Thursday, July 3, 2008

என்னைப் பாத்து நாலுக் கேள்வியா?!!

என்னைப் பாத்து நாலுக் கேள்வியா?!!

நெஜமா நல்லவன்... நீங்க நிஜமாவே நல்லவரா? ஏன் என் மேல இந்த கொலைவெறி? இப்படியெல்லாம் எக்குத்தப்பா கேள்வி கேட்டா பச்சப்புள்ள நான் என்ன செய்வேன்??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............

இருந்தாலும் என்னைய மதிச்சு, என்னோட பதிவுகளை நியாபகம் வச்சு கேள்விக் கேட்ட உங்கப் பாசத்துல புல்லரிச்சுப் போயி இந்தப் பதிவ எழுதி இருக்கேன்.

நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...

*********************************************

1.உங்களது முதல் நாவல் அச்சுவடிவில் வெளிவந்த தருணம், முதல் பதிவு வெளிவந்த தருணம், விகடன் வரவேற்பறையில் வலைப்பூ அறிமுகம் கண்ட தருணம் இதில் எப்பொழுது நீங்கள் மிக மகிழ்வாக உணர்ந்தீர்கள்? எப்படிப்பட்ட உணர்வுகள் என்று விவரிக்க முடியுமா?

என் நாவல் வெளி வந்த தருணம் எப்படி இருந்ததுனு என்னோட "அழகென்ற சொல்லுக்கு" பதிவுல எழுதி இருந்தேன். எப்படின்னா "முதல் பிரசவம்... மனதளவில் உணர்ந்தேன் பிரசவ வலியை..."

நான் முதல் முதலா சாதம் வச்சப்போ பயங்கர சந்தோஷம். ஹை! நாமளும் சாதம் செய்யறோமேனு. சாதம் வைக்கறது வாழ்க்கைல தினசரி வேலைகள்ல ஒண்ணு. அதை கத்துக்கிட்டப்போ எவ்ளோ சந்தோஷம் இருக்குமோ அந்த சந்தோஷம் தான் என் முதல் பதிவு வெளி வந்த தருணம்.

விகடன்-ல என் வலைப்பூ வந்தப்போ சந்தோஷமா இருந்துச்சு. அட நாம கூட கொஞ்சம் உருப்படியா எழுதறோம் போலனு. அது பத்தாவதுல பாஸ் ஆன சந்தோஷம்.

இதுல எது ரொம்ப மகிழ்வான தருணம்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் :)))

2.என்னதான் பொண்ணுங்க மேக்கப் போட்டு போஸ் கொடுத்தாலும் மேக்கப்பே போடாம மாப்பிள்ளைங்க பெயரை அள்ளிக்கிட்டு போய்டுறாங்க. இதை பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும். பொண்ணுங்களுக்கு மேக்கப் அவசியமா? அவசியமென்றால் எப்படி எந்த அளவிற்கு இருக்கலாம்?

\\  என்னதான் பொண்ணுங்க மேக்கப் போட்டு போஸ் கொடுத்தாலும் மேக்கப்பே போடாம மாப்பிள்ளைங்க பெயரை அள்ளிக்கிட்டு போய்டுறாங்க  \\

அப்படியா?!! எனக்கு தெரியவே தெரியாதே... ;)))

ஏனுங்க உங்களுக்கே இது நியாயமா இருக்கா? ஸ்மைல் பண்ணினதால எங்காத்துக்காரர் என்னை விட அழகா இருந்தார்னு எல்லாரும் சொன்னாங்கனுதான் சொன்னேன். ஸ்மைல் பண்ணாம இருந்திருந்தா அவரை விட நான் அழகா இருந்தேனு சொல்லி இருக்கலாம். நான் சொல்ல வந்தது என்னதான் மேக்-அப் பண்ணிக்கிட்டாலும் ஒரு ஸ்மைல் தர அழகுக்கு முன்னாடி அது ஒண்ணுமே இல்லனு. பொண்ணுதான் அழகு மாப்பிள்ளை தான் அழகுனு சொல்ல வரலை :)))

மேக்-அப் கண்டிப்பா அவசியம்தான். ஸ்மைல் தர அழகு மட்டுமே போதும்னாலும் சினிமா-ல ஸ்நேகா-வுக்கோ ரோஜாவுக்கோ மேக்-அப் போடாம ஸ்மைல் மட்டும் பண்ண விட்டிருந்தா அவங்க பெரிய ஹீரோயின் ஆயிருப்பாங்களா?

