Tuesday, July 1, 2008

ஐயகோ! பாவம் செய்து விட்டேனே!!

உயிரைக் கொல்றது பாவமாங்க?? என் மனசு என்னவோ பாவம்தானு அடிச்சு சொல்லுது. ஆனா சில நேரங்கள்ல அந்த மனசு எங்கதான் ஓடி ஒளிஞ்சுக்குதுனே தெரியலை. ஹ்ம்ம்ம் :(((

நான் ஸ்கூல் படிக்கும்போது ஹிஸ்டரி புக்ல சமணத் துறவிகள் பத்திப் படிச்சிருக்கேன். அவங்க நடக்கும்போது நடக்கற பாதையை மயிலிறகால கூட்டிக்கிட்டே போவாங்களாம். அதுக்கு என்ன காரணம்னா அவங்க கால் பட்டு வழில இருக்கற எறும்பு, பூச்சி மாதிரி உயிரினங்கள் செத்துப் போயிடக்கூடாதுனு அப்டி பண்ணுவாங்களாம். அப்போ ச்சே! எவ்ளோ க்ரேட் அவங்க-னு தோணுச்சு. அப்போ நாமளும் எந்த உயிரையும் கொல்லக் கூடாதுனு முடிவுப் பண்ணினேன். என்னை எறும்பு கடிச்சாக் கூட அதைப் பிடிச்சு தூரப் போட ஆரம்பிச்சேன். இப்டிலாம் நல்லப் பொண்ணா மாறரதுக்கு பயங்கரமா ட்ரை பண்ணிட்டு இருந்தாலும் ஞாயித்துக் கிழமையானா அம்மா வைக்கற கோழிக் குழம்பு வாசம் கும்முனு வந்து அப்பாவிப் பொண்ணு என்னைய ஒரு உயிரைக் கொன்ன பாவியா மாத்திடும். ஹ்ம்ம்ம். நாமளா கொன்னோம்? இல்லையே.... செத்துப் போனத சாப்பிடறதால நம்மள பாவம் பிடிக்காதுனு சமாதானப்படுத்திக்குவேன்.

அப்போ நான் டியூஷன் படிச்ச சார் என்கிட்ட பயங்கரமா ஆர்க்யூ பண்ணுவார். ஒரு உயிரக் கொன்னு சாப்பிடறியே பாவமில்லையானு. ஹி... ஹி... நான் எங்க சார் கொன்னேன்? கடைல கொன்னு வச்சுடறாங்க. அது வேஸ்ட்டாப் போகக் கூடாதேன்ற ஒரு நல்ல எண்ணத்துலதான் நான் சாப்பிட்டுட்டு இருக்கேன். வேற எந்த ஒரு காரணமும் கிடையாதுனு சொல்லி சமாளிச்சேன். இப்படி சிக்கன் சாப்பிடறதுக்கு மட்டும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சேன். மத்தபடி உயிரை வதைக்கா கொள்கைய கடைபிடிச்சுட்டுதான் இருந்தேன். அப்போதான் என் கொள்கைக்கு இன்னொரு சோதனை வந்துச்சு.

என் இம்சை தாங்க முடியாம எங்கப்பா என்னைக் கொண்டுப் போயி ஹாஸ்டல்ல தள்ளிட்டார். ஹாஸ்டல் பொண்ணுங்கன்னாவே உங்களுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் என்ன ஞாபகத்துக்கு வருமோத் தெரியாது. எனக்கு டக்குனு இந்த பேன் தான் ஞாபகத்துக்கு வரும். அது நாள் வரைக்கும் நான் கஷ்டப்பட்டு சாப்பிட்டு சேர்த்து வச்ச நாலு சொட்டு ரத்தத்தையும் மனசாட்சியே இல்லாம அதும் என் தலைல இருந்துகிட்டே குடிச்சுதுன்னா அதுக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கும் பாருங்களேன். சரி ரெண்டாவது முறையா நம்ம கொள்கைய தளர்த்திக்குவோம்னு முடிவு பண்ணினேன்.

