'நேத்து வாங்கிட்டு வந்த இந்த பச்சக் கலர் ஹேர்பேண்டை எங்கே வைத்தேன்?' என்று பொறுமையில்லாமல் தனது பேக்கின் ஒவ்வொரு ஜிப்பிலும் துழவிக் கொண்டிருந்தாள் கிரி. ஒரு வழியாய் கண்டுபிடித்து எடுத்தவள் அழகாய் படிய வாரியிருந்த நீண்ட பின்னலை புதிய பச்சை வண்ண ஹேர் பேண்டைக் கொண்டு கட்டினாள். பச்சை சுடிதாருக்கென்று முந்தினம் பிரத்தியேகமாய் வாங்கி வந்திருந்த பச்ச வண்ண பொட்டை எடுத்து நெத்தியில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் திரும்பி எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று அழகு பார்த்தவளுக்கு ஏதோ குறைவதுப் போலவே தோன்றியது. எதோ ஒன்றை மறந்து விட்டோமே என்று யோசித்தவளுக்கு 'முன்ன பின்ன இப்படியெல்லாம் பண்ணியிருந்தா தான் தெரியும்' என்ற எண்ணம் வேறு இடையில் வந்து தொலைத்தது. அச்சோ என்று சலித்துக் கொண்டவளுக்கு மின்னல் வேகத்தில் நினைவு வர வேகமாய் சென்று ஃப்ரிட்ஜ்ஜைத் திறந்து முந்தினம் வாங்கி வைத்திருந்த மல்லிகைப் பூவை எடுத்து தலையில் வைத்து மீண்டும் கண்ணாடி முன் நின்று அழகுப் பார்த்தாள். இப்பொழுது திருப்தியானவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். ஹாலில் இருந்தபடியே அவளது இந்த புதிய நடவடிக்கைகளை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம்
"அம்மா! அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குப் போறேனு நேத்தே சொன்னேனில்ல. அதான் கிளம்பிட்டேன். போயிட்டு வரேன்" என்றபடியே தாயின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பி விட்டாள்.
'நான் செய்யறது எல்லாம் சரிதானா? ஒரு வாரத்துக்கு முன்னாடி இருந்த நான் தானா இதுனு எனக்கே சந்தேகமா இருக்கே. ஒரு வாரத்துல எப்படி மாறிப் போயிட்டேன். இந்த மாதிரியெல்லாம் வாழ்க்கைல இருக்கவே மாட்டேனு நினைச்சேன். ஆனா இப்படி என்னை அடியோட மாத்திட்டியேடா... கார்த்திக்...' அவனது பெயரை மனம் உச்சரித்த மாத்திரத்திலேயே அவளுக்கு கன்னம் சூடேறியது. மெலிதாய் புன்னகைத்துக் கொண்டாள். 'நல்லவேளை பக்கத்துல யாரும் இல்ல... இல்லைனா இதென்னடா அதுவா சிரிச்சுக்குதுனு நினைச்சிருப்பாங்க. எனக்குள்ளயும் இப்படி ஒரு மனசு இருக்குனு புரிய வச்சியேடா... இன்னும் உன்னைப் பார்த்ததுக் கூட இல்லயே... கார்த்திக் நீ எப்படிடா இருப்ப' இப்படியே அவனைப் பற்றியே சிந்த்தித்துக் கொண்டே அர்த்தநாரீஸ்வரர் கோவிலை அடைந்தாள். வெளியே இருந்து அவனுடைய மொபைலுக்கு கால் செய்தாள். ரிங் போகும்போது மனம் படபடவென அடித்துக் கொண்டது. ஏனென்றால் ஒன்று முதல் முதலாய் ஒரு ஆணை தனியாய் சந்திக்கப் போகிறோம். இரண்டு கல்லூரிக் காலங்களிலேயே எத்தனையோ பேர் காதலிக்கிறேன் என்று சொன்ன போதெல்லாம் ஒரு போதும் வந்தறியாத இனம் புரியாத உணர்வு. மூன்று இருவரும் ஒத்துக் கொண்டால் இவன்தான் தனது வாழ்க்கைத் துணை. நான்கு வீட்டுக்குத் தெரியாமல் சந்திப்பது. ஐந்து இதுவரை எத்தனையோ நண்பர்களை இதுப் போல் சந்தித்திருந்தாலும் அப்பொழுதெல்லாம் வராத ஒரு குற்ற உணர்வு இப்பொழுது வெகுவாய் பயத்தை தருவது.
