Wednesday, October 31, 2007

என்ன கொடுமை சார் இது???


எனது சமையல் அனுபவத்தில் என்னால் இதுவரை செய்ய முடியாமல் போன விஷயம் என்றால் இதுதான். ஒவ்வொரு முறையும் முயன்று முயன்று தோற்றுப் போகிறேன். எப்படித்தான் செய்கிறார்களோ???!!! கடலைப் பருப்பை கருகாமல் பொன்னிறமாக தாளிப்பதைத் தான் சொல்கிறேன். ஒவ்வொரு முறையும் கருகிப் போகும்போதோ நிறம் மாறாமலோ வரும்போது எரிச்சலாகி விடுகிறது. என்ன கொடுமை சார் இது???

***

ஆனந்த விகடனில் இந்த வாரம் எனது வலைப்பூவைப் பற்றி வந்திருப்பது தெரிந்ததும் என் நட்பு வட்டத்தில் அனைவருக்கும், எனது டீமுக்கும் தெரிவித்தேன். அனைவரும் சந்தோஷப்பட்டனர். புத்தகம் வாங்கி என் தோழிகளுக்கு காட்டினேன். எனது டீமில் மூன்றே பேர்தான் தமிழ் மக்கள். எனது லீடிடம் கொண்டு சென்று காட்டினேன். அவர் அதைப் பார்த்து விட்டு அவஸ்தையாய் சிரித்தார். இந்த படத்தைப் பார்த்தால் உன் ப்ளாக்குனு எனக்கு தெரியுதுடா. பட் எனக்கு தமிழ் கொஞ்சம் பேசதான் தெரியுமே தவிர படிக்கத் தெரியாதுனு சொன்னார். பரவால்ல அண்ணானு சொல்லிட்டு இன்னொரு டீம்மேட்டிடம் காட்டினேன். அவன் சந்தோஷமாய் அதை வாங்கி கொண்டு இன்னொரு பையனிடம் ஓடினான். டேய் இதுல என்ன போட்டிருக்குனு படிச்சு சொல்லுடா என்றான். அவனோ க.... தை.... க.... வி... தை..... என்று எழுத்துக் கூட்டிக் கொண்டிருந்தான். உனக்கு தெரியுமா தெரியாதா? இப்படி படிச்சனா நான் பஸ்ஸ விட்டுடுவேன் என்று இவன் சொல்லவும் அவன் சாரிடா எனக்கு ரொம்ப தெரியாது. எழுத்துக் கூட்டிதான் படிக்க தெரியும் என்று அவன் சொன்னான். கலிகாலமடா சாமி என்று தலையிலடித்துக் கொண்டேன். ஹ்ம்ம்ம்.... பரவாயில்லை. படிக்க தெரியவில்லை என்றாலும் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறதே என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு நானே அவர்களுக்குப் படித்துக் காட்டினேன். என்ன கொடுமை சார் இது???

***

இப்பொழுதெல்லாம் சமையல் செய்ய எதையும் அரைத்துக் கொண்டு இருக்க தேவை இல்லை. எனது அம்மா சிக்கன் குழம்பு வைத்தால் வேலையை சீக்கிரமே ஆரம்பித்து விடுவார். நிறைய பூண்டு உரித்து, இஞ்சி உரித்து அதை அரைத்து இஞ்சி பூண்டு விழுது எடுப்பதற்கே நேரம் பிடிக்கும். இங்கு வந்து எங்கள் கைவண்ணத்தை ஆரம்பித்தபோதுதான் கடையில் ஒருநாள் பார்த்தோம். Ginger garlic Paste என்று இருந்தது. அட இது இப்படி கூட கிடைக்கிறதா என்று வியந்து அதன் பிறகு அதை வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தோம். பின்பு ஒரு நாள் ஒரு Food Worldல் பார்த்தோம். readymade Aloo Muttor Gravy, Aloo Paneer Gravy என்று. செய்முறை விளக்கம் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த பாக்கெட்டை ஒரு பத்து நிமிடம் வைத்திருந்து பின் எடுத்து பரிமாறுங்கள் என்று. எனக்கு மயக்கம் வராத குறைதான். என்ன இது நாமளா செய்யணும்னு நினைச்சாக் கூட செய்ய விட மாட்டாங்க போலனு வாயடைத்துப் போய் வந்தோம் (சத்தியமாய் அந்த க்ரேவியை வாங்காமல்தான்). இரண்டு நாட்களுக்கு முன் TV பார்த்துக் கொண்டு இருந்தபோது 'புளிக் குழம்பு வைக்கணும்னா எதுக்கு புளிய வாங்கி ஊற வச்சு கரைச்சு கஷ்டப்படணும். இருக்கவே இருக்கு ஆச்சிப் புளி கரைசல்' என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் அதே மயக்கம் வந்தது. அடப் பாவிகளா புளியக் கரைக்கறது ஒரு கஷ்டமான வேலையா?? என்ன கொடுமை சார் இது???

