Wednesday, March 21, 2007

விசித்திர ஆராய்ச்சி

உங்க 5 விசித்திர குணம் பத்தி எழுதணும்னு ஜி என்னை மாட்டி விட்டதும்தான் தோணுச்சு. அப்படி என்னடா நம்மகிட்ட விசித்திர குணம் இருக்குனு. ஆஹா! இது ஒரு நாள்ல கண்டுபிடிக்கிற விஷயமா? பெரிய ஆராய்ச்சி பண்ணியில்ல கண்டுபிடிக்கணும்னு நானும் ரெண்டு நாளா விழுந்து விழுந்து ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சா அது பாட்டுக்கு லிஸ்ட் நீளமா போயிட்டே இருக்கு. ஹி... ஹி... நம்மள பொறுத்த வரைக்கும் நாமளே விசித்திரம்தான். அதனால சாப்பிடறது தூங்கறதுனெல்லாம் எழுதாம வடிக்கட்டி 5-ஐ தேடி பிடிக்கனும்னு எங்க வீட்டு டீ வடிகட்டிய சுட்டுட்டு வந்து வடிகட்டி கீழ லிஸ்ட் போட்டிருக்கேன் (டீ வடிகட்டியை காணவில்லைனு இன்னைக்கு வந்த விளம்பரத்த பாத்தவங்க அதை தயவு செய்து மறந்து விடுங்கள். இந்த பச்ச புள்ளய போட்டுட்றாதீங்க. புண்ணியமா போகும்). இனி சித்திரம்... ச்சே...... விசித்திரம்......

1. எழுத்து - எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து புத்தகம்னா பைத்தியமா இருந்திருக்கேன். கையில புக் கிடைச்சா சுத்தி என்ன நடக்குதுனு கூடத் தெரியாது. அப்படி ஆயிடுவேன். நாம அப்படி எழுதி அதனால அட்லீஸ்ட் சிலராவது சுத்தி இருக்கறத மறக்கற அளவுக்கு ஒரு பெரிய எழுத்தாளராகனும்னு கனவு. அதனால படிக்கும்போதே நாவல் எழுதி அதுல 2 நாவல் தேவியின் கண்மணில வெளி வந்துச்சு. ஜர்னலிஸ்ட் ஆகனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். தாய்க்குலம் தடா போட்டுட்டாங்க. அதுக்கப்புறம் படிப்பு, வேலைனு அதை விட்டு வெளில வந்துட்டேன். :( இப்ப உட்கார்ந்தா கூட என்னால எழுத முடியும்னு நம்பிக்கை இருக்கு. ஆனா நேரம்தான் கிடைக்க மாட்டேன்றது. எல்லாம் என்னை விட்டுப் போயிடுச்சுனு நினைச்சு ஏங்கினப்பதான் வலையுலக அறிமுகம். இங்க ஜாலியா என் பாட்டுக்கு எல்லாரையும் இம்சை பண்ணிட்டு பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன் ;)

2. Taste - அது என்னமோ என்னோட டேஸ்ட் மத்த எல்லார்கிட்ட இருந்தும் மாறுபட்டு இருக்கும். எல்லாரும் ஒண்ணை பிடிக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு அது பிடிக்காது. மத்தவங்களுக்கு பிடிக்கலைனா அத எனக்கு பிடிக்கும். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் coffee விரும்பி குடிக்கும்போது நான் மட்டும் coffee bean-ஐ விரும்பி சாப்பிடுவேன். அப்படி போடு பாட்டுல அவங்க த்ரிஷா புடவைல அழகா இருக்கிறானு சொன்னப்ப எனக்கு மட்டும் ஏனோ அந்த கருப்பு ட்ரஸ்லதான் ரொம்ப பிடிச்சது. இப்படி நிறைய சொல்லிட்டேப் போகலாம்.

3. ஓவரா திங்க் பண்றது - யாராவது எதாவது சொன்னா இதனால சொன்னாங்களோ இதனால சொன்னாங்களோன்னு எல்லா possibilitiesம் யோசிப்பேன். அப்புறம் அவங்க சொன்ன விதம், சூழ்நிலை இதெல்லாம் வச்சு இதனாலதான் ஒரு முடிவுக்கு வருவேன். அது maximum கரெக்டாதான் இருக்கும். இதனால நிறையப் பேர் என்கிட்ட அவங்க பிரச்சினை சொல்லி suggestion கேட்டிருக்காங்க.