இப்படியாக லிஸ்ட் போட்டு முடிப்பதற்குள் கார்த்திக் ஃபோனை எடுத்து விட்டான்.
"ஹே! கிரி. எங்கடா இருக்க?" அவனது இந்தப் பரிவானப் பேச்சில் அனைத்து குற்ற உணர்ச்சியும் அடிபட்டுப் போக அவளால் இன்னதென்று அறியமுடியாத ஒரு விநோதமான உணர்வு ஆட்கொள்ள
"கோவில் வாசல்ல இருக்கேன்" என்றாள்.
"ஓஓ! நான் உள்ள வந்துட்டேனே. சரி. அங்கேயே இரு. நான் வரேன். என்ன கலர் ட்ரெஸ் போட்டிருக்க?"
"க்ரீன். நீங்க?"
"வொயிட்ல ப்ளூ ஸ்ட்ரைப்பெடு"
"சரி வாங்க"
முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாததுப் போல காட்டிக் கொண்டாலும் அவள் மனம் ஏனோ திக் திகென்றிருந்தது. தொலைவில் அவன் சொன்ன உடை அடையாளத்தில் இறங்கி வருவது தெரிந்ததும் மனம் இன்னும் வேகமாய் அதன் புதிய வேலையை செய்ய ஆரம்பித்திருந்தது. அருகில் வர வர இமைக்காமல் அவனது புன்னகை மாறாத முகத்தை உள்வாங்கிக் கொண்டாள். ஏனோ அவள் கண்களுக்கு உல அழகனாய் தெரிந்தான். அருகில் வந்தவன் புன்னகை மாறாமலே
"ஹை கிரி... கார்த்திக்" என்றான்.
பதிலுக்குப் புன்னகைத்தவள் என்னப் பேசுவதென்று தெரியாமல்
"வந்து ரொம்ப நேரம்... உள்ளப் போகலாமா?" என்று உளறினாள்.
"இல்லடா. வந்து பத்து நிமிஷம் தான் ஆகுது. நீ முன்னாடி வந்து வெயிட் பண்ணுவியோனு அவசர அவசரமா வந்தேன். சரி வா போலாம்" என்றபடியே படிகளில் ஏற ஆரம்பித்தான். அவனுக்கு இணையாக ஏற ஆரம்பித்தவளின் படபடப்பைப் புரிந்துக் கொண்டவன்
"கூலா இருடா... என்ன டென்ஷன். நமக்குப் பிடிச்சா ஓகே சொல்லப் போறோம். இல்லைனா நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்போம். சரியா?" என்றதும் தனது படபடப்பைப் புரிந்துக் கொண்டானே என்று உள்ளுக்குள் குதூகலித்தாள். என்றாலும் இந்த ஆண்களால் என்றுமே பெண்களின் மனதை சரியாய் புரிந்துக் கொள்ள முடியாது என்று துர்கா அடிக்கடி சொல்லும் கருத்து நினைவிற்கு வந்தது. சரியாக தவறான காரணத்தைக் கண்டுபிடித்து விட்டான் என்று உதட்டை சுழித்தாள். அவளாய் எதேதோ யோசித்துக் கொண்டு அதன் விளைவாய் மாறும் அவள் முகபாவங்களை அவன் ரசித்தபடி முன்னேற அவனுக்கு இணையாய் அவளும் முன்னேற கோவில் பிரகாரத்தை அடைந்தார்கள்.
எதுவும் பேசாமல் அமைதியாய் தரிசனம் முடித்து விட்டு கோவில் மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். அவள் அமைதியாகவே இருக்கவே கார்த்திக் முதலில் பேச்சைத் தொடங்கினான்.
"என்ன முடிவு பண்ணிருக்க கிரி? உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? ஐ மீன் என் கேரக்டர்ஸ், என்னோட ஃபிசிக்கல் அப்பியரன்ஸ்? உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை வெளிப்படையா சொல்லு. ஏன்னா இது நம்ம லைஃப். காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டுப் போற விஷயமில்ல. சரியா?" என்று அவன் கேட்டதும் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
"அதே கேள்விய நான் கேக்கறேன். உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?"
