டிருக்கும்போதே மொபைல் மறுபடியும் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தவள் புதிய நம்பரைக் கண்டதும் ஒருவேளை அந்த கார்த்திக்காய் இருக்குமோ என்றெண்ணியபடி எடுத்து "ஹலோ" என்றாள்.

"ஹலோ மேடம்! வி ஆர் காலிங் ஃப்ரம் ஐசிஐசிஐ பேங்க். திஸ் இஸ் ரிகார்டிங் லைஃப்டைம் ஃப்ரீ க்ரெடிட் கார்ட்..." என்று அவன் பேசிக் கொண்டே செல்ல எரிச்சலுற்றவள்

"ஐம் நாட் இன்ட்ரெஸ்டெட். குட் யு ப்ளீஸ் ரிமூவ் மை நேம் ஃப்ரம் யுவர் டேட்டாபேஸ்" என்று முடிப்பதற்குள் எதிர்முனையில் இருந்தவன் கடகடவென சிரித்தான்.

"என்ன மேடம்? உங்களுக்கு யார் இந்த நேரத்துக்கு ஐசிஐசிஐ-ல இருந்து கால் பண்றாங்க?" என்று அவன் கேட்கவும்தான் அவளுக்கு யாரோ தன்னிடம் விளையாடுகிறார்கள் என்ற உண்மை உரைத்தது. உடன் பொங்கிய கோபத்தை வெளிக்காட்டாமல்

"ஹலோ! யார் பேசறீங்க?" என்றாள் வேகமாக.

"நான் கார்த்திக் பேசறேங்க. சாரி. சும்மா விளையாட்டுக்குதான் பேசினேன். தப்பா எடுத்துக்காதீங்க"- அவனது சாரியில் சற்றே கோபம் தணிந்தவள் இவனை எப்படி வேண்டாமென்று சொல்ல வைப்பது என்ற யோசனையில் அமைதியாகவே இருந்தாள்.

"அதான் சாரி சொல்லிட்டேன் இல்ல. இன்னும் ஏன் பேச மாட்டென்றீங்க?"

"இல்ல இல்ல... சொல்லுங்க"

"இன்ஃபோசிஸ்லதானே இருக்கீங்க?"

"ம்ம்ம்"

"எலக்ட்ரானிக் சிட்டி ஆபிஸா?"

"ஹ்ம்ம்ம்"

"நானும் எலக்ட்ரானிக் சிட்டி ஆபிஸ்லதான் இருக்கேன்"

மீட் பண்ணலாம் என்று கேட்பானோ? - கிரி

மீட் பண்ணனும்னு கேப்பேனு எதிர்பார்ப்பாளோ? - கார்த்திக்

"திருச்செங்கோடு வந்திருக்கீங்களா?"

"அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வருவேன். அப்போ வரதுதான்"

"ஓ! ஓகே! அப்புறம் வேறென்னங்க?"

"அப்புறம் நீங்கதான் சொல்லணும்"

"நான் சொல்றதுக்கும் ஒண்ணுமில்லைங்க"

நான் எதாவது பேசணும்னு எதிர்பாக்கறானோ. இவன்ட்ட போய் என்ன பேசறது? - கிரி

ஏன் எதுமே பேச மாட்டேன்றா. ஷை-யா ஃபீல் பண்றாளோ - கார்த்திக்

"அப்புறம்?" என்றாள் சில நொடிகள் கழித்து.

"அப்புறம் நீங்கதான் சொல்லணும்"

"நான் என்னங்க சொல்லட்டும்? சொல்றதுக்கு ஒண்ணுமில்ல"

"எனக்கும் சொல்றதுக்கும் ஒண்ணுமில்ல"

இப்ப ஏன் இவன் பேச மாட்டேன்றான். ஷை-யா ஃபீல் பண்றானோ? என்னாலயும் எதும் பேச முடியலையே. இதுக்கு முன்னாடி இப்படி யார்ட்டயும் பெசினதில்ல. ஒரு மாதிரி டிஃபரண்ட் ஃபீலா இருக்கே. ஒருவேளை நாமளும் ஷை-யா ஃபீல் பண்றோமா?!!! !~#$%^&*& - கிரி

என்னது இது வாய் மூடாம பேசிட்டே இருப்பேன். பேசறதுக்கு ஒண்ணும் தோண மாட்டேங்குதே. அதை விட வார்த்தை வர மாட்டேங்குதேனே சொல்லலாம். என்ன பண்றது இப்போ?? - கார்த்திக்

"அப்புறம்"- மீண்டும் கிரி ஆரம்பிக்க அட மறுபடியும் அப்புறம் புராணமா என்று உள்ளுக்குள் சலித்தவன் ஒரு முடிவாய்

"இங்க பாருங்க கிரி. இப்படி பேசினா அப்புறம் அப்புறம் தவிர வேற எதையும் பேச மாட்டோம்னு நினைக்கறே. சோ லெட் அஸ் ஃபர்கெட் திஸ் ப்ரோபோஸல் அண்ட் லெட் அஸ் டாக் அஸ் ஃப்ரெண்ட்ஸ்" என்று படபடவென சொல்லி முடித்தான். அவன் சொன்னதும் அவளுக்கு சரியென்றுப் பட்டது.