4. ஆர்வம் - புதுசா எதையாவது கத்துக்கனும்னு ரொம்ப ஆர்வம் இருக்கும். எதுவும் தெரியாதுனு சொல்லப் பிடிக்காது. அட்லீஸ்ட் இந்த அளவுக்காவது தெரியும்னு சொல்லனும்னு நினைப்பேன். அதே மாதிரி எந்த விஷயம் செஞ்சாலும் தனியா தெரியனும்னு நினைப்பேன்.

5. தோல்வியில் துவளும் மனது - எனக்கு தோல்விய ஏத்துக்கவே முடியாது. நான் மாத்தியே ஆகனும்னு நினைக்கற விஷயம் இது. என்னால மாத்திக்க முடியலை. ஒரு போட்டில கலந்துக்கிட்டா கண்டிப்பா ஜெயிப்பேனு தெரிஞ்சாதான் கலந்துக்குவேன். இல்லைனா அந்த பக்கமே எட்டிக் கூட பாக்க மாட்டேன். காலேஜ்ல நான் கலந்துக்கிட்டது 5 competitionலதான். 4 தடவை chess. ஒரு கவிதை போட்டி. கவிதைல 1st. my badluck 4 தடவையுமே chessல runnerதான்.

இப்ப நம்ம நேரம். யாரையாவது மாட்டி விடனும் இல்ல............

யாராவது ஏற்கனவே மாட்டியிருந்தா விட்டுடுங்கப்பு........... :)))

50 comments:

ஜி - Z said...

ஓ.. நிங்க ஸைக்காலஜிஸ்ட்டா??

டாக்டர் மேடம்...

எனக்கு அருட்பெருங்கோ மாதிரி கவிதையா எழுதி குவிக்கணும். அதுக்கு நான் என்ன பண்ணனும்??

ஜி - Z said...

//போட்டில கலந்துக்கிட்டா//

என் கண்ணுக்கு திடீர்ணு 'பாட்டில கலந்தடிச்சா'னு தெரிஞ்சது. நான் வேற அதுதான் உங்களோட விசித்திர குணமோன்னு தப்பு கணக்குப் போட்டுட்டேன் :))))

G.Ragavan said...

விசித்ரவீர்யமாலன்னு பட்டம் கொடுக்கலாம் போல இருக்கே. கடைசிக் கருத்தத் தவிர மத்ததெல்லாம் எனக்கும் பொருந்துது.

எல்லாரும் இளையராஜா பிடிக்கும்னு சொன்னப்போ...எனக்கு மெல்லிசை மன்னர் பிடிச்சிருந்தது. இத்தனைக்கும் அப்போ அவர் ஃபீல்டுலயே இல்லை. அப்பல்லாம் இளையராஜாவை மாத்த வேற ஆள் வருவார்னு படிக்கும் போதே....சின்னப்பவே...சண்டை போடுவேன். ஏன்னு தெரியாது. இளையரஜா இசை எனக்கும் பிடிக்கும். ஆனாலும் சண்டை போடுவேன். அதே மாதிரி ஏ.ஆர்.ரகுமான் வந்தப்போ...அவருக்கு என்னோட முழுமையான நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து இளையராஜா ரசிகர்களான நண்பர்களோடு சண்டை போட்டிருக்கேன். நாளாக ஆக..அவங்களும் என்னோட பக்கம் வந்தது வேற கதை. அதே மாதிரி..எல்லாரும் ஒன்னு பிடிச்சிருக்குன்னு சொன்னா...அது எனக்கும் பிடிச்சிருக்குன்னு அவ்வளவு லேசா ஒத்துக்கிற மாட்டேன். ஆனா இப்ப அதக் கொறச்சிருக்கேன். ஆகையால நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுது.

நல்ல ஆளுங்களாத்தான் கூப்பிட்டிருக்கீங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்.

Anonymous said...

Novel ellam eluthuveengala? Athe konjam post panrathu. Padiche odane padaipaaliku vaasahar kaditham eluthidalamle.

Nayagan.

