Thursday, July 17, 2008

உன்னோடுதான் என் ஜீவன் - 1

உங்களுக்கு இன்னைக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ். புதுசா ரெண்டுப் பேரை அறிமுகம் பண்ணி வைக்கப் போறேன். அட அவங்க என் கூட இங்க இல்லைங்க. வாங்க... இப்ப நேரா இன்ஃபோசிஸ் கேம்பஸ்ல மூணாவது பில்டிங் போறோம். ஹ்ம்ம்ம்... ஒரு வழியா வந்துட்டோம். அவசரப்படாதீங்க. க்ரவுண்ட் ப்ளோர்லயே உள்ள நேராப் போய் அந்த டெட் எண்ட்ல அப்டியே ரைட்ல திரும்புங்க. செகண்ட் க்யூபிக்கிள்ல கைல ஏதோ கொஞ்சம் பேப்பர்ஸ் வச்சு அதுல எதோ படிச்சிட்டு இருக்காளே அவளைதான் இப்போ பாக்க வந்தோம். இனிமேல் நான் எதுக்கு? அவளேப் பேசுவா கேளுங்க.

"ஹாய்! நான் கிரிஜா. இன்ஃபோசிஸ்ல தான் வேலை செய்யறேன். அடுத்த அப்ரைசல்ல ப்ரோமோஷன் எதிர்பார்த்துட்டு இருக்கேன். என்னடா ஜாயின் பண்ணி மூணு வருஷத்துலயே ப்ரொமோஷன் கேக்கறேனு பாக்கறீங்களா? பின்ன என்னங்க? காலைல எட்டு மணிக்கு ஆபிஸ் வந்தா நைட்டு எட்டு மணிக்குதான் வீட்டுக்கு கிளம்பறேன். இது வரைக்கும் நாலு அவார்ட்ஸ் வாங்கி இருக்கேன். எட்டு கஸ்டமர் அப்ரிசியேஷன் மெயில்ஸ் வச்சிருக்கேன். ஆபிஸ் வந்துட்டா நோ மெயில்ஸ்... நோ சாட்ஸ்... நோ லாங்க் ப்ரேக்ஸ்... இப்படி இருக்கும்போது இதைக் கூட எதிர்பார்க்கக் கூடாதா என்ன?

ஃபுல்லா ஆபிஸ்லயே இருந்தா வீட்டோட எப்படி டைம் ஸ்பெண்ட் பண்ணுவேனு பாக்கறீங்களா? எங்க வீடுதான் ஈரோடுல இருக்கே. நான் இங்க ஹாஸ்டல்லதான் இருக்கேன். எனக்கு இருக்கற ஒரே ஒரு ஃப்ரெண்ட் துர்காவும் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா. லவ் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டா. வீட்டுல பர்மிஷன் குடுக்க மாட்டெனு சொன்ன அப்பா அம்மாட்ட ரெண்டு வருஷமா போராடி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கிட்டா. அப்பப்பா... அப்போல்லாம் எப்போ பாத்தாலும் சோகமாவே இருப்பா. எனக்கு ஒரே கடுப்பா இருக்கும்.

