"எருமை மாடு மாதிரி வளர்ந்துட்டே போனா போதாது. பொண்ணுன்னா சமைக்க தெரிஞ்சிருக்கனும்" இப்படி திட்டியது நான் குடியிருந்த கோவில். திட்டினது சாட்சாத் என்னையேதான். இது நடந்தது என்னோட 7வது முழு ஆண்டு தேர்வு லீவுல. ஹி... ஹி... இதெல்லாம் என்னைக்கு நமக்கு உறைச்சிருக்கு. அப்படியே தூச தட்டற மாதிரி தட்டி விட்டுட்டு காதுலயே விழாத மாதிரி TVய வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தேன்.
"நான் சொல்லிட்டே இருக்கேன். காதுல ஏறுதா பாரு. நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போனா மாமியார் உன்னை திட்ட மாட்டாங்க. பொண்ண லட்சணமா வளத்து வச்சிருக்கா பாருன்னு என்னைதான் திட்டுவாங்க" என்று கொஞ்சம் சத்தம் ஜாஸ்தியானதும் என்னால் சந்தோஷம் தாங்க முடியலை. அப்பாடா. எப்படியோ திட்டு வாங்கப் போறது அம்மாதான். நம்மளை ஒண்ணும் சொல்ல மாட்டாங்கன்ற மிதப்புல அசையாம இருந்தேன்.
நேரம் ஆக ஆக திட்டும் அதிகமாயிட்டே இருக்க ஒரு கட்டத்துல பொறுக்க முடியாம எழுந்துப் போயி
"இப்போ என்னதாம்மா பண்ணனும்?"ன்னு அப்படியே கோவத்த காட்டினேன். இதுக்கெல்லாம் அசர ஆளா அம்மா???
"இந்த லீவுல ஒழுங்கா சமையலை கத்துக்கோ" அப்படியே முறைப்பாய் நான் ஒரு லுக் விட
"இந்த முறைக்கிற வேலையெல்லாம் வேணாம். போயி கிச்சன்ல கீரை இருக்கும். எடுத்து பொரியல் பண்ணு. அப்பா சாப்பிட வரதுக்குள்ள சீக்கிரம் செய்யணும்" இப்படி ஆர்டர் போட்டதும்தான் நினைச்சேன். ஆமா நாம ஏன் சமையல் கத்துக்கிட்டு சிறந்த சமையல் மாமணி விருத வாங்கக் கூடாதுன்னு. நமக்குதான் எதையாவது புதுசா கத்துக்கறதுன்னா ரொம்ப பிடிக்குமே.
"சரி எப்படி செய்யணும்?" னு நான் கேட்டதும் அம்மாவுக்கு ஒரே சந்தோஷம்.
"கீரைய எடுத்து நல்லா பொடியா நறுக்கிக்கோ. பர்ஸ்ட்டே கழுவத் தேவையில்ல. அப்புறம் வெங்காயம் வெட்டி வச்சுக்கோ. இந்த வேலைய முடிச்சுட்டு வா. மீதிய சொல்றேன்"
வேக வேகமா போய் கீரைய எடுத்து நல்லா பொடிசா நறுக்க ஆரம்பிச்சேன். 'ஆஹா! உங்கம்மா செய்யறத விட சூப்பரா இருக்குங்கப்பா' அப்படின்னு எங்கப்பா சொல்லப் போற(?) வசனம் என் காதுல ஒலிச்சிட்டே இருந்தது. அம்மா சொன்னதெல்லாம் செஞ்சுட்டு அப்புறம் எப்படி செய்யணும்னு போயிக் கேட்டேன்.
