Tuesday, November 13, 2007

உன் கண்ணோரம் வாழ... III

"டேய்! ஏண்டா என் உயிர எடுக்கற?" அழாத குறையாய் சொன்ன ராமிடம் கெஞ்சினான் அரவிந்த்.

"ப்ளீஸ்டா. நான் அப்புறம் எப்படி அவகிட்ட பேசுவேன். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா"

"டேய் உனக்கே இது அநியாயமா தெரியலை. எனக்கு கால் பண்ணி நான் அட்டெண்ட் பண்ணின உடனே ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கற வாய்ஸ போட்டு விடற. அது உடனே போடறியா இல்ல லேட் ஆகுதானு சொல்ல சொல்லி உயிர வாங்குற. நெனைச்சு பாருடா. மூணு நாளா ஃபோனும் கையுமா உக்காந்திருக்கேன். என்னைப் பாத்தா உனக்கு பாவமா தெரியலையா?" பரிதாபமாய் அவன் சொல்லவும் என்ன செய்வதென்று திரும்பியவன் கண்களில் விழுந்த சந்துரு வேக வேகமாய்

"மச்சான் நான் வெளில கிளம்பறேண்டா. பை" என்று சொல்லி விட்டு எஸ் ஆகிவிட்டான்.

"சரிடா. இதுவரைக்கும் ப்ராக்டிஸ் பண்ணினத வச்சு இன்னைக்கு டெஸ்ட் பண்றேன்" என்றபடி ஹெட்ஃபோனை எடுத்து காதில் மாட்ட ஆர்வமான ராம் அவன் அருகில் வண்து அமர்ந்தான்.

ரிங் போக ஆரம்பித்ததும் ஒரு இனம் புரியாத பயம் எழுந்து வயிற்றை பிசைய அவஸ்தையாய் நெளிந்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போல அனுவின் அம்மா ஃபோன் எடுக்கவும் வேக வேகமாய் வேலை செய்து ரெக்கார்ட் செய்து வைத்திருந்ததை போட்டு விட்டான். அவளது அம்மாவும்

"ஒரு நிமிஷம் இரும்மா. கூப்பிடறேன்" என்று கூறி அவளை அழைத்து ஃபோனைக் கொடுத்தார்.

"ஹே உமா... வீட்டுக்கு போயிட்டியாடி?" என்று வழக்கமான தோரணையில் ஆரம்பித்தவளிடம்

"ஏ அனு... உமா இல்ல. நான்தான் அரவிந்த்" என்று சொன்னதும் வாயைப் பிளந்தவள் அருகிலிருந்த தாயைக் கண்டதும் அமைதியாய்

"ஹ்ம்ம்ம்... சொல்லுடி... ஓ அன்னைக்கு இன்ட்ரோ பண்ணினியே அந்த அக்காவா... சரி..." என்றாள்.

"எப்படி இருக்க?"

"நான் இங்க நல்லா இருக்கேங்கக்கா. நீங்க எப்படி இருக்கீங்க? உங்களுக்கு வேலை எல்லாம் எப்படி போகுது?"

"வேலை எங்க போகுது? எப்போ பார்த்தாலும் உன் நினைப்பாவே இருக்கு" என்று வேதனையாய் சொன்னவன் சட்டெனத் திரும்பி பார்த்தான். அவனை ஆர்வமாய் கவனித்தபடி அருகிலிருந்த ராமை முறைத்தபடி எழுந்து அறைக்குள் சென்று அமர்ந்தான்.

"அதெல்லாம் ஒண்ணும் நினைக்காதிங்கக்கா. நல்லா பண்ணுங்க. உடம்ப பாத்துக்கங்க. போன தடவைப் பாத்தப்பவே கொஞ்சம் இளைச்சுப் போயிருந்தீங்க"

"சரி அதை விடு... அங்க எதும் பிரச்சினை இல்லையெ. வீட்டுல திரும்ப எதாவது அந்த பையன் மேட்டர் பத்தி பேசினாங்களா?"

"காலெஜ்ல எந்த பிரச்சினையும் இல்லாம போயிட்டு இருக்கு. எங்க லெக்சரர் திரும்ப அந்த செமினார் பத்தி எதுமே பேசலை. நீங்க எதும் வொரி பண்ணிக்காதீங்க" என்றவள் பார்வையில் அவள் அம்மா அந்த இடத்தை விட்டு செல்வது விழுந்ததும் சத்தத்தை குறைத்து ஹஸ்கி வாய்ஸில்

"மாமா இங்க எதும் பிரச்சினை இல்ல. ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்க. சரி அம்மா உமா பேசறானு சொன்னாங்க" என்று ஆச்சரியமாய் கேட்டாள்.

"அன்னைக்கு உமாவ பேச சொல்லி ரெக்கார்ட் பண்ணி வச்சேன் இல்ல. அதை யூஸ் பண்ணி பண்ணினேன். இனிமேல் சாயந்திரம் இதே நேரத்துக்கு ஃபோன் பண்றேன். நீயே வந்து எடு"

"ஹ்ம்ம்ம்.... பெரிய ஆள் தான் நீங்க... சரி எப்பொ ஊருக்கு வரீங்க?"

