Wednesday, July 2, 2008

ரசிக்க மறந்த பாடல்களில் ஒன்று...

எனக்கு ஒரு பாட்டு பிடிக்கும்னா ஒண்ணு அதோட இசை நல்லா இருக்கணும். அப்புறம் முக்கியமா வரிகள் நல்லா இருக்கணும். இசை நல்லா இல்லைனா கூட வரிகள் நல்லா இருந்தா அது எனக்கு பிடிச்சப் பாட்டா ஆயிடும். ஆனா இந்தப் பாட்டுல ரெண்டுமே ரொம்ப நல்லா இருக்கும். அப்படியே ஒருப் பொண்ண நினைச்சு நினைச்சு உயிர் உருகப் பாடினா எப்படி இருக்குமோ அப்படி இருக்கற பாட்டு.

சிலப் பாட்டு மொக்கையா இருந்தாக் கூட படம் ஹிட் ஆச்சுனா ஓரளவு எல்லாருக்கும் தெரிஞ்சிடும். ஆனா மொக்கைப் படத்துல வர நல்ல பாட்டு கூட அந்த படம் காரணமா வெளில தெரியாமப் போயிடுது. அப்படிப் போன பாட்டுல இதும் ஒண்ணுனு நினைக்கறேன். எத்தனை பேரு இந்தப் பாட்டு பாத்திருப்பீங்கனு தெரியலை. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. படத்துல இல்லாத காதலிக்காக அஜித் உருகி உருகிப் பாடுவார். பாட்டுலதான் ஜோதிகா வருவாங்களேனு கேக்கப்பிடாது. அது ஜோதிகாவோட கனவு.

படம் பாத்தப்போ அஜித் பிரியங்கா திரிவேதியோட ஃப்ளாஷ்பேக் கதைக்காக நான் ரொம்ப ஃபீல் பண்ணினேன். நாம காதலிச்ச உயிர் பிரிஞ்சுப் போனாக் கூட உலகத்துல எங்கேயோ ஒரு மூலைல சந்தோஷமா இருந்தா சரினு விட்டுடலாம். ஆனா உலகத்த விட்டேப் போனா எவ்ளோப் பெரியக் கொடுமை. அதும் கண்ணு முன்னாடியேனா?? அதனால இந்தப் படத்துல அஜித் கேரக்டர பார்த்தா பாவமா இருந்துச்சு. ஆனா கடைசில அந்த பிரியா-வ விட்டுட்டேன் இந்த பிரியா-வ விட மாட்டேன்னு சொல்லி ஜோதிகாவா கூட்டிட்டுப் போனப்போ கடுப்பாயிடுச்சு. சரி யார் எப்படி போனா நமக்கென்னங்க? பாட்டு எப்படி இருக்குனு கொஞ்சம் சொல்லிட்டு போங்க... :))))


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நீ பார்க்கின்றாய் என்னுள்ளே மின்னல் தொடும் உணர்வு
நீ பேசினாய் என்னுள்ளே தென்றல் தொடும் உணர்வு
ஒரே முறை நீ கண் பாரடி
அதில் கண்டேன் நான் தாயின் மடி
காதல் என்று சொன்னாலே தியானமல்லவா
உன்னை எண்ணி நானும் தான் தியானம் செய்யவா

(நீ பார்க்கின்றாய்)

நீயும் நடந்தால் என்னைக் கடந்தால்
ஒரு பூங்காவே என் மீது மோதும் சுகம்
கண்ணை அசைத்தால் என்னை இசைத்தால்
ஒரு பனிப்பாறை என்னுள்ளே தோன்றும் கனம்
உன்னை சுற்றிடும் விண் கலமாகிறேன்
உந்தன் பார்வையில் நான் வளமாகிறேன்
நீ ஒற்றை ரோஜா தந்தால் அதில் உலகப் பூவின் வாசம்
நீ ஓரக் கண்ணில் பார்த்தால் சில லட்சம் மின்னல் வீசும்
அன்பே அன்பே நீ தரை வானவில்
உன்னைப் பாடும் நான் தவப் பூங்குயில்

(நீ பார்க்கின்றாய்)

உந்தன் விழிக்குள் என்னை அடைத்தால்
ஒரு அழகான சிறைச்சாலை இதுவல்லவா
உன்னைப் பிரிந்தால் எந்தன் விழிக்குள்
ஒரு முந்நூறு முள் வந்து நடமாடுதே
கொன்று விட்டதே உன் ஒரு பார்வையே
அன்பு செய்திடு என் அதிகாரியே
நீ பூமிப் பந்தில் வந்து நடமாடும் குட்டி சொர்க்கம்

நீ கல்லில் அல்ல பெண்ணே கனியாலே செய்த சிற்பம்
உந்தன் கண்கள் அது ஒரு அங்குலம்
ஆனால் அதில் என் உயிர் சங்கமம்

(நீ பார்க்கின்றாய்)

8 comments:

Anonymous said...

பாடல் கலக்கல் தான்

தமிழன்-கறுப்பி... said...

இந்தப்படத்தில நடிச்சதுக்காக ஜோதிகாவும் வருத்தப்பட்டாங்களாம்..

வரிகள் நல்ல வரிகள்தான்...

என்ன தொடர்ந்து பதிவுகள் நடக்கட்டும் நடக்கட்டும்...:)

Anonymous said...

இது ஏன் ரசிக்க மறந்தவை வரிசையில் வந்ததென தெரியவில்லை. படம் கூட நல்ல படம் தான். நான் மிக ரசித்தேன். முக்கியமாக தயிர்சாதம் பட்டப் பெயர் எங்கள் கல்லூரியில் பிரபல்யமானது.

பாரதி

Vijay said...

காதல் ஓவியம் பாட்டு கேட்டிருக்கீங்களா? படம் பயங்கர கடி. ஆனா, பாட்டு ஒவ்வொண்ணும் முத்து முத்தாய் இருக்கும். கேட்டுப் பாருங்க

CVR said...

///ஆனா கடைசில அந்த பிரியா-வ விட்டுட்டேன் இந்த பிரியா-வ விட மாட்டேன்னு சொல்லி ஜோதிகாவா கூட்டிட்டுப் போனப்போ கடுப்பாயிடுச்சு.////
ஏனுங்க???
செத்து போன முதல் காதலிக்காக வாழ்க்கை முழுக்க தேவதாஸாக இருந்தாதான் அவரு காதல் உண்மைனு அர்த்தமா??? ;)

தமிழுக்கு நேர்ந்து விடப்பட்டவர்களுள் ஒருவன் said...

Superb song really. . Heart touching. .

தமிழுக்கு நேர்ந்து விடப்பட்டவர்களுள் ஒருவன் said...

Manathai thotta isai. . Arputhamana varigal

தமிழுக்கு நேர்ந்து விடப்பட்டவர்களுள் ஒருவன் said...

Superb song really. . Heart touching. .