அப்படி எதுக்கு இந்த கருமம் புடிச்சத செஞ்சு தொலைக்கணும்? சும்மா நம்மளையும் கஷ்டப்படுத்திக்கிட்டு நம்மள சுத்தி இருக்கவங்களையும் கஷ்டப்படுத்திக்கிட்டு?? என் டீம்மேட் தீபி-தான் சொல்லுவா. கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணினா மட்டும் லவ் இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம லைஃப் பார்ட்னர் மேல வச்சிருக்கற அந்த பாசமும் லவ்தான்னு. ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த உலகமே மணி ட்ரிவன் தான். என்ன சொல்றீங்க? லவ் பண்ணும்போது காசு பணம் தெரியாது. கல்யாணத்துக்கப்புறம் அந்த பையன் ஒழுங்கா சம்பாரிச்சுப் போடாம இவள லவ் பண்ணிட்டே இருந்தா மட்டும் போதுமா? அப்போ அவங்களுக்குள்ள அந்த காதல் எத்தனை நாளுக்கு இருக்கும்? சோ லவ்ன்றது எல்லாம் சுத்த பேத்தல். சரி அரேஞ்சுடு மேரேஜே எடுத்துக்கங்க. பொண்ணு வீட்டுல பையன் நல்லா சம்பாரிக்கிறானா நம்ம பொண்ணை கஷ்டப்படாம காப்பத்துவானான்னுதான் முக்கியமா பாக்கறாங்க. பையன் வீட்டுலயும் பொண்ணு வேலைக்கு போகுதா இல்ல வீட்டுல நல்லா செய்வாங்களா இப்படி தான் எதிர்பாக்கறாங்க. இதுலயும் பணம்தான் மொதல்ல வருது.

இதனாலதான் இந்த காதல் கத்திரிக்கா கல்யாணம் இதிலெல்லாம் ரொம்ப வெறுப்பாயிடுச்சு. எங்க வீட்டுலயும் எனக்கு மாப்பிள்ளைப் பாக்கறேனு நச்சிக்கிட்டே இருந்தாங்க. இன்னும் கொஞ்சம் நாள் இன்னும் கொஞ்ச நாள்னு தள்ளிப் போட்டுட்டே வந்தேன். இப்போ எங்கம்மாவ சமாளிக்க முடியல. சரின்னு சொல்லிட்டேன். ஆனா அவங்க பாக்கற மாப்பிள்ளையெல்லாம் இந்த கம்பனிலயா வேணாம் இதுவா படிச்சிருக்கான் அப்போ வேணாம் இப்படி எதாச்சும் சாக்கு சொல்லி தப்பிச்சிட்டு இருக்கேன்.

நம்மளால எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணே பொன்னேனு ஒருத்தன் பேத்தறதையெல்லாம் கேட்டுக்கிட்டு குப்பைக் கொட்ட முடியாது. எனக்குனு லைப்ல எவ்வளவோ லட்சியங்கள் இருக்கு. சீக்கிரமா பி.ம், டி.எம்-னு ஆகி என் பேரை இங்க நிலைக்க வைக்கணும். ஹ்ம்ம்ம்... என்னதான் ஆகுதுனு பாப்போம்.

சரிங்க. என் மேனேஜரோட ஒரு மீட்டிங் இருக்கு. நான் கிளம்பறேன். பை"

என்னங்க? அவதான் போயிட்டாளே. இன்னும் ஏன் அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கீங்க? அப்படியே அந்த இன்ஃபோசிஸ் கேம்பஸ்ல இருந்து வெளியே வந்து அந்த மெயின் ரோடுலயே நேரா வாங்க. ஹ்ம்ம்ம்... ஸ்டாப் ஸ்டாப். இதோ நாலவது இருக்கற டி.சி.எஸ் கேம்பஸ்குள்ள அப்படியே உள்ள வாங்க. நேரா போயி ரைட் சைட் திரும்பினா இதோ கேன்டீன். அங்க ரவுண்டு கட்டி கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்கற கும்பல்ல பேல் யெல்லோ அண்ட் பேல் க்ரீன் ஸ்டரைப்ஸ் போட்ட சர்ட்-ல இருக்கானே அவன்தான் கார்த்திக். "ஹே கார்த்திக்! இங்க வா. உன்னைப் பாக்கதான் வந்திருக்காங்க". இதோ வந்துட்டான். இனிமேல் உங்களை பேச விட மாட்டான் பாருங்க.

