போன வாரம் புதன் கிழமை நம்ம பாடலாசிரியர் ஜிக்கு ஜி.ரா தலமைல வரவேற்பு குடுத்தோம். யார் யாரு குடுத்தீங்கன்னு கேக்கப்படாது. வேற யாரு ஜி.ராவும் நானும்தான். காலைல ஒரு பத்து மணிக்கா ஃபோன் வந்தது. யாராதுன்னு எடுத்து பேசினா அட நம்ம ஜி!!! இந்த ஃபுட் கோர்ட்டுக்கு வந்துடுங்கன்னு சொல்லி வச்சிட்டார். அடடே! நம்ம கவிஞர வரவேற்க எழுதி வச்ச பாட்டெல்லாம் எங்க வச்சேனு தெரியலை. போச்சு ஜி.ரா வேற பொறுப்பே இல்லைனு என்னை திட்டப் போறாருன்னு பயந்துட்டே ஓடினேன்.
அங்க போயி சேந்ததுக்கு அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு அவரப் பாத்ததே இல்லையேனு. இந்த கூட்டத்துல எப்படி சாமி கண்டுபிடிக்கறதுன்னு ஜி.ராவ தேடினா கண்ணுக்கெட்டின தூரத்துக்கு அவர ஆளையே காணோம். பாவம் மனுஷன் சாப்பிடக் கூட நேரம் இல்லாம உழைச்சுக் கொட்டுறாரு. மெல்ல வருவாருனு ஜிக்கு ஃபோன் போட்டா கிட்ட வந்துட்டேனு சொன்னார். நான் முன்னாடியே வெயிட் பண்றேனு சொல்லிட்டு மெதுவா நடந்து போனேன். அப்ப எதுத்தாப்புல ஒருத்தர் திரு திருன்னு முழிச்சுட்டு வந்தாரு. நம்ம ஜியா இருக்குமோன்னு எனக்கு ஒரே சந்தேகம். இதென்னடா வாயிக்கு படிக்கட்டு எல்லாம் வச்சுட்டு... நம்ம ஜி இப்படியெல்லாம் ஓவரா ஸீனப் போட மாட்டருன்னு நினைச்சுக்கிட்டே அவரத் தாண்டிப் போனேன். அவரும் என்னை பாத்து முழிச்சுக்கிட்டே என்னை தாண்டிப் போனாரு. இருந்தாலும் எனக்கு ஒரே டவுட்டு. ஜிக்கு கால் பண்ணினா ஹி ஹி... என்னை தாண்டிப் போன அதே அண்ணாச்சிதான் ஃபோன எடுக்கறாரு. ஆஹா... அப்படியே கைய காட்டி வாங்க ஜி-ன்னதும் திரும்பி வந்தாரு. கூடவே ஜி.ரா...
வந்து உக்காந்து கொஞ்ச நேரம் வந்த கதையெல்லாம் சொல்லிட்டு ரெண்டு பேரும் டீ குடிக்கலாம்னு ப்ளான் பண்ணினாங்க. எனக்கு டீ புடிக்காது. காபிதான் வெணும்னு சொல்ல வாயெடுக்கறதுகுள்ள ரெண்டு பேரும் வேகமா எழுந்து போனாங்க. அய்யய்யோ எனக்கு டீ வாங்கிட போறாங்கன்னு எழுந்து நானும் பின்னாடியே ஓடினேன். ஜி.ரா வேகமா போயி ரெண்டு டீக்கு டோக்கன் வாங்கினார். ஓ! ஜி டீ குடிக்க மாட்டர் போலன்னு நினைச்சுக்கிட்டு நானும் எதும் பேசாம பின்னாடியே போனேன். போயி டீய வாங்கி ரெண்டு பேரும் என்னை பாத்து சிரிச்சுட்டு டக்குனு குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க :(((( சரி நாம வாங்காத ஆப்பான்னு நினைச்சுக்கிட்டே இந்த நேரத்துல டீக் குடிக்கறது உடம்புக்கு நல்லதில்ல. நானெல்லாம் குடிக்கவே மாட்டேன்னு சொல்லி சமாளிச்சிட்டோமில்ல.
