Tuesday, October 30, 2007

VODAFONE மக்களே உஷார்!!!

என்ன கொடுமை சார் இது??? prepaid connection வச்சுக்கிட்டு சும்மா ஏன் recharge rechargeனு அலையணும்னு ஓடிப் போயி Hutch postpaidஅ வாங்கிப் போட்டேன். Bill-ஐத் தவிர மத்தது எல்லாமே திருப்தியாதான் இருந்துச்சு. ஒரு பத்து மாசம் நல்லா வேலை செஞ்சுட்டு இருந்த SIM திடீர்னு பிரச்சினைப் பண்ண ஆரம்பிச்சது. அதுவா signal search பண்ணி பண்ணி சோர்ந்து போயி ஒரு கட்டத்துல Switch off ஆயிடுச்சு. நான் கூட என் மொபைல்தான் காலி ஆயிடுச்சுனு ஒரேடியா உடைஞ்சு போயி வேற என்ன மொபைல் வாங்கலாம்னு எல்லார்கிட்டயும் ஐடியா கேக்க ஆரம்பிச்சிட்டேன். அப்புறம் தான் என் கூட வேலை செய்யறவ பாத்துட்டு அட அறிவு கெட்டவளே! மொபைல் காலியானா எப்படி signal search பண்ணும்? SIMதான் எதோ ஆயிடுச்சுனு திட்டவும்தான் என் மண்டைல அப்படியே பல்பு எரிஞ்சது. ஆஹா! என் அறிவு கண்ணை திறந்து வச்சியேனு அவளுக்கு ஒரு நன்றி கவித வாசிச்சிட்டு நேரா HUTCH shopக்கு போனேன்.

இப்படி இப்படி ஆகுதுனு அவனுக்கு விம் பார் போட்டு விளக்கினேன். அவனும் யோசிச்சிட்டு நீங்க நைட் ஃபுல்லா சார்ஜ் பண்ணுவிங்களா மேடம்னு கேட்டான். அச்சச்சோ இல்லைனு அவசர அவசரமா சொன்னேன். திருப்பி அவன் சார்ஜ் பண்ணும்போது ஃபோன் பேசுவிங்களானு கேட்டான். அடடா! இவன் சொல்ற அத்தனை வெளங்காத வேலையும் செஞ்சு வச்சிருக்கோமேனு பயந்து போயி ஆமாம்னு ஒத்துக்கிட்டேன். அதனாலதான் SIM க்ராஷ் ஆயிடுச்சு. இனிமேல் சார்ஜ் பண்ணும்போது ஃபோன் பேசாதீங்க. நைட் ஃபுல்லா சார்ஜ் பண்ணாதீங்கனு ஒரு பெரிய அறிவுரை வழங்கிட்டு SIM replacementக்கு 250 ரூபா ஆகும். அடுத்த பில்லோட சேத்து போட்டுடுவோம்னு என் சின்ன இதயத்துல இடியை இறக்கிட்டான். நானும் உடைஞ்சு போன இதயத்தை அள்ளியெடுத்துக்கிட்டு புது SIMஅ வாங்கி போட்டுக்கிட்டு கண்ணைத் தொடைச்சிக்கிட்டே வந்துட்டேன். அடுத்த மாச பில் வந்ததும் 250 ரூபாய சேத்துக் கட்டினேன் :'((((((

அடுத்த மாசமே என் இன்னொரு ஃப்ரெண்டுக்கு இதே மாதிரி ஆச்சு. நானும் அக்கறையா ஃபோன போட்டு என்னொட அனுபவத்த விளக்கி சொன்னேன். அவ எல்லாத்தையும் கேட்டுட்டு கடைசில பொறுமையா போடா... இது எனக்கு போர் அடிச்சிடுச்சு. அதனால நான் Airtelக்கு மாறலாம்ன்ற ஐடியால இருக்கேனு சொல்லிட்டா. பாவி இதை முன்னாடியே சொல்லித் தொலைச்சிருக்க வேண்டியதுதானேடினு ஒரு மூச்சு கத்திட்டு விட்டுட்டேன். நம்மளைப் பாத்தா எல்லாருக்கும் இ.வா மாதிரி இருக்கோனு எனக்குள்ள மைல்டா ஒரு டவுட். ச்சேச்சே... அப்படியெல்லாம் இருக்காதுனு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன்.