"இந்த வாரம் சனி ஞாயிறு வரேன். உன்னை பாக்க முடியுமா?"

"ரொம்ப கஷ்டம். வர சனிக்கிழமை உங்க வீட்டுக்கு வரணும்னு எங்கப்பாவும் பெரியப்பாவும் சொல்லிட்டு இருந்தாங்களே"

"என்ன விஷயமாம்?"

"தெரியலை.... சரி சரி.... அம்மா வராங்கனு நினைக்கறேன். நாளைக்கு பேசுங்க. இல்லைனா இவ்ளோ நேரம் பேசறேனு சந்தேகம் வந்துடும்"

"சரி. பை டா"

"பை மாமா" என்று ஃபோனை வைத்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். உலகத்தையே புரட்டி காலடியில் போட்ட களிப்பு முகத்தில் தெரிந்தது.

--------------------------------------

சனிக்கிழமை...

வழக்கமான நேரத்தில் ஃபோன் அடிக்கவும் ஓடி சென்று ஃபோனை எடுத்தாள் அனு.

"உங்கப்பாவும் பெரியப்பாவும் கிளம்பிட்டாங்க. காருக்கு பின்னாடி அந்த நம்பர் ப்ளேட்டுக்கு மேல ஒரு தகடு இருக்கு இல்ல. அதுக்குள்ள ஒரு கீசெயின் செல்லோ டேப் போட்டு ஒட்டி வச்சிருக்கேன். எடுத்துக்கோ. பாத்து பத்திரமா எடு"

"சரி. வந்துட்டாங்க. ஒரு கால் மணி நேரம் கழிச்சு ஃபோன் பண்ணுங்க" என்று வைத்தவள் ஆவலாய் வாசலுக்கு ஓடினாள். படியேறி வந்த தந்தை அவள் தலையில் கைவைத்து முன் முடியை சிலுப்பி விட்டு புன்னகைத்தபடி உள்ளே சென்றதும் காரிடம் ஓடினாள். அவன் சொன்ன இடத்தில் இருந்து கீசெயினை எடுத்தவள் அதை இமைக்காமல் அப்படியே பார்த்தாள். ஒரு சதுர வடிவ கண்ணாடி போன்ற பொருளில் அவனது படம் செதுக்கியது போல இருந்தது. மனம் உற்சாகத்தில் துள்ள வேகமாக உள்ளே ஓடினாள். அங்கே அவளது தந்தை ரிசீவரை கையில் வைத்துக் கொண்டு

"உமாவா? எப்படிம்மா இருக்க?" என்று கேட்டுக் கொண்டிருக்க அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

"அவளை கூப்பிடறேன். ஏன் அப்பாகிட்ட பேச மாட்டியா" என்றவருக்கு வந்த பதிலில் ஏதோ பிடிபட திரும்பி பார்த்தவர் மகள் பேயடித்தது போல நிற்பதை கண்டதும் மீண்டும் வேகமாக

"எங்கம்மா இருக்க இப்போ?" என்று கேட்கவும் மறுமுனை உடனடியாய் துண்டிக்கப்பட்டது. அதை வைத்து விட்டு திரும்பியவர் பார்வையில் பயத்தில் அவசர அவசரமாய் உள்ளே ஓடிய அனு பட்டதும், ஏதோ புரிந்தவராய் முகம் சுருக்கினார்.

தொடரும்...

18 comments:

ஜி said...

:)))))

nathas said...

கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது... நல்லா இருக்கு...

Snehan said...

Your writing style is good. Continue the good work.

Sometimes I become cynical. Why are you writing all these and that too in a blog? I am from an Industry where we always look for "objective" and "value add".

You may ask, why Vairamuthu and Paa.Vijay are writing? They are publishing books and they can make a hell lot of money out of it. Yeah, yeah .. not only money but they can gain the publicity as well.

I too write blogs and the cynic in me has asked the question to me before. You can reply to these comments in your blog itself. It may be helpful for everyone to understand your objective and more importantly "YOU" better.

Note - Don't think "evano oruththan alanchittu pesa vanthuttan". I just wanted to comment.

கோபிநாத் said...

\\"காலெஜ்ல எந்த பிரச்சினையும் இல்லாம போயிட்டு இருக்கு. எங்க லெக்சரர் திரும்ப அந்த செமினார் பத்தி எதுமே பேசலை. நீங்க எதும் வொரி பண்ணிக்காதீங்க" என்றவள் பார்வையில் அவள் அம்மா அந்த இடத்தை விட்டு செல்வது விழுந்ததும் சத்தத்தை குறைத்து ஹஸ்கி வாய்ஸில்\\

எப்படி எல்லாம் பதில் சொல்றாங்க...பெரிய ஆளுங்கப்பா ! ! !...;))

Raji said...

Anu maatikittaangala....Enna aaga poagudhu ini...

நாகை சிவா said...