எங்கேயாவது வெளில போனிங்கனா உங்களோட ட்ரெஸ் மற்றும் லுக்கப் பாத்து தான் மரியாதை கிடைக்கும். பேங்க்ல கோடி கோடியா பணம் வச்சிருந்தாலும் எண்ணெய் வடிஞ்சு ஒரு சாதாரண ட்ரெஸ்-ல போய் பாருங்க அப்போ தெரியும் மேக்-அப்போட அவசியம் :)

அடுத்தவங்க கண்ணை உறுத்தாத அளவுக்கு இருக்கற வரைக்கும் மேக்-அப் ஓகே தான்...

3."வாழ்க்கை சர்க்கரையாய்
இனிக்க வேண்டும்
ஆனால்
சர்க்கரை நோயாய்
மாறி விடக் கூடாது"

இது நீங்கள் பத்தாவது படித்தபோது எழுதிய கவிதை. இப்பொழுது உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? பதில் ஒரு கவிதையாக கூட இருக்கலாம்.

அளவா சர்க்கரை கலந்த பால் மாதிரி இருக்கு. சுத்தமா... டேஸ்ட்டா... திகட்டாம... :)))

4.''நான் வாங்கின பையனுக்கு நான் எதுக்கு ஹெல்ப் பண்ணனும். சோ நோ பாத்திரம் கழுவிங், நோதுணி துவைச்சிங், நோ சமைச்சிங். அவன்தான் எல்லாமே செய்யணும்"

இது நீங்க திருமணத்திற்கு முன் உங்க பதிவுல சொன்ன கமெண்ட் தான். இப்போதைய நிலைமை என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?

நான் எதிர்பார்த்தது எனக்கு வரவர் எவ்வளவு குடுக்கறாங்கனு பாக்காம என்னைப் பாத்து கல்யாணம் பண்ணிக்கணும்னு. அதை மனசுல வச்சுதான் இந்த பதிவு எழுதினேன். இப்போ அதே மாதிரியே நடந்துடுச்சு. சோ நான்தான் காசுக் குடுத்து வாங்கலையே. அப்புறம் எப்படி செய்ய சொல்ல முடியும்???


*********************************************

இப்போ என் turn :)))

அகில உலக வ.வா.ச ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த, இருக்கும் முக்கால்வாசி க்ரூப் பளாக்கிலும் இணைந்திருந்தாலும் அதன் பக்கமே தலை வைத்துப் படுக்காத, ரஞ்சனி மகா என்ற இரண்டு கனவுப் பெண்களின் காதலன், புலி கவுஜ ஸ்பெஷலிஸ்ட், சின்னத்தல ராயல் ராமிடம் இதோ இந்த நான்கு கேள்விகளை முன் வைக்கிறேன்.

1. 'சின்னத்தல'-ன்னு பேரு வாங்கிட்டு வா.வ.சங்கம் பக்கம் எட்டிப் பாக்காமலே இருக்கீங்களே ஏன்?

2. ஒரு பெரிய ப்ரொபஷனல் கொரியர் ச்சே... ப்ரொபஷனல் போட்டோகிராபர் ஆயிட்டு வரதால இந்த கேள்வி. பின்நவீனத்துவமா புலிக் கவுஜ, எலிக் கவுஜனு எழுதற உங்களால பின்நவீனத்துவமா போட்டோ எடுப்பது எப்படினு சொல்ல முடியுமா? அதில் புனைவு ஃபோட்டோ கூட முடியுமா? அப்படியே புனைவு, பின்நவீனத்துவம்னா என்ன அது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு மூத்தப் பதிவர் நீங்க சொன்னா எங்களை மாதிரி தெரியாத ஆளுங்க தெரிஞ்சுக்குவோம்.

