Monday, July 14, 2008

திண்ணை

ரெண்டு பேரு க்ரூப் சாட் போட்டு நம்ம அரை மணி நேரத்த சாப்பிட்டுட்டு மெதுவா திண்ணையப் பத்தி எதாச்சும் எழுதுங்கோ அக்கா-ன்னு மெதுவா கேட்டாங்க. அவ்ளோ நேரமா பேசிட்டு இருந்ததுல சரி பாசக்கார பயபுள்ளக கேட்டுட்டாங்க. ஸ்ரீ-ன்னு ஒரு பொண்ணு வேற நம்மள tag பண்ணிட்டாங்க. என்ன ஆயிடப் போவுது எழுதிடலாம்னு உக்காந்து யோசிச்சப்போதான் அந்த ஒரு பகிங்கரமான உண்மை படார்னு என்னை அறைஞ்சது. ச்சே! எதுக்கு இந்த பில்ட் அப் இம்சை? ஒழுங்கா சொல்லு...

அட ஆமாங்க... நான் நாலாவது படிச்ச வரைக்கும் ஒரு வீட்டுல குடி இருந்தோம். அந்த வீட்டுல மட்டும்தான் திண்ணை இருந்துச்சு. அதுக்கப்புறம் நாங்க இருந்த எந்த வீட்டுலயும் திண்ணையே இல்ல. என்ன கொடுமை இம்சை இது??? இதை வச்சு எப்படி எழுதறது? இப்படியெல்லாம் மானிட்டரையே பாத்து முறைச்சுட்டே இருந்ததுல அந்த திண்ணைல நடந்த கதையெல்லாம் கொசுவத்தி சுத்திட்டு வந்துச்சு. ஹி... ஹி... நமக்கு தான் நம்ம LKG வயசுல நடந்தது கூட ஞாபகம் இருக்குமே. அப்புறம் எப்டி இது மட்டும் மறந்துப் போகும்?? சரி நம்ம திண்ணைக் கதைக்கு போவோம்.

ஒன்ஸ் அப்பான் எ டைம் லாங் லாங் அகோ நாங்க குடியிருந்த ஒரு வீட்டுல வாசலுக்கு ரெண்டுப் பக்கமும் திண்ணை இருந்துச்சு. ஒரு மாதிரி மெரூன் கலர்ல பெயிண்ட் பண்ணீயிருப்பாங்க. வாசலுக்கு வலதுப் பக்கம் இருக்க திண்ணை நீளமா இருக்கும். இடதுப் பக்கம் இருக்கறது கொஞ்சம் நீளம் கம்மியா இருக்கும். அந்த பெரிய திண்ணைக்கு எனக்கும் என் தம்பிக்கும் சண்டை வரும். காலைல எழுந்து ப்ரஷ் பண்ணினதும் அம்மா தர காபிய வாங்கிகிட்டு வேக வேகமா போவோம் பெரிய திண்ணையப் பிடிக்க. அதுலப் போய் உக்காந்து ஒரு வெற்றி சிரிப்போட பெருமையா காபிக் குடிப்பேன். பாவம் அவன் சின்ன பையன்றதால என்கிட்ட ரொம்ப தோத்துப் போவான்.

எங்க எதிர்த்த வீட்டுல எங்களை மாதிரியே ஒரு அண்ணன் தங்கச்சி இருந்தாங்க. மகேந்திரன், கோமதினு பேரு. கோமதி என் செட்டுப் பொண்ணு. எனக்கும்(என் தம்பி யார்ட்டயும் சண்டை போட மாட்டான்) அவங்க ரெண்டு பேருல யாருக்குமாச்சும் சண்டை வந்து டூ விட்டுக்கிட்டா அவங்க வந்து எங்க திண்ணைல உக்காரக் கூடாது. நாங்க ரெண்டுப் பேரும் அவங்க திண்ணைக்கு போக மாட்டோம். இது எங்க எழுதப்படாத சட்டம். பழம் விடறப்போ யார் போய் பழம் விடறாங்களோ அவங்க வீட்டுத் திண்ணைலதான் உக்காந்து விளையாடுவோம்.