காலேஜ் முடிஞ்சு சென்னைல ப்ராஜக்ட்ன்ற பேருல குப்பை கொட்ட வந்தப்போ நாங்க நாலு பேரு சேர்ந்து வீடு எடுத்து தங்கி இருந்தோம். நாலு பேருல எனக்குதான் ஓரளவு சமையல் தெரியும். அதையே பயங்கரமா பிட்ட போட்டு போட்டு சீஃப் குக் ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை குடுக்க வச்சிட்டேன். ஒரு நாள் சிக்கன் ஆசை வந்து சரி நாமளே செய்வோம்னு ஒரு தைரியத்துல களத்துல இறங்கிட்டோம். நானும் என்னைப் போல வீரமுள்ள இன்னொருத்தியும் சிக்கன் வாங்கலாம்னு கடைக்கு கிளம்பினோம். அரைக் கிலோ சிக்கந்னு சொல்லிட்டு வெயிட் பண்ணிட்டிருந்தப்போதான் அந்த கொடூரமான காட்சியப் பாத்தேன். கோழியோட கழுத்த கீறி விட்டு பாதியா வெட்டி வச்சிருந்த குடத்துக்குள்ள விட்டுட்டாங்க. அது துடி துடினு துடிச்சு இறக்கைய படபடனு அடிச்சுட்டு இருந்துச்சு. அதைப் பாக்க பாக்க எனக்கு ஹார்ட் பீட்டு எகிறுது. என் கழுத்தை அறுத்து விட்ட மாதிரி ஒரு ஃபீலிங். அதோட இறக்கை அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சிவப்பு கலர்ல மாறி கொஞ்ச கொஞ்சமா அதோட துடிப்பு நின்னுடுச்சு. எனக்கு மனசே ஆறலை. ச்சே! இப்படியா ஒரு உயிரை துடிக்க துடிக்க கொன்னு அதை சாப்பிட்டு நம்ம உடம்ப வளக்கணும்னு ஒரே வருத்தம். எப்படியோ கயமுயானு போட்டு சிக்கன் செஞ்சுட்டோம். ஆனா சாப்பிடப் போனப்போ அந்தக் கோழி இறக்கைய அடிச்சுட்டு துடிச்சதே ஞாபகம் வந்து நான் சாப்பிடவே இல்ல. அதுக்கப்புறம் ரொம்ப நாளா சாப்பிடாமலே இருந்தேன். திருப்பி பெங்களூரு வந்ததுக்கப்புறம் ரொம்ப நாள் கழிச்சுதான் அதை மறந்துப் போனதாலோ என்னவோ சாப்பிட ஆரம்பிச்சேன். இப்படியா என் பாவ மூட்டை ஏறிட்டே போறப்போதான் அடுத்த ஒரு கொடுமை நடந்துச்சு.

பெங்களூருல எங்க ரூம் சூப்பரா இருக்கும். திங்க்ஸ் வச்ச இடம் போக மீதி இடம் படுக்கறதுக்கு மட்டும்தான் இருக்கும். இப்படியாப்பட்ட எங்க குட்டி வசந்த மாளிகைல நாங்க ராஜ்ஜியம் பண்ணிட்டிருந்தப்போதான் வில்லனாட்டம் வந்து சேந்துச்சுங்க இந்த கரப்பான் பூச்சிங்க. எனக்கு மொதல்ல எல்லாம் கொள்கை ஞாபகத்துக்கு வந்து அடிக்காம விட்டுடுவேன். கொஞ்ச நாள் போகப் போக அதுங்களோட அட்டூழியம் தாங்க முடியலை. காய், பழம் எல்லாம் கடிச்சு வச்சுட வேண்டியது. துணிங்களுக்குள்ளப் போயி சுகமா தூங்க வேண்டியது. இப்படியே நாசம் பண்ண ஆரம்பிச்சா விடுவோமா? எங்களோட வீரவாளை அட அதாங்க துடைப்பத்தை எடுத்துட்டுப் போருக்குப் புறப்பட்டோம். எதிரிங்களை கண்டுபிடிச்சு துரத்தி துரத்தி அடிச்சுக் கொன்னோம். வேற வழி? கொளகையாவது மண்ணாவது???

