ஆஹா! யாரு பொண்ணுனு கேக்கப்படாது. ஏனா எங்க வீட்டுல(பெங்களூரு
வீட்டுல) மூணு பேரு இருக்கோம். ஒருத்திக்கு அண்ணா இருந்ததால அவ வீட்டுல அவங்க அண்ணனுக்கு முடிச்சிட்டு அவளுக்கு கல்யாணத்துக்கு பாக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால ஓவரா பந்தா விட்டுட்டு எங்களை மிரட்டிட்டே இருப்பா. சீக்கிரம் கல்யாணம் ஆகி போக போற பொண்ணு.... இது கூட செய்ய தெரியலைன்னு ஓட்டிட்டே இருப்பா. அவதான் எங்க வீட்டு Chief Chef. ரெண்டு மூணு சமையல் குறிப்பு புக்ஸ் வாங்கி வச்சிட்டு அதை அப்பப்போ பாத்து பாத்து எதாவது எங்களுக்கு செஞ்சு தருவா.
போன ஞாயித்துக் கிழமை விடிய காலைல ஒரு 10 மணிக்கா அவங்க அப்பா ஃபோன போட்டு ஒரு ரெண்டு மூணு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுத்து உடனடியா அனுப்புமான்னு சொல்லிட்டார். உடனே அடிச்சு பிடிச்சு நாங்க ரெண்டு பேரும் எழுந்துட்டோம். ஆஹா! மாட்டிக்கிட்டாடா வசமான்னு அப்போ ஆரம்பிச்சதுதான். ஒரே ஜாலியா பொழப்பு ஓடிட்டு இருக்கு ;) அவ வீட்டுல அவகிட்ட நேரா பேசாம அவ அக்காவ பேச சொல்லி மாப்பிள்ள பாக்கிற விஷயத்த சொல்லிட்டாங்க. அதுல இருந்து பிள்ளைக்கு இருப்பு கொள்ளல. அச்சச்சோ.... என்கிட்ட காட்டன் சாரிதான இருக்கு. அதை கட்டினா குண்டா தெரிவெனேன்னு ஃபீல் பண்ணி அன்னைக்கு சாயந்திரமே போய் ஒரு புடவை எடுக்கணும்னு ப்ளான் போட்டுட்டு இருந்தா(ஹி... ஹி... நாங்க பண்ணின சதி வேலையால இன்னும் எடுக்கவே இல்ல).
அன்னைக்கு மதியம் நாங்க ரெண்டு பேரும் சர்ட்டிஃபிகேஷன்க்கு படிக்கறோம்னு சொல்லி கைல புக்க வச்சிக்கிட்டு ஆ-னு வாய பொளந்துக்கிட்டு டிவிய பாத்துட்டு இருந்தோம். அவ மட்டும் ஏதோ சின்சியரா படிச்சிட்டு இருந்தா. கொஞ்ச நேரம் கழிச்சு அப்டி என்னடா படிக்கறானு பாத்தா "வீட்டுக் குறிப்புகள்" புத்தகத்த வச்சு மூணாவது தடவையா ரிவிஷன் விட்டுட்டு இருக்கா.... ஆஹா! மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டா இப்படியெல்லாம் பண்ணனும்போலன்னு மனசுக்குள்ள பயந்துட்டே
மறுபடியும் மாட்டின அவள சும்மா விட்டிருப்போமா ;)))
செவ்வாகிழமை நைட் அவ வீட்டுல இருந்து ஃபோன். அவ அப்பா லிஸ்ட்
போட்டார். மலேசியால ஒரு பையன் வேலைல இருக்கானாம். ஒரு பையன்
scientistஆ இருக்கானாம். ஒரு பையன் M.Phil படிச்சிட்டு வீட்டுலதான்
இருக்கானாம். உனக்கு யாரை பிடிச்சிருக்குனு சொல்லுனு கேட்டார். அவ, அப்பா வேலைய மட்டும் சொல்லிட்டு இப்டி கேட்டா நான் என்ன சொல்லட்டும்னு சொன்னா. உடனே அவங்க அம்மா வாங்கி அதே டயலாக்க சொல்லி யார பிடிச்சிருக்குனு கேட்டாங்க. அவளும் அதே டயலாக்க சொன்னா. கொஞ்ச நேரம் கழிச்சு அவ அக்கா ஃபோன் பண்ணி அதே டயலாக்க சொன்னாங்க. அவங்க அக்கா பொண்ணும் சித்தி உனக்கு யாரை பிடிச்சிருக்குனு கேட்டாளே பாக்கலாம். பிள்ள டென்ஷன் ஆயி கோபமா அவளோட டயலாக்க அள்ளி விட்டா. கம்முனு ஃபோன வச்சிட்டாங்க.
