Monday, June 30, 2008

காதல் நீதானா?!! - II

எந்தவித சலனமும் காட்டாமல் அவனது கைகளில் இருந்து பத்திரிக்கையை வாங்கியவள் முகத்தில் மெலிதாய் புன்னகை விரிய ஆவலுடன் பிரித்துப் பார்த்தாள்.

"காலம் தோறும் கவிதைகளில் உதிர்ந்து கிடக்கும் காதல் இறகுகளையும் வாழ்வின் கனவுகளையும் கோர்த்துக்கொண்டு

மைதிலி ஸ்ரீதர் ஒரு சிறகாகவும்

மகேஷ் ராஜசேகர் மறு சிறகாகவும் மாறிட

ஒரு காதல் பறவை ஜனிக்க இருக்கிறது.

காதல் பயணம் துவங்கும் இப்புதிய பறவையினை வரவேற்று சிறகுகளை வாழ்த்த

இடம் : கொங்கு திருமண மண்டபம், ஈரோடு
நாள் : ஆகஸ்ட் 21, 2008 பகல் 12 முதல் 3 வரை
காற்றுவெளியின் கடைசித்துளி வரை
எங்கள் பயணம் கவிதையென இனித்திட
உங்கள் வருகையினாலும் வாழ்த்துகளாலும்
வலிமை பெற்றுக்கொள்ள அழைக்கும்…

இரு சிறகுகள்,
மைதிலி & மகேஷ்" ( நன்றி அருட்பெருங்கோ)


"ஹேய்ய்ய்ய்ய்!!! ரொம்ப சூப்பரா இருக்குடா... ப்ளீஸ்டா எனக்கு கொஞ்சம் பத்திரிக்கை குடு. ப்ளீஸ் ப்ளீஸ்... என் ஃப்ரெண்ட்ஸ்க்கு குடுக்க மட்டும் ப்ளீஸ்" என்று அவனிடம் கெஞ்சினாள்.

"ரொம்ப ப்ளீஸ் போடாத... நீ என்ன சொன்னாலும் தர மாட்டேன். மேடம் பெருசா இங்லிபிஷ்ல தான் அடிப்பேனு ஓவரா டயலாகெல்லாம் விட்டீங்க. இப்போ மட்டு என்ன வந்துச்சாம்??"

"ஏ ப்ளீஸ்! எங்க ஆபிஸ்ல இருக்கற சப்பாத்திங்களுக்கெல்லாமும் தரணும்னுதான் ஒரே இதா இங்க்லிஷ்லயே போட்டுடலாம்னு சொன்னேன். நீ என்னன்னா ஓவரா பந்தா விடற. சரி போ. எனக்கொண்ணும் வேணாம்" என்று அவள் கோபித்துக் கொள்ள

"கோவிச்சுக்கிட்டா நான் தந்துடுவேனு நினைக்கறியா? ஹி... ஹி..." என்று சிரித்தான்.

"இரு இப்போவே அத்தைக்கு ஃபோன் பண்ணி சொல்றேன்" என்று அவளது ஃபோனை எடுக்க

"அய்யய்யோ! அம்மா தாயே... மாமியாரும் மருமகளும் சேந்து பண்ற கொடுமை என்னால தாங்க முடியலை. தரேன் தரேன். நீ அடிச்சதுல ஒரு இருபது பத்திரிக்கை எனக்குக் குடு. ஆபிஸ்ல கொடுக்கறதுக்கு" என்று அவளது ஃபோனை வாங்கி வைத்தான்.

"ஹ்ம்ம்ம்ம்.... அப்படி வா வழிக்கு என்று புன்னகைத்தாள்.

இரண்டு மாதங்கள் கழித்து...

அறையெங்கும் பூவாசத்தில் மிதந்திருக்க அதன் வாசனையை அனுபவித்தாலும் இதயம் ஏனோ ஒருவித பயத்தில் வேகமாக அடித்துக் கொண்டது மைதிலிக்கு. முதல் பார்வையிலேயே பிடித்துப் போனவன்தான். பழகிய பின் வெகு அழகாய் தன்னுள் காதலை ஒரு பூப்போல மலரச் செய்தவன்தான். காதலை வெகு இயல்பாய் எடுத்து சொல்லி தனது காதலை அங்கீகரித்தவன்தான். திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அவளை வீட்டில் பேச வைத்தவன்தான். எங்கும் எப்போதும் தன்னை நிழல் போலத் தொடர்ந்தவன்தான். நேற்றுவரை ஒரு குறும்புப் பெண்ணாய் சுற்றிக் கொண்டிருந்தவளை வெட்கச் செய்து அமைதியாய் இன்று காலையில் கரம் பிடித்தவன்தான். என்றாலும் இன்று புதிதாய் பார்ப்பதுப் போல ஒரு இனம் புரியாத பயம் மனதைப் பிசைகிறதே...

