நம்ம காதல் முரசு அருட்பெருங்கோ இருக்காரே.... சும்மாவே இருக்க மாட்டாரு. எதாவது ஒரு சிக்கல்ல மாட்டிக்க வேண்டியது. அப்புறம் நான் நிம்மதியா இருக்கறது பிடிக்காம என்னையும் மாட்டி விட வேண்டியது. இப்ப "காதலெனப்படுவது யாதெனில்"-ன்ற தலைப்புல எதாச்சும் எழுதுங்கனு மாட்டி விட்டுட்டாரு. இவ்வளவு அழகான தலைப்ப வச்சு சோகமா எழுதுனதே பெரிய தப்பு. இதுல என்னை வேற மாட்டி விட்டு இன்னும் பெரிய தப்பு பண்ணிட்டாரு... ஹி... ஹி... நாமதான் எந்த தலைப்புக் கிடைச்சாலும் அதை கொலைப் பண்ணாம விட மாட்டோமில்ல... மேடம் இதை வச்சு ஒரு கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்காங்க... தேறுமானு சொல்லிட்டுப் போங்கப்பூ....
******************************************
காதலெனப்படுவது யாதெனில்...
இதற்கு மேல் தொடரத்
தெரியவில்லை
உன்னைக் காணும் முன்பு...
எத்தனையோ விளக்கங்கள்
எத்தனையோ செய்திகள்
முன்பு கேட்டிருந்தாலும்
ஒரு புரிதல் இல்லாமலே நான்...
சொல்லவொண்ணா சோகங்களில்
நில்லாமல் வழிந்த விழிநீரில்
மனம் கசிந்து என்னுடன்
உனதிருப்பை உணர்த்திய
உன் உள்ளங்கையின்
மௌன மொழியா காதல்?
சிறு பிள்ளையாய்
அடம் பிடிக்கும் சமயங்களில்
விளையாட்டாய் சண்டையிட்டு
முகம் சுருங்கும் என்னை
ஆதரவாய் இழுத்தணைக்கும்
அணைப்பின் சுகமா காதல்?
கிண்டல்களில் துளிர்க்கும்
கோபங்களை ரசித்து
விடைத்த மூக்கில்
குறும்பாய் நீ வைக்கும்
முத்தத்தின் ஈரப்பதமா காதல்?
எழவும் துணிவற்ற
நலமிழந்த தருணங்களில்
நொடியும் பிரியாமல்
அடைகாக்கும் கோழியாய்
எனை கவனித்த உன்
உள்ளத்தின் தாய்மையா காதல்?
தனித்திருக்கும் பொழுதுகளில்
இதமாய் அணைத்து
காதுமடலில் மெலிதாய்
சூடுப் பரப்பிச் செல்லும்
முத்தங்களின் ஸ்பரிசங்களா காதல்?
உனைப் பிரிகையில்
எனையும் அறியாமல்
துளிர்க்கும் நீரைக் கண்டு
கூடாதென்று எவருமறியாமல்
சொல்லும் உன் சைகையில்
பொதிந்த அரவணைப்பா காதல்?
என்னாயிற்று எனக்கு?
சுருங்க சொல்லாமல்
விவரித்துக் கொண்டிருக்கிறேனே!!
காதலெனப்படுவது யாதெனில்
அன்பே நீதான்.... நீ மட்டும்தான்....
******************************************அப்பாடா.... ஒரு வழியா தலைல விழுந்த பொறுப்பை சரியாவோ மொக்கையாவோ செஞ்சாச்சு... இனி அடுத்தவங்க தலைல கட்ட வேண்டியதுதான். யார் தலைல கட்டலாம்??? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....................(யோசிக்கிறேன் ;))))
நம்ம அண்ணன் இருக்கும்போது வேற யாரைப் போயி tag பண்றது?? ஹி... ஹி... நம்ம வெண்பா வாத்தி, ஃப்ரொபஷனல் கொரியர், என் அருமை பாசமலர் அண்ணா ஜீவ்ஸை இதை தொடர அழைக்கிறேன்.....
ஸ்ஸ்ஸ்ஸ்..... அப்பா.... சோடா எங்க? சோடா எங்க?? ;)))
34 comments:
இன்னும் காதல் தரும் மயக்கத்தில் மட்டும் இருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். காதல் திருமணம் செய்து கொண்டு 2, 3 வருடங்களுக்கு பிறகு இந்த கவிதை மாதிரி ஒரு கவிதையை நீங்களோ / உங்கள் பார்ட்னரோ எழுத இயலுமா..?
//என்னாயிற்று எனக்கு?
சுருங்க சொல்லாமல்
விவரித்துக் கொண்டிருக்கிறேனே!!
காதலெனப்படுவது யாதெனில்
அன்பே நீதான்.... நீ மட்டும்தான்.... //
சூப்பர்!
அடுத்து ஜீவ்ஸ் அண்ணாச்சியா! அவரு ஃபோட்டோவுலயே படம் காட்டிடுவாரு!
நல்லாருக்கு!