தலைல பேனும், வீட்டுல கரப்பான் பூச்சி, எலித் தொல்லையும் இருந்திருந்தா திருவள்ளுவரே ஏன்டா உயிரைக் கொல்வது பாவம்னு எழுதினோம்னு அவரோட 133 அடி சிலை உச்சில இருந்து டகால்னு கடலுக்குள்ள விழுந்து சூசைட் பண்ணிட்டிருந்திருப்பாரு.

என் வீட்டுக்கார் சுத்த சைவம். egg content இருக்கற சாக்லேட் கூட சாப்பிட மாட்டார். என்கிட்ட அடுத்த உயிரைக் கொன்னு சாப்பிடறதுனு சொல்லுவார். ஆனா நான் கண்டுக்கவே மாட்டேன். ஒரு நாள் ரெண்டு பேரும் அனிமல் ப்ளேனட் சேனல் பாத்துட்டு இருந்தோம். ஒரு சிலந்தி வலைல ஒரு தேள் மாட்டிக்கிச்சு. அந்த சிலந்தி அதைக் கொட்டிக் கொட்டி கொல்ல ஆரம்பிச்சது. என்னால பாக்க முடியல. அய்யோ அது உயிரோட இருக்கைலயே அதை அப்டி கொட்டி கொட்டி சாப்பிட ஆரம்பிச்சா அந்த தேளுக்கு எப்படி இருக்கும்னு சொல்லிக்கிட்டே கண்ணை இறுக்க மூடிக்கிட்டு சேனலை மாத்துங்கனு சொன்னேன். உடனே வேகமா என்கிட்டத் திரும்பி அப்போ கோழி உயிரோட இருக்கும்போதே அதோட கழுத்த அறுத்தா அதுக்கு எப்படி இருக்கும்னு கேட்டாரேப் பாக்கலாம். நான் எதுமே பேசாம நைசா எஸ் ஆகப் பாத்தேன். பதில சொல்லுனு சொல்லி அவர் சிரிக்கவும் எனக்கு சுறுசுறுனு ஏறுச்சு. இங்கப் பாருங்க. சிங்கம் புல்ல சாப்பிடாது. அது விலங்குகளை வேட்டையாடி சாப்பிடணும்ன்றதுதான் அதுக்கு எழுதி வச்சிருக்கு. அப்படி பாவம் பாத்து சாப்பிடாம விட்டா அது செத்துப் போயிடும். அதுக்காக சிங்கம் பாவம் செய்யுதுனு அர்த்தம் இல்ல. அதே மாதிரிதான் நாமளும் மாமிசப் பட்சிணிகள். சோ நாம சாப்பிடறது ஒண்ணும் தப்பில்ல அப்டி இப்டினு ஏதேதோ உளறி எஸ் ஆயிட்டேன்.

சைவமா மாறிடலாம்னு நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டு இருக்கேன். ஆனா முடிய மாட்டேன்றது. என்னதான் சொல்லுங்க. இந்த பெப்பர் சிக்கன நினைச்சாலே நாக்கு ஊறுது. என்னதான் சமாதானத்துக்கு காரணம் சொல்லிக்கிட்டாலும் மனசு இப்பொல்லாம் கஷ்டமா இருக்கு. கூடிய சீக்கிரம் வெஜிடெரியனா மாறிடுவேன்னு நம்பிட்டு இருக்கேன் :)))

19 comments:

ஜே கே | J K said...

எத்தனை தடவ முடிவ எடுத்து எத்தன தடவ மாத்தறது...

முடியல விட்ரு இம்சை.

டேக் இட் ஈஸி...

VIKNESHWARAN said...

//செத்துப் போனத சாப்பிடறதால நம்மள பாவம் பிடிக்காதுனு சமாதானப்படுத்திக்குவேன்.//

கொன்றால் பாவன் தின்றால் போச்சு...

ஜே கே | J K said...

