"உன் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?" கேட்ட துர்காவை வித்தியாசமாய் பார்த்த மனோ
"தெரியாது" என்றான்.
"இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கறது இல்லயா?" என்று அவள் செல்லமாய் குறை சொல்லவும்
"தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போறேன்" என்று சலித்துக் கொண்டு கூறினான்.
"எனக்கு இதுல எல்லாம் ரொம்ப இண்ட்ரெஸ்ட். நான் சின்ன வயசுல சக்திய பத்தி ஒரு புக்ல படிச்சேன். அப்ப ரொம்ப ஃபீல் பண்ணினேன். எனக்கு சக்தினு பேர் வைக்கலையேன்னு. அப்புறம்தான் தெரிஞ்சது. சக்தியோட இன்னொரு பேர்தான் துர்கான்னு. தெரிஞ்சப்ப எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா?? இப்பவெல்லாம் எனக்கு ரொம்ப பெருமை. துர்கானு பேர் இருக்கறதுக்கு" என்று பெருமையாய் சொன்னாள். அதை கேட்டு ஆச்சர்யப்பட்டவன்
"பேர்ல எல்லாம் கூட இவ்ளோ விஷயம் இருக்கா?!! அப்படி என்னதான் சக்தியப் பத்திப் படிச்ச?" என்றான் ஆர்வமாய்.
"அதுவா. சிவனோட ஒரு பாதிதான் சக்தி. அது உலகத்தையே ஆட்டி வைக்கிறது. எரிசக்தி, அணுசக்தி, மின்சக்தினுதான் சொல்வாங்களே தவிர எரிசிவம், அணுசிவம், மின்சிவம்னு சொல்றதில்ல. சக்தி நினைச்சா ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். சக்திய யாராலயும் திருப்திபடுத்த முடியாது. தானா திருப்திப்பட்டுட்டாதான் உண்டு. உலகத்துல இருக்கற ஒவ்வொரு ஆணும் சிவம். ஒவ்வொரு பெண்ணும் சக்தி. ஒவ்வொரு சிவத்துக்கும் ஒரு சக்தி கண்டிப்பா இருக்கும் சரிபாதியா. எனக்கு அவர் சிவம். அவருக்கு நான் சக்தி. உனக்கு ஒரு சக்தி வருவா. அவதான் உனக்கு எல்லா சக்தியுமா இருப்பா" என்று அவள்பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போக 'அவருக்கு நான் சக்தி' என்ற வார்த்தைகளில் நொறுங்கியவன் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அவள் இரு தோளைப் பற்றினான்.
"ஏன் துர்கா உன்னோட சிவமா நான் இருப்பேனு ஏன் உனக்கு தோணவே மாட்டேன்றது? என்னோட சக்தி நீதான்னு என்னைக்கோ முடிவு பண்ணிட்டேன். எனக்குள்ள இருந்து என்னை ஆட்டி வைக்கறது நீதானு ஏன் உனக்கு புரியலை. நீ என்னை விட்டு போயிட்டா எல்லாமே என்னை விட்டுப் போயிடும்" என்று கூறினான். அப்பொழுது தன்னை மறந்து கூறியவன் உணர்வு வர என்ன செய்வதென்று தெரியாமல் வேக வேகமாய் திரும்பி சென்றான். அவள் எவ்வித உணர்ச்சியுமின்றி அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
-------------------------------------------------------------
இரவு முழுவதும் அவளது ஃபோனுக்காக காத்திருந்தவன் அவள் ஃபோன் செய்யாமல் போகவே நினைத்து நினைத்து வருந்தியபடி விடியும் வேளையில் தூங்கிப் போனான். ஒரு பத்து மணியளவில் யாரோ அடித்து எழுப்ப திடுக்கிட்டு எழுந்தவன் துர்கா நிற்பதைக் கண்டதும் தலை வரை போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.