"கொஞ்சமா எண்ணெய் ஊத்தி காஞ்சதும் கடுகு போட்டு அது பொரிஞ்சதும் கருவேப்பில, வெங்காயம், வரமிளகா எல்லாம் போட்டு நல்லா வனங்க விடணும். கீரைய தண்ணில போட்டு நல்லா அலசி அதையும் போட்டு உப்பு கொஞ்சம் போட்டு கொஞ்ச நேரம் தட்டு வச்சு மூடி வச்சிடணும். அப்போ கொஞ்சம் தேங்காயத் திருவி வச்சுக்கோ. கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்து சாப்பிட்டுப் பாத்து வெந்திருந்தா தேங்காயை போட்டு ஒரு கிளறு கிளறிட்டு இறக்கி வச்சிடணும்" அதுவரைக்கும் TVய சைடுல பாத்து அப்பப்ப அம்மா சொல்றத காதுல கேட்டு multitasking பண்ணிட்டு இருந்த நான் வேக வேகமா
"சரிம்மா. சரிம்மா" ன்னு சொல்லிட்டு வேகமா கிச்சன்க்குள்ள நுழைஞ்சேன். அந்த நல்லா வனங்க விடணும் வரைக்கும் பர்பெக்டா செஞ்சுட்டேன். அதுக்கபுறம் பாருங்க நம்ம அரைகுறை cut & paste பழக்கத்தால 'கீரைய தண்ணில போட்டு நல்லா அலசி'ன்றத cut பண்ணி நம்ம மூளைல paste பண்ண மறந்துட்டேன். அப்படியே போட்டு நல்லா வனங்குனதுக்கு அப்புறம்தான் ஞாபகமே வந்தது. வேகமா அம்மாட்ட ஓடி விஷயத்த சொல்லி என்ன பண்றதுன்னு கேட்டதும் அர்ச்சனை ஆரம்பிச்சது பாருங்க...... அம்மாடியோவ்.... இனி சமையல் பண்ணும் போது எதாவது தப்பு பண்ணினா அதை யார்கிட்டயும் சொல்லக் கூடாதுனு முடிவுக்கு வந்தேன். 'அலசினேன். அப்பயும் இப்படியேதான் இருக்கு. நீங்க வாங்கிட்டு வந்த கீரை சரியில்ல'ன்னு சொல்லத் தெரியாத அளவுக்கு எவ்ளோ அப்பாவியா இருந்திருக்கேன் பாருங்கப்பு.
அதுக்கப்புறம் அந்த திட்டையெல்லாம் சமாளிச்சு ஓடிப் போயி வெந்துட்டு இருந்த கீரைய எடுத்து தண்ணில போட்டு அலசி மறுபடியும் வாணலில போட்டு வதக்கி இதை பண்ணினதுக்கு மறுபடியும் திட்டு வாங்கி எல்லாம் போராட்டமும் முடிஞ்சு இறக்கி வச்சதுக்கு அப்புறம் கொஞ்சம் எடுத்து வாயிலப் போட்டா..... த்தூ..... த்தூ..... ஒரே மண்ணு. எதும் பேசாம அப்படியே வச்சுட்டு பெட் ரூம்ல போயி படுத்துக்கிட்டேன்.
எங்கப்பா வந்ததும் எங்கம்மா "உங்க அருமை மக பொரியல் செஞ்ச லட்சணத்த சாப்பிட்டு பாருங்க"னு சொல்லிட்டே அப்பாவுக்கு பொரியல் வச்சதும் எனக்கு ஒரே கடுப்பு. அதுதான் கேவலமா இருக்கே. அதை ஏன் அவருக்கு வைக்கணும். ஏன் இந்த கொல வெறின்னு நினைச்சுக்கிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு அப்பா கூப்பிட்டார். எப்படியும் எங்கப்பா என்னை திட்ட மாட்டார். அந்த தைரியத்துல அப்படியே சோகமா மொகத்த வச்சுக்கிட்டு எழுந்துப் போனேன்.