கார்த்திக் பிரபு said...

ungala pathi niraya therinjukittom :)

தேவ் | Dev said...

அம்மா பாசமலர் இந்தாம்மா வந்து ஒரு நடை பாத்துட்டு போயிரு... அண்ணேன் கரெக்ட்டா பட்டியல் போட்டிருக்கேனாப் பாரு...

பதிவுன்னு ஆராயக்கூடாதுன்னு என் நண்பர் ஒருத்தர் சொல்லுவார்.. நம்ம தங்கச்சி என்னன்னு இங்கே பதிவுல்லேயே ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கு :-)

http://chennaicutchery.blogspot.com/2007/03/5.html

கீதா சாம்பசிவம் said...

எல்லாருமே வியர்டு தானே? அதை ஏன் விளம்பரப் படுத்தச் சொல்றாங்களோ தெரியலை! அதுவும் குறிப்பாச் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து! ம்ம்ம்ம், இன்னிக்கு இதோட 1,2,3,4 வது வியர்டு. நாமதான் அப்படின்னா போற இடம் கூடவா? எல்லாம் head letter. :)))))

கீதா சாம்பசிவம் said...

இதுக்கு முன்னாலேயும் ஒரு பதிவுலே பின்னூட்டம் போட்டேன். ஆனால் நீங்க பப்ளிஷ் செய்யலைன்னு நினைக்கிறேன். இதையும் போடுவீங்களா இல்லையான்னு தெரியலை. அதான் வியர்டுன்னு சொல்லிட்டீங்களே! :)))))))

கோபிநாத் said...

உங்க விசித்திர குணங்கள் விசித்திரமா தான் இருக்கு ;-))

உங்க நாவல் திறமையை எல்லாம் பதிவுலையும் கொஞ்சம்
காட்டுறது ;-))

மூணாவதும், நாலாவதும் கொஞ்சம் எனக்கும் ஒத்து போற மாதிரி தான் இருக்கு

கோபிநாத் said...

நான் மாட்டி விட்ட ஒருத்தரை நீங்களும் மாட்டி விட்டுருக்கிங்க ;-)))

அபி அப்பா said...

//எனக்கு அருட்பெருங்கோ மாதிரி கவிதையா எழுதி குவிக்கணும். அதுக்கு நான் என்ன பண்ணனும்?? //

எனக்கு அவ்ளோவ் கூட வேண்டாம், யாரும் திட்டாத அளவு எழுதினா போதும்:-))

அபி அப்பா said...

//Novel ellam eluthuveengala?//

யப்பா நாயகா! என்ன கேள்வி கேட்டுட்ட? சீக்கிரம் ரிலீஸ்:-))

அபி அப்பா said...

//Novel ellam eluthuveengala?//

யப்பா நாயகா! என்ன கேள்வி கேட்டுட்ட? சீக்கிரம் ரிலீஸ்:-))

அபி அப்பா said...

இதுக்குதான் பதிவ படிச்சுட்டு பின்னூட்டம் போடனும்கறது. கடைசில பாத்தா நம்ம பேர். ஆஹா!!

இம்சை அரசி said...

// ஜி - Z said...
ஓ.. நிங்க ஸைக்காலஜிஸ்ட்டா??

டாக்டர் மேடம்...

எனக்கு அருட்பெருங்கோ மாதிரி கவிதையா எழுதி குவிக்கணும். அதுக்கு நான் என்ன பண்ணனும்??
//

காட்டுல உக்காந்து 50 வருஷம் தவம் இருக்கணும். சரியா?

இம்சை அரசி said...

// ஜி - Z said...
//போட்டில கலந்துக்கிட்டா//

என் கண்ணுக்கு திடீர்ணு 'பாட்டில கலந்தடிச்சா'னு தெரிஞ்சது. நான் வேற அதுதான் உங்களோட விசித்திர குணமோன்னு தப்பு கணக்குப் போட்டுட்டேன் :))))
//

எலேய்! எங்க அந்த அருவா???

இம்சை அரசி said...

// G.Ragavan said...
விசித்ரவீர்யமாலன்னு பட்டம் கொடுக்கலாம் போல இருக்கே. கடைசிக் கருத்தத் தவிர மத்ததெல்லாம் எனக்கும் பொருந்துது.
//

ஆஹா... தேங்க் யூ... தேங்க் யூ...