"டேய் நாயே! இங்க ஒருத்தி நின்னுட்டு இருக்கேன். எவ்ளோ கொழுப்பு இருந்தா இழுத்துப் போத்திட்டு தூங்குவ" என்று அவள் மீண்டும் அடிக்க ஆச்சர்யத்துடன் எழுந்தவன்
"நான் கூட என்கிட்ட பேசமாட்டேனு நினைச்சுட்டு இருந்தேன். என் மேல உனக்கு கோபம் இல்லயே??" என்று அவன் எங்கோ பார்த்தபடி கேட்க
"இதுல கோபப்பட என்னடா இருக்கு? உன் மனசுல நினைச்சத ஓபனா சொல்லிட்ட. மனசுல ஒண்ணு வச்சுக்கிட்டு வெளில இல்லாத மாதிரி நடிக்கிறதுதான் தப்பு. எனக்கு எந்த கோபமும் இல்ல"
"ஆக்சுவலா நான் மொதல்ல எல்லாம் அப்படி நினைக்கலை. எப்ப உனக்கு கல்யாணம்னு சொன்னியோ அப்பதான் நீ இல்லாம என்னால இருக்க முடியாதுனு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா உன்கிட்ட சொல்ற அளவுக்கு தைரியம் இல்ல. நேத்தே எப்படி சொன்னேனு தெரியலை"
அவள் அமைதியாய் இருக்கவே
"உன் சிச்சுவேஷன் எனக்கு புரியுது. நிச்சயம் பண்ணி அவர்தான்னு நீ இப்படி இருக்கறப்ப இப்படி நான் சொன்னது எவ்ளோ பெரிய தப்புனு எனக்கு புரியுது. ஆனா என்னால முடியல துர்கா. இதுக்கு என்ன முடிவு பண்றதுன்னும் எனக்கு புரியலை. நீதான் எப்பவும் எனக்கு எல்லா விஷயத்துலயும் Suggestion சொல்லுவ. இப்பயும் நீயே சொல்லு" என்று அவள் முகத்தையே பார்த்தான். ஒரு நிமிடம் யோசித்தவள்
"எனக்கு நீ இப்படி நினைக்க ஆரம்பிச்சவே தெரியும் மனோ. நீயாவே சொல்லுவனுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்" என்று அவள் மெதுவாய் சொல்லவும் தூக்கி வாரிப் போட நிமிர்ந்தான்.
"நீ இந்த நிமிஷம் என்ன நினைக்கறன்னு என்னால சொல்ல முடியும்னு உனக்கே தெரியும். அப்படி இருக்கும்போது உனக்குள்ள நான் வந்துட்டதக் கூட என்னால கண்டுப்பிடிக்க முடியாதுனு நினைச்சியா?" என்றபோது ஒட்டுமொத்த ஆச்சர்யமும் அவன் கண்களில் இருந்தது.
"பொண்ணுங்க எப்பவும் கூட இருக்கறவங்கள புரிஞ்சுக்குவாங்க. ஆனா பசங்களால அது முடியாது" என்று அவள் சொல்லவும்
"அப்படியெல்லாம் கிடையாது" என்று அவன் மறுத்தான். புன்னகைத்தபடி தலையைக் குனிந்தவள்
"அப்படின்னா எப்பவோ நீ எனக்குள்ள வந்துட்டத ஏன் உன்னால கண்டுபிடிக்க முடியல?" என்றாள். அவன் கண்களையே நம்ப முடியாமல் விழித்தவன் மெல்ல "துர்கா..." என்றான். அப்படியே ஜன்னல்புறமாய் திரும்பிக் கொண்டு அவள் தொடர்ந்தாள்.
"நான் எப்பயோ முடிவு பண்ணிட்டேன். முடிவு பண்ணின உடனே வீட்டுலயும் பேசி பர்மிஷன் வாங்கிட்டேன். நானா சொல்லி உனக்கு வரதை விட உனக்கும் தானா வரனும்னுதான் சொல்லாமலேயே இருந்தேன்" என்றாள்.
"அப்ப அந்த US மாப்பிள்ளை...???"
"அந்த அலையன்ஸ் வந்துச்சு. ஆனா அம்மாவுக்குதான் நான் சொல்லிட்டேன் இல்ல. அதனால சமாளிச்சு அனுப்பிட்டாங்க" என்றபடியே திரும்பியவள் அவன் முகத்தில் கோபத்தைக் கண்டதும் முகம் சுருங்கினாள்.
"என் மேல கோபமாடா?" என்று திணறினாள்.
"இவ்ளோ நாளா பொய் சொல்லி என்கிட்ட நடிச்ச இல்ல. அதுக்கு உனக்கு கண்டிப்பா பனிஷ்மெண்ட் குடுக்கப் போறேன்" என்று அவன் கோபமாய் சொல்ல அவள் முகம் பயத்தில் சுருங்கியது.
"என்ன பனிஷ்மெண்ட்?" என்று அவள் கேட்கவும் சிரித்துக் கொண்டே உதட்டில் கை வைத்துக் காட்டினான். அதைக் கண்டதும் அவள் முகம் வெட்கத்தில் சிவக்க
"அட பாவி! அவ்ளோ தைரியம் ஆயிடுச்சா உனக்கு?" என்றுக் கூறிக் கொண்டிருக்கும்போதே அவன் எழுந்து அவளை நோக்கி வர பின்னாலேயே நகர்ந்தவள்
"இன்னும் நீ ப்ரஷ் கூட பண்ணலைடா" என்றாள்.