"சமையல் செய்ய கத்துக்க ஆரம்பிச்சிட்டிங்களா?" அப்படின்னதும் எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. என் கண்ணு முன்னாடியே அந்த பொரியலை எடுத்து சாப்பிட்டு
"சூப்பரா இருக்குப்பா. ஸ்டார்டிங்ல சின்ன சின்ன தப்பு வரதான் செய்யும். அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது. செய்ய செய்ய சரியாயிடும். சரியா"-ன்னு அவர் சொல்லி தட்டுல இருந்த கீரைய மீதி வைக்காம சாப்பிட்டத பாத்ததும் இனி சூப்பரா சமையல் கத்துக்கிட்டு அப்பாவுக்கு வித விதமா செஞ்சு போடணும்னு முடிவு பண்ணினேன். அதுல இருந்து ஒழுங்கா கத்துக்க ஆரம்பிச்சேன். ரொம்ப இல்லாட்டியும் ஓரளவு நல்லாவே செய்வேன். யாராவது புதுசா சமையல் குறிப்பு சொன்னா அதை கேட்டு செஞ்சு பாப்பேன். எங்க அப்பாவுக்கு எதாவது புதுசு புதுசா செஞ்சு தருவேன். இது வரைக்கும் எவ்வளவோ கேவலமா நான் செஞ்சிருந்தாலும் எங்கப்பா சூப்பரா இருக்குங்கப்பான்னு சொல்லி விரும்பி சாப்பிடுவார்.
இந்த விஷயம் மட்டும் இல்ல. எந்த விஷ்யம்னாலும் என்னை ஊக்கப்படுத்தறது எங்கப்பாதான். எதாவது தோல்வினு உடைஞ்சுப் போனாக் கூட என்னை சரி செய்யறதும் அவர்தான். என்னோட ஃபர்ஸ்ட் and பெஸ்ட் ஃப்ரெண்ட். எங்கேயாவது சின்னப் பொண்ணுங்க அவங்க அப்பா கை பிடிச்சு நடக்கறதப் பாத்தாக் கூட எனக்கு ஏக்கம் வந்துடும். எப்பவுமே இப்படியே ஒரு குட்டிப் பாப்பாவா எங்கப்பா கையப் பிடிச்சுட்டே இருக்கணும்னு. அபி அப்பாவோட அபி பத்தின போஸ்ட் படிக்கும்போதெல்லாம் எனக்கு அப்பாவ பாக்கணும் போல இருக்கும். உடனே ஃபோன் பண்ணி பேசிடுவேன்.
ஓகே இம்சை.................... ஸ்டாப் யுவர் சென்டின்னு நீங்க கத்தறது எனக்கு கேக்குது. ஹ்ம்ம்ம்ம்....... அப்பாவப் பத்தி நினைச்சாலே ரொம்ப சென்டியாயிடறேன்.
அப்புறம் அப்பு... எனக்கு தோசை சுடத் தெரியாதுன்னு நான் வேணாங்க வேணாங்கன்னு ஓட்டி ஓட்டியே என்னை அவ்வ்வ்வ்வ்...... அழ வச்ச அத்தனை பேருக்கும் சமர்ப்பணம்பா.............
Wednesday, March 28, 2007
சமையலரசி ஆனது எப்படி?
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
வந்திடேன்:-))
படிச்சுட்டு மீதிய கமண்டுறேன்:-))
மாப்பு.. ஆமா தங்கச்சியைக் கட்டிக்கப் போறவர் நமக்கு மாப்பிள்ளை உறவு தானே.. நல்லாக் கேட்டுக்க இந்தப் பதிவைப் படிச்சீங்கன்னா.. கீரைப் பட்டப் பாட்டப் பாத்தீல்ல.. ஒழுங்காச் சமைக்க்கக் கத்துக்கோ.. அப்புறம் உன் வயித்துக்குச் சேதாரம் ஆயிரும் சொல்லிட்டேன்
அம்மா நல்லா சமைக்கத் தெரிஞ்சப் பயலா உனக்குப் பார்த்துருவோம் டோன்ட் ஓர்ரி..