"ஹை ஹை ஹை... நான் தான் கார்த்திக். டி.சி.எஸ்லதான் நாலு வருஷமா வேலை செய்யறேன். நான் பயங்கர ஜாலி டைப்புங்க. லைஃபோட ஒவ்வொரு நிமிஷத்தையும் அணு அணுவா ரசிச்சு வாழணும்ன்றது என் கொள்கை. காலைல ஷார்ப்பா ஒன்பது மணிக்கு ஆபிஸ்ல இருப்பேன். சாயந்திரம் ஷார்ப்பா ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன். என் ஃபேமிலி திருச்செங்கோடுல இருக்கு. இங்க ஃப்ரெண்ட்ஸோடதான் தங்கி இருக்கேன். எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ். சாயந்திரம் ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா வெளில சுத்தறது இல்லைனா வீட்டுல எதாவது பண்ணிட்டு இருப்போம். ப்ளாக் படிக்கறது, கதை புக்ஸ், டி.வினு நேரம் போறதே தெரியாது.

நமக்கிருக்கறது ஒரே ஒரு வாழ்க்கை. அதை ஜாலியா சந்தோஷமா வாழ்ந்துட்டு போகனுமில்லையா? அதான் எஞ்சாய் பண்ணிட்டு இருக்கேன். என்னக் கேட்டீங்க? கேர்ள் ஃப்ரெண்டா? நமக்கு அந்த குடுப்பினை எல்லாம் இல்லைங்க. எனக்கு அமைஞ்சிருக்குமா இல்லையானு தெரியலை. ஆனா நான் ட்ரை பண்ணலை. எங்கம்மாதான் எனக்கு உயிர். சின்ன வயசுல இருந்து இந்த ட்ரெஸ் போட்டா நல்லா இருக்கும் இந்த ஸ்கூல்ல படிச்சா நல்லா இருக்கும்னு பாத்து பாத்து செஞ்ச அம்மாவுக்கு தெரியாதா எந்தப் பொண்ணைக் கட்டிக்கிட்டா நான் நல்லா இருப்பேன்னு. அதான் அவங்க சாய்ஸ்ல விடணும்னு ஒரு தீர்மானமா இருக்கேன்.

எனக்கு வரப் போற வைஃபதான் லவ் பண்ணனும். அவள இப்படிப் பாத்துக்கணும் அப்படிப் பாத்துக்கணும்னு பலக் கனவுகள். ராணி மாதிரி உள்ளங்கைல வச்சு தாங்குவேன். எங்கே இருக்காளோ என் தேவதை. எனக்கு ஃபிக்ஸ் ஆனதும் பத்திரிக்கை கொடுக்கறேன். கண்டிப்பா வந்துடுங்க. சரி என் ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்றாங்க. இன்னொரு நாள் பாப்போம். பை"

சரிங்க நாம கிளம்புவோமா? அட! மறந்துப் போயிட்டேன் பாருங்க. இன்னும் நாம பாக்க வேண்டிய ஒருத்தர் இருக்காங்க. அவங்களைப் பாத்துட்டு கிளம்பலாம் சரியா? நேரா உங்க கம்ப்யூட்டர்ல போய் உக்காருங்க. ஒரு IE இல்லைனா Firefox ஓப்பன் பண்ணுங்க. அட்ரஸ்ல http://imsaiarasi.blogspot.com/ -னு டைப் பண்ணுங்க. லோட் ஆயிடுச்சா? இவங்கதாங்க நம்ம இம்சை அரசி. பேருல மட்டும் தாங்க இப்படி. நிஜத்துல ரொம்ப அமைதியான, அடக்க ஒடுக்கமான மொத்தத்துல பிளாட்டினமான பொண்ணு. இவங்க நிஜப் பேரு ஜெயந்தி. இவங்க உங்ககிட்ட எதோ சொல்லணும்னு சொன்னாங்க. வாங்க என்னன்னு கேப்போம்.