***

எனது பக்கத்து வீட்டு அக்கா நான் சென்ற முறை வீட்டிற்கு போயிருந்த போது "பரவாயில்ல.... நீங்க கொஞ்ச நாள்லயே ரொம்ப நல்லா கன்னடம் பேசக் கத்துக்கிட்டிங்களே" என்று ஆச்சரியப்பட்டார். எனக்கு எக்கச்சக்க குஷி. நான் பேசிய கன்னடம் இதுதான்.

"சொல்ப வெயிட் மாடி"

"சொல்ப மூவ் மாடி"

"சொல்ப ஸ்டாப் மாடி"

என்ன கொடுமை சார் இது???

***
எனக்கு funny picture எதாவது அனுப்புங்கன்னு என் டீம்மேட்ஸ் எல்லாருக்கும் ஒரு மெயில தட்டி விட்டேன். அனுப்பின ரெண்டு நிமிஷத்திலேயே சண்டிகர்க்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போன டீம்மேட் ஒரு பையன் ரிப்ளை அனுப்பி இருந்தான். ஆஹா! இவன் எதாவது நல்ல படமா அனுப்பி இருப்பானு வேக வேகமா திறந்து பார்த்தா...... OMG!!!... பல்பு வாங்கிட்டேனே..... என் டீம்ல ஒரு பொண்ணுகிட்ட சொல்லி என்னையே ஃபோட்டோ எடுத்து தர சொல்லி ஐடியா கொடுத்திருந்தான். என்ன கொடுமை சார் இது???

***

நாமெல்லாம் பர்த்டேனா என்ன பண்ணுவோம்? நானெல்லாம் மொதல்ல எங்கம்மா, அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்ததுக்கு பிறகுதான் மத்த வேலைய ஆரம்பிப்பேன். ஆனா இப்போ சன் மியூசிக்குக்கோ இல்ல எதாவது FM ரேடியோவுக்கோ ஃபோனப் போட்டு அங்க இருக்கற பெரியவங்ககிட்ட வாழ்த்து வாங்கிகிட்டாதான் நமக்கு ரொம்ப புண்ணியம். அதும் ஒருத்தர் பர்த்டே பேபிக்கு டெடிகேட் பண்ணின பாட்டு "ஹிப் ஹிப் ஹூர்ரே... சின்னவங்க எங்ககிட்ட பெரியவங்க கத்துக்கோங்க(வல்லவன் படப் பாட்டு. வரிகள் சரியா தெரியலை. ஆனால் இதுதான் அர்த்தம் வந்தது)". என்ன கொடுமை சார் இது???

29 comments:

MyFriend said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ?????

MyFriend said...

என்ன கொடுமை இம்சை இது!!!! :-)))

MyFriend said...

//எனது பக்கத்து வீட்டு அக்கா நான் சென்ற முறை வீட்டிற்கு போயிருந்த போது "பரவாயில்ல.... நீங்க கொஞ்ச நாள்லயே ரொம்ப நல்லா கன்னடம் பேசக் கத்துக்கிட்டிங்களே" என்று ஆச்சரியப்பட்டார். எனக்கு எக்கச்சக்க குஷி. நான் பேசிய கன்னடம் இதுதான்.