// தேவ் | Dev said...
மாப்பு.. ஆமா தங்கச்சியைக் கட்டிக்கப் போறவர் நமக்கு மாப்பிள்ளை உறவு தானே.. நல்லாக் கேட்டுக்க இந்தப் பதிவைப் படிச்சீங்கன்னா.. கீரைப் பட்டப் பாட்டப் பாத்தீல்ல.. ஒழுங்காச் சமைக்க்கக் கத்துக்கோ.. அப்புறம் உன் வயித்துக்குச் சேதாரம் ஆயிரும் சொல்லிட்டேன்
அம்மா நல்லா சமைக்கத் தெரிஞ்சப் பயலா உனக்குப் பார்த்துருவோம் டோன்ட் ஓர்ரி..//
தேவ்! ஒன்னியும் பிரியல! 480 மார்க் வாங்கியா போதையா:-))
//இது வரைக்கும் எவ்வளவோ கேவலமா நான் செஞ்சிருந்தாலும் எங்கப்பா சூப்பரா இருக்குங்கப்பான்னு சொல்லி விரும்பி சாப்பிடுவார்.//
உங்க வீட்டுலயும் இதே கதைதானா? எங்க வீட்டுலயும் இதுதான் வழக்கம். அதுலயும் உண்மையிலேயே ரொம்ப மோசமான ஐட்டங்களுக்கு இந்த மாதிரி ஒரு சான்றிதழ் கொடுக்கும்போது எங்க அம்மா ஒரு கேவலமான பார்வை பார்ப்பாங்க பாருங்க எங்க ரெண்டு பேரையும், மானஸ்தங்களாயிருந்தால் அதுக்கு வேற மாதிரி ரியாக்ட் பண்ணியிருப்பாங்கன்னு வைங்களேன்.
எனக்கும் படங்களிலே அம்மா சென்டிமென்டை விட அப்ப சென்டிமென்ட் காட்சிகளை பார்த்தால் தான் ஒரே பீலிங்க்ஸாக போய் விடும்.
நல்ல பதிவு அரசி
வாழ்த்துக்கள்!! :-)
லாஸ்ட் வீக் "தவமாய் தவமிருந்து" படம் பாத்திங்கலா ??
நேற்று சொன்னது போல் வருகைப் புரிந்து விட்டேன்.
சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் உன்ன அடிச்சுக்க முடியாதுடா சிவா!!!(இது எனக்கு நானே சொல்லிக்கிட்டது)
கொஞ்சம் வேலை முடிச்சுட்டு வரேன்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....நம்ம அப்பா இவ்வளோ நல்லவரா....தேவ் சொன்ன மாதிரி மாப்பிள்ளைய நினைச்சாத்தேன் பாவமா இருக்கு :-)
அப்பா பாவம். :((
//தேவ் சொன்ன மாதிரி மாப்பிள்ளைய நினைச்சாத்தேன் பாவமா இருக்கு :-)
///
அந்த அப்பாவிக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் :)
அரசி....என்ன ஆச்சு....கீரையில ஆரம்பிச்சி கடைசியில முடிக்கும் போது ஒரே பீலிங்கா முடிச்சுட்டிங்க ;-((
கவலை படாதே தங்கச்சி....அண்ணன்கள் (தேவ், அபி அப்பா, ஷ்யாம்) இவ்வளவு பேரு இருக்கும் போது உன்னையா சமையல் கட்டுக்கு அனுப்பிடுவோமா. கண்டிப்பா நல்லா சமைக்க தெரிஞ்ச பையனா பார்த்து முடிச்சுடுவோம் ;-))))
இன்னாட இது வலது கண்ணு ஒரு மாதிரி மினுக்கு மினுக்கு துடிக்குதேன்னு பார்த்தேன்...இப்பதான் மேட்டரே தெரியுது .....ரசித்தவையில என்னையும் சேர்த்திருக்கிங்க, அதுவும் ரெண்டு வாட்டி ;-))))