சரி ஜி சாக்லேட் தருவாரா மாட்டாரான்னு எனக்குள்ள ஒரு பட்டிமன்றம். குடுத்தா வள்ளல் ஜி-ன்னு போஸ்ட் போட்டுடலாம் இல்லாட்டி கஞ்சம்புடிச்ச ஜி-ன்னு போஸ்ட் போடணும்னு நினைச்சுட்டே கைல வச்சிருந்த சாக்லேட்டை பிரிச்சு வாயில போட்டேன். அதை பாத்ததும் ஜி அட இப்பதான் ஞாபகம் வருதுன்னு சொல்லிட்டே பேக்ல இருந்து ஒரு சாக்லேட் எடுத்து குடுத்தார். ஆஹா இதுலயாவது நம்மள கன்சிடர் பண்ணினாரேன்னு சந்தோஷமா ஒரு புன்னகைய சிதற விட்டேன். அதுக்குள்ள அதை ஜி.ராகிட்ட குடுத்துட்டார். ஓ நோ... ஜி அண்ட் ஜி.ரா ஒழிகன்னு நான் கோஷம் போட வாயத் திறக்கறதுக்குள்ள ஜி இன்னொரு சாக்லேட்ட எடுத்து என்கிட்ட நீட்டிட்டார். சோ ஜி அண்ட் ஜி.ரா வாழ்க...
ஜி.ரா மாதிரி ஒரு நல்ல மனிதர உலகத்துல பாக்கவே முடியாது. ஆமாம். உண்மையதான் சொல்றேன். எனக்கு ரெண்டு சாக்லேட் குடுத்துட்டு அவர் ஒண்ண மட்டும் எடுத்துக்கிட்டார்(ஜி.ரா அதுக்குனு டீ வாங்கித் தராதத மறந்துட்டேனு நினைக்காதீங்க. அது வேற கணக்கு). அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு கூட்டத்த கலைச்சிட்டோம்.
ஜி என்கிட்ட அந்த சாக்லேட் டீடெயில்ஸ் எல்லாம் போடணும்னு கெஞ்சி கதறி கேட்டுக்கிட்டார். ஆனா நான் எனக்கு குடுத்த சாக்லேட்ட சாப்பிட்டுட்டு கவர எங்க வீட்டுலயே விட்டுட்டு வந்துட்டேன்னு சொன்னேன். நான் டீடெயில்ஸ் குடுக்கறேனு சொன்னார்.
company lindtt
swiss made
costliest chocos
இதுல ஒண்ணு choc with strawberry. இன்னொண்ணு choc with milk(இது ரெண்டும் நான் சொன்னது).
அப்பாடி... ஜி... சொன்ன வாக்கை காப்பாத்திட்டேன். அடுத்த வாரம் ட்ரீட்... நீங்க குடுத்த வாக்கை காப்பாத்தோணும்... இல்ல அடுத்த பதிவு வரும்... ஜாக்கிரதை ;)
Wednesday, April 4, 2007
டீ குடித்த செம்மல் "ஜி"
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
ஹைய்யா.. நாந்தான் ஃபர்ஸ்ட் :)
ஓசியிலே சாக்லேட் வாங்க தான் ஓடுனீங்களா இம்சையக்கா :)
எங்களுக்கு எல்லாம் அல்வா.....உங்களுக்கு சாக்லேட்டா ;-(
அடப்பாவி. ரெண்டு சாக்லேட் வங்கிக் கொடுத்தா ஒரு வாழ்க போஸ்டா? ரேட் ரொம்ப சீப்பா இருக்கே!!
ஆகா! நமது வரவேற்பு பற்றி இவ்வளவு சிறப்பாக பதிவு போட்டமை சிறப்போ சிறப்பு.
நானும் சாக்குலேட்டுகளை நண்பர்களுக்குக் கொடுத்திட்டேன். ஆகையால எங்கிட்டயும் படமில்லை. ஜி கொடுத்த சாக்லேட் நல்லாத்தான் இருந்திருக்கனும்.
ஜி இந்நேரம் திரும்ப வந்திருக்கனுமே! என்னாச்சுன்னு தெரியலையே!
குடுத்த காசுக்கு ச்சே சாக்லேட்டு நல்லாவே ஓ போட்டு இருக்கீங்க ஜிஸ்டர்...நானும் வரும் போது சாக்லேட் வாங்கிட்டு வரேன்...:-)
//யார் யாரு குடுத்தீங்கன்னு கேக்கப்படாது. வேற யாரு ஜி.ராவும் நானும்தான்.//
இம்புட்டு கூட்டத்த கூட்டிட்டீங்களா...தெறமதேன்.. :-)
செமத்தியா கும்மாலம் போட்ருக்கீங்க போல!!!
