Thursday, October 25, 2007

உன் கண்ணோரம் வாழ... II

அரவிந்த் வேக வேகமாய் அந்த பேப்பரை பிரித்துப் பார்த்தான். ஒரு பெரிய மளிகை லிஸ்ட்டுக்கான பில் இருந்தது. அதைப் பார்த்ததும் ஒரு நொடி ஏமாற்றமடைந்தவன் அடுத்த வினாடியே குழப்பமாய் 'இதை எதுக்கு குடுத்து விட்டிருக்கா' என்று எண்ணிக் கொண்டே வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு சென்று அதையெ ஒரு பத்து தடவை திருப்பி திருப்பி பார்த்தான். பின் ஒவ்வொரு வரியாக உற்று பார்த்தபோது 'முருகன் ஸ்டோர்ஸ்' என்ற கடைப்பெயரில் முருகன் என்ற வார்த்தையின் அடியில் மெலிதாய் ஒரு கோடு இருந்தது. பிறகு வேக வேகமாய் ஒவ்வொரு வார்த்தையாய் பார்த்த போது அன்றைய தேதியின் அடியிலும், 7'O clock என்பதன் அடியிலும் கோடுகள் இருந்தன. ஏதோ புரிந்தது போல் இருக்கவும் ஒருவித நிம்மதியுடன் 7 மணிக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

மாலை ஆறு மணி ஆனதும் கிளம்ப ஆரம்பித்தவன் ஒருவித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் ஆறரை மணிக்கு முருகன் கோவிலுக்குள் இருந்தான். அவனுக்கிருந்த பதட்டத்தில் நேரம் நகராமல் அடம் பிடிப்பதாய் தோன்ற, கடிகாரத்தை எதிரியாய் பாவித்து சபித்துக் கொண்டிருந்தான். புதன் கிழமையாதலால் அவ்வளவாய் கூட்டம் இல்லை. அவ்வபோது ஓரிருவர் வந்து கொண்டிருந்தனர். அப்படியே கோவிலில் பின்னாலிருந்த மரங்களினடியில் உலாவிக் கொண்டிருந்தவன் ஏழு மணியாகியும் அவள் வராததால் ஒருவித ஏமாற்றமடைந்து ஒரு மரத்தினடியில் உட்கார்ந்தான். எதுக்கு வரச் சொன்னா. என்ன சொல்லப் போறா. இன்னும் ஏன் வரலை இப்படியாய் கேள்விகள் எழும்பிக் கொண்டிருக்க பொறுமை இழந்தவனாய் எழுந்து வேகமாய் திரும்பியவன் அங்கே நின்று கொண்டிருந்த அனுவைக் கண்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் சுதாரித்தான்.

"என்ன மாமா? ரொம்ப நேரமா யாருக்கோ வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க போல? யாருக்குனு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டு களுக்கென்று சிரித்தாள்.

என்ன இவ வர சொல்லிட்டு இப்படி கேக்கறா... அப்போ இவ வர சொல்லலையோ என்று உள்ளே பலவாறு எண்ணங்கள் ஓட, ஏதும் பதில் பேசாமல் அவளைப் பார்த்து சிரித்து வைத்தான்.

"நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே" என்று அவள் அவனை உற்றுப் பார்க்கவும் "விளையாடாத அனு" என்று கோபமாய் சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

"அப்போ நீ வர சொல்லிதான் வந்தேன். உனக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு தொரையால சொல்ல முடியாதோ?" என்று அவள் கேலியாய் கேட்கவும் உள்ளுக்குள் பொங்கிய சந்தோஷத்தை வெளியில் காட்டாமல் நடையை நிறுத்தி அவளைப் பார்த்தான்.

"சும்மா எதுக்கு மாமா வெக்கப்படறீங்க?" என்று கேட்டபடியே கீழே குனிந்து அவன் காலடியில் ஏதோ தேடினாள். ஒரு அடி பின்னால் நகர்ந்தவன் "என்ன தேடற?" என்றான்.

"இல்ல தரைல கால் கட்டை விரலால நீங்க போட்ட கோலம் எப்டி இருக்குனு பாக்கலாம்னு பாத்தா.... ச்சே.... இங்க அவ்வளவா வெளிச்சம் பத்தலை" என்று அவள் கேலியாய் சலித்துக் கொள்ள அவனுக்கு சுருசுருவென ஏறியது. "ஏய்" என்றபடி அவன் அனுவின் கையைப் பற்ற வேகமாய் அவனது கையை தட்டி விட்டாள்.