அதுக்கப்புறமா ஒரு வாரம் கழிச்சு என் ரூமி ஒருத்திக்கு இப்படி ஆச்சு. அவளா கேக்கட்டும்னு அமைதியா இருந்த என்கிட்ட வந்து என்ன பண்ணினேனு கேட்டா. ஒரு பெரிய அனுபவசாலியா எல்லாத்தையும் எடுத்து சொன்னேன். அன்னைக்கே அவ Hutch shop போனா. சாயந்திரம் வந்ததும் என்னடி ஆச்சுனு கேட்டேன். சார்ஜ் பண்ணும்போதே பேசுவீங்களா... நைட்டு ஃபுல்லா சார்ஜ் பண்ணுவீங்களானு கேட்டான். நான் அதெல்லாம் இல்லைவே இல்லைனு அடிச்சு சொன்னேன். அப்புறம் எதும் சொல்லாம replacementக்கு 250 ரூபா ஆகும்னு சொன்னான். இதுல என்னோட தப்பு எதும் இல்ல. உங்க SIMதான் பிரச்சினைனு சண்டை போட்டேன். அவன் எதுமே பேசாம மாத்திக் கொடுத்துட்டானு சொன்னா. ஆனா பில்லோட சேத்துடுவான் பாரு. எனக்கும் பில்லோடதான் சேத்து அனுப்பினானு சொன்னேன். அப்படி அனுப்பினா திருப்பி போயி சண்டை போடுவேன். அப்புறம் வேற எதுக்காவது மாறிடுவேனு சொன்னா. எல்லாரும் அந்த மாச பில்லுக்காக ரொம்ப ஆவலா வெயிட் பண்ணினோம். பில்லு வந்ததும் பாத்தா.... படுபாவி பசங்க....... என்னைய மட்டும் அநியாயமா ஏமாத்திட்டானுங்க :'( எல்லாருக்கும் என்னைப் பாத்தா இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் :(((

ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.

டிஸ்கி:- நான் வாங்கினப்போ Hutch'ன்னு இருந்துச்சு, இப்போ அதை VODAFONE'ன்னு மாத்திட்டாங்கன்னு சொல்லுறாங்க, அப்போ தலைப்பு சரிதானே.......?

54 comments:

Sanjai Gandhi said...

அதெல்லாம் சரி... இவ்வளவு சொன்னிங்க இல்ல? உங்க மொபைல் நம்பர் என்னனு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லயே ஆன்டி.

குசும்பன் said...

நல்லா இருக்கு:)

Anonymous said...

என் மண்டைல அப்படியே பல்பு எரிஞ்சது. ///

மனசுக்குள்ள பல்பு எரிஞ்சுதா?

Anonymous said...

இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் :(((///

உண்மை என்னைக்குமே லேட்டாகதான் புரியவரும்:)))

ஜொள்ளுப்பாண்டி said...

ஹஹஹாஹஹ இம்ச்சையக்கா :))என்னா இது இவா ஆனதை இப்படி பப்ளிக்கா போஸ்ட் போட்டு சொல்லிகிட்டு??!!!

//ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.//

ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? நம்பிட்டோம்.....:)))))))))

வல்லிசிம்ஹன் said...

நீங்க சொல்ற இ.வா. பட்டியல்ல என்னைஇயும் சிங்கத்தையும் சேர்த்துக் கோங்க:)))

ஜி said...

//ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? நம்பிட்டோம்.....:)))))))))//

repeat pottu romba naal aatchu.... inga pottukavaa???

மங்களூர் சிவா said...

//
இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் :(((
//

இதுக்குதான் நான் 3 மாசத்துக்கு ஒருதடவை நம்பர் மாத்திடுவேன்.

கர்னாடகால இருக்குற எல்லா சர்வீசும் ட்ரை பன்னி பாத்தாச்சு CDMA உள்பட.