"சரி. சொல்லுங்க" என்றாள்.

"நான் ரொம்ப ஜாலி டைப்புங்க. அதது அந்தந்த நேரத்துல தான் செய்யணும்ன்றது என் கொள்கை. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தி. நான் இருக்கற இடம் கலகலனு இருக்கணும்னு விரும்புவேன். அதே டைம் அடுத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ இப்படிதான் இருக்கணும்னு யாரையும் கம்பெல் பண்ணவும் மாட்டேன். என்னைப் பொறுத்த வரைக்கும் என் எதிர்காலம் எந்த பிரச்சினையும் இல்லாம ஸ்மூத்தா போகணும். தட்ஸ் ஆல்"

"ஹ்ம்ம்ம்... நான் ஜாலி டைப் எல்லாம் இல்ல. ஆனா என் ஃப்ரெண்ட்ஸோட பேரண்ட்ஸோட மட்டும் ஜாலியா இருக்கணும்னு நினைப்பேன். எனக்கு என் கெரியர் தான் ரொம்ப முக்கியம். லைஃப்ல நிறைய அச்சீவ் பண்ணனும். சும்மா பொறந்தோம் வளந்தோம் செத்துப் போனோம்னு ஒரு சராசரியா இல்லாம செய்யற வேலைல நம்ம பேரை பதிய விடணும்ன்றது என் கொள்கை. இதை தவிர எனக்கும் பெருசா எந்த கொள்கையும் இல்ல. என்னைப் பத்தி அவ்ளோதான்"

"ஹ்ம்ம்ம்... எனக்கு வரவங்ககிட்டயும் ரொம்ப எதிர்பார்ப்புகள் இல்ல. என் மேல ரொம்ப பாசமா இருந்தா போதும். என் ஃபேமிலியோட நல்லா மிங்கிள் ஆகணும். அவ்ளோதான்"

"எனக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கு. என் ஃப்ரீடம்ல தலையிடக் கூடாது. என் வேலை விஷயத்துலயும் தலையிடக் கூடாது. என் ஃபேமிலியோட நல்லா மிங்கிள் ஆகணும்"

"உங்களோட நல்ல ஃப்ரெண்டா இருக்கணும் ரைட்?"

"யெஸ்"

"ஹ்ம்ம்ம்... ஒருவேளை நமக்கு ஃபிக்ஸ் ஆச்சுனா நான் உங்களுக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா இருப்பேன். ஓகேவா?"

எதிர்பாராத அவனது இந்த பதிலில் சற்றே விழித்தவள் என்ன சொல்வதென்று அறியாது

"ஹ்ம்ம்ம்ம்" என்றாள்.

"நீங்க எப்போ அடுத்து ஊருக்குப் போறீங்க?"

"நெக்ஸ்ட் வீக் எண்ட்"

"அப்போ அர்த்தநாரீஸ்வரர் கோவில் வருவீங்களா?"

"ஆமாம். ஏன்?"

"இல்லைங்க. நான் ஃபர்ஸ்ட் பாக்கப் போற பொண்ணு நீங்கதான். ஒரு வேளை நீங்களே கூட எனக்கு முடிவாகலாம். என்னவோ தெரியலை. எனக்கு ரொம்ப பிடிச்ச கோவில் உங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. சோ நான் உங்களை மொதல்ல அங்க வச்சுதான் மீட் பண்ணனும்னு இருக்கேன். அதான் எப்போ வரீங்கனு கேட்டேன்"

பரவாயில்லையே. இந்த நேரத்துக்கு வா-ன்னு சொல்லாம நான் போற நேரத்துக்கு வரேனு சொல்றானே! - கிரி

ஏன் இவ்ளோ யோசிக்கறா? ஓகே சொல்லுவாளா? - கார்த்திக்

சில நொடிகள் கழித்து "சரி" என்றாள்.

"சரிங்க. நேரமாச்சு. போய் தூங்குங்க. நாளைக்கு கால் பண்றேன்" என்றவனிடம் வேண்டாமென்று வாய் வரை வந்தாலும் சரியென்றே சொன்னாள்.