//எல்லாரும் இளையராஜா பிடிக்கும்னு சொன்னப்போ...எனக்கு மெல்லிசை மன்னர் பிடிச்சிருந்தது. இத்தனைக்கும் அப்போ அவர் ஃபீல்டுலயே இல்லை. அப்பல்லாம் இளையராஜாவை மாத்த வேற ஆள் வருவார்னு படிக்கும் போதே....சின்னப்பவே...சண்டை போடுவேன். ஏன்னு தெரியாது. இளையரஜா இசை எனக்கும் பிடிக்கும். ஆனாலும் சண்டை போடுவேன். அதே மாதிரி ஏ.ஆர்.ரகுமான் வந்தப்போ...அவருக்கு என்னோட முழுமையான நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து இளையராஜா ரசிகர்களான நண்பர்களோடு சண்டை போட்டிருக்கேன். நாளாக ஆக..அவங்களும் என்னோட பக்கம் வந்தது வேற கதை. அதே மாதிரி..எல்லாரும் ஒன்னு பிடிச்சிருக்குன்னு சொன்னா...அது எனக்கும் பிடிச்சிருக்குன்னு அவ்வளவு லேசா ஒத்துக்கிற மாட்டேன். ஆனா இப்ப அதக் கொறச்சிருக்கேன். ஆகையால நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுது.
//

நானும் இதே மாதிரிதான் விஜய்க்காக சண்டை போட்டிருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் ரொம்ப பிடிக்கறதாலயோ என்னவோ எனக்கு சுத்தமா பிடிக்காது.

அப்படியே என்னை மாதிரியே இருக்கீங்க ராகவன் :))))

இம்சை அரசி said...

// Anonymous said...
Novel ellam eluthuveengala? Athe konjam post panrathu. Padiche odane padaipaaliku vaasahar kaditham eluthidalamle.

Nayagan.
//

அது வந்து 2 வருஷம் ஆயிடுச்சு. அடுத்தது வரும்போது கண்டிப்பா சொல்றேன். படிச்சிட்டு சொல்லுங்க :)))

இம்சை அரசி said...

// கார்த்திக் பிரபு said...
ungala pathi niraya therinjukittom :)

//

:))))

இம்சை அரசி said...

// தேவ் | Dev said...
அம்மா பாசமலர் இந்தாம்மா வந்து ஒரு நடை பாத்துட்டு போயிரு... அண்ணேன் கரெக்ட்டா பட்டியல் போட்டிருக்கேனாப் பாரு...
//

பாத்துட்டேன் அண்ணா. கரெக்டா போட்டிருக்கீங்க :)))

//பதிவுன்னு ஆராயக்கூடாதுன்னு என் நண்பர் ஒருத்தர் சொல்லுவார்.. நம்ம தங்கச்சி என்னன்னு இங்கே பதிவுல்லேயே ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கு :-)
//

யாரந்த நண்பர். சொல்லுங்க. போய் பெரிய ஆராய்ச்சியா பண்ணிட்டு வந்துடுவோம் ;)

இம்சை அரசி said...

// கீதா சாம்பசிவம் said...
எல்லாருமே வியர்டு தானே? அதை ஏன் விளம்பரப் படுத்தச் சொல்றாங்களோ தெரியலை! அதுவும் குறிப்பாச் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து! ம்ம்ம்ம், இன்னிக்கு இதோட 1,2,3,4 வது வியர்டு. நாமதான் அப்படின்னா போற இடம் கூடவா? எல்லாம் head letter. :)))))
//

ஹி... ஹி... அக்கா என்ன சொல்ல வரீங்கனு எனக்கு புரியலை. மேல் மாடி கொஞ்சம் வீக்... புரியற மாதிரி சொல்லுங்களேன். ப்ளீஸ்... :)))

இம்சை அரசி said...