என் ஆபீஸ்ல ஸ்டாப் போன் நம்பர் புக்ல எனக்கு மட்டும் 2 பேஜ் ப்ளான்க்கா வெச்சிருக்காங்கன்னா பாத்துக்கங்க.

ஆபீஸ்ல யாரும் புது கனெக்சன் வாங்கனும் இல்லை புது ஸ்கீம் பத்தி தெரியனும்னா என்கிட்டதான் கேப்பாங்கனா பாத்துக்கங்க

(அப்புறம் எங்க ரீஜியனல் மேனேஜர் ரொம்ப ரெக்வஸ்ட் பன்னதால இப்ப 2 வருச வேலிடிடி கார்ட் வித் ஜீரோ பாலன்ஸ் )

ஏர்டெல் காரனும் விடாம டெய்லி எஸ்.எம். எஸ் அனுப்பரான் ரீசார்ஜ் பன்னுன்னு. நாம யாரு??

நாகை சிவா said...

இந்த காலத்தில் வாய் இல்லாட்டி நாய் கூட மதிக்காதுனு சொல்லுவாங்க...

ஆனா உங்களை எல்லா நாயும் மதிச்சு கிட்டு தானே இருக்கு...

2007 பெஸ்ட் காமெடிக்கு நீங்க சொன்னதை அனுப்பலாம். முதல் பரிசு கிடைச்சா கூட ஆச்சர்யப்படுவதுக்கு இல்லை.

ஸ்மைலி எதும் இல்ல... அதனால் அம்புட்டும் படு சீரியஸ்னு அர்த்தம்.

நாகை சிவா said...

//"VODAFONE மக்களே உஷார்!!!"//

நாங்க எல்லாம் ஏர்டெல் :)

நீங்களும் ஏர்டெல் வாங்க :)

ரசிகன் said...

ஏனுங்க அரசி..
// நம்மளைப் பாத்தா எல்லாருக்கும் இ.வா மாதிரி இருக்கோனு எனக்குள்ள மைல்டா ஒரு டவுட்.//
சந்தேகமே படாதிய்ங்க...ஹிஹி...
// படுபாவி பசங்க....... என்னைய மட்டும் அநியாயமா ஏமாத்திட்டானுங்க //ஹா..ஹா....
// இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.// நானுந்தானுங்க...
கலக்கலா...நல்லாயிருக்குங்க....

G3 said...

நீங்க ஓட்டபோனா வெச்சிருக்கீங்க?

சாரி.. ஒரு ட் எக்ஸ்ட்ராவா வந்துடுச்சு..

MyFriend said...

போச்சு.. அடுத்த சிம்கார்ட்டும் டமாலா? :-))))

நிஜமா நல்லவன் said...

நீங்க வாயில்லாத பிள்ளைன்னு சொல்லுறத தான் நம்ப முடியல. மத்தபடி உங்க தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

ஜே கே | J K said...

//எல்லாருக்கும் என்னைப் பாத்தா இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் //

ஹி ஹி ஹி....

ஜே கே | J K said...

//ஜொள்ளுப்பாண்டி said...
//ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.//

ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? //

ரிப்பீட்டு....

ஜே கே | J K said...

//ஜி said...
//ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? நம்பிட்டோம்.....:)))))))))//

repeat pottu romba naal aatchu.... inga pottukavaa???//

உங்க விருப்பம் அதானா, நல்லா போட்டுக்குங்க...

Raji said...

No feelings...Neenga solluradhu ennavoo unmai dhaan 100% ..vayulla pilla pilachikkum:)

TBCD said...

வாயுள்ள புள்ளை தான் பொழைக்குமின்னா..
உங்களுக்கு வாய் இல்லையா..
வாயே இல்லையா..இல்லை வாய்ஸ் தான் இல்லையா..
வாய் இல்லைனாலும், வாய்ஸ் இல்லைனாலும் சிம் வீனாதான் போகும்..
அப்ப நீங்க ஏன் சிம் வாங்கினீங்க...

புரியல்ல. தயவு செய்து விளக்கவும்..!!