"ஹலோ! நான் இம்சை அரசி. சுமார் ஒரு ரெண்டு வருஷமா இந்த ப்ளாக் எழுதறத மெயின் வேலையாவும், சாஃப்ட்வேர் இஞ்சினியர் வேலைய பார்ட் டைம் வேலையாவும் செஞ்சுட்டு இருக்கேன். இப்போ என்ன பண்ணப் போறேனு சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன். ரெண்டு டோட்டல் ஆப்போசிட் கேரக்டர்ஸா இருக்கற கிரியும், கார்த்திக்கும் சேர்ந்தா என்னாகும்? அப்படி அவங்க சேரணும்னு அவங்க தலையெழுத்த எழுதி வச்சுட்டேன். என்னப் பண்ணப் போறாங்களோ தெரியலை. பொறுத்திருந்துப் பாப்போமே. ஓகேங்க. என் வீட்டுக்கார் கூப்பிடறார். இவங்க கதையப் பாத்துட்டு லாஸ்ட்ல மீட் பண்ணுவோம். cya"

_/\_ தொடரும் _/\_

21 comments:

ஜி said...

:))) கலக்கல் ஸ்டார்ட் இம்சை... ஆனாலும் ஏன் இந்த சுய விளம்பரம்?? ;)))

மோகன் said...

'குஷி' மாதிரி, கதைய ஆரம்பிச்சிருக்கீங்க...நாயகி 'இன்போசிஸ்' ,நாயகன் டிசிஎஸ்...அப்போ வில்லன் 'விப்ரோ'ல இருந்தா?...அப்படின்னா...வில்லனா என்னை போட்ருங்க...நான் எல்க்ட்ரானிக்ஸ் சிட்டி விப்ரோலதான் 'வில்லத்தனம்' பண்ணிட்டிருக்கேன்.....

Divya said...

\\ரெண்டு டோட்டல் ஆப்போசிட் கேரக்டர்ஸா இருக்கற கிரியும், கார்த்திக்கும் சேர்ந்தா என்னாகும்?\\

என்னாகும்னு தெரிஞ்சுக்க ஆவலுடன் வெயிட்டீங்.......

Anonymous said...

fantastic writing ya jaya ur writings are so cute....wats ur mail id....
luv annam

Anonymous said...

ur friends are so lucky to have u since ungaloda writings ivlo alaga irukuna......friendship vid u vil be so wonderful
luv annam

Anonymous said...

//நிஜத்துல ரொம்ப அமைதியான, அடக்க ஒடுக்கமான மொத்தத்துல பிளாட்டினமான பொண்ணு.//

நம்பிட்டேன் :) ஆனாலும் கதை படு சுவாரசியமாகத் தொடங்கியிருக்கு...வாழ்த்துகள்

Anonymous said...

அருமையான ஆரம்பம்.. தொடர்க!

தமிழினி..... said...

கதை நடை நல்லா போகுது.......
அப்படியே இன்போசிஸ் ல எந்த DC,அதுல எந்த SDB & IBU ன்றதையும் சொல்லிட்டிங்கன்னா ரொம்ப வசதியா இருக்கும்....

அடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கும் ஒரு சக Infoscian...
-Srividhya(Tamizhini)

Sen22 said...

Ennanga Oru S J Surya Kathai Start-panniteenga poola...

Sen22 said...

//ஹலோ! நான் இம்சை அரசி. சுமார் ஒரு ரெண்டு வருஷமா இந்த ப்ளாக் எழுதறத மெயின் வேலையாவும், சாஃப்ட்வேர் இஞ்சினியர் வேலைய பார்ட் டைம் வேலையாவும் செஞ்சுட்டு இருக்கேன்.//

Intha Blog-ga Unga Manager Padikirara...

Anonymous said...

யக்காவ்.. சொந்தக் கதையவே இப்படி அள்ளித் தெளிச்சிவிடறீங்களா...

எஞ்சாய்

புகழன் said...

அய்யோ தொடர் கதையா?
முழுசா எழுதி முடிங்க பிறகு கமெண்டுகிறோம்

Unknown said...

wow ur writings are so lovely another RamaniChandran is IMSAIARASI

Vijay said...