அருகில் நிழலாட மெல்ல நிமிர்ந்துப் பார்த்தாள். அவள் முன் வந்து நின்றவன் அவளைப் பார்த்து அழகாய் ஒரு புன்னகையை தந்தான். அவளுக்கு ஏனோ அடிவயிற்றைப் பிசைந்தது. என்னவன்... எனக்கே எனக்கானவன்... என் இனிய காதலன்... என் அன்பு கணவன்... என்ற எண்ணவோட்டத்தில் கர்வம் மேலிட குனிந்து கழுத்தில் கிடந்த தாலிக் கயிற்றைப் பார்த்தாள்.

"என்னாச்சு என் செல்லக்குட்டிக்கு?" என்று அவன் வழக்கமாய் கேட்கும் தொனியில் கேட்கவும் இயல்புக்கு வந்தவள் அவனை இழுத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.

"உன் சுவாசம்
காற்றில் கலப்பதில் கூட
உடன்பாடில்லை எனக்கு...
எனக்கு மட்டும்
எனக்கே எனக்கு மட்டுமே
வேண்டும் உனது மூச்சுக்காற்று" என்றபடியே கைகளை மாலையாக்கி அவனதுக் கழுத்தில் போட்டாள்.

"ஓ! அப்படியா? அப்போ உனக்கு ஆக்சிஜன் வேண்டாமா? கார்பன்-டை-ஆக்ஸைடுதான் வேணுமா?" என்று அவன் கிண்டலாய் சிரிக்க வந்தக் கோபத்தில் மூக்கு விடைக்க அவனைப் பின் தள்ளிவிட்டு எழுந்து சென்று சற்றுத் தொலைவில் இருந்த நாற்காலியில் சென்றமர்ந்தாள்.

"டேய்! சும்மா விளையாட்டுக்கு சொன்னேண்டா" என்று அவளிடம் சென்று அவன் சமாதானப்படுத்த முயல அவனது கைகளைத் தட்டி விட்டாள்.

"சரி சரி.... என்னை பாத்ததுமே பிடிச்சிடுச்சுனு சொன்னியே. அது ஏனு கல்யாணத்துக்கப்புறம் சொல்றேனு சொன்னியே. இப்போ சொல்லு" என்றுக் கேட்டான். உடனே அவனை முதலில் பார்த்த அந்த தருணம் நினைவுக்கு வர அப்படியே அந்த நிமிடங்களுக்குப் பயணித்தவள்

"நீ அங்க இருந்த ஒரு மரத்தோட பூவெல்லாம் மிதிக்காம கேப்ல நடந்து வந்தியா. அதைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சது. நீ ரொம்ப சாஃப்ட் ஹார்ட்டட்னு தோணுச்சு"

"ஓ அப்போவே என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா?"

"அய்! ஆசையப் பாரு. அதெல்லாம் ஒண்ணுமில்ல. அப்போ உன்னை பிடிச்சது அவ்ளோதான். ஆனா பழகி ரொம்ப நாள் கழிச்சுதான் லவ் பண்ண ஆரம்பிச்சேன்"

"ஹ்ம்ம்ம்! நல்லா ஏமந்துட்டியா?" என்று சத்தம் போட்டு சிரித்தவனை கேள்வியாய் பார்த்தாள்.

"ஹி... ஹி... அந்த பூ ஷூ-ல நல்லா ஒட்டிக்கும். ஆபிஸ்ல நடக்கறப்ப ஃப்ளோர்ல எல்லாம் விழும். அதான் அதை மிதிக்காம நடந்தேன். அதைப் பாத்து நீ ஏமாந்துட்ட... ஹாஹாஹா" என்று அவன் வயிறு குலுங்க சிரிக்க

"யூயூயூ" என்றபடி அவனை அவள் கண்டபடி அடிக்க

"அப்பாடா... எப்படியோ கேஷுவல் ஆயிட்டயா?" என்றபடியே அவள் கைகளைப் பிடித்து அடிப்பதை தடுத்தவன்

"அப்படியே பூ மேல நான் நடந்துப் போவேனு நினைக்கறயாடி நீ?" என்று முகத்தை சீரியசாய் வைத்து அவன் கேட்க தனது செயலை எண்ணி வருந்தியவள் தாள முடியாமல் அவனை இழுத்து அணைத்தாள்.

சுபம்...

பி.கு: இது என்னுடைய கதையா என்று பலர் கேட்பதால் இந்த பி.கு. என்னுடையது purely arranged marriage. இதில் வரும் எந்த ஒரு சம்பவமும் என்னுடையது அல்ல.