கப்பி | Kappi said...

//என்னைப் பாத்தா இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் :(((

ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.
//

:)))

//ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? நம்பிட்டோம்.....////

:)))))

//repeat pottu romba naal aatchu.... inga pottukavaa???//

:)))))))))

//நீங்க ஓட்டபோனா வெச்சிருக்கீங்க? //

:)))))))))))))))))

Gopal said...

Hutch Makala kadavul thaan kapathanum...Athu sari, un kannodu vazha enna aachu?

Unknown said...

வோடா போன் பேரே சொல்லுதுல்ல அப்புறமும் அந்தப் போனை வச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம்...

அப்புறம் கப்பி ஏன் இப்படி கண்டப்படி சிரிக்கிறான்.. அதுவும் இந்தப் பதிவுல்ல மட்டும் தான் இப்படி சிரிக்கிறான் :-)

ஓவரா சிரிச்சா இ.வா.ன்னு தானே சொல்லுவாங்க.. கப்பி நீயும் அதைத் தான் சொல்லுறீயோ ....:-)

Senthilmohan said...

hello ms.Queen Of Torture,
hv seen ur profile. 4m tat i cme 2 knw tat u like 2 read Sandilyan novels.. if u've any online resources for his novels, send d same 2 senthilmka@gmail.com.(my e-mail addr). even if u've them in pdf format, send them. i'm exhausted of searching his novels in net..

THANKS in advance...

Regards,
Sentihl Mohan K A

Ram N said...

"இப்படி இப்படி ஆகுதுனு அவனுக்கு விம் பார் போட்டு விளக்கினேன்"

எப்போ வீல்க்கு மாறுவீங்க? அதுதான் ப்ரோப்லேம்

சீனு said...

அப்படிக்காவா? என் சிம்மும் அதனால தான் restart ஆகுதா? (BTW, உங்க வலைப்பூ பற்றி இந்த வார ஆ.வி.யில் வந்ததே. பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...)

இம்சை அரசி said...

// ~பொடியன்~ said...
அதெல்லாம் சரி... இவ்வளவு சொன்னிங்க இல்ல? உங்க மொபைல் நம்பர் என்னனு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லயே ஆன்டி.
//

100க்கு கால் பண்ணி இம்சை அரசிக்கு கனெக்ட் பண்ண சொல்லி கேளு தம்பி. பண்ணுவாங்க ;)))

இம்சை அரசி said...

// குசும்பன் said...
நல்லா இருக்கு:)

//

எது நான் ஏமாந்து போனதா???

இம்சை அரசி said...

// மொழி பிரகாஷ்ராஜ் said...
என் மண்டைல அப்படியே பல்பு எரிஞ்சது. ///

மனசுக்குள்ள பல்பு எரிஞ்சுதா?
//

அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல...

இம்சை அரசி said...

// அனுபவஸ்தன் said...
இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் :(((///

உண்மை என்னைக்குமே லேட்டாகதான் புரியவரும்:)))
//

உங்களுக்கு எப்போ தெரிய வந்தது??? ;)))

இம்சை அரசி said...

// ஜொள்ளுப்பாண்டி said...
ஹஹஹாஹஹ இம்ச்சையக்கா :))என்னா இது இவா ஆனதை இப்படி பப்ளிக்கா போஸ்ட் போட்டு சொல்லிகிட்டு??!!!
//

வேற யாரும் இ.வா ஆயிடக் கூடாதுன்ற நல்ல எண்ணத்துலதான் போட்டேன் :(((

//ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.//

ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? நம்பிட்டோம்.....:)))))))))
//

ஆமாங்க... நான் உண்மையா ரொம்ப அப்பாவி பொண்ணு

இம்சை அரசி said...

// வல்லிசிம்ஹன் said...
நீங்க சொல்ற இ.வா. பட்டியல்ல என்னைஇயும் சிங்கத்தையும் சேர்த்துக் கோங்க:)))

//

நீங்களும் இப்படி எங்கயாவது ஏமாந்துட்டீங்களா அக்கா??? இவனுங்களுக்கு ஏமாத்தறதே பொழப்பா போச்சு

இம்சை அரசி said...