"சொல்ப வெயிட் மாடி"

"சொல்ப மூவ் மாடி"

"சொல்ப ஸ்டாப் மாடி"

என்ன கொடுமை சார் இது???///

இதை நாங்க சொல்லணும்.. என்ன கொடுமை இம்சை இது!!! ;-)

MyFriend said...

படிக்கும்போதே தெரியுது.. ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்கன்னு..

கூல் மச்சி கூல்.. :-)

கார்த்திக் பிரபு said...

sooper ammini kalakurale

லக்ஷ்மி said...

//நான் பேசிய கன்னடம் இதுதான்.

"சொல்ப வெயிட் மாடி"

"சொல்ப மூவ் மாடி"

"சொல்ப ஸ்டாப் மாடி"
// கலக்கல் கன்னடம்.....

தீரன் said...

வாழ்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளைக் கூட நகைச்சுவையாய் சிந்திப்பதும், அதை ரசிப்பதும் நல்ல முயற்சி ! பாராட்டுக்கள்

//'புளிக் குழம்பு வைக்கணும்னா எதுக்கு புளிய வாங்கி ஊற வச்சு கரைச்சு கஷ்டப்படணும். இருக்கவே இருக்கு ஆச்சிப் புளி கரைசல்' .அடப் பாவிகளா புளியக் கரைக்கறது ஒரு கஷ்டமான வேலையா?? //

இது பார்பதற்கு நியாயமான கேள்வியாக இருந்தாலும், மற்ற குளம்புகள் வைப்பதற்கு மிகவும் ஏதுவாக உள்ளது. குறிப்பாக வேலைக்கும் சென்றுகொண்டு, வீட்டையும் சுத்தப்படுத்தி, சமையலையும் மேற்கொள்ளும் போது, நமது அறிய நேரத்தை மிச்சப் படுத்த உதவுகிறது. இது போல தான் தேங்க பூ பவுடர், ginger garlic பேஸ்ட், டோமடோ puree போன்றவை, அன்றாடம் சமையலுக்கு உதவுகின்றது.

//நான் பேசிய கன்னடம் இதுதான்.

"சொல்ப வெயிட் மாடி"

"சொல்ப மூவ் மாடி"

"சொல்ப ஸ்டாப் மாடி"//
எனக்கு தெரிஞ்சதெல்லாம், உட்டா மாடு பேக்கா, சென்ன கிதா இந்த ரெண்டு மட்டும் தான். இதற்கு நீங்கள் பரவாயில்லை.
//..... என் டீம்ல ஒரு பொண்ணுகிட்ட சொல்லி என்னையே ஃபோட்டோ எடுத்து தர சொல்லி ஐடியா கொடுத்திருந்தான்//
ஐடியா கரெக்ட் தானே, funny picture தானே கேட்டீங்க :))!!!
//அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்ததுக்கு பிறகுதான் மத்த வேலைய ஆரம்பிப்பேன்//

உண்மையா இருந்தா மகிழ்ச்சி தான் !!!

ராஜ நடராஜன் said...

//எனது அம்மா சிக்கன் குழம்பு வைத்தால் வேலையை சீக்கிரமே ஆரம்பித்து விடுவார். நிறைய பூண்டு உரித்து, இஞ்சி உரித்து அதை அரைத்து இஞ்சி பூண்டு விழுது எடுப்பதற்கே நேரம் பிடிக்கும்//

அம்மா சமையல் குழம்பு கம..கம
கடையில கிட்டும் பூண்டு,இஞ்சி விழுது சமையல் சப்பின்னு.

ILA (a) இளா said...

அதென்னமோ நமக்கு இந்த பாட்டில் ருசி சரி வர்றதே இல்லை. இருந்தாலும் தெனமும் தோலை உரிச்சு அரைக்க முடியுமா? நேரா கடைக்கு போயி 1/2 கிலோ பூண்டு, 1/4 கிலோ இஞ்சி வாங்கி, ஃப்ரீயா இருக்கிற நேரத்துல நாமளே தோலை உரிச்சு அரைச்சு வெச்சிக்கிட்டேன். அதுல சந்தோசம்.

Anonymous said...

