ரெண்டு வாரமா வாழ்க்கையே ஒரே சோகமயமா இருக்கு :((( ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பொட்டிக் கட்டிட்டு வந்து பெங்களூர்ல வந்து இறங்கினப்ப இருந்து இந்த ரெண்டு வருஷ பெங்களூர் வாழ்க்கையும் கண்ணு முன்னாடி கொசுவர்த்தி சுத்திக்கிட்டே இருக்கு. ஏன் இவ்ளோ ஃபீலிங்கா விட்டுட்டு இருக்கேனு பாக்கறீங்களா?
மேடம்க்கு சென்னை ட்ரான்ஸ்பர் கிடைச்சுடுச்சு. எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர் பெங்களூர்னாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒருத்தர் சென்னைல இருக்கறதால ஆபிஸ்ல டேமேஜர்ட்ட நாலு மாசமா சண்டைப் போட்டு சென்னி மாநகரத்துக்கு புலம் பெயருகிறேன். வர திங்கள் கிழமைல இருந்து சென்னை வாசியாகப் போகிறேன்.
எங்க குட்டி ராஜ்ஜியத்தின் சக ராணிகள் மூணு பேரு(என் ரூமீஸ்), ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி, அங்கிள், அவங்களோட பொண்ணுங்க, வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற எல்லம்மாள் கோவில், எப்போ போனாலும் சொந்தக்காரரப் போல பாசமா விசாரிக்கிற மளிகை கடை அங்கிள், குட்டி உலகம் போல இருக்கற என் ஆபிஸ், ஆபிஸ் ஃப்ரெண்ட்ஸ், க்யூட்டான என்னோட க்யூபிக்கிள், சைக்கிள் ரைடிங்ல சிலிர்க்க வச்ச பனிக் காற்று, குளிருக்கு இதமா கம்பளிய இழுத்துப் போர்த்தி தூங்கற சுகம், காலைல பதினொரு மணி வரைக்கும் நிம்மதியா தூங்கினத் தூக்கம், நேரம் காலம் தெரியாம ஆபிஸில் கழித்த பொழுதுகள்(எல்லாம் ப்ளாக்-காகத்தான்), ப்ரெண்ட்ஸோட ஜாலியா ஊர் சுத்தின பொழுதுகள், கன்னட வாசம் வீசும் BMTC பஸ் பயணங்கள், மாமியார், நாத்தனார், அருண் அண்ணா, மீராக் குட்டி, அன்பு நண்பன் ஜி, பாசமிகு அண்ணன்கள் ராம், அய்யப்பன், அருணா அண்ணி, ஜெயஸ்ரீ குட்டி இப்படி பல விஷயங்களை மிஸ் பண்ணப் போறேனு நினைக்கும்போது அழுகையா வருது.
இம்சை ஸ்டாப் யுவர் சென்டி-னு நீங்க கத்தறது காதுல விழுது. எதுக்கு "சென்னையில் மீண்டும் சுனாமி வரப் போகிறதா?"-ன்னு டைட்டில் வச்சனு நீங்க கேக்கறதும் தெரியுது. ட்ரான்ஸ்பர் கன்ஃபார்ம் ஆனதும் சென்னை நட்புகளுக்கு ஃபோனப் போட்டு சொன்னதுக்கு அவங்க சொன்னது "சோ சுனாமி அகைன் பேக் டு சென்னை"-னு பயங்கரமா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............ பாருங்க.... அப்பாவி பச்சப் புள்ளயப் பாத்து இப்டில்லாம் சொல்லலாமா? நீங்களே சொல்லுங்க.
Friday, August 29, 2008
சென்னையில் மீண்டும் சுனாமி வரப் போகிறதா?
Posted by இம்சை அரசி at 10:11 AM
Labels: ஃபீலிங்க்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
உன்னோடுதான் என் ஜீவன் - III - அடுத்த பார்ட் எப்போ, எப்போ?
பாருங்க.... அப்பாவி பச்சப் புள்ளயப் பாத்து இப்டில்லாம் சொல்லலாமா? நீங்களே சொல்லுங்க. யாருங்க அப்பாவி ???
Hi Immsai
your are Welcome Sikkara Chennai
me the Ist??