தலைவர் ஜி-யின் புகழ் தரணியெங்கும் தழைத்தோங்க செய்த இம்சை அக்கவுக்கு வாழ்த்துக்கள்
எதுக்கு இப்படி தேவையே இல்லாம ரவுசு உட்ற அப்படிங்கறீங்கலா??
நமக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச தமிழையும் எங்கேயாவது எடுத்து உடனும் இல்லையா!!
அதான்!! :D
// இராம் 덧글 내용...
ஹைய்யா.. நாந்தான் ஃபர்ஸ்ட் :)
//
அதுக்காக first prize-ஆ ஜி வந்து சாக்லேட் தருவார் :)))
// இராம் 덧글 내용...
ஓசியிலே சாக்லேட் வாங்க தான் ஓடுனீங்களா இம்சையக்கா :)
//
:@ சாக்லேட் கேன்சல்... :@
// கோபிநாத் 덧글 내용...
எங்களுக்கு எல்லாம் அல்வா.....உங்களுக்கு சாக்லேட்டா ;-(
//
ஃபீல் பண்ணக்கூடாது கோபி அண்ணா... திரும்பி வருவார் இல்ல. அப்ப உங்களுக்காக வாங்கி வச்சிடறேன் :)))
// இலவசக்கொத்தனார் 덧글 내용...
அடப்பாவி. ரெண்டு சாக்லேட் வங்கிக் கொடுத்தா ஒரு வாழ்க போஸ்டா? ரேட் ரொம்ப சீப்பா இருக்கே!!
//
அதெல்லாம் ஒண்ணும் இல்ல. இதுக்காக இன்னும் 2 ட்ரீட் தரதா சொல்லியிருக்கார். அதுக்குதான் ;)
// G.Ragavan 덧글 내용...
ஆகா! நமது வரவேற்பு பற்றி இவ்வளவு சிறப்பாக பதிவு போட்டமை சிறப்போ சிறப்பு.
நானும் சாக்குலேட்டுகளை நண்பர்களுக்குக் கொடுத்திட்டேன். ஆகையால எங்கிட்டயும் படமில்லை. ஜி கொடுத்த சாக்லேட் நல்லாத்தான் இருந்திருக்கனும்.
ஜி இந்நேரம் திரும்ப வந்திருக்கனுமே! என்னாச்சுன்னு தெரியலையே!
//
வாங்க ஜி.ரா... நீங்க எப்போ ட்ரீட் தரீங்க??? ;)
// Syam 덧글 내용...
குடுத்த காசுக்கு ச்சே சாக்லேட்டு நல்லாவே ஓ போட்டு இருக்கீங்க ஜிஸ்டர்...நானும் வரும் போது சாக்லேட் வாங்கிட்டு வரேன்...:-)
//
நிறைய வாங்கிட்டு வரணும் அண்ணா. நான் உங்க பாசமலர் இல்ல. பெரிய லிஸ்ட் தயார் பண்ணிட்டு இருக்கேன். எப்போ வரீங்கன்னு சொல்லுங்க. லிஸ்ட்ட மெயில் பண்றேன்.
// Syam 덧글 내용...
//யார் யாரு குடுத்தீங்கன்னு கேக்கப்படாது. வேற யாரு ஜி.ராவும் நானும்தான்.//
இம்புட்டு கூட்டத்த கூட்டிட்டீங்களா...தெறமதேன்.. :-)
//
ஹி... ஹி...
நாங்க யாரு????
// CVR 덧글 내용...
செமத்தியா கும்மாலம் போட்ருக்கீங்க போல!!!
தலைவர் ஜி-யின் புகழ் தரணியெங்கும் தழைத்தோங்க செய்த இம்சை அக்கவுக்கு வாழ்த்துக்கள்
எதுக்கு இப்படி தேவையே இல்லாம ரவுசு உட்ற அப்படிங்கறீங்கலா??
நமக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச தமிழையும் எங்கேயாவது எடுத்து உடனும் இல்லையா!!