ரொம்ப நன்றி தங்கச்சி ;-)))
Hi, nice post...:)
Hi..nice post :)
Nice one...:)
sorrynga, ennoda laptop-la, display aagura letters ellame Korean Font-la irunthathunala, I thought I clicked wrong button and posted the comments again and again :(. Now set it to English Font. :-)
// என் கண்ணு முன்னாடியே அந்த பொரியலை எடுத்து சாப்பிட்டு
"சூப்பரா இருக்குப்பா. ஸ்டார்டிங்ல சின்ன சின்ன தப்பு வரதான் செய்யும். அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணக் கூடாது. செய்ய செய்ய சரியாயிடும். சரியா"-ன்னு அவர் சொல்லி தட்டுல இருந்த கீரைய மீதி வைக்காம சாப்பிட்டத பாத்ததும் இனி சூப்பரா சமையல் கத்துக்கிட்டு அப்பாவுக்கு வித விதமா செஞ்சு போடணும்னு முடிவு பண்ணினேன் //
அவருக்குப் பல வருடங்களுக்குமுன் திருமணமான புதிதில்:-))) இதேபோல் சாப்பிட்ட கீரை நி்னைவு வந்திருக்கும். வேறென்ன சொல்லுவார் ? :-)
//Anonymous said...
லாஸ்ட் வீக் "தவமாய் தவமிருந்து" படம் பாத்திங்கலா ?? //
முகம் காட்ட மறுத்தாய்!!
முகவரியை மறைத்தாய்!!
ஏனப்பா:-))
// அபி அப்பா said...
வந்திடேன்:-))
படிச்சுட்டு மீதிய கமண்டுறேன்:-))
//
வாங்கோ அண்ணா வாங்கோ...
சீக்கிரம்...
// தேவ் | Dev said...
மாப்பு.. ஆமா தங்கச்சியைக் கட்டிக்கப் போறவர் நமக்கு மாப்பிள்ளை உறவு தானே.. நல்லாக் கேட்டுக்க இந்தப் பதிவைப் படிச்சீங்கன்னா.. கீரைப் பட்டப் பாட்டப் பாத்தீல்ல.. ஒழுங்காச் சமைக்க்கக் கத்துக்கோ.. அப்புறம் உன் வயித்துக்குச் சேதாரம் ஆயிரும் சொல்லிட்டேன்
//
ஆமா அண்ணா... முன்னாடியே இப்படி நீங்க சொல்லிடறது எனக்கு ரொம்ப நல்லது ;)
//அம்மா நல்லா சமைக்கத் தெரிஞ்சப் பயலா உனக்குப் பார்த்துருவோம் டோன்ட் ஓர்ரி..
//
பாசமலரே! இப்படி ஒரு அண்ணன் கிடைக்க நான் என்ன தவம் செஞ்சுருக்கோணும் :)))
// லக்ஷ்மி said...
உங்க வீட்டுலயும் இதே கதைதானா? எங்க வீட்டுலயும் இதுதான் வழக்கம். அதுலயும் உண்மையிலேயே ரொம்ப மோசமான ஐட்டங்களுக்கு இந்த மாதிரி ஒரு சான்றிதழ் கொடுக்கும்போது எங்க அம்மா ஒரு கேவலமான பார்வை பார்ப்பாங்க பாருங்க எங்க ரெண்டு பேரையும், மானஸ்தங்களாயிருந்தால் அதுக்கு வேற மாதிரி ரியாக்ட் பண்ணியிருப்பாங்கன்னு வைங்களேன்.
//
அதையெல்லாம் தூசு மாதிரி ஊதி தள்ளிட்டு போயிட்டே இருக்கணும்ங்க :)
வருகைக்கு நன்றி :)))
// CVR said...