"அப்பாவி பச்சப் புள்ளயப் பாத்து இப்டில்லாம் சொல்லலாமா? நீங்களே சொல்லுங்க"
ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு... புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் Immsaasi வெற்றி பெறுவாய்! -அப்துல் கலாம்.
:-)))))))))
Puduvai siva.
welcome 2 chennai
கெளம்பு.. கெளம்பு... காத்து வரட்டும்...
இந்த மொக்கை பதிவு'ம் சூடான இடுகையிலே வந்து தொலைக்கும்...
ஹிம், தலைப்பு அப்பிடி.... :)
எங்கிருந்தாலும் வாழ்க:-)))
feelings of india vaaaaaaaaaaaa:)
achoooo........
athellam irukaum UNNODU THAAN YEHN JEEVAN ENNACHU
:))
ரைட்டு!
வாழ்த்துக்கள்!
இனி ஏர்போர்ட்ல இறங்கி நேரா அக்கா வீட்டுக்கு வந்து சோறு கொட்டிக்கிட்டு ஊருக்கு போகலாம்ன்னு நினைக்கிறேன்! :))
நேனே முதட்டி :)
இப்படி சொல்றதுல இருந்தே தெரியுது நா சென்னையில இல்லனு ;)
உங்கள் கதைகள் சுனாமி போல தாக்க வெயிடிங் :)
அடுத்த பகுதி எங்க??
பெங்களூருவ ஞாபகப்படுத்தி ஃபீல் பண்ண வச்சுட்டீங்களே.....
All the best. :-)
welcome to chennai- chennaite
ச்சோ ச்சோ... பயங்கர ஃபீலின்ஸா இருக்கே.. சரி சென்னைக்காரவங்க சொன்ன கமெண்ட் தலைப்பாகிடுச்சு.. பெங்களூருக்காரங்க சொன்ன கமெண்ட் எங்க காணோம்.. ? :)
வாம்மா இம்சை அரசி..
சென்னை எவ்ளோ பேர் வந்தாலும் தாங்கும், அடிச்சாலும் தாங்கும்..
இங்கேயும் வந்து அதே சொந்தங்களை உருவாக்கிக்கலாம்.. அதுக்கும் சென்னைவாசிகள்லாம் தயராத்தான் இருக்காங்க..
neenga chennai ponaa kooda, enge en jeevan 3 varumnu nambarom...enga nambikkaya kaapaathunga...
//கெளம்பு.. கெளம்பு... காத்து வரட்டும்...//
Repeatye...
ஹே யூ... ஐ எம் ஃப்ரம் யு.எஸ் மேன்... ஒய் ஸ்டில் பேங்களூர்??
'பெங்களூருக்கு நல்ல காலம் பொறந்திடிச்சு'ன்னு டைம்ஸ் ஆஃப் இண்டியா கார்னர் ஆஸ்ட்ராலஜில போட்டிருக்கும்போதே நெனச்சேன்... இது மாதிரி எதுனா நடக்கப் போகுதுன்னு... :))) ஆமா, மறைந்த முன்னாள் முதல்வர் கெம்பே கவ்டாவே கல்லறைல இருந்து எழுந்து வந்து உன்ன சந்தோஷமா வழி அனுப்பி வைச்சாராமே?? உண்மையா??
இனி தைரியமா பெங்களூருக்கு ரிடர்ன் ஆகலாம் :)))
// எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒருத்தர் சென்னைல இருக்கறதால//
அவ்வ்வ்வ்வ்வ்வ்/.....:)) வாழ்த்துக்கள் அக்கா!மாமாவை கேட்டதாக சொல்லவும்!
நான் என்ன சொல்றது...;))
உன்னோடுதான் என் ஜீவன் - III - அடுத்த பார்ட் எப்போ, எப்போ?
//'பெங்களூருக்கு நல்ல காலம் பொறந்திடிச்சு'ன்னு டைம்ஸ் ஆஃப் இண்டியா கார்னர் ஆஸ்ட்ராலஜில போட்டிருக்கும்போதே நெனச்சேன்... இது மாதிரி எதுனா நடக்கப் போகுதுன்னு... :))) ஆமா, மறைந்த முன்னாள் முதல்வர் கெம்பே கவ்டாவே கல்லறைல இருந்து எழுந்து வந்து உன்ன சந்தோஷமா வழி அனுப்பி வைச்சாராமே?? உண்மையா??