//என்னதான் சொல்லுங்க. இந்த பெப்பர் சிக்கன நினைச்சாலே நாக்கு ஊறுது. //

//கூடிய சீக்கிரம் வெஜிடெரியனா மாறிடுவேன்னு நம்பிட்டு இருக்கேன் :)))//

:)))

வெண்பூ said...

// சீக்கிரம் வெஜிடெரியனா மாறிடுவேன்னு நம்பிட்டு இருக்கேன்//

எதுக்கோசரம்னு கேக்குறேன்? நான்லாம் சுத்தமான அசைவ பார்ட்டி. ஹோட்டலுக்கு போனா நான் திங்கற ஒரே சைவ ஐட்டம் ஐஸ்கிரீம்தான். அதிலயும் கொஞ்ச வருசம் ஹைதராபாத்ல இருந்ததுல அந்த ஹைதராபாத் பிரியாணிக்கு என் நாக்கு அடிமையாயிடுச்சி. ம்ம்ம்ம் என்ன சொல்லி என்ன பண்ண? நான் அசைவம் சாப்பிடறதப் பாத்து எல்லாரும் கண்ணு வச்சதுல எனக்கு வாய்ச்ச தர்மபத்தினி சுத்த சைவமா போயிட்டாங்க. இப்பல்லாம் எப்பவாவது வெளிய போறப்பதான் எனக்கு அசைவம். உங்க கதையும் அதேதான்னு நினைக்கிறேன். ஒருவேளை உங்க அவர் அசைவமா இருந்தா உங்களுக்கு இந்த நினைப்பு வந்திருக்காதோ?

கயல்விழி முத்துலெட்சுமி said...

எத்தனை நல்ல பொண்ணும்மா நீ.. உன் மனசாட்சி தான் அடிக்கடி ஒளிஞ்சு பிடிச்சு விளையாடுது.. ஒருநாள் வந்து நானிருக்கேன் வெஜ் ஆகுன்னும் இன்னொருநாள் ஒளிஞ்சுகிட்டு சிக்கன் சாப்புடுன்னும் சொல்லவைக்குது.. நீ என்ன பண்ணுவ? :)

ஆயில்யன் said...

//கோழி உயிரோட இருக்கும்போதே அதோட கழுத்த அறுத்தா அதுக்கு எப்படி இருக்கும்னு கேட்டாரேப் பாக்கலாம்.///

மாமோய்..! நாமெல்லாம் கீரீன் குரூப்புல்ல!

போனா போகட்டும் விடுங்க அக்கா ஆட்டோமேடிக்கா மாறி வந்துடுவாங்க!

:))))))

விஜய் said...

\\என்னை எறும்பு கடிச்சாக் கூட அதைப் பிடிச்சு தூரப் போட ஆரம்பிச்சேன். \\
எங்க வீட்டு உத்தரத்திலே கொசு உட்கார்ந்திருந்தாலும் கூட ஸ்டூல் போட்டு ஏறிப் போய் அடிச்சுட்டுத் தான் மறு வேலை.

\\கோழியோட கழுத்த கீறி விட்டு பாதியா வெட்டி வச்சிருந்த \\
என்னால இதுக்கு மேல உங்க 'description'னை படிக்க முடியலை

ரசிகன் said...

//கண்ணை இறுக்க மூடிக்கிட்டு சேனலை மாத்துங்கனு சொன்னேன். உடனே வேகமா என்கிட்டத் திரும்பி அப்போ கோழி உயிரோட இருக்கும்போதே அதோட கழுத்த அறுத்தா அதுக்கு எப்படி இருக்கும்னு கேட்டாரேப் பாக்கலாம்.//

இதை நான் நம்ப மாட்டேன். எங்க ஜெயந்திய எதிர்த்து பேசற அளவு இன்னும் தைரியமா இருக்காரா மாப்பிள்ளை?:P

rapp said...