எனக்கும் படங்களிலே அம்மா சென்டிமென்டை விட அப்ப சென்டிமென்ட் காட்சிகளை பார்த்தால் தான் ஒரே பீலிங்க்ஸாக போய் விடும்.
நல்ல பதிவு அரசி
வாழ்த்துக்கள்!! :-)
//
நன்றி CVR :)))
// Anonymous said...
லாஸ்ட் வீக் "தவமாய் தவமிருந்து" படம் பாத்திங்கலா ??
//
இல்ல படம் வந்தப்பவே பாத்துட்டேன். நான் அழுத அழுவாச்சில அந்த தியேட்டர்ல புதுசா ஒரு பவுன்டெயினே வச்சிட்டாங்க ;)
// நாகை சிவா said...
நேற்று சொன்னது போல் வருகைப் புரிந்து விட்டேன்.
//
வருக வருக...
//சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் உன்ன அடிச்சுக்க முடியாதுடா சிவா!!!(இது எனக்கு நானே சொல்லிக்கிட்டது)
//
ஆமா ஆமா. இதை நான் வழிமொழிகிறேன்.
// Syam said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....நம்ம அப்பா இவ்வளோ நல்லவரா....தேவ் சொன்ன மாதிரி மாப்பிள்ளைய நினைச்சாத்தேன் பாவமா இருக்கு :-)
//
ஏன் அப்படி சொல்றீங்க ஏன் அப்படி சொல்றீங்க??? அப்படியெல்லாம் சொல்லக் கூடாது.
அப்புறம் உருளைக் கிழங்கு போண்டா ஒழுங்கா செய்யாம அண்ணிகிட்ட மத்துல வாங்குன விஷயத்த எல்லார்ட்டயும் போட்டுட்ருவேன்...
// தம்பி said...
அப்பா பாவம். :((
//
நாளைக்கு உன் புள்ள செய்யறத நீயும் அப்படிதான் சாப்பிடுவ. அப்ப தெரியும் ;)
// இராம் said...
//தேவ் சொன்ன மாதிரி மாப்பிள்ளைய நினைச்சாத்தேன் பாவமா இருக்கு :-)
///
அந்த அப்பாவிக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் :)
//
தம்பி இதெல்லாம் சரியில்ல... அப்புறம் அடுத்த ப்ளாக்கர் மீட்ல உனக்கு தரதுக்காக வாங்கி வச்சிருக்கிற குச்சு மிட்டாயும் குருவி ரொட்டியையும் நாய்க்கு போட்டுடுவேன். ஜாக்கிரதை...
// கோபிநாத் said...
அரசி....என்ன ஆச்சு....கீரையில ஆரம்பிச்சி கடைசியில முடிக்கும் போது ஒரே பீலிங்கா முடிச்சுட்டிங்க ;-((
//
ஆட்டோமேடிக்கா அப்ப ஞாபகம் வந்துடுச்சு. அதான்...
// கோபிநாத் said...
கவலை படாதே தங்கச்சி....அண்ணன்கள் (தேவ், அபி அப்பா, ஷ்யாம்) இவ்வளவு பேரு இருக்கும் போது உன்னையா சமையல் கட்டுக்கு அனுப்பிடுவோமா. கண்டிப்பா நல்லா சமைக்க தெரிஞ்ச பையனா பார்த்து முடிச்சுடுவோம் ;-))))
//
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
உங்க பாசத்த எல்லாம் பாக்கும்போது ஒரே ஆனந்த கண்ணீரா வருது...
// கோபிநாத் said...
இன்னாட இது வலது கண்ணு ஒரு மாதிரி மினுக்கு மினுக்கு துடிக்குதேன்னு பார்த்தேன்...இப்பதான் மேட்டரே தெரியுது .....ரசித்தவையில என்னையும் சேர்த்திருக்கிங்க, அதுவும் ரெண்டு வாட்டி ;-))))
ரொம்ப நன்றி தங்கச்சி ;-)))
//
பரவால்ல அண்ணா :))))
// Guna said...