// ஜி said...
//ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? நம்பிட்டோம்.....:)))))))))//

repeat pottu romba naal aatchu.... inga pottukavaa???
//

யோவ்! உனக்கு சொந்தமா கமென்ட்டு கூட போடத் தெரியாதா??? :@

இம்சை அரசி said...

// மங்களூர் சிவா said...
//
இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் :(((
//

இதுக்குதான் நான் 3 மாசத்துக்கு ஒருதடவை நம்பர் மாத்திடுவேன்.

கர்னாடகால இருக்குற எல்லா சர்வீசும் ட்ரை பன்னி பாத்தாச்சு CDMA உள்பட.

என் ஆபீஸ்ல ஸ்டாப் போன் நம்பர் புக்ல எனக்கு மட்டும் 2 பேஜ் ப்ளான்க்கா வெச்சிருக்காங்கன்னா பாத்துக்கங்க.

ஆபீஸ்ல யாரும் புது கனெக்சன் வாங்கனும் இல்லை புது ஸ்கீம் பத்தி தெரியனும்னா என்கிட்டதான் கேப்பாங்கனா பாத்துக்கங்க

(அப்புறம் எங்க ரீஜியனல் மேனேஜர் ரொம்ப ரெக்வஸ்ட் பன்னதால இப்ப 2 வருச வேலிடிடி கார்ட் வித் ஜீரோ பாலன்ஸ் )

ஏர்டெல் காரனும் விடாம டெய்லி எஸ்.எம். எஸ் அனுப்பரான் ரீசார்ஜ் பன்னுன்னு. நாம யாரு??

//

அதானே நீங்க யாரு??? ;)))

யோவ் நாங்கெல்லாம் பேசறதுக்கு ஃபோன் வாங்கி வச்சிருக்கோம். நானும் வச்சிருக்கேனு காட்டறதுக்கு இல்ல ;)))

இம்சை அரசி said...

// நாகை சிவா said...
இந்த காலத்தில் வாய் இல்லாட்டி நாய் கூட மதிக்காதுனு சொல்லுவாங்க...

ஆனா உங்களை எல்லா நாயும் மதிச்சு கிட்டு தானே இருக்கு...

2007 பெஸ்ட் காமெடிக்கு நீங்க சொன்னதை அனுப்பலாம். முதல் பரிசு கிடைச்சா கூட ஆச்சர்யப்படுவதுக்கு இல்லை.

ஸ்மைலி எதும் இல்ல... அதனால் அம்புட்டும் படு சீரியஸ்னு அர்த்தம்.
//

அனுப்பி வைக்கறேன்... முதல் பரிசு மட்டும் கிடைக்கலை... புளி... கரைச்சு ரசம் வச்சிடுவேன்...

ஸ்மைலி எதும் இல்ல... அதனால் அம்புட்டும் படு சீரியஸ்னு அர்த்தம்

இம்சை அரசி said...

// நாகை சிவா said...
//"VODAFONE மக்களே உஷார்!!!"//

நாங்க எல்லாம் ஏர்டெல் :)

நீங்களும் ஏர்டெல் வாங்க :)

//

இந்த ஏர்டெல் அதுக்கு மேல மொக்கை. கான்ஃபெரன்ஸ் ஆப்ஷன் இல்ல... கால் வெயிடிங் இல்ல... ச்சேச்சே...

இம்சை அரசி said...

// ரசிகன் said...
ஏனுங்க அரசி..
// நம்மளைப் பாத்தா எல்லாருக்கும் இ.வா மாதிரி இருக்கோனு எனக்குள்ள மைல்டா ஒரு டவுட்.//
சந்தேகமே படாதிய்ங்க...ஹிஹி...
// படுபாவி பசங்க....... என்னைய மட்டும் அநியாயமா ஏமாத்திட்டானுங்க //ஹா..ஹா....
// இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.// நானுந்தானுங்க...
கலக்கலா...நல்லாயிருக்குங்க....
//

கலக்கலா...நல்லாயிருக்குங்க....ன்னு சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸுங்கோவ் :)

இம்சை அரசி said...