சூப்பர் பதிவுங்க. கிட்டத்தட்ட இதே மாதிரி veg versus nonvegnu ஒன்னை நான் போடலாம்னு நெனச்சிருந்தேன், நீங்க போட்டுட்டீங்க. நிஜமாகவே சூப்பர். ஆஹா, எனக்கும் ஹாஸ்டல் பெண்கள்னா முதல்ல பேன் தாங்க ஞாபகத்துக்கு வரும். டே ஸ்காலரான நான் இவங்களாலே நெறயப் பாடுபட்டிருக்கேன். ஆனாலும் கடியான க்லாஸ்களின் போது திருட்டுத்தனமா உள்ள நுழைஞ்சு பிரண்ட்ஸ் ரூம்ல தூங்கலாம், லைப்ரரி புக்ஸ திருட்டுத்தனமா ஸ்டோர் பண்ணி வெக்கலாம், இந்த மாதிரி பல வசதிகள் இருந்ததால அவங்களை யாரும் நக்கலடிச்சு பகைச்சுக்க மாட்டோம். சூப்பர் பதிவு வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

//கூடிய சீக்கிரம் வெஜிடெரியனா மாறிடுவேன்னு நம்பிட்டு இருக்கேன் :)))//

நடக்கட்டும், கூடிய சீக்கிரம் வெஜிடெரியனா மாறிடுவேன்னு பயமாக இருக்குன்னு சொல்லாதவரை பாராட்டுக்கள் !
:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

எடுத்த முடிவை நிறைவேற்ற வாழ்த்துக்கள். :-)

Sathiya said...

//கொன்றால் பாவன் தின்றால் போச்சு...//
இதையே தான் எங்க வீட்டுலையும் சொல்லுவாங்க!

//கோழியோட கழுத்த கீறி விட்டு பாதியா வெட்டி வச்சிருந்த குடத்துக்குள்ள விட்டுட்டாங்க//
இதுக்கே பயந்தா எப்படி? ஆட வெட்டுறத பாருங்க, கண்டிப்பா மாமிசம் சாப்பிட மாட்டீங்க. அதோட கழுத்த அறுத்து படுக்க வச்சு இரத்தத்த ஒரு தட்டுல பிடிப்பாங்க. அதையும் விற்க தான். அப்போ அது அம்மானு பரிதாபமா கத்தும் பாருங்க:( நான் சின்ன வயசுல வாரா வாரம் பார்த்ததுனால எனக்கு பழகி போச்சு;)

புதுகைத் தென்றல் said...

கல்யாணம் ஆனதிலேர்ந்து பாக்கறேன், ஒவ்வொரு பதிவிலையும் அயித்தானைப் பத்தி ஒரு வரி எழுதாம பதிவு போடறது இல்லை.

கல்யாணத்துக்கு கங்கணம் கட்டியபோது இதுக்கும் சேர்த்து நேந்துகிட்டீங்களோ!!!!!!!!

:))))))))))))))))))))

ஜி said...

:))) vaazththukkal

Thamizhmaangani said...

//இந்த பெப்பர் சிக்கன நினைச்சாலே நாக்கு ஊறுது//

நூற்றுல ஒரு வார்த்தை!

Syam said...

//கூடிய சீக்கிரம் வெஜிடெரியனா மாறிடுவேன்னு நம்பிட்டு இருக்கேன்//

இது பிள்ளையார் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்ன மாதிரி இருக்கு....நாங்களும் நம்பிட்டோம்
:-)

Anonymous said...

No way, JJ. Saivama maarina nee enakku kodutha vaakku enna aaradhu??? - Arun

நாமக்கல் சிபி said...

//என்னதான் சொல்லுங்க. இந்த பெப்பர் சிக்கன நினைச்சாலே நாக்கு ஊறுது. //

//கூடிய சீக்கிரம் வெஜிடெரியனா மாறிடுவேன்னு நம்பிட்டு இருக்கேன் :)))//

:)))

நாமக்கல் சிபி said...

/கல்யாணம் ஆனதிலேர்ந்து பாக்கறேன், ஒவ்வொரு பதிவிலையும் அயித்தானைப் பத்தி ஒரு வரி எழுதாம பதிவு போடறது இல்லை.

கல்யாணத்துக்கு கங்கணம் கட்டியபோது இதுக்கும் சேர்த்து நேந்துகிட்டீங்களோ!!!!!!!!

:))))))))))))))))))))//

ரிப்பீட்டு!