"ஹ்ம்ம்ம். எனக்கு என் லைஃப் பீஸ்ஃபுலா போகணும். என் ஃபேமிலியோட அவங்க பொண்ணு மாதிரி இருக்கணும். இதுக்கு உன்னால உத்திரவாதம் தர முடியுமா?"
"என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. நான் எப்பவும் உண்மையா இருப்பேன். ஆனா என்னோட ஃப்ரீடம்ல நீங்க தலையிடக் கூடாது. ஐ மீன் என்னோட வேலை விஷயங்கள். எனக்கு இருக்கற லட்சியங்கள். இப்படி... இதுக்கு உங்களால உத்திரவாதம் தர முடியுமா?"
அவளது கேள்வியில் புன்னகைத்தவன் "ஷ்யூர்" என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பதிலாகத் தந்தான். பின் இரு நிமிட அமைதிக்குப் பின்
"உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?" என்றாம் மெதுவாக. பதிலேதும் சொல்லாமல் ஆமாமென்பதுப் போல் மெதுவாய் தலையாட்டினாள்.
கையில் வத்திருந்த கவரைப் பிரித்து அதிலிருந்தப் பூவை அவளிடத்தில் கொடுத்தான். ஆச்சரியமாய் அவனைப் பார்த்தபடியே வாங்கியவளின் கையைப் பிடித்துக் கொண்டவன்
"ஐ லவ் யூ கிரி" என்றான். அய்யோ! இதற்குப் பெயர்தான் வெட்கமா என்று அவளது உள்மனது சந்தோஷக் கூச்சலிட வேறுபுறம் திரும்பியவள்
"மி டூ" என்றாள். சொல்லி முடிப்பதறகுள் அடி வயிற்றில் ஒரு பிரளயமே நடந்திருந்தது.
"என்னடா கோவில்ல ரொமான்ஸ் பண்றானேனு தப்ப எடுத்துக்காத. எனக்கென்னவோ ஃபர்ஸ்ட் உன்கிட்ட பேசினப்பவே நீதான் எனக்குனு மனசு சொல்லுச்சு. அதான் உன்னைக் கோவில்ல வச்சுப் பாக்கணும்னு ஆசைப்பட்டேன். என் வாழ்க்கையும் இந்தக் கோவில்ல வச்சுதான் ஆரம்பமாகணும்னு நினைச்சேன். அதான் இங்கயே சொன்னேன்"
அவனது விளக்கத்தைக் கேட்டதும் சிரிப்பு வந்தது.
"சரி நான் கிளம்பறேன். லேட்டாப் போனா அம்மாவுக்கு ஏதும் டவுட் வந்துடும். நான் ஃபோன் பண்றேன் உங்களுக்கு"
"சரிடா. வா நானும் வரேன். வந்து பஸ் ஏத்தி விடறேன்"
வீட்டிற்கு பயங்கர குஷியோடு வரும் மகளைப் பார்த்ததும் அவளது தாயாருக்கு சந்தேகம் வந்தது. என்றாலும் அவள் கோபப்படும்படியாக எதுவும் கேட்க வேண்டாம் என்று விட்டு விட்டார். பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு அவள் ஓகே சொல்ல வேண்டுமே. இப்பொழுது கேட்கலாமா இப்பொழுது கேட்கலாமா என்றே அவர் பொழுதை ஓட்ட எப்போ கேப்பாங்க எப்போ கேப்பாங்க என்று கிரி பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தாள். ஒருவழியாக மாலையில் அவளுக்கு காஃபி கொடுக்க சென்ற போது பேச்சை ஆரம்பித்தார்.
"மனோ அங்கிள் பையன் கார்த்திக் ஃபோன் பண்ணினாரா எப்போவாச்சும்? நீ பேசினியாடா?"
அப்படியே ஆர்வம் இல்லாதவள் போல் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்
"போன வாரம் ஒரு ரெண்டு தடவைப் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கறேன். ஒரு அஞ்சு நிமிஷம் பேசினாங்க"-தைரியமாய் சொன்னாலும் பொய் சொல்லுகிறோமே என்று உள்ளுக்குள் உதறியது.