"இந்த வேகத்தை என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல காட்டுங்க மாமா" என்று சீரியஸாய் சொல்லி விட்டு அமைதியாய் திரும்பி போய் மரத்தடியில் அமர்ந்தாள். 'ஆஹா... வேறெதற்கு? உன் கரம் பற்றத்தானே பெண்ணே இப்பிறவியெடுத்து வந்தேன்' என்று கவிதைத்தனமாய் அவனுக்குள் சந்தோஷம் துள்ள மெல்ல சென்று அவளருகில் அமர்ந்தான். தலை குனிந்து புற்களில் கைகளை அளைந்து கொண்டிருந்தவளை அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு யாருமில்லாத தீவுக்கு ஓடி விட வேண்டும் போல தோன்றியது.

"அனு" என்ற அவனது அழைப்பிற்கு லேசாய் தலை நிமிர்ந்து பார்த்தவளது விழிகள் பனித்திருந்தன.

"இப்போ என்ன ஆயிடுச்சுனு இப்படி ஃபீல் பண்ணிட்டு உக்காந்திருக்க?" என்று புதிதாய் வந்து விட்ட தைரியத்தோடு கேட்டான்.

"நான் வந்து பேசினப்ப நீங்க இமைக்காம பாத்தப்பவோ, நீங்க என் தம்பிகிட்ட சாக்லேட் வாங்கி கொடுத்து என்னை பத்தி விசாரிச்சத அவன் என்கிட்ட சொன்னப்பவோ அந்த வயசுல எனக்கு எதுவும் தோணலை மாமா. ஆனா எனக்கு அடிக்கடி அது ஞாபகம் வரும். ஏன்னே தெரியாம ரொம்ப சந்தோஷமா இருக்கும். பின்னாடிதான் அந்த சந்தோஷத்துக்கெல்லாம் அர்த்தம் புரிஞ்சது. எனக்குள்ள நீங்க எப்பவோ வந்துட்டிங்க. அதே மாதிரி நானும் உங்களுக்குள்ள இருக்கேனு எனக்கு நல்லாவே தெரியும். இப்போ எனக்கு மாப்பிள்ளை வந்திருக்கிற விஷயம் உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அதான் இனியும் உங்ககிட்ட பேசாம இருக்க கூடாதுனு முடிவு பண்ணி இப்போ வர சொன்னேன்" என்று நிறுத்தாமல் அவள் பேசி முடித்தாள்.

"அது எப்படி நானும் உன்னை விரும்பறேனு உனக்கு தெரியும்? நான் எப்போவாவது சொன்னேனா?" என்று அவன் கேட்கவும் ஒரு நொடி திகைத்து விழித்தவள் பின் புன்னகையுடன்

"மாமா ஒண்ணு மொதல்ல தெரிஞ்சுக்கோங்க. என்னைக்கும் பசங்களுக்குதான் இந்த மாதிரி விஷயங்களை புரிஞ்சிக்க முடியாது. ஆனா பொண்ணுங்க பார்வைய வச்சே கண்டுபிடிச்சிடுவாங்க. அன்னைக்கு கல்யாண மண்டபத்துல நீங்க என்னையே பாத்துட்டு இருந்ததுதான் எனக்கு தெரியுமே. நீங்க வந்து பேசினப்போ ஏதாச்சும் சொல்லுவிங்கனு எவ்வளவு ஆசையாப் பாத்தேன் தெரியுமா? நீங்க என்னடான்னா ஷாக் அடிச்ச மாதிரி பேந்த பேந்த முழிச்சிட்டு பயங்கரமா உளறுனீங்க. அந்த உளறல் பத்தாதா உங்க மனசு புரிய. அப்போ என்னை கவனிச்சு இருந்திருந்தா உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்" என்றாள்.

'அடடா... இவ்வளவு நாளா இது தெரியம போச்சே' என்று நொந்து கொண்டவன் "சரி அதெல்லாம் இருக்கட்டும். இனிமேல் என்ன பண்றது?" என்று கேட்டான்.