Hi, nice post...:)
//
thank u guna :)))
// Guna said...
sorrynga, ennoda laptop-la, display aagura letters ellame Korean Font-la irunthathunala, I thought I clicked wrong button and posted the comments again and again :(. Now set it to English Font. :-)
//
its ok... no probs :)))
அப்பாக்கே இந்த பாடுன்னா, பாவம் மாப்பு... :(((((
அப்பா.. கண்ணுகளா.. இந்த சோகக் கதையைக் கேட்டப்புறமாவது தெரிஞ்சுக்குங்க.. நம்ம பரம்பரை எவ்வளவு பொறுமைசாலிகன்னு.. ஏன்னா நம்ம தங்கச்சி இம்சை அரசியோட மம்மி சாப்பாட்டையும் சகிச்சிக்கிட்டு இப்போ தங்கச்சி சாப்பாட்டையும் சகிச்சு தின்னுப்போட்டு நல்லாயிருக்குன்னு வேற ஒரு வார்த்தைய சொல்லிருக்காரே அந்த மனுஷன்.. ஐயா. குலம் காத்த உத்தமரே நீங்கள் வாழ்க.. இம்சை அரசியின் இம்சைகள் தொடரட்டும்..
//
அபி அப்பா said...
முகம் காட்ட மறுத்தாய்!!
முகவரியை மறைத்தாய்!!
ஏனப்பா:-)) //
இதுல யேதொ ஒரு உள் குத்து இருக்கிற மாதிரி இருக்கே ?
// பாலராஜன்கீதா said...
அவருக்குப் பல வருடங்களுக்குமுன் திருமணமான புதிதில்:-))) இதேபோல் சாப்பிட்ட கீரை நி்னைவு வந்திருக்கும். வேறென்ன சொல்லுவார் ? :-)
//
எங்கம்மா ரொம்ப நல்லா சமையல் செய்வாங்க :)))
// Venkat said...
Realy Superb,
Enga appavum unga appa mathri than, enikuma ennai sornthu poga vitathu ellai.
For the first time in my life i am reading such stories which realy brings fahter's character. Father's are silent promoters. I dont know to write but i read lot.
Venkat
//
ஹ்ம்ம்ம்... எனக்கும் அப்பாதான் ரொம்ப ஃப்ரெண்ட். என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் சொல்லியிருக்காங்க. இப்படி அப்பா கிடைக்க நான் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கணும்னு :)))
// Venkat said...
Its too good.
First time i am seeing a story about father.
//
thank u :)))
// ஜி - Z said...
அப்பாக்கே இந்த பாடுன்னா, பாவம் மாப்பு... :(((((
//
ஏன் இந்த கொலவெறி???
// உண்மைத் தமிழன் said...
அப்பா.. கண்ணுகளா.. இந்த சோகக் கதையைக் கேட்டப்புறமாவது தெரிஞ்சுக்குங்க.. நம்ம பரம்பரை எவ்வளவு பொறுமைசாலிகன்னு.. ஏன்னா நம்ம தங்கச்சி இம்சை அரசியோட மம்மி சாப்பாட்டையும் சகிச்சிக்கிட்டு இப்போ தங்கச்சி சாப்பாட்டையும் சகிச்சு தின்னுப்போட்டு நல்லாயிருக்குன்னு வேற ஒரு வார்த்தைய சொல்லிருக்காரே அந்த மனுஷன்.. ஐயா. குலம் காத்த உத்தமரே நீங்கள் வாழ்க.. இம்சை அரசியின் இம்சைகள் தொடரட்டும்..
//
ஏன் இப்படி??? எனக்குதான் தெரியாதுனு சொல்லியிருந்தேன். எங்க அம்மாவுக்கு தெரியாதுன்னு சொன்னேனா? சொன்னேனா?? சொன்னேனா???
Post a Comment