// கீதா சாம்பசிவம் said...
இதுக்கு முன்னாலேயும் ஒரு பதிவுலே பின்னூட்டம் போட்டேன். ஆனால் நீங்க பப்ளிஷ் செய்யலைன்னு நினைக்கிறேன். இதையும் போடுவீங்களா இல்லையான்னு தெரியலை. அதான் வியர்டுன்னு சொல்லிட்டீங்களே! :)))))))
//

நான் இதுவரைக்கும் எதையுமே reject பண்ணினது இல்ல. உங்க பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணினேன். இதுல பாருங்க

http://imsaiarasi.blogspot.com/2007/01/blog-post_21.html

அப்படி ஒண்ணும் தலைக்கனம் பிடிச்ச வியர்ட் இல்ல அக்கா நான்(just kidding) ;)

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
உங்க விசித்திர குணங்கள் விசித்திரமா தான் இருக்கு ;-))
//

உங்களோடதுல 2,4,5 எனக்கும் இருக்குங்க கோபிநாத் :)

//உங்க நாவல் திறமையை எல்லாம் பதிவுலையும் கொஞ்சம்
காட்டுறது ;-))
//

ஒரு கதை போட்டேன். அதுக்கே யாரும் எட்டிப் பாக்கலையாம். இதுல நாவல் வேறயா???

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
நான் மாட்டி விட்ட ஒருத்தரை நீங்களும் மாட்டி விட்டுருக்கிங்க ;-)))
//

தெரியும். இருந்தாலும் எங்க அண்ணன் இல்ல.........

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
//எனக்கு அருட்பெருங்கோ மாதிரி கவிதையா எழுதி குவிக்கணும். அதுக்கு நான் என்ன பண்ணனும்?? //

எனக்கு அவ்ளோவ் கூட வேண்டாம், யாரும் திட்டாத அளவு எழுதினா போதும்:-))

//

அப்போ நீங்க காட்டுக்கு போயி 30 வருஷம் தவம் இருந்தா போதும் ;)

இம்சை அரசி said...

// அபி அப்பா said...
இதுக்குதான் பதிவ படிச்சுட்டு பின்னூட்டம் போடனும்கறது. கடைசில பாத்தா நம்ம பேர். ஆஹா!!
//

ஹி... ஹி...

பாசமலர் அண்ணனை மறக்க முடியுமா???

Praveen said...

naan ungal rasigan aakitaen:))

இம்சை அரசி said...

// Praveen said...
naan ungal rasigan aakitaen:))

//

thanks a lot Praveen :)))

இராம் said...

//எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து புத்தகம்னா பைத்தியமா இருந்திருக்கேன். கையில புக் கிடைச்சா சுத்தி என்ன நடக்குதுனு கூடத் தெரியாது. அப்படி ஆயிடுவேன்//

இம்சை,

நானும் படிக்கிறேன்னு கையிலே கிடைக்கிற எல்லாத்தையும் படிப்பேன், கடலை வாங்கி திங்கிறோப்போ அதை சுத்தி கொடுத்த பேப்பரை சுருட்டுனமாதிரி இருக்கும்போதே படிச்சு பார்ப்பேன். ;)

//விசித்ரவீர்யமாலன்னு பட்டம் கொடுக்கலாம் போல இருக்கே//

விசித்திர வீரியமாலா இம்சையரசி வாழ்க வாழ்க!!!

Anonymous said...

அப்படியே என்னை மாதிரியே இருக்கீங்க ராகவன் :))))//


அப்ப ரெண்டு பேரும் ஒரே ஆளா .. ரெண்டு பேரும் பெங்களூருன்ன உடனே சம்சயம் வந்தது

சும்மா லுல்லுவாங்காட்டிக்கி

இம்சை அரசி said...

// இராம் said...
இம்சை,

நானும் படிக்கிறேன்னு கையிலே கிடைக்கிற எல்லாத்தையும் படிப்பேன், கடலை வாங்கி திங்கிறோப்போ அதை சுத்தி கொடுத்த பேப்பரை சுருட்டுனமாதிரி இருக்கும்போதே படிச்சு பார்ப்பேன். ;)
//

நானும் அப்படிதான். பரவால்ல என்னை மாதிரியே நிறைய பேர் இருப்பீங்க போல :)))

//விசித்திர வீரியமாலா இம்சையரசி வாழ்க வாழ்க!!!
//

தேங்க் யூ... தேங்க் யூ...

இம்சை அரசி said...

