பல சமயங்களில்
பல தருணங்களில்
சிந்தியிருந்த போதும்
சுவைத்த தருணங்கள்
சில மட்டுமே...
விழி சிந்தும்
துளி நீருக்குதான்
எத்தனை சுவைகள்!
கோபம்...
ஆனந்தம்...
அதிர்ச்சி...
துக்கம்...
வருத்தம்...
இயலாமை...
காதல்...
நீண்டு செல்லும் பட்டியலாய்…
செய்த தவறுகளை
உணர்ந்து வருந்திய பொழுதுகளில்
என் மீதே எனக்குள் பொங்கிய
கோபத்தின் பயனாய்
சுவைத்த துளிகள்
எதிர்கொண்ட துயரங்கள் மறந்து
பணியிலமர்ந்த என்னைக் கண்டு
சொல்லவொண்ணா ஆனந்தத்தில்
அடக்க இயலாமல் தந்தை
சிந்திய துளிகள்
உடன் திரிந்த தோழி
சுவாசம் மறந்த தருணத்தில்
முதன்முறை நேரில்
மரணம் கண்ட அதிர்ச்சியில்
நில்லாமல் விழியில்
வழிந்த துளிகள்
என் பிம்பம் தானோ
என்றெண்ணி வியந்த
ஆருயிர் நட்பை
கல்லூரியில் பிரிந்த நாளன்று
விவரிக்க இயலா துக்கத்தில்
திரையிட்ட துளிகள்
பொத்திப் பொத்தி
வளர்த்த ஆசைகள்
என்னை மீறி நிறைவேறாமல்
போன தருணங்களில்
இயலாமையில் துடித்துத்
தெறித்த துளிகள்
கோடானு கோடி கொட்டிக் கொடுத்தாலும்
கிடைக்காத சந்தோஷத்தை விட
பெரும் சந்தோஷம் என்றாலும்
இனி தன் வீட்டுப் பெண் இல்லையென்ற
சிறு வருத்தத்தில் தாய் தந்தையர்க்கு
பொங்கிய துளிகள்
இந்நாளிலெல்லாம் எதுவென்றாலும்
அக்கணமே வெளிவராது
உனைக் கண்டதும் கட்டியணைத்து
மனதின் பாரம் குறைய
உன் தோளையும் மார்பையும்
நனைக்கும் துளிகள்
இன்னும் சுவைக்க வேண்டியவை பல
உறுதியாய் வருமென்றாலும்
எண்ணி எண்ணி வியக்கிறேன்
விழி சிந்தும் துளி நீருக்குதான்
எத்தனை சுவைகள்!!
Monday, October 6, 2008
கண்ணீரின் சுவை!!!
Posted by இம்சை அரசி at 11:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் இம்சை. என்ன, உங்கள் பெயருக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லை.. (பதிவு நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன்) ... :)))
அழகு.... :)))
அட்டகாசமான வரிகள் ;)
ம்ம்ம்... உண்மைதான்.. கண்ணீரும் சுவைமிக்கதுதான்..
அழகு.. :))
romba nalla irukku..
//செய்த தவறுகளை
உணர்ந்து வருந்திய பொழுதுகளில்
என் மீதே எனக்குள் பொங்கிய
கோபத்தின் பயனாய்
சுவைத்த துளிகள்//
nice one. keep it up
venkat
//செய்த தவறுகளை
உணர்ந்து வருந்திய பொழுதுகளில்
என் மீதே எனக்குள் பொங்கிய
கோபத்தின் பயனாய்
சுவைத்த துளிகள்//
good selection of words......... nice..........
im recently watching urs blog.....
its too interesting to read....
keep it up
Venkat
i alread send my comment.
where is it
Tharamaana Kavithai, Nichayama forward pannalam...
Tharamaana Kavithai, Nichayama forward pannalam...
Post a Comment