//ஒவ்வொரு முறையும் முயன்று முயன்று தோற்றுப் போகிறேன். எப்படித்தான் செய்கிறார்களோ???!!! கடலைப் பருப்பை கருகாமல் பொன்னிறமாக தாளிப்பதைத் தான் சொல்கிறேன்//

நான் கூடா நீங்க சமைச்சதை நீங்களே சாப்பிடுறதுதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்! கடைசில பார்த்தா கடலைப் பருப்பைக் கருகாமல் தாளிப்பதைச் சொல்றீங்க!

என்ன கொடுமைங்க சரவணன் இது!

Sanjai Gandhi said...

//கடலைப் பருப்பை கருகாமல் பொன்னிறமாக தாளிப்பதைத் தான் சொல்கிறேன். ஒவ்வொரு முறையும் கருகிப் போகும்போதோ நிறம் மாறாமலோ வரும்போது எரிச்சலாகி விடுகிறத//

நீங்க ஏன் ஆண்ட்டி அதுல கொஞ்சம் எண்ணெய் ஊற்றக் கூடாது?.. நோ..நோ.. அழக்கூடாது..:-P

Sanjai Gandhi said...

//OMG!!!... பல்பு வாங்கிட்டேனே..... என் டீம்ல ஒரு பொண்ணுகிட்ட சொல்லி என்னையே ஃபோட்டோ எடுத்து தர சொல்லி ஐடியா கொடுத்திருந்தான். என்ன கொடுமை சார் இது???//

நோ கமெண்ட்ஸ்..

Sanjai Gandhi said...

//எனது லீடிடம் கொண்டு சென்று காட்டினேன். அவர் அதைப் பார்த்து விட்டு அவஸ்தையாய் சிரித்தார்//
இதுக்குப் பேர் தான் சொந்த செலவுல சூனியம் வச்சிகிறதுனு சொல்றது.. வேல செய்யறத விட்டு ஆபிஸ்ல உக்காந்து இவங்க பிளாக் எழுதுவாங்களாம்.. அத இவங்க லீட்கிட்டயே காட்டுவாங்களாம்... ஆப்பு ரெடியானதும் மறக்காம அதயும் ஒரு போஸ்ட் போட்ருங்க...

இ.வா ஆனதும் பல்பு வாங்கினதும் தெரிஞ்சிகிட்டோம்.. அப்டியே ஆப்பு வாங்கினதயும் தெரிஞ்சிகிட்டா மனசு நெறஞ்சிடும் மை ஃபிரண்ட் ஆண்ட்டிக்கு.( Note this Word.. எனக்கில்ல)

Divya said...

ஆனந்த விகடனில் உங்கள் வலைபதிவு வந்ததிற்கு என் பாராட்டுக்கள்!!

மங்களூர் சிவா said...

//
சொல்ப வெயிட் மாடி"

"சொல்ப மூவ் மாடி"

"சொல்ப ஸ்டாப் மாடி"

என்ன கொடுமை சார் இது???
//
சக்கத்தாகிதே!!!

மங்களூர் சிவா said...

//ஒவ்வொரு முறையும் முயன்று முயன்று தோற்றுப் போகிறேன். எப்படித்தான் செய்கிறார்களோ???!!! கடலைப் பருப்பை கருகாமல் பொன்னிறமாக தாளிப்பதைத் தான் சொல்கிறேன்//

நான் கூடா நீங்க சமைச்சதை நீங்களே சாப்பிடுறதுதான் சொல்றீங்கன்னு நினைச்சேன்! கடைசில பார்த்தா கடலைப் பருப்பைக் கருகாமல் தாளிப்பதைச் சொல்றீங்க!

ரிப்பீட்டேய்...

என்ன கொடுமை இம்சை இது!

மங்களூர் சிவா said...

//
~பொடியன்~ said...
நீங்க ஏன் ஆண்ட்டி அதுல கொஞ்சம் எண்ணெய் ஊற்றக் கூடாது?.. நோ..நோ.. அழக்கூடாது..:-P
//
இம்சை உன் நிலமை பொடியன்லாம் டிப்ஸ் குடுக்குற அளவுக்கு ஆயிடிச்சே??
அவ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
~பொடியன்~ said...
இ.வா ஆனதும் பல்பு வாங்கினதும் தெரிஞ்சிகிட்டோம்.. அப்டியே ஆப்பு வாங்கினதயும் தெரிஞ்சிகிட்டா மனசு நெறஞ்சிடும் மை ஃபிரண்ட் ஆண்ட்டிக்கு.( Note this Word.. எனக்கில்ல)
//
:-))))))))

இராம்/Raam said...