// Anonymous said...
அப்படியே என்னை மாதிரியே இருக்கீங்க ராகவன் :))))//


அப்ப ரெண்டு பேரும் ஒரே ஆளா .. ரெண்டு பேரும் பெங்களூருன்ன உடனே சம்சயம் வந்தது

சும்மா லுல்லுவாங்காட்டிக்கி
//

ஏன் இந்த கொலை வெறி???

இப்பதான் ஒரு பிரச்சினைல மாட்டி முழிச்சு வெளில வந்துருக்கேன். அதுக்குள்ளயா???

ப்ளீஸ்... என்னை விட்டுடுங்க....

நான் என் பாட்டுக்கு சிவனேனு இருக்கேன்...

Syam said...

நீங்களுமா ஜிஸ்டர்....

//கையில புக் கிடைச்சா சுத்தி என்ன நடக்குதுனு கூடத் தெரியாது//

எனக்கும் தான்...நேரா பழைய பேப்பர் கடைக்கு ஓடுவேன்..போட்டுட்டு போண்டா வாங்க :-)

இலவசக்கொத்தனார் said...

//எலேய்! எங்க அந்த அருவா???//

கீதாக்கா நம்ம தமிழ பத்தி எழுதுதாகல்ல, அதுவும் நெல்லைத் தமிழ் தொல்லைத் தமிழுன்னு ஆரம்பிச்சிருக்காக. அதான் அங்கன கொண்டு போயி இருக்கேன். அப்படி நின்னா சரியா எழுதுவாக இல்ல. அதான்.

G.Ragavan said...

// Anonymous said...
// அப்படியே என்னை மாதிரியே இருக்கீங்க ராகவன் :))))//


அப்ப ரெண்டு பேரும் ஒரே ஆளா .. ரெண்டு பேரும் பெங்களூருன்ன உடனே சம்சயம் வந்தது

சும்மா லுல்லுவாங்காட்டிக்கி //

வாங்க அனானி வாங்க. இம்சை அரசி எவ்வளவு பெரியவங்க தெரியுமா? வயசுல இல்லை.....அறிவில...எழுத்துல...அவங்க கதைகள் பத்திரிகைகள்ள எல்லாம் வந்திருக்கு. அவங்க வேற நான் வேற. அவங்க அளவுக்கு என்னால எழுத முடியாது. எங்க ரெண்டு பேரையும் பெங்களூர் வலைப்பதிவர்கள் சிலர் நேருல பாத்திருக்காங்க..ஒரே நேரத்துல..நீங்களும் அப்படியே பொறப்பட்டு பெங்களூர் வந்தீங்கன்னா...ஒங்க ஐயப்பாட்டைத் தீத்து வெச்சு...நீங்க குடுக்குற ஆயிரம் பொற்காசுகளை வாங்கிக்கிறோம். ஆளுக்கு ஐநூறா நானும் இம்சையரசியும் பிரிச்சிக்கிறோம். சரியா?

இம்சை அரசி said...

// Syam said...
நீங்களுமா ஜிஸ்டர்....

//கையில புக் கிடைச்சா சுத்தி என்ன நடக்குதுனு கூடத் தெரியாது//

எனக்கும் தான்...நேரா பழைய பேப்பர் கடைக்கு ஓடுவேன்..போட்டுட்டு போண்டா வாங்க :-)
//

ஆனாலும் உங்க அலும்புக்கு அளவே இல்லாம போச்சுண்ணா...

போன தடவை சுட சுட போண்டா வாங்கி கைல பேப்பர் இல்லாம நீங்க கையில வச்சுக்கிட்டு சூடு தாங்க முடியாம டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தப்ப நான் என்ன சொன்னேன்??? என்ன சொன்னேன்??

இப்படியெல்லாம் பேப்பர் கடைல போடாம போண்டா வச்சு சாப்பிட்டுக்க use பண்ணிக்கனும்னு சொன்னேனில்ல...

இம்சை அரசி said...

// இலவசக்கொத்தனார் said...
//எலேய்! எங்க அந்த அருவா???//

கீதாக்கா நம்ம தமிழ பத்தி எழுதுதாகல்ல, அதுவும் நெல்லைத் தமிழ் தொல்லைத் தமிழுன்னு ஆரம்பிச்சிருக்காக. அதான் அங்கன கொண்டு போயி இருக்கேன். அப்படி நின்னா சரியா எழுதுவாக இல்ல. அதான்.
//

இதை நான் சொன்னது ஜி-க்குங்க கொத்ஸ். கீதாக்காவுக்கு இல்ல :)))

இராம் said...