ஹ்ம்ம்ம்ம்.......... இப்படியே மூணு நாளா ஜாலியா பொழப்பு ஓட, பிள்ள ஒரே
சந்தோஷத்துல செஞ்சு போட்டதெல்லாம் சப்பு கொட்டிகிட்டு சாப்பிட்டுட்டு
அவளையே ஓட்டு ஓட்டுனு ஓட்டிக்கிட்டு இருந்துட்டு Certificationக்கு படிக்காம விட்டுட்டேன் :(((( இன்னைக்கு mid night ஒரு ஆறு மணிக்கே எழுந்து படிச்சு எப்டியோ பாஸ் பண்ணிட்டேன் :))))
ஹ்ம்ம்ம்ம்..... பொண்ணு சமையல் குறிப்பு புக்க வச்சு படிக்கறத இப்படி நாமளே இவ்ளோ ஓட்டு ஓட்டறோமே. பசங்கனா இன்னும் எப்டி ஓட்டுவாங்கன்னு நினைச்சு பாத்தேன். நிச்சயம் ஆனதும் மொத வேலையா நமக்கு வர போற ஆளுக்கு சமையல் குறிப்பு புக்ஸ் வாங்கி கொடுத்து நல்லா கத்துக்க சொல்லனும்னு பண்ணி வச்சிருந்த முடிவ மாத்திக்கிட்டேன். அவர் கஷ்டபடகூடாதுனு நினைக்கற எனக்கு உண்மையா பெரிய மனசுதானே??? ;)))
Thursday, October 4, 2007
எங்க வீடு கல்யாண வீடு ஆயிடுச்சு!!!
Posted by இம்சை அரசி at 6:37 PM
Labels: அனுபவம், சும்மா... லுலுலா...
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
// அவளையே ஓட்டு ஓட்டுனு ஓட்டிக்கிட்டு இருந்துட்டு Certificationக்கு படிக்காம விட்டுட்டேன் :(((( இன்னைக்கு mid night ஒரு ஆறு மணிக்கே எழுந்து படிச்சு எப்டியோ பாஸ் பண்ணிட்டேன் :)))) //
enna certification??
Anyway Congrats!!
// நிச்சயம் ஆனதும் மொத வேலையா நமக்கு வர போற ஆளுக்கு சமையல் குறிப்பு புக்ஸ் வாங்கி கொடுத்து நல்லா கத்துக்க சொல்லனும்னு பண்ணி வச்சிருந்த முடிவ மாத்திக்கிட்டேன். //
enna koduma sir ithu.. paavaum unga aalu ;)
\\"எங்க வீடு கல்யாண வீடு ஆயிடுச்சு!!!"\\
தலைப்பு நல்லா தான் இருக்கு... :)
/பசங்கனா இன்னும் எப்டி ஓட்டுவாங்கன்னு நினைச்சு பாத்தேன். நிச்சயம் ஆனதும் மொத வேலையா நமக்கு வர போற ஆளுக்கு சமையல் குறிப்பு புக்ஸ் வாங்கி கொடுத்து நல்லா கத்துக்க சொல்லனும்னு பண்ணி வச்சிருந்த முடிவ மாத்திக்கிட்டேன். அவர் கஷ்டபடகூடாதுனு நினைக்கற எனக்கு உண்மையா பெரிய மனசுதானே??? ;)))//
பாவம்... அந்த தெய்வமச்சான்.... :)
:-)))))
நாங்களும் இப்படி ஒரு ஆள் மாட்டினா சும்மாஅ விடுறதில்லையே! அவ கல்யாணம் ஆகி போற வரை நாங்க செம்ம ஜாலியா எஞ்சாய் பண்ணுவோம்.. :-)))))
// அவர் கஷ்டபடகூடாதுனு நினைக்கற எனக்கு உண்மையா பெரிய மனசுதானே??? ;)))//
பல்டி அடிக்கும் அக்காவை நம்பவே கூடாது சாமீ.