//எனது பக்கத்து வீட்டு அக்கா நான் சென்ற முறை வீட்டிற்கு போயிருந்த போது "பரவாயில்ல.... நீங்க கொஞ்ச நாள்லயே ரொம்ப நல்லா கன்னடம் பேசக் கத்துக்கிட்டிங்களே" என்று ஆச்சரியப்பட்டார். எனக்கு எக்கச்சக்க குஷி. நான் பேசிய கன்னடம் இதுதான்.

"சொல்ப வெயிட் மாடி"

"சொல்ப மூவ் மாடி"

"சொல்ப ஸ்டாப் மாடி"

என்ன கொடுமை சார் இது???/

ஏன்ரீ,

இஷ்டூ கன்னடா கொத்தா நீம்கு??? கேலுசிதிரே சென்னாயிதீரீ, ஹ்ம்ம் ஆமேலே அத்தூ சொல்ப இல்ல ஸ்வல்ப... :) அர்த்தாயித்தா.... :)

நிஜமா நல்லவன் said...

சின்ன சின்ன விழயங்களை கூட ரொம்ப நல்லா யோசிச்சி எழுதுறீங்க. ஆமா ஆபீஸ்ல வேலை பார்பீங்களா இல்ல உங்க ப்ளாக் பத்தி யோசிச்சிகிட்டு இருப்பீங்களா?

கோபிநாத் said...

***

***

***

***

***

நீங்களுமா...என்ன கொடுமை சார் இது ! ;)

Hurray said...

Hahahahah..... Super blog ah irukku imsai.... kannadam superrrrrrrrrr :)

நாகை சிவா said...

சண்டிகர் பையன் மெயில் ஐடி கொடுங்களேம், ஒரு வாழ்த்து மெயில் அனுப்பனும். :)

மங்களூர் சிவா said...

@ராம்
//
இஷ்டூ கன்னடா கொத்தா நீம்கு??? கேலுசிதிரே சென்னாயிதீரீ, ஹ்ம்ம் ஆமேலே அத்தூ சொல்ப இல்ல ஸ்வல்ப... :) அர்த்தாயித்தா.... :)
//
கன்னட டியூஷனா??
அவ்வ்வ்
:-))

சிவக்குமரன் said...

bachelar lifela nangallam daily abubavikkiroam!

சுகுணாதிவாகர் said...

just i had read a story about yr blog in vikatan. congratulations!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
ஆச்சிப் புளி கரைசல்' என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் ==>
அப்படியே ரெடிமேட் சாம்பார்,சட்னிக்கு ஏதாவது கடையிலே விக்குதான்னு பார்த்து சொல்லுங்க.அந்த பொடியையோ,பேஸ்ட்டையோ அப்படியே தண்ணீர்ல போட்டதும் சாம்பார்,சட்னி தாயாரயிடணும்.

Anonymous said...

//ஆனந்த விகடனில் இந்த வாரம் எனது வலைப்பூவைப் பற்றி வந்திருப்பது தெரிந்ததும் என் நட்பு வட்டத்தில் அனைவருக்கும், எனது டீமுக்கும் தெரிவித்தேன்.....//
even i came to know about ur blog from vikatan only..now am reading your blog whenevr i get time..:)
ananda vikatan's recommedation would never prove to be bad..good work yaar..:)

Anonymous said...

//ஆனந்த விகடனில் இந்த வாரம் எனது வலைப்பூவைப் பற்றி வந்திருப்பது தெரிந்ததும் என் நட்பு வட்டத்தில் அனைவருக்கும், எனது டீமுக்கும் தெரிவித்தேன்.....//
even i came to know about ur blog from vikatan only..now am reading your blog whenevr i get time..:)
ananda vikatan's recommedation would never prove to be bad..good work yaar..:)