ப்ளான் சரியா பண்ண தெரியாம இம்புட்டு சீக்கிரமே மாட்டிக்கிட்டாங்களே... முடிச்ச போட்டுட்டீங்க.. சீக்கிரம் அவிழ்த்து விடுங்க... :)

J K said...

மறுபடி சிக்கலா?...

இம்சை அரசி said...

// ஜி said...
:)))))

//

வாங்க தல :)))))))))

இம்சை அரசி said...

// nathas said...
கதை ரொம்ப விறுவிறுப்பா போகுது... நல்லா இருக்கு...

//

நன்றி nathas... :)))

இம்சை அரசி said...

// Snehan said...
Your writing style is good. Continue the good work.
//

மிக்க மிக்க நன்றி சினேகன் :)))

// Sometimes I become cynical. Why are you writing all these and that too in a blog? I am from an Industry where we always look for "objective" and "value add".

You may ask, why Vairamuthu and Paa.Vijay are writing? They are publishing books and they can make a hell lot of money out of it. Yeah, yeah .. not only money but they can gain the publicity as well.

//

இதை பத்தி இதுக்கு முன்னாடி நான் யோசிச்சது இல்ல. உங்க கேள்வியப் பாத்துட்டு யோசிச்சதுல எனக்கு கிடைச்ச பதில் இதுதான்

1. ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியில என்னோட அளவிட முடியாத ஒரு சந்தோஷம் இந்த ப்ளாக்

2. புத்தகங்கள்லயோ பத்திரிக்கைகள்லயோ நான் நினைச்சதை எல்லாம் எழுத முடியாது. அவங்களுக்கு தகுந்த மாதிரிதான் எழுதனும். இங்க எல்லாருடைய கருத்துக்களையும் நேரடியா தெரிஞ்சிக்க முடியாது.

4. என்னை பொறுத்த வரைக்கும் என் ப்ளாக்கு உள்ள வரவங்க க்ளோஸ் பண்ணும்போது ஒரு சின்ன ஸ்மைலோட பண்ணனும்னு நினைப்பேன்

5. பப்ளிசிட்டி வச்சு என்ன பண்ணப் போறேன்? அதைவிட இந்த மாதிரி ஒரு 4 பேர் நல்லா இருக்குனு சொன்னா அதுவே எனக்கு பெரிய சந்தோஷம் அட்லீஸ்ட் ஒரு 4 பேராவது ரசிக்கற அளவுக்கு எழுதறோமேன்னு.

// I too write blogs and the cynic in me has asked the question to me before. You can reply to these comments in your blog itself. It may be helpful for everyone to understand your objective and more importantly "YOU" better.
//

நிஜமா உங்க ப்ளாக் எதுன்னு எனக்கு தெரியலை. ப்ளீஸ் உங்க லிங்க் கொடுங்க.

// Note - Don't think "evano oruththan alanchittu pesa vanthuttan". I just wanted to comment.
//

சத்தியமா அப்படி எதுவுமே நினைக்கலை. உங்க பின்னூட்டம் பாத்ததும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது :)))

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
\\"காலெஜ்ல எந்த பிரச்சினையும் இல்லாம போயிட்டு இருக்கு. எங்க லெக்சரர் திரும்ப அந்த செமினார் பத்தி எதுமே பேசலை. நீங்க எதும் வொரி பண்ணிக்காதீங்க" என்றவள் பார்வையில் அவள் அம்மா அந்த இடத்தை விட்டு செல்வது விழுந்ததும் சத்தத்தை குறைத்து ஹஸ்கி வாய்ஸில்\\

எப்படி எல்லாம் பதில் சொல்றாங்க...பெரிய ஆளுங்கப்பா ! ! !...;))

//

ஹி ஹி... இந்த அறிவு கூட இல்லைனா அப்புறம் எப்படி கோபி அண்ணா???

இம்சை அரசி said...

// Raji said...
Anu maatikittaangala....Enna aaga poagudhu ini...

//

அடுத்த பகுதி வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க ராஜி :)))

இம்சை அரசி said...

// நாகை சிவா said...
ப்ளான் சரியா பண்ண தெரியாம இம்புட்டு சீக்கிரமே மாட்டிக்கிட்டாங்களே... முடிச்ச போட்டுட்டீங்க.. சீக்கிரம் அவிழ்த்து விடுங்க... :)

//

என்ன பண்றது உங்க அளவுக்கு புத்திசாலியா இல்லையே அவங்க ;)))

இம்சை அரசி said...

// J K said...
மறுபடி சிக்கலா?...

//

ஹ்ம்ம்ம்ம்... சிக்கல் இல்லாம கதையா??? ;)))

இராம்/Raam said...

ஹீரோ மாட்டிக்கிட்டாரா?? :)

Gopal said...

mmmm....story is going good. Athu enna SUN TV mathiri regular break??? Try to write the next part before I forget this part. :(

Divya said...

கதை விறுவிறுப்பா போகுது, பாராட்டுக்கள்!
விரைவில் அடுத்த பகுதி போடுங்க!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாவ்.. கதை நல்லா விறுவிறுப்பா போகுது. :-))

சஸ்பென்ஸ் வேற வச்சிருக்கீங்களே! :-)