"எப்படியும் அக்காவுக்கு முடியாம எனக்கு பண்ண மாட்டாங்க. அதனால பிரச்சினை இல்லன்னு நினைக்கறேன்"

"ஆனா இப்போதைக்கு நிச்சயம் மட்டும் பண்றதா அம்மா சொன்னாங்களே"

"இப்போதைக்கு பண்ண மாட்டாங்க மாமா. ஏனா இன்னும் ஒரு வாரத்துல ஆடி மாசம் வரப் போகுது. ஆடில எதுமே செய்ய மாட்டாங்க. அதனால ஒரு மாசத்துக்கு கவலை இல்ல. அதுக்குள்ள எப்படியாவது அப்பாவ கன்வின்ஸ் பண்ணி அக்கா கல்யாணத்துக்கு அப்புறமா பாத்துக்கலாம்னு சொல்லணும். அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க பயப்படாதீங்க"

"ஹ்ம்ம்ம்ம். சரி உன்கிட்ட நான் எப்படி பேச முடியும்?"

"எனக்கு காலேஜ் முடிய இன்னும் ஒரு செம் இருக்கு. ஆனா காலேஜ்ல இருந்து பண்ண முடியாது. அப்பாதான் என்னை கூட்டிட்டு போய் விட்டுட்டு ஈவ்னிங் திரும்ப கூட்டிட்டு வருவார். சோ அப்போ கால் பண்ண முடியாது. வீட்டுல யாரும் இல்லைனா உங்களுக்கு கால் பண்றேன்.வேற ஒண்ணும் பண்ண முடியாது" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே

"அனு... லேட் ஆச்சுடி... கிளம்பலாமா?" என்று கேட்டபடி ஒரு பெண் வர

"மாமா. இவதான் என் க்ளோஸ் ஃப்ரெண்ட் உமா. நம்ம ஆளு யாராவது வந்துடுவாங்களோனு நான் தான் பாத்துக்க சொல்லிட்டு வந்திருந்தேன். நேரமாச்சு. நான் கிளம்பவா?" என்று அவள் எழுந்திருக்க அவனுக்கு பளீரென ஒரு ஐடியா தோன்றியது.

"ஹாய் உமா" என்று அவளைப் பார்த்து புன்னகைக்க

"ஹாய் அண்ணா" என்று புன்னகைத்தாள் பதிலுக்கு.

"இவளுக்கு ஃபோன் பண்ணி இவ அம்மா எடுத்தா எப்படி பேசுவ?" என்றான். அவர்கள் இருவரும் புரியாமல் குழப்பமாய் பார்க்கவும்

"சொல்லு நான் சொல்றேன்" என்றான்.

"அம்மா உமா பேசறேன். அனுவ கூப்பிடுங்கனு சொல்லுவேன்"

"இப்போ ஃபோன் பண்ணி அவங்க அம்மாகிட்ட பேசற மாதிரியே பேசணும் சரியா" என்று கூறியபடி அவன் மொபைலில் எதையோ செய்து விட்டு அவளருகில் நீட்ட அவள்

"அம்மா உமா பேசறேன். அனுவ கூப்பிடுங்கம்மா" என்றதும் மறுபடியும் மொபைலில் எதோ செய்தான்.

"அவ அம்மா அவ இல்லைனு சொன்னதும் எப்டி சொல்லுவியோ அதையும் சொல்லு" என்று மறுபடியும் அவளருகில் நீட்டினான்.

"சரிங்கம்மா. நான் ஃபோன் பண்ணினேனு அவகிட்ட சொல்லிடுங்க. வச்சிடறேன்" என்று அவள் முடித்ததும் மொபைலில் எதோ செய்தான்.

"ரொம்ப தேங்க்ஸ் உமா. சரி நேரமாச்சு நீங்க கிளம்புங்க" என்றதும் அவர்கள் கிளம்ப அவர்கள் போவதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் கிளம்பி வீட்டிற்கு சென்றான். ஏதோ சாதித்து விட்டதாய் தோன்ற உலகத்தையே புரட்டி காலடியில் போட்ட சந்தோஷத்துடன் நிம்மதியாய் சாப்பிட்டு உறங்க சென்றான். உறக்கம் வராமல் புரண்டவன் 'ஒருவேளை அவளால சமாதானப் படுத்த முடியாம போய் அவ அப்பா நிச்சயம் பண்ணிட்டார்னா???' என்ற கேள்வி கண்முன் நிற்க மறுபடியும் நிம்மதியை தொலைத்தவனான்.

தொடரும்...

39 comments:

நாமக்கல் சிபி said...

சிக்கல் ஆரம்பமாயிடுச்சா அதுக்குள்ளே!

cheena (சீனா) said...