\\இது வரைக்கும் நாலு அவார்ட்ஸ் வாங்கி இருக்கேன். எட்டு கஸ்டமர் அப்ரிசியேஷன் மெயில்ஸ் வச்சிருக்கேன். ஆபிஸ் வந்துட்டா நோ மெயில்ஸ்... நோ சாட்ஸ்... நோ லாங்க் ப்ரேக்ஸ்... \\
இன்ஃபோசிஸில் இதெல்லாம் தடா. வேலையைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது :)

\\நம்மளால எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணே பொன்னேனு ஒருத்தன் பேத்தறதையெல்லாம் கேட்டுக்கிட்டு குப்பைக் கொட்ட முடியாது\\
ஆமாமாம் கல்யாணத்துக்கப்புறம் பேத்தறது யாரு?

\\ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த உலகமே மணி ட்ரிவன் தான்.\\
இதையெல்லாம் ஒரு பொண்ணு சொல்லுது. என்ன கொடுமை ஸார் இது.

\\சுமார் ஒரு ரெண்டு வருஷமா இந்த ப்ளாக் எழுதறத மெயின் வேலையாவும், சாஃப்ட்வேர் இஞ்சினியர் வேலைய பார்ட் டைம் வேலையாவும் செஞ்சுட்டு இருக்கேன்.\\
அப்பாடா கடைசியா ஒரு உண்மை வெளிவந்திருக்கு.

இப்படி ஒரு இன்ட்ரொ மட்டும் கொடுத்துட்டு கதையை அம்போன்னு நிப்பாட்டிட்டீங்களே? சீக்கிரமா அடுத்த பதிவை எழுதுங்க.

Sorry for the Nakkals. No had feelings please.

அன்புடன்,
விஜய்

Ramya Ramani said...

சூப்பர் நல்லா போகுதே கதை :)) என்ன இம்சை மேடம் "Opposite Poles attract each otherah"

நாணல் said...

ரொம்ப அழகா ஆரம்பிச்சிருக்கீங்க அரசி....
உங்க கிரியையும் கார்த்திக்கையும் எப்படி வாழ்க்கை ஒண்ணு சேர்க்கிறதுணு படிக்க ஆவலா இருக்கு...
வாழ்த்துக்கள்...
அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறோம்.. :)

moorthi said...

This high time for u write a screenplay for movie.. :-).

Kandippa neenga oru super dooper hit koduppeenga.

anbudan vaalu said...

hello imsaiarasi............i like your blog infact i'm a great fan of yours........i came to know your blog through ananda vikatan magazine.....i always feel lightened up after reading your blog.......good work....
keep it up...........

i'm waiting for this story of yours to be updated....

MSK / Saravana said...

S J சூர்யா கதை சொல்ற மாதிரி இருக்கு..
முதல்ல உங்க சொந்த கதையோன்னு நெனச்சேன்..
உங்க INTRO-க்கு அப்பறம் நெனப்ப மாதிக்கிட்டேனு மட்டும் நெனைக்காதீங்க..
;)

//ஓகேங்க. என் வீட்டுக்கார் கூப்பிடறார்.//

இதெல்லாம் ஓவர்.. Too much..

;)

Divyapriya said...

//நிஜத்துல ரொம்ப அமைதியான, அடக்க ஒடுக்கமான மொத்தத்துல பிளாட்டினமான பொண்ணு//

ஹீ ஹீ ஹீ...காலத்துக்கு ஏத்த மாதிரி தங்கத்துக்கு பதிலா பிளாட்டினமா? உங்களுக்கு மட்டும் தான் இப்டி எல்லாம் தோனும்...

நவீன் ப்ரகாஷ் said...

woww...

இம்சை கலக்கலான‌
கதை.. கதை சொல்லற விதம்
ரொம்ம்ப நல்லா இருக்கு...
எப்படிம்மா இப்படியெல்லாம்..? :)))