"ஓ! சரி அங்கிள் இன்னைக்கு காலைலக் கூட ஃபோன் பண்ணினார். என்ன ஆச்சுனு கேட்டார். என்னடா பதில் சொல்லலாம்? எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லணும். ஒத்து வரலைனா அவங்க வேற இடத்துல பாப்பாங்க இல்ல" கடைசியாய் சொன்னது அவளுக்கு பயத்தைத் தர
"உங்களுக்கு பிடிச்சா எனக்கும் ஓகே அம்மா. உங்க இஷ்டப்படியே செய்ங்க. நீங்க என்ன சொன்னாலும் எனக்கு முழு சம்மதம்" என்று தனக்கும் நடிக்கத் தெரியும் என்று நிரூபித்தாள்.
அவளது வார்த்தைகளைக் கேட்டதும் சந்தோஷம் பிடிபடாமல் "இப்போவே உங்கப்பாட்ட சொல்லி அவருக்கு ஃபோன் பண்ண சொல்றேன்" என்றபடியே அவளது அறையிலிருந்து வெளியேறினார்.
ஆனால் அவளது அப்பா சிவநேசனோ...
(தொடரும்)
Friday, October 3, 2008
உன்னோடுதான் என் ஜீவன் - III
Posted by இம்சை அரசி at 12:21 PM
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
மீ த எத்தனாவது?
hmmm nice :)))
when can we expect the next part? :)))
சென்னையில் சுனாமி வந்தப்புறம் என்னாச்சுன்னு ஒரு பதிவு போடுவீங்கன்னு நினைச்சேன்:):):)
உள்ளேன் அக்கா :)))
// rapp said...
மீ த எத்தனாவது?//
இதுக்குத்தான் கணக்கு பாடம் ஒழுங்க படிச்சுட்டு வரணும்ங்கறது இப்ப பாருங்க மறந்துட்டீங்க!
நீங்கதான் பர்ஸ்ட்டு :)))))
மீ த எத்தனாவது?
சென்னையில் சுனாமி வந்தப்புறம் என்னாச்சுன்னு ஒரு பதிவு போடுவீங்கன்னு நினைச்சேன்:):):)
nice...........:)))
please post the next part soon.......
tell me the truth....are you a mega serial director????!!!
வாங்க இம்சை! உங்களை தான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்காங்க எல்லாரும். ரொம்ப சூப்பரா இருந்தது இந்த பகுதி. கதாநாயகியின் உணர்ச்சிகளை வாசகர்களும் உணர்ந்து இருப்பார்கள் என நம்புகிறேன். என்னை போலவே! வாழ்த்துக்கள். சிங்கார சென்னை'ல செட்டில் ஆயாச்ச? இனிமேல் பதிவுகள் சீக்கிரம் வரும் என எதிர் பார்க்கிறோம். நன்றி, ஏஞ்சலீனா
actual'ah எனக்கு கதையே மறந்து போச்சி... முதல் ரெண்டு பாகம் படிச்சிட்டு அப்புறம் இதை படிக்கறேன்...
hmmmm..
excellent writing...vaazhthukkal..!
யக்கா சுனாமி மாதிரி நேரா கடைசி பாகத்தை எழுதுங்க. நாங்கெல்லாம் கடைசிப்பக்கதில தான் கதைய படிக்க் ஆரம்பிப்போம். அதனால்....
தொடருக்கு இப்பிடியா ரெண்டு மாசம் கேப்பு விடுறது? என்னாங்க நீங்க.. அவற்றையும் படிச்சுட்டு வர்றேன். ஆமா.. என்னாச்சு கொஞ்ச நாளா ஆளையே காணோம்?
அட கதை அடுத்த பாகம் போட்டாச்சா..குட் நல்லா போகுதே...
innum ethana pakuthe iruku.
kathai rompa nalla iruku
hai ஆயில்யன் friend eppadi irukega
சென்னை போன பிறகு உங்களோட இலக்கியப்பணி முடிந்து விட்டதோன்னு நினைத்தேன். அதுவும் இந்தக் கதையை அம்போன்னு விட்டுடுவீங்களோன்னு நினைச்சேன். கதை செம சூடா போகுது. சீக்கிரமே அடுத்த பாகத்தை எழுதுங்க.