பி.குவிற்கு பி.கு: நான் எழுதும் எந்த ஒரு கதையும் என்னுடைய சொந்த கதை இல்லை. என்னைப் பொறுத்தவரை "Personal should be personal". சோ ப்ளாக்ல எல்லாம் எழுத மாட்டேன் :)))

19 comments:

மங்களூர் சிவா said...

/

சுபம்...
/

நல்லவேளை இத போட்டீங்க!!
பின்நவீனத்துவமா கட்டுடைக்காம!!!!!

:))))))))




பின்குறிப்ப எல்லாரும் நம்புங்கப்பா பிலிஸ்

FunScribbler said...

என்னங்க இப்படி முடிச்சிட்டீங்க!! இன்னும் பார்ட் 3,4,5னு நீளும்னு நினைச்சேன். நல்ல கதையா போயிருக்குமே! :))

ஆனா, இந்த பகுதியில் இன்னும் கொஞ்சம் அதிக விஷயங்களை சேர்த்து இருக்கலாம்! :))

இருந்தாலும் பகுதி ஒன்றை ரசித்து படித்தேன். ரொம்ப நல்லா வர்ணைகளையும் உணர்வுகளையும் அழகாய் எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்!

நிறைய எழுதுங்கள்
அடுத்தது என்ன? காதல் கவிதையா! ம்ம்.. யக்கோவ் கலக்குங்க!

Ramya Ramani said...

சுப்பர் கதை இம்சை :))
Back with a bang after Marriage :)

வாழ்த்துக்கள்

இவன் said...

மீ த பஸ்ட்டு??

இவன் said...

//கதை எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ஏன் இப்படி காதலர்களைப்பிரிக்கிறதிலேயே இருக்கிறீங்க??//

இது நான் முதல் பகுதிக்கு போட்ட comment கொஞ்சம் அவசரப்பட்டுட்டனோ??

ஒரு சந்தோசமான கதையை வாசிச்ச திருப்தி....

அருட்பெருங்கோ கவிதை சூப்பர்.. :)

//
"உன் சுவாசம்
காற்றில் கலப்பதில் கூட
உடன்பாடில்லை எனக்கு...
எனக்கு மட்டும்
எனக்கே எனக்கு மட்டுமே
வேண்டும் உனது மூச்சுக்காற்று" //

romantic

Unknown said...

mee the first uuu!!!!!!!!.expected climax...but good to read..

Divya said...

இம்சை,சூப்பரா இருந்தது கதை:))

வாழ்த்துக்கள்:)))

Sathiya said...

எதிர்பார்த்த முடிவு தான். ஆனால் மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள். ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் அருமை. இவை எல்லாம் arranged marriage செய்த நீங்கள் எழுதுவது ஆச்சரியமாக இருக்கு! இருந்தாலும் அந்த பி.குரிப்பை நான் நம்பறேன்;)

Unknown said...

"காதல் நீதானா?!! ... சுப்பர் கதை இம்சை... அழகாய் எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்!

ராஜா முஹம்மது said...

அருமையான கதை

Vijay said...

கதையில் திருப்பங்கள் இல்லாவிட்டாலும், கணவன் மனைவி ஊடல் ரொம்பவே ரசிக்கும்படியா இருக்கு.

வாழ்த்துக்கள்

விஜய்

Anonymous said...

good read though!

தமிழன்-கறுப்பி... said...

மங்களுர் சிவா சொன்னது...
/
சுபம்...
/
நல்லவேளை இத போட்டீங்க!!
பின்நவீனத்துவமா கட்டுடைக்காம!!!!!

:))))))))

பின்குறிப்ப எல்லாரும் நம்புங்கப்பா பிலிஸ் ///

ரிப்பீட்டு...

தமிழன்-கறுப்பி... said...

ரொமான்டிக், ஆனா இந்த அத்தியாயம் நீங்க இன்னும் எழுதி இருக்கலாம்...

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள்...

கருணாகார்த்திகேயன் said...

கணவன் மனைவி உரையாடல்கள் ...
அருமை .. சூப்பர் ... கலக்கல் ...

அன்புடன்
கார்த்திகேயன்

ஜி said...

:)))

-- I guess Not upto ur usual mark :((

பொன்ஸ்~~Poorna said...

//என்னுடையது purely arranged marriage. //
ஆகா, ஜெயந்தி, உங்களுக்கு எப்பங்க கல்யாணம் ஆச்சு? எனக்கு ஒண்ணுமே சொல்லாம பண்ணிட்டீங்க?!

Anonymous said...

//ஜி said...
:))) I guess Not upto ur usual mark :((//

எனக்கும் அதே உணர்வு... மன்னிக்கவும்...இருந்தாலும் வாழ்த்துகள்!