3. காதல் பத்தி என்ன நினைக்கறீங்க? ரஞ்சனி மகாவுடனான பேச்சு வார்த்தை எந்த அளவில் இருக்கு?

4. வலையுலகுக்கு வந்தது மூலம் உங்களுக்கு கிடைச்சதா நினைக்கற விஷயங்கள் என்ன?

பதில் சொல்லுங்கண்ணாவ் :)))))))))

20 comments:

நிஜமா நல்லவன் said...

///நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...///




அடடா ரொம்ப பாசக்கார புள்ளையா இருக்கீங்களே. இத்தனை நன்றியா?

நிஜமா நல்லவன் said...

///இருந்தாலும் என்னைய மதிச்சு, என்னோட பதிவுகளை நியாபகம் வச்சு///


விகடன் வரவேற்பறையில் உங்க வலைப்பூ பார்த்துவிட்டு தான் நான் வலைப்பூ பக்கமே வந்தேன். அப்புறம் எப்படி உங்க பதிவுகள் மறக்கும்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாதம் வச்சதுக்கு சந்தோஷமா.. ம்.சரி.. :)
குழம்பு வச்ச அன்னைக்கு குஷியா..??

பதில் நல்ல இருக்கு.. கேள்வியும் நல்லா இருக்கு ,. ராமை ,
க்ரூப் பதிவில் இருந்துகிட்டு தலைவச்சு படுக்காத ன்னு சொன்னதுல இருக்கற உண்மையை இன்றைக்குத்தான் உணர்ந்தேன்.. :))

MyFriend said...

அட.. பரவாயில்லையே.. கேள்விக்கெல்லாம் டான் டான்னு பதில் சொல்லி அசத்திட்டீங்களே.. அபப்டியே ராமை மாட்டி விட்டதுக்கு வாழ்த்துக்கள். ;-)

கோபிநாத் said...

\ மை ஃபிரண்ட் ::. said...
அட.. பரவாயில்லையே.. கேள்விக்கெல்லாம் டான் டான்னு பதில் சொல்லி அசத்திட்டீங்களே.. அபப்டியே ராமை மாட்டி விட்டதுக்கு வாழ்த்துக்கள். ;-)
\\

ரீப்பிட்டே ;)

ஜி said...

:))) kalakkunga ammani...

ஆயில்யன் said...

//இப்படியெல்லாம் எக்குத்தப்பா கேள்வி கேட்டா பச்சப்புள்ள நான் என்ன செய்வேன்??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............///


பரவாயில்லக்கா! பாசக்கார பயபுள்ள கேள்வி கேட்டுபுடுச்சு! மன்னிச்சு வுட்டுப்புடலாம் :))))))))

ஆயில்யன் said...

//நான் முதல் முதலா சாதம் வச்சப்போ பயங்கர சந்தோஷம். ஹை! நாமளும் சாதம் செய்யறோமேனு. சாதம் வைக்கறது வாழ்க்கைல தினசரி வேலைகள்ல ஒண்ணு. அதை கத்துக்கிட்டப்போ எவ்ளோ சந்தோஷம் இருக்குமோ அந்த சந்தோஷம் தான் என் முதல் பதிவு வெளி வந்த தருணம்.//

கத்துக்கிட்டதை விட சொல்லிக்கொடுத்து பாருங்க இன்னும் கூட ரொம்ப சந்தோஷமா இருக்கும்க்கா! :))))

ஆயில்யன் said...

//முக்கால்வாசி க்ரூப் பளாக்கிலும் இணைந்திருந்தாலும் அதன் பக்கமே தலை வைத்துப் படுக்காத//

பாவம்க்கா அவுரு எவ்ளோ கஷடப்படுறாருன்னு அவுரு சொல்லியே எனக்கு தெரியும் :(

இந்த மாதிரி நெருக்கடியான சூழ்நிலையில எப்படி பதிவுகள் பக்கம் வர்றது ??