சூப்பர் கூல்!
//இந்த ஆண்களால் என்றுமே பெண்களின் மனதை சரியாய் புரிந்துக் கொள்ள முடியாது இந்த ஆண்களால் என்றுமே பெண்களின் மனதை சரியாய் புரிந்துக் கொள்ள முடியாது //
ஹா ஹா ஹா :)
ஹய்யயோ அவங்க அப்பா என்ன சொல்லப் போறாங்க? சீக்ரம் போட்டுடுங்க...
கதையை ஆரம்பித்தப்போது இரண்டு வேறுப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட கேரக்டர்கள் எப்படி மணவாழ்வில் இணையப்போகிறார்கள் என ஆரம்பித்து எதிப்பார்ப்புகளைக் கிளறிவிட்டது.ஆனால் மூன்றாவது அத்தியாயத்திலேயே 'love you' சொல்லிவிட்டார்கள்.ஒருவேளை இது உங்கள் உண்மைக்கதையோ???
அதுசரி,ஏன் எந்த கமெண்ட்'களுக்கும் உங்கள் மறுகருத்துக்களைப் பதிப்பதில்லை? சென்னையைத்தாக்கிய சுனாமி,உங்களையும் தாக்கிவிட்டதா?
i mean....,சுனாமிக்கே சுனாமியா??
இம்சையக்காவ்... சும்மா சினிமா கணக்கா கதை ஜிவ்வுன்னு போகுதுங்கோ... :))))
//ஆனால் அவளது அப்பா சிவநேசனோ...//
என்ன இது டிவ்ஸ்டு? ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா போகுது :)
//தாமிரா said...
தொடருக்கு இப்பிடியா ரெண்டு மாசம் கேப்பு விடுறது? என்னாங்க நீங்க.. அவற்றையும் படிச்சுட்டு வர்றேன். ஆமா.. என்னாச்சு கொஞ்ச நாளா ஆளையே காணோம்?//
ரிப்பீட்டு..
எப்படி இப்படி பின்றீங்க.. கதை ஜூப்பரப்பு..
சரி அடுத்த பகுதிய எத்தனை மாதம் கழித்து, என்று போடுவீர்கள்???
;))
//Murugs said...
//ஆனால் அவளது அப்பா சிவநேசனோ...//
என்ன இது டிவ்ஸ்டு? ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா போகுது :)//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!!!!
என்னங்க சென்னை வந்தததும் கோடம்பாக்கம் உங்கள தாக்கிடுச்சி போல ... மெகா சீரியல் ரேஞ்சுக்கு இண்டரெஸ்டிங் பாயிண்ட்ல தொடரும் போட்டுடீங்க... ஆனா கதை அட்டகாசம்... கலக்கல்..!
அருமை மிகவும் அருமை.....நல்ல திருப்பங்கள்...நன்றாக உள்ளது....அடுத்த பாகத்தை விரைவில் எதிர் பார்க்கிறோம்...
nallaa irukku katha..
appa OK solla maatar.
Aana rendu perum love continue panna porangala? :-)
//இந்த ஆண்களால் என்றுமே பெண்களின் மனதை சரியாய் புரிந்துக் கொள்ள முடியாது என்று துர்கா அடிக்கடி சொல்லும் கருத்து நினைவிற்கு வந்தது.//
யாரு? நம்ம மலேசியா துர்காவா! சொல்லவே, இல்ல..:)
//இப்பொழுது கேட்கலாமா இப்பொழுது கேட்கலாமா என்றே அவர் பொழுதை ஓட்ட எப்போ கேப்பாங்க எப்போ கேப்பாங்க என்று கிரி பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தாள்//
வாவ்...சூப்பர்! ரொம்ப ரசித்து படித்தேன்....அடுத்து பகுதி எப்போ?
wen can v expect the next part... how long should we wait... :)
Why you didnt complete this story Emsai?
Pathi kadthai solli EMSAI PANNITINGA... NEnga
Thilak
next episode pottinganna...PLZ LET ME KNOW...
Post a Comment