எங்க திண்ணைக்கு அடில ஆத்து மணல் கொட்டி வச்சிருந்தாங்க. அதுல கோவில் கட்டி வீட்டுல இருந்த பிஸ்கட், நொறுக்குத் தீனி எல்லாம் வச்சு சாமிக்குப் படைச்சு விளையாடுவோம். திண்ணை மேல ஒரு பக்கட் தண்ணி வச்சு அது மேல போற கம்பில ஒரு கொட்டாங்குச்சி கட்டின கயிறு விட்டு தண்ணி சேந்தி விளையாடுவோம். அச்சாங்கல், பல்லாங்குழி-னு என் சின்ன வயசு விளையாட்டுக்கெல்லாம் அந்த திண்ணைதான் ப்ளே க்ரவுண்டு.

நான் மண்டிப் போட்டு ஸ்லேட்டுல அ, ஆ... A, B, C, D... எழுதக் கத்துக்கிட்டது எல்லாம் அந்த திண்ணைலதான். ட்ராயிங் கத்துக்க ஆரம்பிச்சப்ப, கோலம் போட ஆசைப்பட்டப்ப எல்லாம் மொதல்ல தேடி ஓடினது அந்த திண்ணையதான். அம்மா திட்டினப்போ, அப்பா சாப்பிட சொல்லி மிரட்டினப்போ தஞ்சம் புகுந்ததும் அந்த திண்ணைகிட்டதான். இப்படி என் ஃப்ரெண்ட் மாதிரி இருந்த திண்ணைய் பிரிஞ்சுப் போனப்போ அப்போ ஒண்ணும் தெரியலை. திரும்ப ஒரு தடவை அந்தப் பக்கம் கோமதியப் பாக்க போக நேர்ந்தப்போ பூட்டியிருந்த அந்த காலி வீட்டுத் திண்ணைலப் போயி கொஞ்ச நேரம் உக்காந்துட்டு வந்தேன். ஏன் அப்படி பண்ணீனேனு இன்னமும் தெரியலை. ஹ்ம்ம்ம்... அதுக்கப்புறம் திண்ணையோட நட்பு எனக்கு வாழ்க்கைல கிடைக்கவே இல்ல.

ஒரு தடவை எங்கம்மாகிட்ட கேட்டேன். "கோமதி வீட்டுல, சாந்தி அக்கா வீட்டுல, சந்திரா அக்கா வீட்டுல, ராஜா அண்ணா வீட்டுலனு எல்லார் வீட்டுலயும் திண்ணை இருக்கே. எதுக்கங்கம்மா வீட்டுக்கு திண்ணை வச்சுக் கட்டி இருக்காங்க?"-னு. அதுக்கு எங்கம்மா "அந்தக் காலத்துல இப்படி சைக்கிள், பைக், கார்னு எதுமே கிடையாது. எல்லாரும் நடந்துதான் போவாங்க. வழில கால் வலிச்சோ இல்ல வேற எதுக்காகவோ உக்காரணும்னு நினைச்சா இடம் வேணும் இல்லையா? அதுக்காகதான் வழிப் போக்கர்கள் உக்காந்து ரெஸ்ட் எடுத்துட்டுப் போறதுக்காக அப்படிக் கட்டினாங்க"-னு சொன்னாங்க.

இந்தக் காலத்துல கண்ணு முன்னாடியே உயிருக்குப் போரடினாக் கூட நமக்கென்னனு கண்டும் காணாமப் போறவங்க வழிப் போக்கர்கள் உக்காரட்டும்னா பாக்கப் போறாங்க? இப்போ திண்ணை வச்சுக் கட்டற பழக்கம் இல்லாமப் போனதுக்கு இதும் கூட ஒரு காரணமா இருக்கலாம். ஹ்ம்ம்ம்...

சரிங்க... கொசுவத்தி சுத்தி சுத்தி கண்ணுல அந்த திண்ணையேதான் தெரியுது. அடுத்த தடவை ஊருக்குப் போகும்போது கண்டிப்பா போய் ஒரு அஞ்சு நிமிஷமாவது உக்காந்திருந்துட்டு வரணும்னு நினைச்சுட்டு இருக்கேன். இப்போ என் முறையா???

