Thursday, August 7, 2008

அன்பில் அடை மழைக்காலம்!

எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவானாம்!
ஒரே நொடியில்
காதல் மொழியை
கற்றுத் தந்தாயே
நீ என்ன காதல் கடவுளா?!

தேர்வறையில் விடை மறந்த
மாணவியாய் திணறுகிறேன்
உன் பார்வை வினாக்களின்
அர்த்தம் புரியாமல்...

நீ கொஞ்சிக் கொஞ்சி
செல்லமாய் சொல்லும்
சுகத்தை அடையத்தானா
இத்தனை நாளும் தவமிருந்தது
எனது இந்தப் பெயர்?

கண்டும் காணாதது போல்
போகிறேன் என்றெப்பொழுதும்
குற்றம் சாட்டுகிறாயே...
நீ போகாத விஷேசங்களுக்கு
நானும் செல்வதே இல்லை
என்பதை என்றேனும்
உணர்ந்திருக்கிறாயா?

அடை மழையிலும்
விரும்பி நனைகிறேன்
ஜுரத்தில் முனகும்
தருணங்களில் கிடைக்கும்
உன் உள்ளங்கையின்
ஸ்பரிஸத்திற்கு ஏங்கி...

கோடி முறை
மனனம் செய்தாலும்
உனைக் கண்டதும்
அதரங்களிலேயே
புதைந்து விடுகிறதே
என் வார்த்தைகள்!

உன் விரலை
தூரிகையாக்கி
என்னை ஓவியப்
பலகையாக்குகிறாயே!
என்னை
ஓவியம் வரையவா?!
என்னைப் போல்
ஓவியம் வரையவா?!

30 comments:

விஜய் ஆனந்த் said...

fantastic!!!

என்னுடைய கல்லூரிக்காதல் நாட்கள் கண்முன்னே!!!

Anbu said...

Arumai......Palamurai paditthu rasitthen

Anbu

ஷாலினி said...

//
தேர்வறையில் விடை மறந்த
மாணவியாய் திணறுகிறேன்
உன் பார்வை வினாக்களின்
அர்த்தம் புரியாமல்...
//

arumai!!! :)

ஷாலினி said...

//நீ கொஞ்சிக் கொஞ்சி
செல்லமாய் சொல்லும்
சுகத்தை அடையத்தானா
இத்தனை நாளும் தவமிருந்தது
எனது இந்தப் பெயர்?//

epadi ipadi ellam yosikireenga?..excellent!!

ஷாலினி said...

//அடை மழையிலும்
விரும்பி நனைகிறேன்
ஜுரத்தில் முனகும்
தருணங்களில் கிடைக்கும்
உன் உள்ளங்கையின்
ஸ்பரிஸத்திற்கு ஏங்கி...//

:))))

M.Saravana Kumar said...

//கண்டும் காணாதது போல்
போகிறேன் என்றெப்பொழுதும்
குற்றம் சாட்டுகிறாயே...
நீ போகாத விஷேசங்களுக்கு
நானும் செல்வதே இல்லை
என்பதை என்றேனும்
உணர்ந்திருக்கிறாயா?//

//அடை மழையிலும்
விரும்பி நனைகிறேன்
ஜுரத்தில் முனகும்
தருணங்களில் கிடைக்கும்
உன் உள்ளங்கையின்
ஸ்பரிஸத்திற்கு ஏங்கி//

கலக்கலோ கலக்கல்..

பதிவு போட்டு ரொம்ப நாளாச்சேன்னு நெனச்சேன்..
வந்துடீங்க..

மொக்கைச்சாமி said...

கவிதை ரொம்ப நல்ல இருக்கு... "அதரங்களிலேயே
புதைந்து விடுகிறதே" இதில் "அதரங்களிலேயே" அப்படின்னா என்ன அர்த்தம்?

மொக்கைச்சாமி said...

உன்னோடுதான் என் ஜீவன் - III ரிலீஸ் எப்போ?

naanal said...

//கண்டும் காணாதது போல்
போகிறேன் என்றெப்பொழுதும்
குற்றம் சாட்டுகிறாயே...
நீ போகாத விஷேசங்களுக்கு
நானும் செல்வதே இல்லை
என்பதை என்றேனும்
உணர்ந்திருக்கிறாயா?//

கலக்கிட்டீங்க :))

naanal said...

Hi,
Tomorrow @ 8 am its 08/08/08 08:08:08 ... so lets join exnora against global warming on this special day.. lets plan to switch off all lights and other electrical appliances @ 8 pm for 8 minutes...

For more details : http://www.88888.co.in/

Murugs said...

ஒரு பெண் காத‌லை ஓவிய‌ம் போல் க‌விதையாய் வ‌ரைவ‌து அரிது. வாழ்த்துக்க‌ள்! :)

//கோடி முறை
மனனம் செய்தாலும்
உனைக் கண்டதும்
அதரங்களிலேயே
புதைந்து விடுகிறதே
என் வார்த்தைகள்!//

எளிமையான‌ க‌ருத்துக்க‌ள் என்றாலும் அருமையான‌ வ‌ரிக‌ள்.
அது என்ன‌ "அத‌ர‌ங்க‌ளிலேயே"?