"என்னது டாவா??? வீட்டுக்காரரை டா போட்டு சொன்னதால கணக்குல ஒண்ணு add ஆயிடுச்சு" என்று நெருங்கி வர அவள் வேகமாக திரும்பி ஓடினாள்.
"ஏய்! நில்லு. அப்புறம் உங்க அம்மாவுக்கு ஃபோன் பண்ணி அத்தை உங்க பொண்ணு சொன்ன பேச்ச கேக்கவே மாட்டேன்றானு சொல்லுவேன்" என்று அவளை துரத்தினான்.
"நீ யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ" என்றபடி அவள் வேகமாக ஓட
"நாளைக்கு புல்லட்டின் போர்டுல போடுவேன். என் காதலி எனக்கு முத்தம் குடுக்க மாட்டேனு கஞ்சத்தனம் பண்றா. சரி பரவால்லை கடையெட்டாவது வள்ளல் நானாவது தரேனு சொன்னா வாங்கிக்க மாட்டேன்றானு" என்றபடியே அவளை எட்டிப் பிடித்தான். அவள் சிணுங்க சிணுங்க.........
கட்...... கட்.......
எல்லாரும் போயி பொழப்பப் பாருங்கப்பு. கதை அம்புட்டுதான்.............
Thursday, March 15, 2007
வலி - III
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
என இம்சை நல்ல நேரத்துல கட் பண்ணிட்டீங்க???
கடைசி கொஞ்ச நேரம்தான் டாப் டக்கர்... சூப்பர் கதை.. நான் வேற மாதிரி யோசிச்சேன்.. அருமையான திருப்பத்தப் போட்டு பட்டையக் கெளப்பிட்டீங்க???
காதல் கதைல இப்படி பின்னி பெடலெடுக்குறீங்களே???
என்ன விசேஷம்??
கலக்கிட்டீங்க போங்க. இந்த திருப்பத்தை எதிர் பார்க்கவே இல்லை.
//நீ இந்த நிமிஷம் என்ன நினைக்கறன்னு என்னால சொல்ல முடியும்னு உனக்கே தெரியும். அப்படி இருக்கும்போது உனக்குள்ள நான் வந்துட்டதக் கூட என்னால கண்டுப்பிடிக்க முடியாதுனு நினைச்சியா?" //
இயல்பான ஆனால் அருமையான வசனங்கள். 3 பாகமும் சூப்பர் போங்க.
அரசி நல்லா எழுதியிருக்கீங்க....
சூப்பர் கதை...
ரெண்டு பேரையும் சேர்த்து வச்சுடுவிங்கன்னு தெரியும் ஆனா இப்படி கலக்கலா சேர்த்து வப்பிங்கன்னு நினைக்கவில்லை....கடைசியில கலக்கிட்டீங்க..
\\ஜி - Z said...
காதல் கதைல இப்படி பின்னி பெடலெடுக்குறீங்களே???
என்ன விசேஷம்??\\
ஜி இதெல்லாம் சொல்லுவாங்களா...எல்லாம்....கட்...கட் ;))))
// ஜி - Z said...
என இம்சை நல்ல நேரத்துல கட் பண்ணிட்டீங்க???
கடைசி கொஞ்ச நேரம்தான் டாப் டக்கர்... சூப்பர் கதை.. நான் வேற மாதிரி யோசிச்சேன்.. அருமையான திருப்பத்தப் போட்டு பட்டையக் கெளப்பிட்டீங்க???
//
அடுத்தவங்க பர்சனல்ல மூக்க நுழைக்கறது தப்பில்ல... அதான் கட் பண்ணிட்டேன்...
நீங்க எப்படி யோசிச்சிங்க... ப்ளீஸ் சொல்லுங்களேன்... :)))
// ஜி - Z said...
காதல் கதைல இப்படி பின்னி பெடலெடுக்குறீங்களே???
என்ன விசேஷம்??
//
நான் நல்லாயிருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா ஜி??? :@
// Nandha said...
கலக்கிட்டீங்க போங்க. இந்த திருப்பத்தை எதிர் பார்க்கவே இல்லை.
//நீ இந்த நிமிஷம் என்ன நினைக்கறன்னு என்னால சொல்ல முடியும்னு உனக்கே தெரியும். அப்படி இருக்கும்போது உனக்குள்ள நான் வந்துட்டதக் கூட என்னால கண்டுப்பிடிக்க முடியாதுனு நினைச்சியா?" //
இயல்பான ஆனால் அருமையான வசனங்கள். 3 பாகமும் சூப்பர் போங்க.
//
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி நந்தா... :))))
//கோபிநாத் said...
அரசி நல்லா எழுதியிருக்கீங்க....
சூப்பர் கதை...