இந்தப் பதிவு எழுத சொல்லி க்ரூப் சாட்ல சொன்ன, என்னோட எல்லாப் படைப்புகளையும் ரசிச்சு விமர்சனம் பண்ற, ப்ளாக் ஆரம்பிச்சு பேருக்கு நாலு போஸ்ட் போட்டுட்டு அதுக்கப்புறம் தலை வச்சுப் படுக்காமலே இருக்கும் என் அன்பு தங்கச்சி வைதேகி... திண்ணைப் பதிவு மூலமா ரீஎன்ட்ரி கொடுடா செல்லம் :)))

ரெண்டுப் பேர பண்ணனுமாம். இன்னொருத்தர் யாரைப் பண்றது??? அடடா... அமெரிக்கால உக்காந்துக்கிட்டு அமெரிக்க மாப்பிள்ளை கதை எழுதி திரிஞ்சுட்டு இருக்கற நம்ம ஜி-ய சும்மா விடலாமா? யப்பா பூட்சு போட்ட பூனையாரே. எழுதிடுங்க :)))

10 comments:

ஆயில்யன் said...

படிக்க ரொம்ப மனசுக்கு இதமா பழைய நினைவுகளை தட்டி தட்டி எழுப்பிக்கிட்டிருக்கிது :)

நல்லா இருக்கு அக்கா! :))

ஜி said...

ஹலோ மேடம்... உங்கள எழுத சொன்னாங்கன்னா நீங்க மட்டும் எழுதிட்டு சும்மா போக வேண்டியதுதானே?? எதுக்கு உங்களுக்கு இந்த நல்லெண்ணம்?? இனி இதுக்கும் உக்காந்து யோசிக்கனுமா?? :((((

rapp said...

ஆஹா கலக்கிட்டீங்க, சூப்பர். விரைவில் ஊருக்குச்சென்று திண்ணையை பார்த்து வர வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றி அக்கா எழுதினதுக்கு..!! :-)
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க‌..!! :-)

Sathiya said...

//இந்தக் காலத்துல கண்ணு முன்னாடியே உயிருக்குப் போரடினாக் கூட நமக்கென்னனு கண்டும் காணாமப் போறவங்க வழிப் போக்கர்கள் உக்காரட்டும்னா பாக்கப் போறாங்க? இப்போ திண்ணை வச்சுக் கட்டற பழக்கம் இல்லாமப் போனதுக்கு இதும் கூட ஒரு காரணமா இருக்கலாம். ஹ்ம்ம்ம்...//
இப்போவெல்லாம் வீட்டு பக்கமா நாலு தடவை நடந்து நோட்டம் விட்டுட்டு, பின்னால ஸ்கெட்ச் போட்டு உள்ள புகுந்து எல்லாத்தையும் லவ்டிட்டு போயிடறாங்க. இதுல திண்ணை வேற வச்சு கட்டுனா என்னா ஆவறது?

புதுகை.அப்துல்லா said...

சூப்பர் கொசுவத்தி.

//அடுத்த தடவை ஊருக்குப் போகும்போது கண்டிப்பா போய் ஒரு அஞ்சு நிமிஷமாவது உக்காந்திருந்துட்டு வரணும்னு நினைச்சுட்டு இருக்கேன்//

எந்த ஊரு அக்கா?

ரசிகன் said...

//ரெண்டுப் பேர பண்ணனுமாம். இன்னொருத்தர் யாரைப் பண்றது??? //

ரெண்டு பேரை (கொடுமை)பண்ணனுமால்ல.. ஒரு ஆளுதானே சொல்லியிருக்கிங்க..அப்போ இன்னொருத்தர்?

(ஹலோ..அந்த இன்னொருத்தர்தான் இவர்ன்னெல்லாம் சொல்லப்டாது...:P)

புகழன் said...

திண்ணை டேக் இன்னும் முடியலயா?

Vijay said...

எங்க தாத்தா வீட்டில் திண்ணை உண்டு. அங்கே எல்லோர் வீட்டிலும் திண்ணையிருக்கும். சாயங்கால வேளையிலே அங்கே உட்கார்ந்து கதையடிப்பது, கோடைநாட்களில் பெரும்பாலும் படுக்கை திண்ணியிலே தான். உங்கள் பதிவைப் படித்த பிறகு எனக்கும் கூட திண்ணை வைத்து வீடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் வந்து விட்டது.

Dinesh Jayaraj said...

ஹைய்யா.. நான் தான் ஃபஸ்டு.. உங்க தம்பி உண்மையிலேயே பாவம் அக்கோவ்.. உங்க வீட்டு திண்ணையில எத்தனை வழிப்போக்கர்கள் உக்காந்துட்டுப் போனதா பார்த்த ஞாபகம்? நீங்க வீடு கட்டினா திண்ணை வச்சு கட்டுவீங்களா?