//எங்க ரெண்டு பேரையும் பெங்களூர் வலைப்பதிவர்கள் சிலர் நேருல பாத்திருக்காங்க../

அது எப்போ நடந்துச்சு, என்னை புறக்கணித்த ஜிரா மற்றும் விசித்திர வீரியமாலா இம்சையரசி ஒழிக :)

இம்சை அரசி said...

// G.Ragavan said...
வாங்க அனானி வாங்க. இம்சை அரசி எவ்வளவு பெரியவங்க தெரியுமா? வயசுல இல்லை.....அறிவில...எழுத்துல...அவங்க கதைகள் பத்திரிகைகள்ள எல்லாம் வந்திருக்கு. அவங்க வேற நான் வேற. அவங்க அளவுக்கு என்னால எழுத முடியாது.
//

இது நெம்ப ஓவரு ராகவன்... மலையோட மடுவ compare பண்ணலாமா? எவ்வளவு பெரிய எழுத்தாளர் நீங்க?? தயவு செஞ்சு இப்படி சொல்லாதீங்க

//எங்க ரெண்டு பேரையும் பெங்களூர் வலைப்பதிவர்கள் சிலர் நேருல பாத்திருக்காங்க..ஒரே நேரத்துல..நீங்களும் அப்படியே பொறப்பட்டு பெங்களூர் வந்தீங்கன்னா...ஒங்க ஐயப்பாட்டைத் தீத்து வெச்சு...நீங்க குடுக்குற ஆயிரம் பொற்காசுகளை வாங்கிக்கிறோம். ஆளுக்கு ஐநூறா நானும் இம்சையரசியும் பிரிச்சிக்கிறோம். சரியா?
//

இது சூப்பரு :)))))))

இம்சை அரசி said...

// இராம் said...
//எங்க ரெண்டு பேரையும் பெங்களூர் வலைப்பதிவர்கள் சிலர் நேருல பாத்திருக்காங்க../

அது எப்போ நடந்துச்சு, என்னை புறக்கணித்த ஜிரா மற்றும் விசித்திர வீரியமாலா இம்சையரசி ஒழிக :)
//
அது எப்பயும் நடக்கலை. என்னை மட்டும் விட்டுட்டு நீங்க எல்லாம் மீட்டிங் வச்சிங்க இல்ல. இன்னும் அந்த கோபமே எனக்கு போகலை. இதுல இன்னும் கெளப்பி விடாதீங்க :@

என்னை புறக்கணித்த ராம், ஜிரா, அருட்பெருங்கோ, இளா மற்றும் மீட்டிங்ல கலந்துக்கிட்ட அனைவரும் ஒழிக...

(தேங்க்ஸ் ராம். கோவத்த எப்படி காட்டறதுன்னு முழிச்சிக்கிட்டு இருந்தேன்)

செந்தழல் ரவி said...

///எனக்கு அருட்பெருங்கோ மாதிரி கவிதையா எழுதி குவிக்கணும். அதுக்கு நான் என்ன பண்ணனும்??///

ஜி என்ன அநியாயம் இது...நீங்க ஒரு வியர்டுன்னு காட்டுறீங்களோ...

இம்சை, பதிவை ரசித்தேன்...:)

இம்சை அரசி said...

// செந்தழல் ரவி said...
///எனக்கு அருட்பெருங்கோ மாதிரி கவிதையா எழுதி குவிக்கணும். அதுக்கு நான் என்ன பண்ணனும்??///

ஜி என்ன அநியாயம் இது...நீங்க ஒரு வியர்டுன்னு காட்டுறீங்களோ...

இம்சை, பதிவை ரசித்தேன்...:)

//

தேங்க் யூ... :)))

உங்களுக்கு ஒரு ஷாக்... Im also from NMC :)))

இராம் said...