'அடுத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ இப்படிதான் இருக்கணும்னு யாரையும் கம்பெல் பண்ணவும் மாட்டேன்' என்ற கார்த்திக்கின் வார்த்தைகளே காதில் ஒலித்துக் கொண்டிருக்க அட என்ன இது தூங்காமல் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தன்னையே கடிந்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

'லைஃப்ல நிறைய அச்சீவ் பண்ணனும். சும்மா பொறந்தோம் வளந்தோம் செத்துப் போனோம்னு ஒரு சராசரியா இல்லாம செய்யற வேலைல நம்ம பேரை பதிய விடணும்ன்றது என் கொள்கை' என்ற கிரியின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டிருந்தவன் ரொம்ப பொறுப்பான பொண்ணு போல. வீட்டுல ஒருத்தராவது பொறுப்பா இருக்கணுமில்ல. பாப்போம். என்ன ஆகுதுனு என்றெண்ணியபடியே தூங்க ஆரம்பித்தான்.

தொடரும்...

34 comments:

Anonymous said...

Somehow I feel the first part was much better. Lets see how it proceeds.

All the best

Ramya Ramani said...

ஹிம்ம்ம் நல்லா போகுது கதை..:))

MSK / Saravana said...

முழு பதிவா மொத்தமா போட்டிரலாமே...
பகுதி பகுதியா படிக்கறதுக்கு ரொம்ப
கஷ்டமா இருக்கு..

கதை Interesting-a move ஆகுது..

அதிலையும் மனசாட்சி நிற வேறுபாடு கலக்கல்..

மீண்டும் சந்திப்போம்..

Anonymous said...

எனக்கு ஐயோன்னு இருக்கு..கிரி சரின்னு சொல்லிடுவாளோ? சொல்லக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன் ;)

Divya said...

வழக்கம்போல் அசத்தலான டயலாக்ஸ், ரொம்ப நல்லாயிருக்கு இம்சை இந்த பாகம்:))

anbudan vaalu said...

i was waiting for this story to be updated............this story is proceeding in a very practical and realistic way.............lets see what it brings in the next update.........

imsaiarasi......why all your characters are related to computer field???for a change try the healing industry na..........

Alb said...

அப்டி போகுதோ கத.. ;)
நல்லதுக்கா ...!!

மோகன் said...

என்னங்க சடார்னு ரெண்டு பேரையும் பேச வச்சுடீங்க..முதல் அத்தியாயத்தில் நீங்க கொடுத்த பில்டுஅப்'ப பார்த்துட்டு,ரெண்டு பேரோட அறிமுகமே, எலக்ட்ரானிக்ஸ் சிட்டிகுள்ள ஏதாவதொரு பொதுஇடத்தில் ஒரு மோதலோடு ஆரம்பிக்கும்,அப்போ விப்ரோலருந்து வில்லனா என்னை களத்துல எற்க்குவீங்கனு நெனச்சேன்....;(((

மொக்கைச்சாமி said...

First part vida second part nalla pogudhu..,. keep it coming...

Vijay said...

\\ஒரே ஒரு தம்பி. சென்னைல விப்ரோ-ல வேலைல இருக்காப்படியாம். ஜாதகம் பாத்தாச்சு. \\

இருக்காப்படியாம் -- இது கொங்குநாட்டுத் தமிழா?நல்லா இருக்கு!

\\"நானும் எலக்ட்ரானிக் சிட்டி ஆபிஸ்லதான் இருக்கேன்"\\
TCS இ-சிடியிலும் ஆஃபீஸ் தொடங்கிட்டாங்களா? :)

\\"இங்க பாருங்க கிரி...\\
பாக்கறதுக்கு முன்னாடியே பெயரை சுருக்கியாச்சா? பலே!

\\"ஹ்ம்ம்ம்... ஒருவேளை நமக்கு ஃபிக்ஸ் ஆச்சுனா நான் உங்களுக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா இருப்பேன். ஓகேவா?"\\
தம்பி கார்த்திக் இப்பவே நீ இப்படியெல்லாம் ஸ்டேட்மென்ட் கொடுத்திட்டியா. நீ காலி :)
கல்யாணத்துக்கப்புறம் இதையே சொல்லிச் சொல்லிக் காட்டப்போறா கிரிஜா. உஷார்.

ஃபுல் ஃபார்ம்'ல கதை போகுது. ரெண்டு பேரையும் சீக்கிரம் மீட் பண்ண வையுங்க

ஜி said...

:))) Nee nadathu ammani...

Naveen Kumar said...

Story moves in a fantastic way with your touch..:))

தமிழினி..... said...