அதான்!! :D
//
எனக்கு வாழ்த்து சொல்லியிருக்கீங்கல்ல. அதனால எதும் சொல்ல மாட்டேன் :)))
பொறந்த வீட்டு பாசம் இன்னமும் விட்டு போகலை எனக்கு. அது ஒரு அழகிய நிலாக் காலம்... எந்த ஃபுட் கோர்ட்?
ஜீரா, உங்களுக்கு ஜீ குடுத்த சாக்லெட்ல பங்கு குடுத்ததை இப்படி சொல்லறீங்களே, எனக்கு காபிடே ல காபி வாங்கி குடுத்தாரே :-)
நாராயண நாராயண....
இம்சையக்கா.. என்ன இப்படி போட்டுத் தாக்கிட்டிய... மத்த மக்கள பாக்கும்போது சாக்லேட் கேப்பாகளே.. என்கிட்ட இருந்த சாக்லேட்டெல்லாம் இந்திய வெயில்ல உருகி ஜூஸ் ஆயிடிச்சே...
அப்பாடா.. ஒரு வழியா சமாளிச்சிட்டேன் :)
//அடப்பாவி. ரெண்டு சாக்லேட் வங்கிக் கொடுத்தா ஒரு வாழ்க போஸ்டா? ரேட் ரொம்ப சீப்பா இருக்கே!! //
கொத்தனார் அண்ணாச்சி.. கடைசி வரிய நீங்க பாக்கலியா??
இந்திய முன்னேற்றம், பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு, கிரிக்கெட், சாதி சண்டைகள்னு எவ்வளவு விசயங்கள் பேசினோம். அதையெல்லாம் போடவே இல்ல :@@@@@@@@
//덧글 내용...//
சகோதரி..எப்பல இருந்து சைனீஸ்ல எழுத ஆரம்பிச்சீங்க....சொல்லவே இல்ல....நிஞ்சா யாரயாவது லவ் பண்றீங்களா...அப்படி கிப்படி இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க...கல்யானத்தப பிரச்சனை வந்தா எஸ்கேப் ஆகறதுக்கு...அவிங்க கிட்ட அடி வாங்கினா நம்ம இரும்பு உடம்பே தாங்காது :-)
போச்சே! போச்சே! ஒரு சாக்லேட் போச்சே!
ஒரு வார்த்தை சொல்லி இருக்கபடாதா? பாவம் குழந்தை(me only) ஏமாந்து போச்சு! :(
//இலவசக்கொத்தனார் said...
அடப்பாவி. ரெண்டு சாக்லேட் வங்கிக் கொடுத்தா ஒரு வாழ்க போஸ்டா? ரேட் ரொம்ப சீப்பா இருக்கே!! //
ஆஹா, ஜி = 2 சாக்லெட், கொத்ஸ்=இலவசம்...:-)))
// Udhayakumar 덧글 내용...
பொறந்த வீட்டு பாசம் இன்னமும் விட்டு போகலை எனக்கு. அது ஒரு அழகிய நிலாக் காலம்... எந்த ஃபுட் கோர்ட்?
//
Terminal :)))
//ஜீரா, உங்களுக்கு ஜீ குடுத்த சாக்லெட்ல பங்கு குடுத்ததை இப்படி சொல்லறீங்களே, எனக்கு காபிடே ல காபி வாங்கி குடுத்தாரே :-)
நாராயண நாராயண....
//
ஹி... ஹி...
அடுத்த வாரம் Dominos-ல எங்களுக்கு treatஏ வைக்கப் போறார் :)))))
//எங்களுக்கு எல்லாம் அல்வா.....உங்களுக்கு சாக்லேட்டா ;-(//
எனக்கு ஒன்னுமே கிடைக்கல :(
யக்கோ வணக்கம்.. :-)
என் அருமை அக்காவுக்கு ஒரு கப் டீ வாங்கி தராத ஜி & ஜி.ராவை கடுமையாக கண்டிக்கிறேண்..
(அக்கா. சரிதானே?)
ஜி.. ரெண்டே ரெண்டு சாக்லேட் கொடுத்துட்டு இவ்வளவு பில்ட் அப்பா?
சாதாரணமாக பெண்கள் சீரியஸ் ஆனவங்கன்னு இருந்த என் நெனப்பில்
பால்டாயரை ஊத்தீப்புட்டீங்க போங்க..... என்ன நகைச்சுவை பிரவாகம்....
Post a Comment