இலை உதிர் காலமும் அதனை அனுபவிக்கும் சிறுவனும் - படல் அருமை. கதை ஒட்டம் தெளிவாக இருக்கிறது. முருகன் நேரம் அனு மாமா - உமா - அண்ணா - ம்ம்ம்
தூக்கத்தைத் தொலைத்து சிந்தித்தால் வழி பிறக்கும்

cheena (சீனா) said...

வாழ்த்துகள்:. இந்த வார ஆ.வி யில் தங்களின் வலைப் பூ வந்திருக்கிறது. பார்த்தீர்களா ?

பாலராஜன்கீதா said...

31 அக்டோபர் 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடனில் (பக்கம்.125ல்) விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பதிவைக்குறித்து வந்துள்ளது.
= = = = = = = = = = = = = = = = =
இம்சை அரசி www.imsaiarasi.blogspot.com

கதை, கவிதை, தொடர்கதை என ஒரு பக்கம்... குடும்ப விசேஷங்கள், அறைத் தோழிகள், உறவினர்களும் நண்பர்களும் கொடுத்த பரிசுகள் என சொந்த விஷயங்கள் இன்னொரு பக்கம்... கேலி, கிண்டல், சமூக அக்கறை எல்லாம் கலந்த வித்தியாசமான வலைப்பூ. கலகலப்பாக வளைய வந்த தோழிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணமும் நிச்சயித்த பிறகு, அவள் சமையல் குறிப்புப் புத்தகங்களும் மாப்பிள்ளையின் புகைப்படமுமாக சுருங்கிவிட்டதைப் பற்றிய கட்டுரையின் நக்கல் சுவாரஸ்யமானது. பெண்களின் கண் அழகு, தாய்மை, காதல் நிறைவேறும் தருணம், நண்பர்கள் என எல்லாவற்றையும் அழகாகப் பார்க்கிற மனசு இருக்கிறது இம்சை அரசிக்கு. பெண்களைவிட ஆண்கள் கட்டாயம் படிக்கவேண்டியது இந்த இம்சை அரசியின் ராஜாங்கம்.
= = = = = = = = = = = = = = = = =
வாழ்த்துகள்.
:-)))

நிலா said...

ஆனந்தவிகடன் ல இந்த வாரம் நீங்கதான்.சங்கத்துல இருக்க ஒவ்வொருத்தரா விகடன்ல வர ரகசியம் என்ன ஆண்ட்டி?
--குட்டிபாப்பாவின் வாழ்த்துக்கள்--

மங்களூர் சிவா said...

good keep writing.

Gopal said...

Expecting the next part sooooon.....

கோபிநாத் said...

அடுத்த பதிவு எப்போ?

\\\31 அக்டோபர் 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடனில் (பக்கம்.125ல்) விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பதிவைக்குறித்து வந்துள்ளது.\\\

வாழ்த்துக்கள் ;)

Raji said...

Super poikittu irukku..sikkiram next part please:)

இம்சை அரசி said...

// நாமக்கல் சிபி said...
சிக்கல் ஆரம்பமாயிடுச்சா அதுக்குள்ளே!

//

அப்புறம் இந்த சிக்கல் கூட இல்லைனா வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்காது இல்ல ;)))

இம்சை அரசி said...

// cheena (சீனா) said...
இலை உதிர் காலமும் அதனை அனுபவிக்கும் சிறுவனும் - படல் அருமை. கதை ஒட்டம் தெளிவாக இருக்கிறது. முருகன் நேரம் அனு மாமா - உமா - அண்ணா - ம்ம்ம்
தூக்கத்தைத் தொலைத்து சிந்தித்தால் வழி பிறக்கும்

//

நன்றி... :)))

அவன் என்னதான் பண்ண போறானு பாப்போமே ;)))

இம்சை அரசி said...

// cheena (சீனா) said...
வாழ்த்துகள்:. இந்த வார ஆ.வி யில் தங்களின் வலைப் பூ வந்திருக்கிறது. பார்த்தீர்களா ?

//

வாழ்த்துக்களுக்கு நன்றி :)))

ஆ.வி இன்னும் எங்க ஜிலேபி தேசத்துக்கு வரலை :(((

இம்சை அரசி said...