// G3 said...
நீங்க ஓட்டபோனா வெச்சிருக்கீங்க?

சாரி.. ஒரு ட் எக்ஸ்ட்ராவா வந்துடுச்சு..

//

அலோ மேடம்... உங்க ஃபோன்ல கான்ஃபரன்ஸ் ஆப்ஷன் இல்ல... அதை மனசுல வச்சுக்கிட்டு பேசணுமாக்கும் :P

இம்சை அரசி said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
போச்சு.. அடுத்த சிம்கார்ட்டும் டமாலா? :-))))

//

அது நல்லாதான் இருக்குங்க மேடம் :)

இம்சை அரசி said...

// NejamaNallavan said...
நீங்க வாயில்லாத பிள்ளைன்னு சொல்லுறத தான் நம்ப முடியல. மத்தபடி உங்க தகவலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

//

அப்பாடா நான் சொன்னத ஒரு உபயோகமான விஷயத்த ஒருத்தராச்சும் புரிஞ்சிக்கிட்டாங்களே :)))

இம்சை அரசி said...

// J K said...
//எல்லாருக்கும் என்னைப் பாத்தா இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் //

ஹி ஹி ஹி....
//

என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு??? சின்னப்புள்லத்தனமா??? :@

// J K said...
//ஜொள்ளுப்பாண்டி said...
//ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.//

ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? //

ரிப்பீட்டு....
//

சொந்தமா போடு மேன் ;)))

இம்சை அரசி said...

// Raji said...
No feelings...Neenga solluradhu ennavoo unmai dhaan 100% ..vayulla pilla pilachikkum:)

//

:))))

thk u...

இம்சை அரசி said...

// TBCD said...
வாயுள்ள புள்ளை தான் பொழைக்குமின்னா..
உங்களுக்கு வாய் இல்லையா..
வாயே இல்லையா..இல்லை வாய்ஸ் தான் இல்லையா..
வாய் இல்லைனாலும், வாய்ஸ் இல்லைனாலும் சிம் வீனாதான் போகும்..
அப்ப நீங்க ஏன் சிம் வாங்கினீங்க...

புரியல்ல. தயவு செய்து விளக்கவும்..!!

//

நீங்க லண்டன் யுனிவர்சிட்டில படிச்சிட்டு நேத்துதான் மொதல்ல தமிழ்நாட்டுல வந்து இறங்கி இருக்கீங்களா?

அப்படின்னா உங்களுக்கு இது புரியவே புரியாது...

அப்படி இல்லைனா இப்போவே புரியலைனா இதுக்கு மேல புரிய வைக்க முடியாது :P

இம்சை அரசி said...

// கப்பி பய said...
//என்னைப் பாத்தா இ.வா மாதிரி இருக்கோனு அன்னைக்கு மைல்டா வந்த டவுட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன் :(((

ஹ்ம்ம்ம்..... இதுல இருந்து நான் கத்துக்கிட்ட பாடம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.
//

:)))

//ஏங்க இம்சை இது உங்களூக்கு ஓவரா தெரியலை? நீங்க வாயில்லா புள்ளையா ?? நம்பிட்டோம்.....////

:)))))

//repeat pottu romba naal aatchu.... inga pottukavaa???//

:)))))))))

//நீங்க ஓட்டபோனா வெச்சிருக்கீங்க? //

:)))))))))))))))))

//

:))))))))))))))))))))))))))))

இம்சை அரசி said...

// Gopal said...
Hutch Makala kadavul thaan kapathanum...Athu sari, un kannodu vazha enna aachu?

//

அது சீக்கிரம் வரும் :)))

இம்சை அரசி said...

// தேவ் | Dev said...
வோடா போன் பேரே சொல்லுதுல்ல அப்புறமும் அந்தப் போனை வச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம்...