அப்புறம் இந்த மேட்டர்:
"நிச்சயம் ஆனதும் மொத வேலையா நமக்கு வர போற ஆளுக்கு சமையல் குறிப்பு புக்ஸ் வாங்கி கொடுத்து நல்லா கத்துக்க சொல்லனும்"
பாய்ண்ட் நோட் பண்ணிக்கிட்டேன். :-) பிற்காலத்துல உதவும் எனக்கு. ;-)
mid night 6 மணியா ? என்ன கொடுமையிது இம்சை. நானெல்லாம் Early morning 8 o clock தான் எழுந்து படிப்பேன் :)
imsai, ithu unnoda anubavam thaane?? friend appadeenu peela udriya?
இம்சை தாங்க முடியலப்பா...
நல்லாதாங்க ரோசிக்கிறீங்க... பயபுள்ள ரொம்ப பாவம் :((((
இம்சை
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்
//
பாவம்... அந்த தெய்வமச்சான்.... :)
//
இதுக்கு ரிப்பீட்டேய்
//நிச்சயம் ஆனதும் மொத வேலையா நமக்கு வர போற ஆளுக்கு சமையல் குறிப்பு புக்ஸ் வாங்கி கொடுத்து நல்லா கத்துக்க சொல்லனும்னு பண்ணி வச்சிருந்த முடிவ மாத்திக்கிட்டேன். அவர் கஷ்டபடகூடாதுனு நினைக்கற எனக்கு உண்மையா பெரிய மனசுதானே??? ;)))//
யாரு பெத்த புள்ளையோ..
ம்ம்ம்ம்.
ha ha! romaba periya manasuthaan! maappillai paavam... kidaikkiRathai saappittitu kalathai ottanum! yaarukaNdaa... konja naalla avare book vaangi supera.. naakkukku rusiya senju pottaalum poduvaar!
//இன்னைக்கு mid night ஒரு ஆறு மணிக்கே எழுந்து படிச்சு எப்டியோ பாஸ் பண்ணிட்டேன//
நான் நம்ப மாட்டேன்..:D
கதை நல்லா இருக்கு அக்கா..:D
// மலேசியால ஒரு பையன் வேலைல இருக்கானாம். ஒரு பையன்
scientistஆ இருக்கானாம். ஒரு பையன் M.Phil படிச்சிட்டு வீட்டுலதான்
இருக்கானாம் //
உம்... இப்பல்லாம் மாப்பிள்ள பாக்குரது காய்கறி,கறிவேப்பில்ல கொத்தமல்லி வாங்குர ரேஞ்சிக்கி ஆயிடுச்சி..
// மொத வேலையா நமக்கு வர போற ஆளுக்கு சமையல் குறிப்பு புக்ஸ் வாங்கி கொடுத்து நல்லா கத்துக்க சொல்லனும்னு பண்ணி வச்சிருந்த முடிவ (ஹிஹி....இது வேறயா?) மாத்திக்கிட்டேன். அவர் கஷ்டபடகூடாதுனு நினைக்கற எனக்கு உண்மையா பெரிய மனசுதானே???( ஒத்துக்கிறேனுங்கோ..) //
ஹா ஹா..நல்ல வேளையா உங்க ஆளு பொழச்சாரு.ரொம்ப நல்லாயிருந்தது..
super,sethamil nattu tamilachiyea ippadi veluthu kattirayea vazhha valamudan.
Kathai Nallathaan Irukku.
Aanaalum ungalukku periya manasu thaan.
hi am suja
kathai super
hi am suja
kathai super
Post a Comment