Monday, March 5, 2007

வலி - II

"நீ வர வர பண்றது எல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்ல" மனோ வேறுபக்கமாய் பார்த்தபடி சொல்ல

"என்ன பண்ணினேனாம்?" என்றாள் துர்கா கேலிக் குரலில்.

"நேத்து எவ்ளோ நேரம் ட்ரை பண்ணிட்டே இருந்தேன். வெயிட்டிங்லயே இருந்தது"

"பாத்தேன்டா. ISD கால் பேசிட்டு இருந்தேன். அதான் உன்னோடது அட்டெண்ட் பண்ணலை. சாரிடா செல்லம். கோவிச்சுக்காத"

"நீ இப்பவெல்லாம் என்னோட பேசறதே இல்ல. நான் டெய்லியும் உன்னோட கடைசியா பேசிட்டுதான தூங்குவேன். காலைலயும் எழுந்த உடனே உன்கிட்டதான் பேசுவேன்... ஆனா இப்பவெல்லாம் காலைலயும் நீ பேசறது இல்ல... " என்று அவன் அமர்ந்த குரலில் சொல்லவும்

"சாரிடா. டெய்லியும் நைட் அவர் ஃபோன் பண்றார். அவரோட day என்கிட்ட பேசிதான் ஆரம்பிக்கனும்னு ஆசையாம். அதே மாதிரி என்னொட day அவர்ட்ட பேசிதான் ஆரம்பிக்கனுமாம். அதனால காலைலயும் ஃபோன் பண்ணிடறார். நான் என்ன பண்ணட்டும்?" என்றபோது அவள் குரலில் ஒருவித நாணம் கலந்த பெருமை தெரிந்தது.

அதை கேட்டதும் அவன் முகம் சிவக்க என்ன செய்வதென்று தெரியாமல் "ஹே! என் லீட் வர சொன்னார். மறந்தே போயிட்டேன். பை" என்று பதிலுக்கு காத்திராமல் எழுந்து சென்று விட்டான்.

போகும்போது அவள் சொன்ன வார்த்தைகளே நினைவுக்கு வர 'ச்சே. இப்படி நினைக்க கூடாதுன்னு நினைச்சும் ஏன் இப்படியே தோணுது' என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவன் மனம் 'இருந்தாலும் துர்கா அவருக்கு அவர் day உன்கிட்ட பேசி ஆரம்பிக்கனும்னு ஆசைதான். ஆனா நானா ஆசைப்படாட்டியுமே என் day உன்கிட்ட பேசினாதான் ஆரம்பிக்கும்னு உனக்கு ஏன் தெரியாம போச்சு?.நீ இல்லாட்டி என் உலகமே இருண்டு போயிடுமோனு எனக்கு ரொம்ப பயமா இருக்கு' என்று எண்ணிக் கொண்டே நேராக சென்று rest room-ற்குள் நுழைந்தான். இருட்டறையில் தனியாய் மாட்டி க் கொண்டு தாயைத் தேடும் குழந்தையாய் அவன் மனம் தவிக்க முகத்தில் நன்றாக நீரை அடித்து கழுவினான்.

---------------------------------

"ஹே! உன் ஹைட் எவ்ளோடா?" choco crunch-லேயே முழு கவனமாய் கேட்ட துர்காவை மனோ கேள்வியாய் பார்க்க

"சொல்லு சீக்கிரம்" என்றபடி அவனுக்கு இணையாக மெல்ல நடந்தாள்.

"169. ஏன்?"

"169-ஆ? தேங்க் காட்" என்றவள் அவனை ஒட்டி நின்று

"உனக்கு நான் ஹைட் கரெக்டாதான இருப்பேன்?" என்று கேட்டாள். அவன் அமைதியாய் "ம்ம்ம்" என்று சொல்ல

"அவரும் 169தானாம். அப்பாடா. பயந்துட்டே இருந்தேன். ரொம்ப ஷார்ட்டா தெரிவேனோனு. கரெக்டா இருப்பேன்" என்று புன்னகையுடன் சொன்னாள்.
அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. இயலாமையில் உதடு துடிக்க பேசாமல் அமைதியாகவே வந்தான். துர்கா இது எதுவும் தெரியாமல் அவளுடைய வருங்கால கணவனைப் பற்றி பேசியபடியே வந்தாள்.

'ஹைட்ல மட்டும் இல்ல. எல்லாவிதத்துலயுமே எனக்கு நீ கரெக்டாதான் இருப்ப' என்று சொல்லிவிட இதயம் துடித்தது. என்றாலும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடுக்க அமைதியாகவே வந்தான்.

(தொடரும்...)

13 comments:

ஜி - Z said...

ம்ம்ம்ம்....

அப்புறம்....

ஆகா வந்திருச்சு... ஆசையில் ஓடி வந்தேன் னு சிம்பு ஸ்டைல்ல பாட்ட போட்டிருந்தானா, இந்நேரத்துக்கு, ஆஸ்திரேலியாவோ, அண்டார்டிக்காவோ போய் டூயட்டெல்லாம் பாடிருக்கலாம்..

இப்படி அல்லோலப் படத் தேவையில்ல...

Anonymous said...

Hmmm....Nalla Iruku

கோபிநாத் said...

ஹிம்...
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் :)))

இம்சை அரசி said...

// ஜி - Z said...
ம்ம்ம்ம்....

அப்புறம்....

ஆகா வந்திருச்சு... ஆசையில் ஓடி வந்தேன் னு சிம்பு ஸ்டைல்ல பாட்ட போட்டிருந்தானா, இந்நேரத்துக்கு, ஆஸ்திரேலியாவோ, அண்டார்டிக்காவோ போய் டூயட்டெல்லாம் பாடிருக்கலாம்..

இப்படி அல்லோலப் படத் தேவையில்ல...
//

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க???

இம்சை அரசி said...

// Anonymous said...
Hmmm....Nalla Iruku

//

thank you... :))))))

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
ஹிம்...
அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் :)))
//

அடுத்த பகுதியோட முடிஞ்சிடும் :))))

ஜி - Z said...

//இம்சை அரசி said...
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க???//

இதுல ஏதாவது உள்குத்து, வெளிகுத்து இருக்குதா??? ;))))

CVR said...

அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்!! :-)

அபி அப்பா said...

//அடுத்த பகுதியோட முடிஞ்சிடும் :))))//

ஹை..ஜாலி...சும்மா சொன்னேன். நல்லாயிருக்கு கதை!!

இம்சை அரசி said...

// ஜி - Z said...
//இம்சை அரசி said...
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்னு சும்மாவா சொன்னாங்க???//

இதுல ஏதாவது உள்குத்து, வெளிகுத்து இருக்குதா??? ;))))

//

இன்னுமா புரியல???

என்ன தல???!!!!!!!!!!!!

இம்சை அரசி said...

// CVR said...
அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்!! :-)

//

வாங்க CVR...
அடுத்த பகுதியோட முடிச்சிடுவேன்.
முடியல... இப்பவே கண்ண கட்டுது :)))

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
//அடுத்த பகுதியோட முடிஞ்சிடும் :))))//

ஹை..ஜாலி...சும்மா சொன்னேன். நல்லாயிருக்கு கதை!!
//

என்ன அண்ணா இவ்ளோ late???

அபி அப்பா said...

//என்ன அண்ணா இவ்ளோ late???//
இல்லப்பா நெஜமாவே கொஞ்சம் ஆணி ஜாஸ்த்தியா போச்சு, அதான். நா முன்னமே படிச்சுட்டேன். பதில் சொல்லதான் கொஞ்ஜம் லேட்.. சாரி