போட்டோல இருக்க மாப்பிள்ளை மருதாணி வெச்சிருக்காரே, அவரு வட இந்தியரா, தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு ஒரு கவிதயப் படிச்சாலும் ஒன்னுமே வெளங்காது
"காதலெனப்படுவது யாதெனில்...",,, கவிதை சூப்பர்!,, இம்சை அரசி
அனுபவ கவிதை அழகு. :-P மேலும் தொடர, நாளும் நிலைக்க வாழ்த்துகள்!
இதுக்கு நான் தான் மாட்டினேனா ?
ஆமா என்னமோ கட்டுரைய உடைச்சுப் போட்டிருக்கியே என்னாதிது ? கட்டுரைன்னா இப்படி எழுதப் படாதுன்னா படாது தான்.
//காதலெனப்படுவது யாதெனில்
அன்பே நீதான்.... நீ மட்டும்தான்....//
நன்றாக இருக்கிறது... :-)
அழகான கவிதை!
அனுபவம் பேசுது வேற என்னத்தச்சொல்ல?
கற்பனையில் உதித்த வார்த்தைகளா???
அல்ல!
களம்கண்டு ஆழ்ந்துணர்ந்த களிப்பான கணங்கள்,
கவிதை வரிகளாய் பிரசவித்திருக்கிறது...
\\எழவும் துணிவற்றநலமிழந்த தருணங்களில்நொடியும் பிரியாமல்அடைகாக்கும் கோழியாய்எனை கவனித்த உன்உள்ளத்தின் தாய்மையா காதல்?\\
அழகான வரிகள்
ஆழமான கருத்துக்கள்
வாழ்த்துக்கள்!!
உங்கள் பதிவுகள் படித்தேன்.. மிக அருமையாய் இருந்தது அனைத்தும்..
உங்கள் கவிதைகள், குறிப்பாய் உங்கள் கதைகள், பேசும் நடையில் எழுதுவது என அனைத்தும் மிக்க அருமை..
மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..
மீண்டும் சந்திப்போம்.. இனி ஒவ்வொரு பதிவுலும்..
:)
இப்பதிவை அருட்பெருங்கோ பதிவுலிருந்து தொடர்ந்து இங்கே வந்தேன்..
உங்கள் கவிதை மிக அருமை..
இப்பதிவின் pic (love pic) அழகாய் இருக்கிறது..
//காதலெனப்படுவது யாதெனில்
அன்பே நீதான்.... நீ மட்டும்தான்.... //
இது மட்டிலும் சரி... இப்படி சுருக்கமா சொன்னால்தானே புரியும் :)
இனிமேல் முழு கவிதையும் வாசிக்கனும் :P
இம்சை அரசி பேரு வச்சுக்கிட்டு,பதிவு போடுறதுல மட்டும் இன்ப ராணியா இருக்கீங்க....கவிதை பிரமாதம்.......
சூப்பரு...
அழகழகான தருணங்கள்...
நடந்த விஷேசத்துக்கு பிறகு ரொமான்ஸ் தூக்கலாருக்கு...;)
முதல் மூன்று பதிவுகளும் காதல் பதிவர்களை கடந்து வந்ததில் நெஞ்சு நிரம்பியிருக்கிறது...
இந்த தொடரை குறைஞ்சது 100 பேராவது எழுதணும் என்ன ஒரு அற்புதமான தலைப்பு...
பொங்கட்டும் காதல்!
காதல்முரசு அருட்பெருங்கோ சொன்னது...
///அனுபவ கவிதை அழகு. :-P மேலும் தொடர, நாளும் நிலைக்க வாழ்த்துகள்!///
ரிப்பீட்டு...
காதல் நிரம்பி வழிகிறது...
//காதலெனப்படுவது யாதெனில்
அன்பே நீதான்.... நீ மட்டும்தான்....//
'நீ'யிற்கு சொந்தகாரர் எவரோ???
காதலில் டாக்டர் பட்டம் கொடுக்கலாம் போல
காதல் நிரம்பி வழிகிறது...
Really Romantic....
கவிதை மிக அருமையா இருக்கு இம்சை அரசி,
வாழ்த்துக்கள்;)
//உனைப் பிரிகையில்
எனையும் அறியாமல்
துளிர்க்கும் நீரைக் கண்டு
கூடாதென்று எவருமறியாமல்
சொல்லும் உன் சைகையில்
பொதிந்த அரவணைப்பா காதல்?//
.... அழகும் ஆழமும் அருமை.. !!
வாழ்த்துக்கள் அக்கா!! ;)
ரொம்ப நல்லாருக்குங்க கவிதை.
வாம்மா இம்சை..
சொல்லும் அழகு..
சொல்லாடலும் அழகு..
கூட்டியுள்ள கவிதையும் அழகு..
அனுபவமே எழுதுகிறது என்கிறபோது அழகில்லாமல் வேறென்ன..
வாழ்க வளமுடன்
ரொம்ப நல்லாருக்குங்க கவிதை.
ரொம்ப நல்லாருக்குங்க கவிதை.
Post a Comment