//அது எப்பயும் நடக்கலை. என்னை மட்டும் விட்டுட்டு நீங்க எல்லாம் மீட்டிங் வச்சிங்க இல்ல. இன்னும் அந்த கோபமே எனக்கு போகலை. இதுல இன்னும் கெளப்பி விடாதீங்க :@//

ஐயோ இம்சை அன்னிக்கு சிபி வந்ததுக்காக எல்லாரும் அவரே போயி மீட் பண்ணினோம், இன்னும் கொஞ்சநாளிலே பெரிய வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணலாம், அதுக்கு நீங்கதான் தலைமை ஏற்க போறீங்க.... அதுக்கு உண்டான தகுதி ஒங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறேன், ஏன்னா நீங்கதான் பெரிய நாவலாசிரியை இல்லயா??? :)

//என்னை புறக்கணித்த ராம், ஜிரா, அருட்பெருங்கோ, இளா மற்றும் மீட்டிங்ல கலந்துக்கிட்ட அனைவரும் ஒழிக...//

ஹி ஹி இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க.... :))

(தேங்க்ஸ் ராம். கோவத்த எப்படி காட்டறதுன்னு முழிச்சிக்கிட்டு இருந்தேன்) //

இம்சை அரசி said...

// இராம் said...
ஐயோ இம்சை அன்னிக்கு சிபி வந்ததுக்காக எல்லாரும் அவரே போயி மீட் பண்ணினோம், இன்னும் கொஞ்சநாளிலே பெரிய வலைப்பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணலாம், அதுக்கு நீங்கதான் தலைமை ஏற்க போறீங்க.... அதுக்கு உண்டான தகுதி ஒங்களுக்கு இருக்குன்னு நினைக்கிறேன், ஏன்னா நீங்கதான் பெரிய நாவலாசிரியை இல்லயா??? :)
//

அப்ப நான் மட்டும் சிபி அண்ணனை மீட் பண்ண வேணாமா???

இந்த சமாதானமெல்லாம் ஏத்துக்கப்பட மாட்டாது. எதுவும் செல்லாது.

//ஹி ஹி இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க.... :))
//

அதெல்லாம் சுடர்ல உங்க பதில்ல பாத்ததுமே அருட்பெருங்கோகிட்ட பயங்கரமா சண்டை போட்டுட்டேன்ல. ஜிரா தான் தப்பிச்சுட்டார்...

அபி அப்பா said...

//இதை நான் சொன்னது ஜி-க்குங்க கொத்ஸ். கீதாக்காவுக்கு இல்ல :)))//

அய்யோ இம்சையம்மா! கீதாமேடம் "நெல்லை தமிழ் தொல்லை தமிழ் இல்லை"ன்னு ஒரு பதிவு போட்டாங்க. அதுல் பின்னூட்ட சண்டையில கொத்ஸ் அருவா தூக்கிகிட்டு ஓடியார உங்க அண்ணாச்சி பதிலுக்கு அதெ விட அருவா கொண்டு வர அங்க ரத்த பூமியா போச்சு. போய் பருங்க அங்க:-)

அபி அப்பா said...

அருவா கொண்டுவந்த கொத்ஸ் அதை ஒரு மரத்துக்கு கீழே நட்டு வச்சுட்டு போயிட்டார். அவர் இல்லைன்னு தெரிஞ்சுகிட்ட நான் சும்மா பூந்து வூடு கட்டிட்டு ஓடியாந்துட்டேன். அவ்ளோவ்தான் கதை:-))

david santos said...

Hello!
Thank,s for you work and have a good week

மு.கார்த்திகேயன் said...

முதல் தடவை..

உங்க இம்சைகளை படிக்கலாம்ங்கிற ஆவல்ல, அரசி

பின்னூட்ட இடத்துல நமக்கு தெரிஞ்ச முகமெல்லாம் அதிகமா இருக்கு..

கீதா மேடம், ஜி, தேவ், கோபிநாத்.. அட அட நம்ம பட்டாளமே படிக்கிறாங்க.. நான் தான் லேட்டா :-)

Anonymous said...

இன்று ஆனந்த விகடனில் இந்த வலைப்பதிவைப் பற்றி படித்தேன்.
எல்லோரும் தங்களைப் பற்றி இப்படித்தான் நினைப்பார்கள்.
உங்கள் ஐந்து பாயிண்ட் பற்றித்தான் சொன்னேன்

பொறுக்கி said...

உங்கள் பெயருக்கேற்றார்போல உங்கள் எண்ணங்களும் இம்சையாகவே இருந்தன