// பாலராஜன்கீதா said...
31 அக்டோபர் 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடனில் (பக்கம்.125ல்) விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பதிவைக்குறித்து வந்துள்ளது.
= = = = = = = = = = = = = = = = =
இம்சை அரசி www.imsaiarasi.blogspot.com

கதை, கவிதை, தொடர்கதை என ஒரு பக்கம்... குடும்ப விசேஷங்கள், அறைத் தோழிகள், உறவினர்களும் நண்பர்களும் கொடுத்த பரிசுகள் என சொந்த விஷயங்கள் இன்னொரு பக்கம்... கேலி, கிண்டல், சமூக அக்கறை எல்லாம் கலந்த வித்தியாசமான வலைப்பூ. கலகலப்பாக வளைய வந்த தோழிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணமும் நிச்சயித்த பிறகு, அவள் சமையல் குறிப்புப் புத்தகங்களும் மாப்பிள்ளையின் புகைப்படமுமாக சுருங்கிவிட்டதைப் பற்றிய கட்டுரையின் நக்கல் சுவாரஸ்யமானது. பெண்களின் கண் அழகு, தாய்மை, காதல் நிறைவேறும் தருணம், நண்பர்கள் என எல்லாவற்றையும் அழகாகப் பார்க்கிற மனசு இருக்கிறது இம்சை அரசிக்கு. பெண்களைவிட ஆண்கள் கட்டாயம் படிக்கவேண்டியது இந்த இம்சை அரசியின் ராஜாங்கம்.
= = = = = = = = = = = = = = = = =
வாழ்த்துகள்.
:-)))
//

மிக்க மிக்க நன்றி பாலராஜன் கீதா... எனக்கு புக் கிடைக்காததால அப்பாவும், சென்ஷியும் படிச்சு காட்டினாங்க. உங்க பின்னூட்டம் மூலம்தான் முதல்ல படிச்சேன் :)))

இம்சை அரசி said...

// நிலா said...
ஆனந்தவிகடன் ல இந்த வாரம் நீங்கதான்.சங்கத்துல இருக்க ஒவ்வொருத்தரா விகடன்ல வர ரகசியம் என்ன ஆண்ட்டி?
--குட்டிபாப்பாவின் வாழ்த்துக்கள்--

//

தேங்க் யூ நிலா குட்டி :)))

எல்லாரும் வந்ததும் அந்த தங்கமலை ரகசியத்தை சொல்றோம் :)))

இம்சை அரசி said...

// மங்களூர் சிவா said...
good keep writing.

//

தேங்க் யூ மங்களூர் சிவா :)))

நீங்க தொடர்ந்து பின்னூட்டம் போட்டும் என்னால பதில் போட முடியாம போனதுக்கு ஒரு பெரிய சாரி :)))

இம்சை அரசி said...

// Gopalakrishnan said...
Expecting the next part sooooon.....

//

coming soon... ;)

thx for ur comment :)))

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
அடுத்த பதிவு எப்போ?
//

சீக்கிரம் அண்ணா... :)))

\\\31 அக்டோபர் 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடனில் (பக்கம்.125ல்) விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பதிவைக்குறித்து வந்துள்ளது.\\\

வாழ்த்துக்கள் ;)

//

ரொம்ப தேங்க்ஸ் அண்ணா :)))

இம்சை அரசி said...

// Raji said...
Super poikittu irukku..sikkiram next part please:)

//

thk u Raji :)))

தீரன் said...

தங்களூடைய பதிப்புகள் அனைத்தும் அருமை. உங்களூடைய கதைகள் உணர்வுகளை தொடுவது போன்று அழகாகவும், ஆழமாகவும் இனிக்கின்றது. மனம் மத்தாப்பு போன்று பூக்கின்றது. அருமையான வரிகள், ஆனந்தப்படுத்தும் சொற்கள், எல்லாமே மிக சிறப்பு --- தொடரட்டும் உங்கள் பணி --நோக்குங்கள் எங்கள் பிணி!

பொன்ஸ்~~Poorna said...

பார்த்து, உமா அனு வீட்டில் இருக்கும்போதே போன் பண்ணி பல்பு வாங்கிடப் போறாரு அரவிந்த்

[கதை சுவாரஸ்யம் குறைஞ்சிடும்னு தோணினா பிரசுரிக்க வேணாம்..]

விகடனில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்.. :)

Anonymous said...

Hey,
I came cross your blog after being recommended by Vikatan this week and really enjoyed all your blogs so far. Stories are really good and the writing style is so casual and impressive. Keep up the good work.
Regards
Priya Raghu

ஜே கே | J K said...

வாழ்த்துக்கள்....

அடுத்த பாகம் எப்போ?...

நாகை சிவா said...

ஹம்ம்ம்ம்ம்ம்

நாகை சிவா said...

ஆவி ஆனதுக்கு வாழ்த்துக்கள்...