(ராயலண்ணே நீங்க சொன்னதை அப்படியே சொல்லிட்டேன் பட் நான் நீங்க சொன்னீங்கன்னு சொல்லவே இல்லை பார்த்தீங்களா!!!! )

ஆயில்யன் said...

// ரஞ்சனி மகா என்ற இரண்டு கனவுப் பெண்களின் காதலன்,//

இரண்டு பெண்களின் கனவு காதலனா?
இரண்டு கனவுப்பெண்களின் காதலனா?

எது சரி ???

:))

இராம்/Raam said...

பதில் சொல்லுறேன்னு மொக்கை பதிவு போட்டாச்சு'க்கா.... :)

தமிழன்-கறுப்பி... said...

சின்னச்சின்தாய் நல்ல பதில்கள்...

தமிழன்-கறுப்பி... said...

///இருந்தாலும் என்னைய மதிச்சு, என்னோட பதிவுகளை நியாபகம் வச்சு///

வலைப்பதிவுகளின் வரலாற்றில நிலைக்கிற பெயர்களை மறக்க முடியுமா சொல்லுங்க...

முக்கியமா இந்த பெயரை மறக்க முடியுமா...:))

தமிழன்-கறுப்பி... said...

///
மேக்-அப் கண்டிப்பா அவசியம்தான். ஸ்மைல் தர அழகு மட்டுமே போதும்னாலும் சினிமா-ல ஸ்நேகா-வுக்கோ ரோஜாவுக்கோ மேக்-அப் போடாம ஸ்மைல் மட்டும் பண்ண விட்டிருந்தா அவங்க பெரிய ஹீரோயின் ஆயிருப்பாங்களா?///

சினிமா வேற விசயம்க...

ஸ்னேகா, ரோஜா மட்டுமில்லிங்கோ யாருமே..ஆகியிருக்க முடியாது..:))

தமிழன்-கறுப்பி... said...

///
அகில உலக வ.வா.ச ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த, இருக்கும் முக்கால்வாசி க்ரூப் பளாக்கிலும் இணைந்திருந்தாலும் அதன் பக்கமே தலை வைத்துப் படுக்காத, ரஞ்சனி மகா என்ற இரண்டு கனவுப் பெண்களின் காதலன், புலி கவுஜ ஸ்பெஷலிஸ்ட், சின்னத்தல ராயல் ராமிடம் இதோ இந்த நான்கு கேள்விகளை முன் வைக்கிறேன்///

சூப்பரு...:))

தமிழன்-கறுப்பி... said...

பதில்களும், கேள்விகளும் நன்று, ரசிச்சு படிச்சேன்... :)

Sanjai Gandhi said...

மேக்கப் பதில்.. சூப்பருங்க அம்மணி...:)

Sanjai Gandhi said...

// இராம்/Raam said...

பதில் சொல்லுறேன்னு மொக்கை பதிவு போட்டாச்சு'க்கா.... :)//

இல்லைனா ராமுக்கு மொக்க போட தெரியாதுங்க. ப்ளீஸ் நம்புங்க.

மோகன் said...

இம்சை அரசி,
உங்கள் பதிவுகளைக் கொஞ்சம் காலமாகவே படித்து வருகிறேன்.ஏறக்குறைய நீங்கள் எழுதியுள்ள அனைத்துப்பதிவுகளையும் படித்துவிட்டேன்.சிலப் பதிவுகள் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டியுள்ளன. முக்கியமாக கதைகள் அருமையாக உள்ளன.தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.
அண்மையில் தொடங்கியுள்ள புதிய வாழ்க்கை வளமுடனும்,நலமுடனும் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்.

தமிழ் said...

/
நான் முதல் முதலா சாதம் வச்சப்போ பயங்கர சந்தோஷம்.
ஹை! நாமளும் சாதம் செய்யறோமேனு.
சாதம் வைக்கறது வாழ்க்கைல தினசரி வேலைகள்ல ஒண்ணு.
அதை கத்துக்கிட்டப்போ எவ்ளோ சந்தோஷம் இருக்குமோ
அந்த சந்தோஷம்
தான் என் முதல் பதிவு வெளி வந்த தருணம்./

அருமை