இனி தைரியமா பெங்களூருக்கு ரிடர்ன் ஆகலாம் :)))//
உண்மையா??
//எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர் பெங்களூர்னாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒருத்தர் சென்னைல இருக்கறதால ஆபிஸ்ல டேமேஜர்ட்ட நாலு மாசமா சண்டைப் போட்டு சென்னி மாநகரத்துக்கு புலம் பெயருகிறேன். //
ஓவரா ஐஸ் வைக்காதீங்க..
அப்பாடி பெங்களூர் தப்பிச்சது
/
இராம்/Raam said...
கெளம்பு.. கெளம்பு... காத்து வரட்டும்...
/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
/
முத்துலெட்சுமி-கயல்விழி said...
ச்சோ ச்சோ... பயங்கர ஃபீலின்ஸா இருக்கே.. சரி சென்னைக்காரவங்க சொன்ன கமெண்ட் தலைப்பாகிடுச்சு.. பெங்களூருக்காரங்க சொன்ன கமெண்ட் எங்க காணோம்.. ? :)
/
இப்பதான் போட்டிருக்கேன் அப்ரூவ் பண்ணா வரும்!!
:))))))))))))))))
/
ஜி said...
'பெங்களூருக்கு நல்ல காலம் பொறந்திடிச்சு'ன்னு டைம்ஸ் ஆஃப் இண்டியா கார்னர் ஆஸ்ட்ராலஜில போட்டிருக்கும்போதே நெனச்சேன்...
/
அண்ணே அந்த நியூஸ் நீங்களும் பாத்தீங்களா??
கர்நாடகாக்கே நல்ல நியூஸ் அது!!!
iyo bhagavane!!! intha oorela yarukume comments kodukka theriyala ? mokkai ya anuppura?... totalla imsaiyum apdi than comments um apdi than... cha cha... thirunthungalem ppa
சிங்காரச் சென்னையில் இல்லறம் இனிதே நடந்திட எனது வாழ்த்துக்கள்.
Neenga ellam yaaru?
Ethanai naal thaan orey blog padikkaradhu? seekirama vera edhhavadhu matter podu thangachi.
(Dont publish)
nice to read:-)
Imsai arasi........lovable story writer....
ManasukulMaththaapu..... ஏன் திவ்யா உங்களுக்கு கும்மி ஜாஸ்த்தியா இருக்கு டிப்ஸ் ராணி………….divyavuku neraya fans
Rayal ram ----------avaroda name polave writing also so royal……….yarum minjamudiyathu………(ENNODA VOTE RAMKU THAAN)
CVR..the great scientist ……….ivar kitta enna topic kuduthalum ஆராய்ச்சி pannuvar……..simplycvr sollitu English words in his blogspot ellam so standard
Santhoshpakkangal---------------Courageous fellow………..
Kusumban…………..kusumbu iruthalum athil oru அர்த்தம் irukum
Nejama nallavan--------romba nallavarpa……………..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…….(yaru sirikurathu nejama thaan)
Pakkathamilan………..original மொக்கை மன்னன்
G3………….pasamalar ….pasakara pulla
Gops…………..good writeer
Kappi paya………..konjam nakkal…..neriya karuthu
Nammakal sibi…………….HE IS A NAKKAL NAYANDI SIBI
KODUMAI USHA ………..Comedy queen
G…………….different thinking ……his words ………chance illa ivara mathiri yosikurathuku……..veyilil oru mazai ipadi yaravathu yosicheengala
Naveen prakash………..kaathal mannan….avaroda poems sonnenpa
Ragavan……..pakkathaan appavi pulla but eluthula irangitaanganu vainga ……….pls complete pannikonga
Aambi………..good joker
Aabi appa………….all rounder
my friend..........cho chweet words:) enna solla varena enake theriyala
சென்னை காரர்கலெல்லாம் இனிதே வரவேற்கின்றனர்.
பழையவர்கள் எல்லாம் விரட்டுகிறார்கள்
ஏங்க???
வெல்கம் டூ சென்னை!
hehehe..romba late aah comment poduren ...enakkum romba romba pidicha oruthi inge irunkiradhala ..Anage Dameger dhandi ..IT director kittey ye sandai pottu (aapu vanginadhu vere vishayam)Bangalore i vittu chennai ku vandhuten :-) Todarndhu blog podunga...
Post a Comment