Sri said...

அச்சச்சோ அக்கா கவிதை நல்லாருக்கு...!! :-))))))

விஜய் said...

Absolutely Amazing :)

Vaandu said...

very nice jayanthi...
really good

Seenu said...

Kavidhai Superb.....

But where is உன்னோடுதான் என் ஜீவன் - III????

தமிழினி..... said...

Wow...wonderful kavidhai....seri..unnodu dhaan en jeevan enne aachu?!

ஜி said...

//அதரங்களிலேயே//

apdiina??

Anonymous said...

hallo imsai/ naan gemini from tamilnadu.naan unga bloga 8 monthsa than padichittu iruken. but niraya pathivukku commemnt podanumpola irukkm. english knowledge illathathala comment panavey theriyama irunthen.
ippathan kathukitten.unga ella pathivayum padichiten.Romba Nalla Irukku. keep it up

Anonymous said...

hallo imsai/ naan gemini from tamilnadu.naan unga bloga 8 monthsa than padichittu iruken. but niraya pathivukku commemnt podanumpola irukkm. english knowledge illathathala comment panavey theriyama irunthen.
ippathan kathukitten.unga ella pathivayum padichiten.Romba Nalla Irukku. keep it up

Anonymous said...

hallo imsai/ naan gemini from tamilnadu.naan unga bloga 8 monthsa than padichittu iruken. but niraya pathivukku commemnt podanumpola irukkm. english knowledge illathathala comment panavey theriyama irunthen.
ippathan kathukitten.unga ella pathivayum padichiten.Romba Nalla Irukku. keep it up

நாமக்கல் சிபி said...

//தேர்வறையில் விடை மறந்த
மாணவியாய் திணறுகிறேன்
உன் பார்வை வினாக்களின்
அர்த்தம் புரியாமல்...//

பிட் எல்லாம் அடிச்சதே இல்லையா?

நம்பிட்டோம்!

தமிழன்... said...

புரியுது புரியுது மேடம்...:)

புகழன் said...

//உன் விரலை
தூரிகையாக்கி
என்னை ஓவியப்
பலகையாக்குகிறாயே!
என்னை
ஓவியம் வரையவா?!
என்னைப் போல்
ஓவியம் வரையவா?!
//

அற்புதமான வரிகள்
Nice

இனியவள் புனிதா said...

Simply superb ;)

Arunagiri K said...

Hey...
Nice one...
I remember my sweet days :-) !

நவீன் ப்ரகாஷ் said...

//நீ கொஞ்சிக் கொஞ்சி
செல்லமாய் சொல்லும்
சுகத்தை அடையத்தானா
இத்தனை நாளும் தவமிருந்தது
எனது இந்தப் பெயர்? //

சுகமான சிந்தனை
அழகான உணர்வு !!! :)))

நவீன் ப்ரகாஷ் said...

//கோடி முறை
மனனம் செய்தாலும்
உனைக் கண்டதும்
அதரங்களிலேயே
புதைந்து விடுகிறதே
என் வார்த்தைகள்! //

வார்த்தை புதைந்த அதரங்கள்..!!!
மிகப் புதுமையாக
கையாண்டிருக்கிறீர்கள்
இம்சையரசி...
அழகு... :)))

நவீன் ப்ரகாஷ் said...

//உன் விரலை
தூரிகையாக்கி
என்னை ஓவியப்
பலகையாக்குகிறாயே!
என்னை
ஓவியம் வரையவா?!
என்னைப் போல்
ஓவியம் வரையவா?!//

ஆஹா... !!!
இம்சையரசி
கவிதை முழுதும் காதல்
மழை... சுகமாக நனைந்தேன்...:)))

சுபாஷ் said...

கலக்ல்

Yaaro said...

நல்லா தான் இருக்குது யக்கோவ் .....
வார்த்தை எல்லாம் சரளமா வந்திருக்கு.. it evokes lot of emotions...true...ஆனாலும்
if u want my fair comments...ரொம்ப sensual aa இருக்கு ...

1/2 plate வைரமுத்து ,கால் plate வாலி அப்புறம் பா விஜய் பழனிபாரதி ந முத்துகுமார் ஸ்நேகன் எல்லாரையும் சரி விகிதத்திலே கலந்து
அடிசிருகீங்க .... மத்த நண்பர்கள் போலே வெறுமனே புகழ்ச்சி மட்டுமே தரணும்னு நினெச்சேன்...ஆனா அப்புறம் என்னையும் உங்களயும் சீட் பண்ற மாதிரி ஆய்டும்...

நானும் ஒரு வலைப்பதிவு உருவாக்கியுள்ளேன் ..பாருங்களேன்
valaikkulmazhai.wordpress.com

-கார்த்தி