சே.. வந்ததுக்கு

அட.. சே.. ஆ.வி. யில் வந்ததுக்கு...

மங்களூர் சிவா said...

\\\31 அக்டோபர் 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடனில் (பக்கம்.125ல்) விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பதிவைக்குறித்து வந்துள்ளது.\\\

வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

//
ஆ.வி இன்னும் எங்க ஜிலேபி தேசத்துக்கு வரலை :(((
//

அதே ஜிலேபி தேசத்தின் இன்னொரு கோடியில் இருக்கும் எனக்கு கிடைத்தது.

Deepa said...

வாழ்த்துகள்:. இந்த வார ஆ.வி யில் தங்களின் வலைப் பூ வந்திருக்கிறது
....நான் இன்னைக்கு தான் பார்த்தேன்... லேட்டானதுக்கு சாரி

இம்சை அரசி said...

// தீரன் 덧글 내용...
தங்களூடைய பதிப்புகள் அனைத்தும் அருமை. உங்களூடைய கதைகள் உணர்வுகளை தொடுவது போன்று அழகாகவும், ஆழமாகவும் இனிக்கின்றது. மனம் மத்தாப்பு போன்று பூக்கின்றது. அருமையான வரிகள், ஆனந்தப்படுத்தும் சொற்கள், எல்லாமே மிக சிறப்பு --- தொடரட்டும் உங்கள் பணி --நோக்குங்கள் எங்கள் பிணி!

//

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தீரன் :)))

இம்சை அரசி said...

// பொன்ஸ்~~Poorna said...
பார்த்து, உமா அனு வீட்டில் இருக்கும்போதே போன் பண்ணி பல்பு வாங்கிடப் போறாரு அரவிந்த்

[கதை சுவாரஸ்யம் குறைஞ்சிடும்னு தோணினா பிரசுரிக்க வேணாம்..]
//

ஹி... ஹி... நம்ம ஹீரோ அந்த அளவுக்கு போய் மாட்டிக்க மாட்டாரு அக்கா ;)))

// விகடனில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்.. :)
//

ரொம்ப தேங்க்ஸ் அக்கா :)))

இம்சை அரசி said...

// Anonymous said...
Hey,
I came cross your blog after being recommended by Vikatan this week and really enjoyed all your blogs so far. Stories are really good and the writing style is so casual and impressive. Keep up the good work.
Regards
Priya Raghu

//

thx a lot for ur appreciation and comment Priya :)))

இம்சை அரசி said...

// J K said...
வாழ்த்துக்கள்....

அடுத்த பாகம் எப்போ?...

//

நன்றி JK :)))

அடுத்த பாகம் எப்போனு தான் தெரியலை :(((

சீக்கிரமே எழுதறேன்...

இம்சை அரசி said...

// நாகை சிவா said...
ஆவி ஆனதுக்கு வாழ்த்துக்கள்...

சே.. வந்ததுக்கு

அட.. சே.. ஆ.வி. யில் வந்ததுக்கு...

//

ரொம்ப நன்றி புளி... ச்சே... புலி ;)))

இம்சை அரசி said...

// \\\31 அக்டோபர் 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடனில் (பக்கம்.125ல்) விகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பதிவைக்குறித்து வந்துள்ளது.\\\

வாழ்த்துக்கள்

//

நன்றி சிவா :)))

இம்சை அரசி said...

// //
ஆ.வி இன்னும் எங்க ஜிலேபி தேசத்துக்கு வரலை :(((
//

அதே ஜிலேபி தேசத்தின் இன்னொரு கோடியில் இருக்கும் எனக்கு கிடைத்தது.
//

எனக்கும் கிடைச்சிடுச்சு :)))

இம்சை அரசி said...

// Deepa said...
வாழ்த்துகள்:. இந்த வார ஆ.வி யில் தங்களின் வலைப் பூ வந்திருக்கிறது
....நான் இன்னைக்கு தான் பார்த்தேன்... லேட்டானதுக்கு சாரி

//

ரொம்ப தேங்க்ஸ் தீபா :)))

இராம்/Raam said...

அடுத்த பாகத்தை சீக்கிரமே போடுக்கா.. :)

Unknown said...

Next part yeppoo...Namma herokku Konjam help pannunga.

Ameen

Unknown said...

Next Part yeppo....Nammu hero romba nallavara irukkare !!!

நாதஸ் said...

கதை ரொம்ப நல்லா இருக்கு... Waiting for the next part...