//"நான் ரொம்ப ஜாலி டைப்புங்க. அதது அந்தந்த நேரத்துல தான் செய்யணும்ன்றது என் கொள்கை. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தி. நான் இருக்கற இடம் கலகலனு இருக்கணும்னு விரும்புவேன். அதே டைம் அடுத்தவங்களையும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். நீ இப்படிதான் இருக்கணும்னு யாரையும் கம்பெல் பண்ணவும் மாட்டேன். என்னைப் பொறுத்த வரைக்கும் என் எதிர்காலம் எந்த பிரச்சினையும் இல்லாம ஸ்மூத்தா போகணும். தட்ஸ் ஆல்"

"ஹ்ம்ம்ம்... நான் ஜாலி டைப் எல்லாம் இல்ல. ஆனா என் ஃப்ரெண்ட்ஸோட பேரண்ட்ஸோட மட்டும் ஜாலியா இருக்கணும்னு நினைப்பேன். எனக்கு என் கெரியர் தான் ரொம்ப முக்கியம். லைஃப்ல நிறைய அச்சீவ் பண்ணனும். சும்மா பொறந்தோம் வளந்தோம் செத்துப் போனோம்னு ஒரு சராசரியா இல்லாம செய்யற வேலைல நம்ம பேரை பதிய விடணும்ன்றது என் கொள்கை. இதை தவிர எனக்கும் பெருசா எந்த கொள்கையும் இல்ல. என்னைப் பத்தி அவ்ளோதான்"
//

அருமையான இன்ட்ரோ.....கலக்குங்க...அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...

Divyapriya said...

கதை சுப்பரா போகுது...
//வீட்டுல ஒருத்தராவது பொறுப்பா இருக்கணுமில்ல//

ஆமா உங்க வீட்ல யாருங்க பொருப்பு ;-)

ரசிகன் said...

இது நம்ம இம்சை அரசியோட பயோகிராப்பிக் கதை போலவே தோனுது:P

கதை நடை சூப்பர்:)

Divyapriya said...

//டி.சி.எஸ்ல வேலை. காலேஜ் எல்லாம் நீ பாப்பனு தெரிஞ்சுதான் எல்லாமே விசாரிச்சு வச்சுட்டேன். கோயம்பத்தூர் பி.எஸ்.ஜி காலேஜ்-ல மெரிட் சீட்ல பி.இ படிச்சிட்டு முடிச்ச உடனே கேம்பஸ்-ல வேலைக்கு போயாச்சாம்.//

நம்ம கார்த்திக் எந்த batch ன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் :-)
அடுத்த பார்ட் எப்போ, எப்போ?

Sen22 said...

நல்லா போகுது கதை...

Waiting for next part...

Ramya Ramani said...

அடுத்த பார்ட் எங்கே???

Anonymous said...

Imsai Akka ,

Adutha pakuthi Eppo ....????

தமிழினி..... said...

என் பதிவுக்கு வந்து பாருங்க..உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கு...:)))

Guna said...

Romba Nalla irukku..Adutha part eppa ?

Anonymous said...

why don't you post third part for the long time... can you post it?

MSK / Saravana said...

அடுத்த பகுதி எழுதற ஐடியாவே இல்லையா??

எவ்ளோ நாளா வெயிட் பண்றது??

சீக்கிரம் எழுதுங்க இம்சைஅரசி ..

Hariks said...

ரொம்ப‌ சூப்ப‌ரா இருக்கு. அடுத்த‌ப் ப‌குதிக்காக‌ வெயிட்டிங். :)

FunScribbler said...

இப்பலாம் கதை எழுதுவதில் பின்னி பெடல் எடுக்குறீங்க... புதுசு புதுசா திரைக்கதை வடிவம் வேற... நல்லா இருக்கு. ரசித்து படித்தேன்!:)

மாமா, எப்படி இருக்கிறார்?:) என்னோட ஒரு பெரிய hi அவர்கிட்ட சொல்லிடுங்க...

Anonymous said...

very good screenplay,அதுஏன் மெகா சீரியல் மாதிரி ஒரு சஷ்பென்ஸ்!

Anonymous said...

Pls post next part of this story....

ரொமீயொ பாய் said...

When is the next part?

Sundar சுந்தர் said...

நல்லா எழுதியிருக்கீங்க. அடுத்த பாகம் படிக்க ஆவல்.

புகழன் said...

கதை நல்லார்க்கு
தொடர்ந்து எழுதுங்கள்.

srivardhan said...

Good story...Keep it up & continue.....

srivardhan said...

good story...keep it up....

நவீன் ப்ரகாஷ் said...

கதைநல்லா வேகமெடுக்குது...
நல்லாதான் இருக்கு...
:)))


[ முதல் பகுதி மதிரியே (same style of
narration... )
கொண்டு போய் இருக்கலாம்ல..?

( ச்சும்மா ஒரு suggestion்) ]

Anonymous said...

where is part 3??? :(