அப்புறம் கப்பி ஏன் இப்படி கண்டப்படி சிரிக்கிறான்.. அதுவும் இந்தப் பதிவுல்ல மட்டும் தான் இப்படி சிரிக்கிறான் :-)

ஓவரா சிரிச்சா இ.வா.ன்னு தானே சொல்லுவாங்க.. கப்பி நீயும் அதைத் தான் சொல்லுறீயோ ....:-)
//

அண்ணாஆஆஆஆஆஆஆஆ :@@@

கப்பிக்க்கு தான் எதோ ஆயிடுச்சு தெரியாதா உங்களுக்கு??? ;)))

இம்சை அரசி said...

// SenthilMohan K Appaji said...
hello ms.Queen Of Torture,
hv seen ur profile. 4m tat i cme 2 knw tat u like 2 read Sandilyan novels.. if u've any online resources for his novels, send d same 2 senthilmka@gmail.com.(my e-mail addr). even if u've them in pdf format, send them. i'm exhausted of searching his novels in net..

THANKS in advance...

Regards,
Sentihl Mohan K A

//

nope... i dont hav any online resource and pdf... if i get any, vl inform u definitely...

இம்சை அரசி said...

// Ram N said...
"இப்படி இப்படி ஆகுதுனு அவனுக்கு விம் பார் போட்டு விளக்கினேன்"

எப்போ வீல்க்கு மாறுவீங்க? அதுதான் ப்ரோப்லேம்

//

அய்யோ அய்யோ... இன்னும் இது கூட தெரியாம இருக்கீங்களே :P

விம் தான் பாத்திரம் விளக்கற சோப்பு. வீல் துணி துவைக்கற சோப்பு...

இம்சை அரசி said...

// சீனு said...
அப்படிக்காவா? என் சிம்மும் அதனால தான் restart ஆகுதா? (BTW, உங்க வலைப்பூ பற்றி இந்த வார ஆ.வி.யில் வந்ததே. பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...)

//

மொதல்ல கொண்டு போயி செக் பண்ணுங்க...

பாத்துட்டேங்க... இருந்தாலும் நன்றி :)))

தீரன் said...

//அதனால நான் Airtelக்கு மாறலாம்ன்ற ஐடியால இருக்கேனு சொல்லிட்டா. பாவி இதை முன்னாடியே சொல்லித் தொலைச்சிருக்க வேண்டியதுதானேடினு ஒரு மூச்சு கத்திட்டு விட்டுட்டேன்//
//பில்லு வந்ததும் பாத்தா.... படுபாவி பசங்க....... என்னைய மட்டும் அநியாயமா ஏமாத்திட்டானுங்க //
மூளையும், வாயும் உள்ள புள்ள எங்கிருந்தாலும் பொலச்சுக்கும் .. பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க...
//இனிமேல் சார்ஜ் பண்ணும்போது ஃபோன் பேசாதீங்க. நைட் ஃபுல்லா சார்ஜ் பண்ணாதீங்கனு //
இந்த ரெண்டும் புதிய தகவல். செய்திக்கும் , எச்சரிக்கைகும், மிக்க நன்றி

Sanjai Gandhi said...

//இந்த ஏர்டெல் அதுக்கு மேல மொக்கை. கான்ஃபெரன்ஸ் ஆப்ஷன் இல்ல... கால் வெயிடிங் இல்ல... ச்சேச்சே...//
அப்போ ஏர்செல்லுக்கு மாறிடுங்க.. என்னோட 2( எல்லாம் ஒரு விளம்பரம் தான் :P) மொபைல்கும் ஏர்செல் சிம் தான் போட்டிருக்கேன்.
அதுல கால் வெய்ட்டிங், கான்பரன்ஸ் எல்லாம் ஓசி தான் :))

இராம்/Raam said...

யக்கோவ்,

இதே கருமத்தை தான் நானும் வைச்சிருக்கேன்.... :(

நாகை சிவா said...

ஏர்டெல் கால் வெயிட்டிங் இல்லையா.. இது என்ன புது கதையா இருக்கு?

அப்பாஸ் Abbas said...

Dont worry, they know how to charge that 250 to your friend. In POSTPAID at least we can know how we are charged/cheated, in prepaid...

Anonymous said...

Ithu rommba mukkiyam.........!!!!