ரெண்டு பேரையும் சேர்த்து வச்சுடுவிங்கன்னு தெரியும் ஆனா இப்படி கலக்கலா சேர்த்து வப்பிங்கன்னு நினைக்கவில்லை....கடைசியில கலக்கிட்டீங்க..
//
thank u கோபிநாத் :)))
// கோபிநாத் said...
\\ஜி - Z said...
காதல் கதைல இப்படி பின்னி பெடலெடுக்குறீங்களே???
என்ன விசேஷம்??\\
ஜி இதெல்லாம் சொல்லுவாங்களா...எல்லாம்....கட்...கட் ;))))
//
இதெல்லாம் ரொம்ப ஓவரு...
நல்லதுக்கு இல்ல....
இம்சையம்மா! கதை சூப்பர். நல்ல வேளை சேத்து வச்சீங்க! நல்ல தொடர்கதை அடுத்தடுத்து எழுதவும்!
Hey.. I was thinking the same i my dreams that "Girls will always know whether the Guy is in lov with her or not"...... really NICE.... Keep doing..
கதை கலக்கலா இருந்துச்சி இ.அரசி :-)
இன்னும் நிறைய எழுதவும்...
நா அபிபாப்பாவாட்டம் இருக்கப்போ போட்ட கமெண்ட் இப்போதான் வருது:-))
// அபி அப்பா said...
இம்சையம்மா! கதை சூப்பர். நல்ல வேளை சேத்து வச்சீங்க! நல்ல தொடர்கதை அடுத்தடுத்து எழுதவும்!
//
thanks அண்ணா...
எழுத விட மாட்டேன்றாங்களே :(((
ஆணியோ ஆணி :(((((
// Anonymous said...
Hey.. I was thinking the same i my dreams that "Girls will always know whether the Guy is in lov with her or not"...... really NICE.... Keep doing..
//
thank u anony :))))))))
// வெட்டிப்பயல் said...
கதை கலக்கலா இருந்துச்சி இ.அரசி :-)
இன்னும் நிறைய எழுதவும்...
//
தேங்க்ஸ் கொல்டி...
ச்சே...
தேங்க்ஸ் வெட்டி...
// அபி அப்பா said...
நா அபிபாப்பாவாட்டம் இருக்கப்போ போட்ட கமெண்ட் இப்போதான் வருது:-))
//
என்ன அண்ணா பண்ணட்டும்???
3 நாள் லீவ் இல்ல. அதான் :)))
//நீங்க எப்படி யோசிச்சிங்க... ப்ளீஸ் சொல்லுங்களேன்... :))) //
நான் என்னமோ பாலச்சந்தர் ரேஞ்சுக்கு அவளுக்கு உண்மையிலேயே நிச்சயமாகியிருந்தும், இவனோட காதல்ல விழுந்து நிச்சயமானவன உண்மையிலேயே அமெரிக்கா மாப்பிள்ளையாக்கிடுவாளோன்னு நெனச்சேன்... :))
சூப்பர் இம்சை அரசி. இன்னைக்குத்தான் பாத்தேன். படக்குன்னு மொதல் ரெண்டு பகுதியையும் படிச்சிட்டேன். நல்லாயிருக்கு. நல்லாயிருக்கு. ரொம்பவே நல்லாயிருக்கு. நாங்கூட நீங்க துர்கா அவனுக்கு அறிவுரை சொல்ற மாதிரி..அவன் மாறுற மாதிரி முடிப்பீங்களோன்னு நெனைச்சேன். இல்லை. நல்லவேளை. இப்பிடி முடிச்சீங்க. நன்றி.

சும்மா ஒரே மாதிரியே எழுதுனா நல்லாயிருக்காது இல்ல... அதான் ;)
// G.Ragavan said...
சூப்பர் இம்சை அரசி. இன்னைக்குத்தான் பாத்தேன். படக்குன்னு மொதல் ரெண்டு பகுதியையும் படிச்சிட்டேன். நல்லாயிருக்கு. நல்லாயிருக்கு. ரொம்பவே நல்லாயிருக்கு. நாங்கூட நீங்க துர்கா அவனுக்கு அறிவுரை சொல்ற மாதிரி..அவன் மாறுற மாதிரி முடிப்பீங்களோன்னு நெனைச்சேன். இல்லை. நல்லவேளை. இப்பிடி முடிச்சீங்க. நன்றி.
//
தேங்க் யூ ராகவன். நீங்க நினைக்கற மாதிரி நான் ஒண்ணும் காதலுக்கு எதிரி இல்ல ;)))
Nice Story...Vaazthukkal!
Very interesting...Keep it up!
// Elango said...
Nice Story...Vaazthukkal!
Very interesting...Keep it up!
//
thank you Elango :)))
அடிக்கடி வாங்க :)))
Nice kaadhal kadhai...
Post a Comment